நேசவிதை தூவும் காரிகையவள்…6

0
130

பகுதி.6

தமிழரசி பைக் புறப்பட்டதிலிருந்தே அமைதியாக வந்தவள் ஸ்கூல் போகும் வழியில் வண்டி செல்லாமல் வேறு தடத்தில் செல்லவும் குழப்பத்துடன் “மாமா ஸ்கூலுக்கு அந்த ரோட்ல போவோணும்” என்றாள்.

“தெரியும்…” அவன் ஒற்றை வார்த்தையில் முடிக்கவும் “அப்பரம் ஏன் வேர வழியில் போறிங்க?”

“அங்க கொஞ்சம் வேலை இருக்கு அத முடிச்சிபோட்டு போகலாம்”

“போயிட்டு வர எம்புட்டு நேரம் ஆகும்னு சொல்லுங் மாமா ஹெஜ்எம்க்கு போன்பண்ணி பர்மிசன் சொல்லிடறேன்.”

“அவர்ட்ட நானே தகவல் சொல்லிபோட்டேன்” என்றதும்
அதற்கு மேல் அவள் எதுவும் கேட்காமல் அமைதியாக வந்தவள் வண்டி வந்து நின்ற இடத்தை பார்த்தது குழப்பத்துடன் “நாம இங்க ஆர பாக்க வந்திருக்கிறோம் மாமா?” என்று கேட்டாள்.

அவளின் கேள்விக்குப் பதில் கூறாமல் சரவணன் பைக்கை நிறுத்திவிட்டு அந்த மிகப்பெரிய மருத்துவமனையின் உள்ளே செல்லவும் தமிழரசியும் ஆருக்கு என்ன என்ற கேள்வியுடனே அவனை பின் தொடர்ந்தாள்…

ரிசப்சனில் அவன் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழரசி வேடிக்கை பாக்க ஆரம்பித்தாள். அந்த மருத்துவமனையைப் பார்த்ததுமே தெரிந்தது பணம் படைத்தவர்கள் மட்டுமே இங்குச் சிகிச்சை எடுக்க முடியும். அனைத்துவிதமான மருத்துவ வசதிகளும் அந்த மருத்துவமனையிலிருந்தது.

சரவணன் ரிசப்சனிஸ்ட்டிடம் பேசிவிட்டு அவளருகில் வந்தவன் “வா…” என. கூறிவிட்டு முன்னே சென்று அங்கிருந்த காத்திருப்போர்க்கான இருக்கையில் அமர்ந்தான்.

அவளும் எதுவும் பேசாமல் அவன் பின்னால் வந்து அவனருகில் இருந்த சேரில் அமர்ந்தவள் அவனிடம் கேட்பதற்காக வாயைத் திறக்கப்போனவள் அவனின் முகத்திலிருந்த ஒருவித பதட்டத்தைப் பார்த்ததும் வாயை மூடிக்கொண்டு திரும்பவும் அங்கிருந்தவர்களை வேடிக்கை பாக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்திலே செவிலி பெண் அவள் பேரைக் கூப்பிடவும் திரும்பிப் பார்த்தவள் ‘நம்மல.. எதற்கு கூப்ட போறாங்க இந்த பேரில் நாம மட்டுமா இருகோம்’ என மனதில் நினைத்துக்கொண்டவள் திடிரென ஞாபகம் வரவும் சரவணனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவன் கண்களை மூடி எதோ யோசனையில் அமர்ந்திருந்தான்.

திரும்பவும் அந்த பெண் தமிழரசி சரவணபாண்டியன் உங்கல டாக்டர் வர சொன்னாங்க என கூறவும் மனதில் கேள்வியுடனே அவனின் தோளை தொட்டாள்.

அதில் சுயம் பெற்றவன் ‘என்ன’ என விழிகாளாலையே அவளிடம் கோக்கவும் “அவங்க என்ன கூப்படராங்க” என்றாள்.

எதுவும் பேசாமல் எழுந்தவன் வா எனச் சைகை காட்டிவிட்டு மருத்துவரின் அறைக்குச் சென்றான்.

