நேசவிதை தூவும் காரிகையவள்…5

0
99

பகுதி.5

கடந்தகால நினைவுகளில் மூழ்கி இரவு தூக்கத்தைத் தொலைத்தவள் விடியற்காலையில் சேவல் கூவும் சத்தம் கேட்டு எழுந்தவளால் நிற்கக்கூட முடியாமல் தலையை சுற்றவும் திரும்பவும் கட்டிலிலே சிறிது நேரம் உட்கார்ந்து விட்டாள்..

கொஞ்ச நாட்களாக அவளுடைய உடலும் அவளைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது. அதனை ஆராயக்கூட விருப்பமில்லாது அன்றைய பொழுதின் வேலைகள் அணிவகுத்து நின்றதால் உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் குளியலறை எழுந்து சென்று முகத்தை கழுவிக்கொண்டு கீழே இறங்கிச் சென்றாள்..

கங்கா, அவள் படியில் மெல்ல இறங்கி வருவதைப் பார்த்ததும் கோபமாக “மகாராணிக்கு இப்போதா பொழுது விடிந்ததாக்கும் ஆடி அசந்து நடந்து வர?உன்ற ஆத்தாக் காரி இததா சொல்லிக் குடுத்து வளர்த்தாளா? பொழுது விடிஞ்சி எழுந்து வந்தா இங்க இருக்க வேலையெல்லாம் ஆரு டி செய்யரது” அவர் திட்டுவதைக் காதிலே வாங்காமல் அவளுடைய வேலையைச் செய்ய ஆரம்பித்தாள்.

ஒருநாள் திட்டுவாங்கினால் கோபம் வரும் இதுதான் தினமும் நடப்பது என்பதால் தன் மாமியார் திட்டுவதைக் காதில் வாங்காமல் இருக்கப் பழகிக்கொண்டாள். அவளின் அமைதியும் ஒருநாள் பறிபோகும் நிலை வரும் அன்று கங்காவுக்குப் புரியும் ஒரு வார்த்தை மற்றவரை எவ்வளவு காயப்படுத்தும் என்று.

“அப்போதுதான் கறந்த பாலை எடுத்துக்கொண்டு உள்ளே வந்த ராதிகா, கங்கா தமிழை திட்டுவதைப் பார்த்ததும் மனம்கேக்காமல் “ஏனுங்கா அந்த புள்ளைய ஏசிபோட்டே இருக்கிங்க பாவம்ங்கா அவளும் வீட்லையும் வேலை செஞ்சிபோட்டு ஸ்கூலுக்கும் வேலைக்கு போயிட்டு வரா அதுல கொஞ்சம் அசந்து தூங்கிபோயிட்டா போல. அவ சமைக்காவிட்டால் என்ன நா வூட்ல சும்மாத்தான் இருக்கேன் நா சமைச்சிபோடறேன் நீங்கப் போங்க.” தமிழுக்காக தன் ஓரகத்தியிடம் பரிந்து பேசினார். ராதிகாவுக்கு தமிழ்மேல் ஆரம்பத்திலிருந்த வெறுப்புக்கூட தமிழின் குணத்தைப் பார்த்து மாற்றிக் கொண்டார்.

கங்கா, இவளோட அப்பாவி மூஞ்சியை பார்த்து நீயும் அத்தை மாதிரி ஏமாந்துபோர புள்ள, இவளும் இவ ஆத்தா காரியும் பணத்துக்காக எதவேனாலும் பண்ணுவாளுங்க நா சொல்லாறத சொல்லிபோட்டேன்” கோபமாக கூறிவிட்டுச் சென்று விட்டார்.

‘என்னைக்குதா இந்த அக்கா தமிழ புரிஞ்சிக்க போராங்ளோ தெரியலை’ என மனதில் நினைத்தவர் தமிழிடம் ” அக்கா சொல்ரதெல்லாம் நினைச்சி வருத்தபடாதடா கண்ணு” என்றார்.

“பரவாலை விடுங்க அத்தை எனக்கு இதலா பழகிபோச்சு” விறக்தியாக கூறியவள் சமையல் வேலையைத் தொடர்ந்தாள்…

சிறிது நேரம் கழித்து வெளியே தன் கணவனின் பேச்சுக்குரல் கேட்கவும் கங்கா “கண்ணு இரண்டு மாமாவும் தோட்டத்துக்கு போயிட்டு வந்துபோட்டாங்க போல நா அவர்களுக்கு டீ கொண்டுபோய் குடுத்துபோட்டு வறேன்.” என சொல்லிவிட்டு போட்டுவைத்திருந்த டீயை டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.

அவர் சென்றதும் அப்போதுதான் தூங்கி எழுந்த வந்த இளமாறன் “குட்மார்னிங் அண்ணி” எனக்கூறிக்கொண்டே சமையலறை திட்டில் ஏறி உட்கார்ந்தான்.