அவளும் அவனைப் பின்தொடர்ந்தாள்…

“வா சரவணா! வாம்மா…! உட்காருங்க என புன்னகையுடனே அந்த பெண் மருத்துவர் வரவேற்கவும் வறேன் பெரியம்மா என்றவாறே அமர்ந்தான் சரவணபாண்டியன்.

அவள் கதவின் அருகிலே தயக்கத்துடனே நிற்கவும் வாம்மா மருமகளே…! ஏன் அங்கேயே நின்னுபோட்ட?” அவர் கேட்கவும் வந்து அமர்ந்தாள்.

“சரவணா எப்படி இருக்க? வூட்ல எல்லாரும் நல்லாருக்காங்ளா? அகிலாண்டேஸ்வரி அத்தை எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லாருக்காங்க பெரியம்மா…”

“உன்ற கண்ணாலத்துக்குத்தா வரமுடியாமல் போச்சு சரவணா” அத்தை எதும் தப்பா எடுத்துக்கொள்ளலையே?”

“அதலாம் அப்பத்தா தப்பா எடுத்துக்கலைங் பெரியம்மா…”

தமிழரசி அவர்கள் பேசுவதை வியப்பாகப் பார்க்கவும் “என்ன மருமகளே அப்படி பாக்கர? நானும் உன்ற வூட்டுகாரனோட சொந்தம்தான் பங்காளி முறையில் வருவோம். அதுவுமில்லாமல் உன்ற வூட்டுக்காரன் பிறந்ததுகூட இங்குதான்” அவர் கூறவும் அவளும் தலையாட்டினாள்.

“சரவண உன்ன மாதிரியே உன்ற பொண்டாட்டியும் அதிகமா பேசமாட்டாளா? இல்லை நீ பேசக்கூடாதுனு சொல்லிக் கூட்டி வந்துருக்கியா?” அவர் வம்பிழுக்கவும், தமிழ் , மாமா அப்படிலாம் எதுவும் சொல்லிக் கூட்டி வரல”என அவனுக்காகப் பேசினாள்.

“பார்டா…புருசன சொன்னவுடனே பொண்டாட்டிக்கு ரோசம் வருது” என கலாய்த்தவர் என்ற அத்தை நல்ல மருமகளைத்தான் கொண்டு வந்துருக்காங்க எனப் பாராட்டினார்.

அவர் அப்படி சொல்லவும் தர்ம சங்கடத்துடனே தலையை குனிந்துகொண்டாள்.
“சரவணா எதாவது விசேசமா? மருத்துவர் கேட்கவும் “அதை தெரிஞ்சிக்கத்தான் வந்திருக்கிறோம் பெரியம்மா”

எத்தனை நாள் தள்ளி போயிருக்கா மருமகளே? அவர் கேக்கவும் குழப்பமாக அவரை பார்த்தாள்.

“என்ன மருமகளே நாள் குறிச்சி வைக்கலையா?”அவர் கேட்டு முடிக்கும்போதே சரவணன் “22 நாள் பெரியம்மா” என்றான்.

அவர் அவனை ஆச்சியமாகப் பார்ப்பதைக் கண்டு கொள்ளாமல் இப்போலா சரியா சாப்டமாட்ரா, ராத்திரி தூங்கரதே இல்லை, சோர்வாகவே இருக்கா பெரியம்மா” என்றான்.

அவன் கூறியதைக் கேட்டு தமிழரசி திகைத்துப்போய் அவனைப் பார்த்தவள் ‘இதலா எப்படி இவருக்கு தெரியும்’ என மனதிற்குள்ளே கேட்டுக் கொண்டாள்.

சரவணன் சொன்னதை கேட்டுக்கொண்டவர் நர்ஸ்சை அழைத்து இவங்கள. கூட்டிப்போய் யூரீன் டெஸ்ட் எடுத்து கூட்டிட்டு வா என்றவர் ரிப்போர்ட் உடனே வேணும் என கூறி அனுபினார்.

தமிழரசி யூரின்டெஸ்ட்டுக்கு குடுத்துவிட்டு வந்து சிறிது நேரம் கழித்து ரிப்போர்ட்டை கொண்டு வந்து நர்ஸ் குடுக்கவும் அதனை வாங்கி பாத்தவர் “ரிப்போர் பாஸிட்டிவ்னு வந்துருக்கு சரவணா வாழ்த்துகள்…”என்றார்.

அவரின் வார்த்தையைக் கேட்டதும் இம்புட்டு நேரம் இருந்த பதட்டம் போய் சந்தோசப்பட்டவனாய் “தேங்ஸ் பெரியம்மா…” என்றான்.

எழுந்து வா மருமகளே ஸ்கேன் பண்ணி உன்னோட குழைந்தை எப்படி இருக்குனு பாத்துடலாம் என்றவர் தமிழை பக்கத்து அறைக்கு கூட்டிச்சென்று ஸ்கேன் பாத்துவிட்டு வெளியே வந்தவர் சரவணா உன்னோட பேபி நல்லாருக்குடா என அவர்கூறிக்கொண்டிருக்கும்போதே எழுந்து பக்கத்து அறைக்கு சென்றவன் புடவையைச் சரி பண்ணிக்கொண்டிருந்தவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.

அவன் திடிரென அணைக்கவும் பயத்தில் கத்தப்போனவள் பின் சுதாரித்து அமைதியாகி விட்டாள்.

அவளை விட்டு விலகியவன் அவள் காலடியில் முழங்காழிட்டு அமர்ந்தவன் அவள் கையிலிருந்த கொசுவத்தை வாங்கி அவள் இடுப்பில் சொருகிவிடவும் இன்னும் அதிர்ச்சி நிலைக்கே சென்றுவிட்டாள்.

இன்று தன் கணவன் செய்யும் ஒவ்வொரு செய்கையும் அவளின் மனதில் அவனின் மீதான நல்லெண்ணத்தை உருக்கியது.ஒரு பொண்ணாய் தான் கருவுற்றிருப்பதைக்கூட அறியாமல் இருக்கும்பொழுது அவன் நாட்கணக்கு முதல் கொண்டு அத்தனையும் கவனித்துகொண்டிருந்திருக்கிறான் என தெரிந்ததுமே அவளால் எப்படி உணருகிறோம் என்றே கூறமுடியவில்லை.

கொசுவத்தைச் சொருகியவன் அவளின் வயிற்றை மூடியிருந்த சீலையை விலக்கியவாறு தன் கைகளால் வருடிக்கொடுக்கவும் அவளின் உடல் மட்டுமில்லாமல் உள்ளமும் ஒருமுறை சிலிர்த்தடங்கியது. அவளின் வயிற்றில் தன் இதழை ஒற்றியெடுத்தவன் அவளை முழங்காலிட்டவாறே அணைத்துக்கொண்டு “குட்டிமா அப்பா பேசரது கேட்குதாடா? உன்ன கையில் ஏந்திக்கொள்ளும் நாளுக்காக அப்பா காத்து கிட்டு இருக்கேன்டா” இவ்வளவு நேரம் கனவுலகத்தில் இருந்தவள் அவன் குழந்தையிடம் பேசிய வார்த்தையை கேட்டதும் கனவு மொத்தமும் கலைந்து நிஜத்திற்கு வந்ததை போல் உணர்ந்தவள் ‘அப்போ இது எல்லாம் குழந்தைக்குதானா’ மனதில் நினைத்தவள் அப்படியே மயங்கி சரிய ஆரம்பித்தாள்.

அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே தமிழரசி மயங்கிச் சரிய ஆரம்பிக்கவும் அவளை அப்படியே கைகளில் அள்ளி அங்கிருந்த பெட்டில் படுக்க வைத்தவன் “பெரியம்மா…” பதட்டத்துடனே கத்தினான்.

சரவணனின் குரல் கேட்டு வேகமாக வந்த டாக்டர் தமிழரசி மயங்கியிருப்பதைப் பார்த்ததும் அவளுக்குத் தேவையான ட்ரிட்மென்ட்டை கொடுத்து முடிக்கும் வரை சரவணபாண்டியன் தமிழின் கையை பிடித்துக்கொண்டு கவலையுடன் நின்று கொண்டிருந்தவன் “பெரியம்மா தமிழுக்கு என்னாச்சு ஏன் திடிர்னு மயங்கி விழுந்துட்டா? குரலில் கலக்கத்துடனே கேட்டான்.