“குட் மார்னிங் மாறா டீயா? காப்பியா?” என்று கேட்டாள்.

“டீயே குடுங்க அண்ணி” என்றவன் தமிழின் முகத்தைப் பார்த்து “அண்ணி என்னாச்சு ஏன் ஒருமாதிரி டல்லா இருக்கிங்க?”

“எனக்கென்ன நா நல்லாத்தான் இருக்கேன் மாறா.”

“உங்கள தினமும் பாக்கர எனக்கு தெரியாதாங் அண்ணி நல்லாருந்தா உங்க முகம் எப்படி இருக்குமென்று சொல்லுங்க உடம்பு ஏதும் சரியில்லைங்ளா?” கேட்டுக்கொண்டே அவளின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தவன் “காய்ச்சல் இருக்கமாதிரி தெரியலை” அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே கண்கலங்கிவிட்டாள்.

ஐயோ அண்ணி! என்னாச்சு ஏன் அழரிங்க?”

கண்ணீரைத் துடைத்துக்கொண்டவள் “தேங்ஸ் மாறா இந்த வூட்ல அம்மச்சிக்கு அப்பரம் என்ன ஒரு மனுசியா மதிக்கர ஆள் நீ ஒருத்தன்தான்.”

“ஏனுங் அண்ணி இப்பிடிலா பேசரிங்க அண்ணனா எனக்கு உசுரு அவரோட ஒவைப் நீங்க நீங்களும் எனக்கு இன்னொரு அம்மாதான் அம்மாவ ஆருக்காவது புடிக்காம இருக்குமா? உங்களுக்காக ந எதவேனாலும் செய்வேன். ஆருக்கூட வேனாலும் சண்டை போடுவேன்”.

அவனின் தலையை பாசமாகக் கலைத்தவாறே “நீயும் எழில் மாதிரியே பேசர மாறா அவதா என்ன இன்னொரு அம்மானு சொல்லுவா” என சொல்லிக் கொண்டிருந்தவள் தன் பிறந்த வீட்டினரை நினைத்து முகம் வாடினாள்.

தமிழ் சோகமாக இருப்பதை பொறுக்க முடியாமல் அவளின் மனநிலையை மாற்ற எண்ணியவன் “அண்ணி! எனக்கு மட்டுமில்லை என்ற அண்ணாவுக்கும் உங்கல ரொம்ப பிடிக்கும்” என்றான்.

அவன் சொன்னதை கேட்டதும் சிரித்துவிட்டாள்.

ஏனுங் அண்ணி சிரிக்குரிங்க நா சொன்னத “நீங்களும் ஒருநாள் உணர்விங்க பாருங்க அப்போ தெரியும்.”

“அது நடக்கரப்ப பாத்துக்கலாம்” என கூறிக்கொண்டே டீயை ஊற்றி அவனிடம் கொடுத்தவாறே “கண்ணன் அண்ணா இன்னும் எழுந்திருக்கலையா மாறா?” என்று கேட்டாள்.

டீயை வாங்கியவாறே “அதலாம் அப்பவே எழுந்திருச்சி அண்ணாகூட தோட்டத்துக்கு போயாச்சுங் அண்ணி. அண்ணாவ கெடுக்கரது எல்லாமே மாமா தான் அண்ணி.”

“அண்ணா பாவம் மாறா அவர் அப்படிலாம் சொல்லாத”

“அவரா பாவம் ஏனுங் அண்ணி நீங்கவேர அப்பாத்தா அண்ணாவுக்கு உங்கள கண்ணாலம் பண்ணி வைத்ததுக்குப் பதிலா மாமாவ கண்ணாலம் பண்ணி வச்சிருக்கலாம் எப்பபாரு லவ்வர்ஸ் மாதிரி ஜோடியாகவே சுத்திட்டு திரியரார்.அவரும் கண்ணாலம் பண்ணமாட்டார் கண்ணாலம் பண்ணவரையும் சேர்ந்து வாழவிடமாட்டார். அண்ணி நா சொல்ரத கேளுங்க எப்படியாவது மாமாவ அண்ணாக்கூட இருந்து பிரிச்சிவிட்ருங்க அப்போதா உங்க வாழ்க்கை நல்லாருக்கும்” இளமாறன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சமையலறை வாசலில் வந்த நின்றவனைப் பார்த்து தமிழ் மாறனிடம் பேசவேண்டாம் என்று சைகை காட்டினாள்.

அவன் பாட்டுக்கு பேசிகொண்டிருந்தவன் தன் அண்ணியின் பார்வை சென்ற திசையை அவனும் பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி சமையலறை திட்டிலிருந்து கீழே குதித்து நின்றான்.