அவனின் தோளை தட்டிக்கொடுத்தவர் உன்ற பொண்டாட்டிக்கு ஒன்னும் இல்லை நீ பயப்படாத சரவணா,இந்த மாதிரி சமயத்தில் இதலாம் வரதுதான் அவ கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தால் நார்மலாயிடுவா இப்போதைக்கு ஒரு ட்ரிப்ஸ் மட்டும் போட்டுவிடறேன் என்றவர் அங்கிருந்த செவிலியரிடம் இவங்கல அறைக்கு மாத்திடுங்க என கூறிவிட்டுச் சென்றார்.

தமிழ் கண்முழிக்கும் போது சரவணபாண்டியனின் மொத்த குடும்பமும் அந்த அறையிலிருந்தது.

கண் விழித்தவள் சுற்றி இருப்பவர்களைப் பார்த்ததும் ஒன்றும் புரியாமல் வேகமாக எழுந்து உட்காரப்போகவும் கங்கா, ஏய் பார்த்து எதற்கு இம்புட்டு வேகம் என கடிந்து பேசவும் அகிலாண்டேஸ்வரியைத் தவிர மொத்தக்குடும்பமும் அதிர்ச்சியுடனே அவரை பார்த்ததும்தான் தான் பேசியது புரிந்தது. ஆனாலும் தன் கெத்தை விடாமல் நா ஒன்னும் அவ மேல இருக்க பாசத்தில் சொல்லல? அவ சுமக்கரது என் மகனுடைய வாரிசு” என கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.

அவர் வெளியே செல்லவும் அகிலாண்டேஸ்வரி சிரித்தவாறே அவ கெடக்கரா கண்ணு மனசுல ஒன்னைத்தையும் வச்சிக்க தெரியாது வெளியதா கோபமா இருக்க மாதிரி நடிக்கரா உள்ளுக்குள்ளே அம்புட்டு சந்தோசம் படுவா என மூத்த மருமகளுக்காகப் பேசியவர் தமிழின் கன்னங்களை இரு கைகளாலும் தாங்கி பிடித்து அவள் நெற்றியில் முத்தமிட்டு என்ன கொள்ளுப்பாட்டியா ஆக்கிட்ட ரொம்ப சந்தோசம் கண்ணு” என்றார்.

இளமாறன், வாழ்த்துகள் அண்ணி நானும் சித்தப்பா ஆயிட்டேன் என சந்தோசமாகக் கத்தினான்.

தென்னரசும்,முத்தரசும்ங்குட அவளின் தலையைப் பாசமாக தடவிக்கொடுத்து வாழ்த்தினர்.

தமிழரசி எதையுமே நம்பமுடியாத நிலையிலிருந்தாள்.

மருத்துவர் போகச் சொல்லவும் அவளைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர்.

அவர்கள் வீட்டிற்கு வரும்போது நந்தினி மாமியாரிடம் சண்டை போட்டுக்கொண்டு பையனைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தாள்…

நந்தினியை அதே ஊரில் சொந்தத்திலே கட்டி கொடுத்திருந்தார்கள். அவளுக்கும் அவளுடைய மாமியார்க்கும் அடிக்கடி சண்டை வந்துவிடும் அப்படி சண்டை வந்துவிட்டாள் பொறந்த வீட்டுக்கு கிளம்பி வந்துவிடுவாள். புருசன் வந்து சமாதானம் படுத்தி கூட்டி செல்வது வாடிக்கை அவளுடைய கணவன் அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும் இடையால் மாட்டிக்கொண்டு முழிக்கும் பாவப்பட்ட ஜீவன். அகிலாண்டேஸ்வரிகூட எத்தனையோ தடவை சொல்லி பார்த்துவிட்டார் ஆனால் நந்தினி திருந்திய பாடுதான் இல்லை.

அவளைப் பார்த்ததுமே இளமாறன் அதானே பார்த்தேன் எங்கடா இந்தவாரம் என்ற பொறந்தவல வரக்காணோமேனு எப்பவும்போல மாமியார்க்கூட சண்டைபோட்டு கிட்டு வந்து போட்டியா அக்கா என அவளை கலாய்த்தான்.