சமையலறை வாசலில் கையை கட்டிக்கொண்டு வாசல் படியில் சாய்ந்தவாறே நின்றிருந்தவன் தமிழும்,மாறனும் திரும்பிப் பார்க்கவும் உள்ளே வந்தான்.

“ஏன் மாறா நிறுத்தி போட்ட? பேசு நீ பேசரத கேக்கதானே வந்துருக்கேன்.”

“ஐயோ மாமா! நீங்க எப்போ வந்திங்க? நானும் அண்ணியும் உங்கல பத்தி பெருமையா பேசிபோட்டு இருந்தோம் மாமா.”

“ஆரு நீ அத நா நம்போணுமாக்கும்?”

அவனின் காதை பிடித்துத் திருகியவாறே “ஏன்டா ஏங்கிட்ட மாமா மாமானு பேசிட்டு நா இல்லைனுதும் என்னபத்தி என்ற தங்கச்சிக்கிட்ட தப்பு தப்பா போட்டு குடுக்கர. அது எப்படி நா உன்ற அண்ணன கெடுக்கிறேன்”.

கண்ணனின் கையை எடுத்துவிட்டவாறே “பின்ன இல்லைங்ளா என்னைக்காவது ஒருநாள் அவருக்கு எடுத்து சொல்லிருக்கிங்ளா?அப்படி சொல்லிருந்தா தனக்காக வூட்ல ஒருத்தர் சாப்டாம காத்து இருப்பாங்களேனு வந்திருப்பார் ஆனா நீங்க அத பண்ணாம அவர் கூடவே சேர்ந்து சுத்திட்டு பாதி நேரத்துக்கு வூட்டுக்கு வரிங்க” மாறன் தன் அண்ணனை கேக்கமுடியாத பாவத்துக்கு கண்ணனிடம் சண்டைக்கு நின்றான்.

“நீ ஏன்டா பேச மாட்ட உன்ற அண்ணன்கிட்ட மனுசன் பேசுவானா எத சொன்னாலும் ஒரே ஒரு பார்வை பார்த்தே நம்மல அடக்கிபோடறான். நா உன்ற அண்ணனுக்கு ப்ரண்டா பழகுன பாவதுக்கு சோறு சாப்பிடக்கூட விடமா பாதிநேரம் வரைலும் அலையவச்சிட்டு வூட்டுக்கு கூட்டிவரான் சரி இன்னேரத்துல எங்கவூட்டுக்குபோய் அம்மாகிட்ட திட்டுவாங்கரதுக்கு பயந்துகிட்டு உங்க வூட்ல படுத்து தூங்குனா தூங்கக்கூட விடாம விடியக்காலம் நான்கு மணிக்கே எழுப்பி தோட்டத்துக்கு இழுத்துட்டு போறான் இதுல உங்க அண்ணன நா கெடுக்கறேனு நீ சொல்லிட்டு இருக்க”

தமிழ், “விடுங்க அண்ணா அவன் சின்ன பையன் எதோ தெரியாம பேசி போட்டான்” என்று அவள் கொழுந்தனுக்கு வக்காலத்து வாங்கினாள்..

அப்போது சமையலறைக்கு வந்த ராதிகா அங்கு நடந்த கூத்தைப் பார்த்து “டேய் கண்ணுங்ளா உங்க சண்டையை இங்கையும் ஆரம்பிச்சிபோட்டிங்ளா” எனத் திட்ட ஆரம்பிக்கவும் சைலண்டாக மாமனும் மாப்பிள்ளையும் நழுவ ஆரம்பித்தனர்…

அவர்கள் வெளியே சென்றது “இந்த பசங்களுக்கு வயசுதா ஆயிடுச்சு ஆனா இன்னும் சின்னபசங்கமாதிரியே இருக்கானுங்க” என புலம்பிக்கொண்டே தமிழுடன் அவரும் சேர்ந்து சமையலைச் செய்ய ஆரம்பித்தார்.

சமையல் வேலையை முடித்துவிட்டு பள்ளிக்குக் கிளம்ப அறைக்கு வந்தவளை அங்குக் கட்டிலில் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்க்கவும் சிறிது தயங்கியவள் பின்பு மாற்றுடைய எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள்.

அவளைப் பார்த்தவுடனே அவளின் முகத்தில் தெரிந்த சோர்வைக் கண்டுபிடித்துவிட்டான் இருந்தும் அவளிடம் கேட்காமல் அவள் பின்னாளே பார்வையை செலுத்திக் கொண்டிருந்தான்.

அவன் பார்த்துக்கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் குளிக்கச்சென்றவள் குளித்துவிட்டு வந்து பள்ளிக்கு கிளம்ப ஆரம்பித்தாள்.

அவள் கிளம்பி முடித்தது கிளம்பும் நேரத்தில் என்னாச்சு உடம்பு சரியில்லையா?” என வாய்திறந்து கேட்டான்..

பள்ளிக்குப் போகும் அவசரத்திலிருந்தவள் அவன் கேட்டதைக் காதில் வாங்காமல் வெளியே சென்றுவிட்டாள்.

அவனுக்கு அப்போதுதான் நினைவு வந்தது சிலநாட்களாகவே அவள் சோர்வாக இருப்பது ஒருவேலை அப்படி இருக்குமோ என யோசித்தவன் உடனே மனைவி வீட்டு விலக்கான நாளை நினைவு கூர்ந்து நாட்களை எண்ணிப் பார்த்தவன் விடை கிடைத்ததும் சந்தோஷத்தில் வேகமாகக் கீழே இறங்கி ஓடிவந்தவாறே அவளை விழிகளாலே தேடியவன் வீட்டில் இருப்பவர்கள் தன்னை ஒருமாதிரி பார்க்கவும் தலையைக் கோதி தன் உணர்ச்சிகளை மறைத்தவாறே கெத்தாக நின்றவன் அப்பத்தா நா அவ பள்ளி வழியாதா போகிறேன் வர சொல்லுங்க என சாதாரணமாகக் கூறினான்.

அவன் கூறியதைக் கேட்டு தமிழுக்கு மட்டுமில்லாமல் மொத்த குடும்பத்துக்குமே ஆச்சரியம் எப்போதும் அவளை இளமாறன்தான் அழைத்துச் செல்வான்.இன்று அவனாகவே வந்து சொல்லவும் அவனை வியப்பாகப் பார்த்தனர்.

எல்லாரும் ஒருமாதிரி பார்ப்பதைக் கவனித்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் பைக் சாவியை எடுத்துக்கொண்டு அவளை ஒரு பார்வை பார்த்தது “வெரசா வா” எனக் கூறிவிட்டு வெளியே சென்றான். கல்யாணம் ஆகி ஆறுமாதில் அவள் அவனைக் கவனித்ததை விட அவன்தான் அவளின் ஒவ்வொரு செய்கையையும் கவனித்து வைத்திருந்தான். அவளுடைய வீட்டு விலக்கான நாள் முதற்கொண்டு அந்த நாட்களின் அவளுடைய வயிற்று வழிக்கு மாத்திரையும் நேப்கின்ஸ்ம் வாங்கிவந்து தனது பாட்டி மூலமாகக் கொடுப்பது வரை செய்திருக்கிறான். ஆனால் அந்த அன்பை அவன் நேரடியாக அவளிடம் காட்டியிருக்கலாம். அப்படிக் காட்டியிருந்தால் அவளுக்கும் அவனைப் பிடிக்க ஆரம்பித்திருக்கும்.

அகிலாண்டேஸ்வரி தன் பேரன் ஒவ்வொரு முக மாற்றத்தையும் கவனித்தவர் மாடியிலிருந்து ஓடிவரும்போது தன் பேத்தியைத் தேடி அலைந்த கண்களையும் அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியையும்
உடனே அதனை மறைத்ததையும் கவனித்தவர்க்கு மனதில் தன்பேரனின் வாழ்க்கை சரியாகிடும் என்ற நிம்மதி வந்தது.

வெளியே வாசலுக்கு வந்தவர் பைக்கின் அருகில் திரும்பி நின்றிருந்தவனிடம் சென்றவர் அவனின் தோளைத் தொட்டு “பாண்டியா…” எனக்கூப்பிட்டார்.

அவரின் குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தவன் சந்தோஷத்தில் அவரை இறுகக் கட்டிக்கொண்டு “நா நினச்சிருக்கரது உண்மையா இருக்கோணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பத்தா” என்றான்.

அவனை விலக்கியவர் “என்ற பேரோனோட சந்தோசத்தை பத்து எம்புட்டு நாள் ஆகுது. நீ மனசில் நினச்சிருக்கரது கண்டிப்பா நடக்கும் கண்ணு” என வாழ்த்தினார்.

“ரொம்ப தேங்ஸ் அப்பத்தா”

“இப்பாவாவது அது என்னனு சொல்லு கண்ணு.”

“நா நினச்சது கன்பார்ம் ஆனதும் சொல்றேனுங் அப்பத்தா” அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே பள்ளிக்கு கிளம்பி வந்தவளைப் பார்த்ததும் அமைதியாகி வண்டியை ஸ்டார்ட் பண்ணினான்.

“அம்முச்சி போய்விட்டு வாறேன்” எனக்கூறியவாறே வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் முகத்தில் புன்னகையுடனே வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.

தன் பேரனும் பேத்தியும் ஒன்றாக செல்வதை மனநிறைவுடனே பார்த்திருந்தார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here