பாருங்ம்மா அவன் என்ன கலாயிக்கரான் நா ஒன்றும் இன்றைக்கு சண்டை போடவே இல்லை என்ற மாமியார்தான் ஆரம்பிச்சாங்க…

அவங்க ஆரம்பிச்சாங்க நீ முடிச்சிவச்சிபோட்டு கிளம்பி வந்துட்ட அப்படி தானக்கா…ஆனா ஒன்னுக்கா உனக்கும் அத்தைக்கும் இடையில். மாட்டிக்கொண்டு முழிக்கரது மாமாதான்.

ம்க்கும் நாந்தா அவங்க அம்மாகிட்ட மாட்டிக்கொண்டு முழிக்கிறேன்

ஆரு நீதானே நம்பிட்டேன்ங்க்கா…

இவர்கள் சண்டையைப் புன்சிரிப்புடனே பார்த்துக்கொண்டிருந்தாள் தமிழரசி.

நம்பாட்டி போடா என்றவள் அம்மா எங்கம்மா எல்லாரும் போய்விட்டு வரிங்க?

ஹாஸ்பிட்டல்க்குதான்டி

ஆருக்கு என்னாச்சும்மா

“ஆருக்கும் எதுவும் ஆகல எல்லாம் நல்ல விசயம்தான் உன்ற அண்ணி முழுகாமல் இருக்கா…”

என்னம்மா சொல்ர இத ஏ நீங்க ஆருமே ஏங்காட்ட சொல்லல?

இன்னைக்குதான்டி கன்பார்ம் ஆச்சு அதுக்குள்ள எப்படி சொல்ரது…

வாழ்த்துகள் அண்ணி…

ம்ம்…தேங்ஸ் அண்ணி.

அண்ணா,அப்பா பெரியப்பா எல்லாம் எங்கம்மா

வேலை இருக்கவும் அவர்கள் அப்படியே ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பி போய்விட்டார்கள் டீ நாங்க உன்ற தம்பிகூட வந்துட்டோம்.

அகிலாண்டேஸ்வரி, தமிழ் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டுக் கண்ணு நீ உன்ற அறைக்கு போடாம்மா என்றார்.

அம்மாச்சி அம்மாக்கு போன் பண்ணிச் சொல்லட்டுமா? என தயங்கியவாறே கேட்டாள்.

யசோதாகிட்ட நானே போன் பண்ணி இந்த நல்லவிசயத்த சொல்லிடறேன்டா கண்ணு நீ அப்பரமா பேசு அவ ரொம்ப சந்தோசம் படுவா…

அப்போது கங்கா அதுலாம் ஒன்னும் வேண்டாம் கொஞ்ச நாளைக்கு ஆருக்கும் சொல்லாமல் இருக்கரதுதான் நல்லது என்றார்.

கங்கா! நீ புரிஞ்சித்தான் பேசரியா யோசோதா தமிழ பெத்தவ அவகிட்ட சொல்லாமல் ஆருகிட்ட சொல்ரது.

அத்தை உங்களுக்கே தெரியும் இப்போதா நாள் தள்ளிபோயிருக்கு அதுக்குள்ள வெளியில் எல்லார்கிட்டையும் சொன்னா அது கண்திர்ஷ்டி ஆகிடும் அப்பரம் குழந்தையைத்தான் பாதிக்கும்.

யசோதா வெளி ஆளுங்க கிடையாது கங்கா அப்பத்தா கோபமாகப் பேசவும், இப்போ இவ ஆத்தாகாரிகிட்ட சொல்லிட்டா உடனே பேரக்குழந்தைக்குச் சீர்வரிசை கொண்டாந்து இறக்க போறாளுக்கும் கங்காவும் பதிலுக்குக் கோபமாகப் பேச ஆரம்பித்தார்.

கங்கா நா உன்றகிட்ட ஏற்கனவே சொல்லிபோட்டேன் என்ற மகள கேவலமா பேசாதனு உனக்கு ஒருதடவை சொன்னா புரியாதா இங்க நீ சொல்ரதுதான் நடக்கோணும்னா இந்த வூட்ல பெரியமனுசினு நா ஒருத்தி எதுக்கு இருக்கேன்

என்னமோ பண்ணி தொலைங்க ஆனா குழந்தைக்கு எதாவது ஆச்சு நா அப்பரம் மனுசியா இருக்கமாட்டேன் கோபமாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

தமிழரசிக்கு இவ்வளவு நேரம் இருந்த சின்ன சந்தோசமும் கங்காவின் பேச்சில் தூள் தூளாக உடைந்து சிதறியது. அவளுடைய மனம் உடைந்ததை அங்கிருந்த ஆருமே உணரவில்லை. மதில் வெறுமை மட்டுமே

அகிலாண்டேஸ்வரி அவளை சமாதான படுத்த அவளருகில் சென்றவர் கண்ணு… அவர் பேச ஆரம்பிக்கும்போதே என்ற அம்மாகிட்ட சொல்லவேண்டாம் அப்பத்தா என்றாள்.

கண்ணு அவ சொல்ரதெல்லாம் தப்பா எடுத்துக்கொள்ளாத கண்ணு…நா யசோதாவுக்கு போன் பண்ணி சொல்றேன் அவ உடனே உன்ன பாக்க வந்துருவா

மை கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறே தயவுசெய்து அப்பத்தா என்ற அம்மாகிட்ட சொல்ல வேண்டாம் என்ற அம்மா வந்து பார்த்தா அவங்க பையனுடைய குழந்தைக்கு எதாவது ஆகிடும் அப்பரம் இத்தனை நாளா என்ற அம்மாவ பணத்துக்கு ஆசைபட்டவ ஒன்னுமில்லாதவனு சொல்லிக்கொண்டு இருந்தவர்கள் ராசி இல்லாதவனும் சொல்ல ஆரம்பிச்சிப்போடுவாங்க. என்ன பெற்ற பாவத்துக்கு என்ற அம்மா இந்த வார்த்தையெல்லாம் கேக்கோணும்னு அவசியம் இல்லை அம்மாச்சி முற்றும் துறந்த ஞானி நிலையில் கூறியவள் தனது அறைக்குச் சென்றுவிட்டாள்.

அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தவர் அப்படியே சாய ஆரம்பித்தார்.

அவர் சாய்வதைப் பார்த்ததும் ஓடிவந்து இளமாறன் பிடித்துக் கொள்ளவும் நந்தினி தண்ணீர் எடுத்து தெளித்தாள்.

தண்ணீர் தெளிக்கவும் கண் விழித்தவர் என்னோட சுயநலத்துக்காக என்ற மகளையும் பேத்தியையும் பலிகடா ஆக்கி போட்டேனே இந்த பாவத்தை நா ஏங்கப்போய் கழுவுவேன் என புலம்பியவர் ஆரிடமும் பேசாமல் எழுந்து அறைக்குச் சென்றார்.

அவர் சென்றதும் மாறன் சரவணனுக்கு போன் பண்ணி நடந்தது அனைத்தையும் கூறிவிட்டான்.

மாறன் போன் பண்ணிய அடுத்த பத்தாவது நிமிஷம் புயல் வேகத்தில் வீட்டிற்கு வந்தவன் அப்பத்தாவின் அறைக்குச் சென்றவன் அவர் சேரில் உட்கார்ந்திருந்த தோற்றமே அவனைப் பயமுறுத்தியது.

அவரின் அருகில் சென்றவன் அப்பத்தா… என அழைத்தான்.

அவன் குரல் கேட்டு கண் விழித்தவர் எதுவும் பேசாமல் திரும்பவும் கண் மூடிக்கொண்டார்.

அப்பத்தா எதாவது பேசுங்க எனக்குப் பயமா இருக்கு அவன் பதட்டமாகப் பேசவும் நா அம்புட்டு சீக்கிரம் சாக மாட்டேன் கண்ணு என்ற மக ஏங்கிட்ட வந்து கேள்வி கேப்பா உங்கல நம்பித்தானே என்ற மகள விட்டுவிட்டு போனேனு அதுவரைக்கும் நா உயிரோட இருப்பேன் நீ கவலைப்படாமல் உன்ற அம்மாவ போய் பாரு பாண்டியா

ஏனுங் அப்பத்தா இப்படிலா பேசரிங்க?

நா கொஞ்சநேரம் தனியா இருகோணும் பாண்டியா நீ வெளியப்போ

அப்பத்தா அவன் தடுமாறவும்… வெளிய போனு சொன்னேன் என்றவரின் குரலில் அத்தனை அழுத்தம்

சரவணன் எதுவும் பேசாமல் வெளியே வந்தவன் அடுத்து அவன் அம்மாவின் முன் போய் நின்றான்.

உங்களுக்கு என்னதானுங்ம்மா பிரச்சனை எதுக்கும்மா இப்படி வார்த்தையாலேயே மத்தவங்கல காய படுத்துரிங்க??

உன்ற பொண்டாட்டி அதுக்குள்ள உனக்கு போன் பண்ணி சொல்லிவிட்டாளாக்கும்.

அம்மா… கத்தியவாறே அவன் கோபம் அத்தனையையும் அந்த அறையிலிருந்த ட்ரெஸ்சிங் டேபிலின் கண்ணாடியின் காட்டினான்.

அவன் ஓங்கி அடித்த அடியில் கண்ணாடி சில்லு சில்லாக உடைந்து சிதறியது.

டேய் சரவணா என்னடா பண்ணி போட்ட ஐயோ இம்புட்டு ரத்தம் வருதே அவனின் கையை பிடித்துக்கொண்டு அழுதவரிடம் இருந்து கையை பறித்துக்கொண்டான்.

கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு ஓடிவந்த மூவரும் அவன் நின்ற கோலத்தைப் பார்த்துத் திகைத்துப்போய் அண்ணா… சரவணா… எனக் கத்தினர்.

ஆனால் சரவணனோ கையில் ஏற்பட்ட காயத்தில் உண்டான வலியை துளிகூட முகத்தில் காட்டாமல் கையில் ரத்தம் கொட்ட நின்றிருந்தான்.

கங்கா,சரவணனின் ருத்ர தாண்டவத்தில் பயந்துபோய் நின்றார். சரவணன் தன் கோபத்தை இதுவரையிலும் வீட்டு ஆட்களிடம் காட்டியதே இல்லை. இன்றுதான் அவனின் முழு கோபத்தையும் வீட்டில் உள்ளவர்கள் பார்த்தனர்.

மாறன் ஓடிச்சென்று பர்ஸ்எயிட் பாக்சை எடுத்து வந்தவன் காயத்திற்கு மருந்திடச் சரவணனை உட்கார வைக்க முயன்றான்.

விடு மாறா இந்த காயத்தால எல்லாம் நா சாகமாட்டேன் அவன் கோபத்தில் கத்திவிட்டு வெளியே செல்ல ஆரம்பிக்கவும் அவனைத் தடுத்து நிறுத்திய ராதிகா கண்ணத்தில் ஓங்கி அறைந்தவர் அவனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்து அவனின் கையை விட்டவர் ஆள் ஆளுக்கு கோபத்தில் வார்த்தையை கொட்டிட்டு இருந்தா என்ன அர்த்தம் சரவணா நீ ஒன்னும் சின்ன பையன் கிடையாது. எதுவா இருந்தாலும் பொறுமையா சொல்லிப் பழகு கோபத்தில் என்ன பேசுறோம்னே தெரியாமல் அக்காதா பேசராங்கனா நீயும் இப்போது அதைதான் பண்ணிட்டு இருக்க. ஒழுங்கா உட்கார் என கடிந்தவர் மாறனிடம் மருந்திடக் கூறினார்.

அவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக அங்கிருந்த சேரில் உட்கார்ந்ததும் மாறன் காயத்தை சுத்தம் பண்ணி மருந்திட்டுக் கட்டி முடிக்கும்போதே ஒரு டம்ளர் ஜுஸை கொண்டு வந்து கொடுத்த ராதிகா இத கொண்டுபோய் தமிழுக்கு கொடு சரவணா என்றார்.

கங்கா கோபத்தை சட்டுனு வெளியே காட்டிவிடுவார் என்றாள் ராதிகா எவ்வளவு பிரச்சனையினையும் நிதானத்தை இழக்காதவர். அதனாலையே அகிலாண்டேஸ்வரியின் குடும்பம் உடையாமல் கூட்டுக் குடும்பமாகவே வாழ்கின்றனர். தென்னரசு,முத்தரசின் பாசம் ஒருபுறம் என்றால் ராதிகாவின் நிதானமும் மற்றொரு காரணம்.

ராதிகா கொடுத்த ஜுஸ் டம்ளரை வாங்கிக் கொண்டவன் எதுவும் பேசாமல் தனதறைக்கு சென்றான்.

சரவணன் போனதும் ராதிகா கங்காவை பார்க்கச் சென்றவர் தன் மகளிடம் உடைந்த கண்ணாடி துண்டுகளை கீளின் பண்ணச் சொல்லிவிட்டு கங்காவின் அருகில் வந்தவர் அக்கா… என அழைத்தார்.

சரவணனின் கையிலிருந்து தரையில் சிந்தியிருந்த ரத்த துளிகளையே பார்த்துக்கொண்டிருந்த கங்கா ராதிகாவின் அழைப்பில் சுயநினைவிற்கு வந்தவர் பாத்தியா ராதிகா ஊமைச்சி மாதிரி இருந்துகிட்டு என்ற மகனையும் ஏங்கிட்ட இருந்து பிரிச்சிபோட்டா… என புலம்ப ஆரம்பித்தார்.

ராதிகாவிற்கு கங்காவை சமாதானப் படுத்தவே போதும் போதுமென்று ஆகிவிட்டது.

சரவணன் வரும் சத்தம் கேட்கவும் அழுதுகொண்டிருந்தவள் எழுந்து குளியலறையிற்குள் புகுந்துகொண்டாள்.

உள்ளே வந்தவன் குளியலறையில் இருந்து தண்ணீர் சத்தம் கேட்கவும் ஜுஸ் தம்ளரை அங்கிருந்த டீபாயில் வைத்துவிட்டு அவள் வரும் வரை கட்டிலில் உட்கார்ந்தான்.

சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவிக்கொண்டு சாதாரணமாக வெளியே வந்தவளைப் பார்த்ததுமே அவள் கண்களில் தெரிந்த சிகப்பே கூறியது அவள் அழுததை.

எதாவது தன்னிடம் கூறுவாள் என எதிர்பார்த்து அவளின் முகத்தையே பார்த்தான்.

ஆனால் அவளோ அவன் ஒருவன் அங்கிருப்பதைக் கூட கண்டுகொள்ளாமல் இயல்பாக இருப்பதைப் போல் நடிக்க ஆரம்பிக்கவும் சரவணனுக்கு அடங்கிருந்த கோபம் மீண்டும் ஏகத்துக்கும் ஏறியது. இங்கிருந்தால் திரும்பவும் அவளை காயபடுத்திடு விடுவோம் என நினைத்தவன் எழுந்து வாசல் வரை சென்றவன் திரும்பி அவளைப் பார்த்து ‘இப்போதும் ஏங்கிட்ட நடந்தத சொல்லோணும்னுக்கூட உனக்கு தோணவே இல்லையா டீ ஒவ்வொரு முறையும் நீயா வந்து சொல்லுவனு எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துதான் போறேன்’ என மனதில் விரக்தியாக நினைத்தவாறே சென்றான்.

அவன் கண்களில் தெரிந்த வலியைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் அவன் கையில் போடப்பட்டிருந்த கட்டு கண்களில் தெரிந்தது.

அவனின் காயத்தைப் பார்த்து மனசு பதறினாலும் அவனைத் தடுத்து நிறுத்திக் கேட்ட தோன்றாமல் அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இருவரும் வாய்விட்டுக் கேட்டிருந்தாளே எல்லாம் புரிந்திருக்கும் இருவரும் மனதிற்குள்ளே வைத்துக்கொண்டு இருவரின் வாழ்க்கையையுமே சிக்கலாக்கிக் கொண்டனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here