நேசவிதை தூவும் காரிகையவள்…7

0
190

பகுதி.7

சரவணபாண்டியன் கோபத்துடன் வேகமாகப் படியிறங்கி வந்தவன் அவனுக்காக ஹாலில் காத்துக்கொண்டிருந்த தம்பி,தங்கச்சியை கண்டு கொள்ளாமல் வெளியே செல்லவும் மாறன், அவனை தடுக்க ஓடினான்.

மாறன் அவனை தடுப்பதற்குள்ளாகவே பைக்கை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.

வெளியே ஓடிவந்து பார்த்த இளமாறன் ‘ச்சே அதுக்குள்ள அண்ணா போயிட்டாறே’ எனக் அவன் கூறிக்கொண்டிருக்கும்போதே வெளியே வந்த நந்தினி “எதுக்கு டா அண்ணாவப் போக விட்ட” எனக் கடிந்தாள்.

“கடுப்பக் கிளப்பாதக்கா நானே அண்ணாவத் தடுக்கமுடியலைனு இருக்கேன்” அவளிடம் எரிந்து விழுந்துவிட்டு உள்ளே சென்று சோபாவில் உட்கார்ந்தான்.

அவனருகில் வந்து உட்கார்ந்தநந்தினி “டேய் தம்பி அண்ணா மேல அண்ணிக்கு ஜூஸ் எடுத்துபோட்டு போனப்பக் கோபம் இல்லாமதானே போனாங்க ஒருவேலை அண்ணியும் அண்ணாகிட்ட பெரிம்மா சண்டைப்போட்டதவச்சி சண்டை போட்ருப்பாங்ளோ அதனாலதான் திரும்பக் கோபமா போறாங்களா?” எனச் சந்தேகமாகக் கேட்டாள்.

“உன்ன அத்தை எதாவது சொல்லிப்போட்டா உடனே மாமாக்கிட்டச் சண்டைபோடரமாதிரி அண்ணியையும் நினச்சிபோட்டியா அக்கா. அவங்க அந்தமாதிரி ஆளே கிடையாது வூட்ல என்ன நடந்தாலும் அண்ணாகிட்ட சொல்லவே மாட்டாங்க.ஏன் இதுவரைலும் ஒருநாள்க்கு இங்க நடக்கரத அண்ணியோட அம்மாகிட்டக்கூட சொன்னதுக்கிடையாது.அத்தை அண்ணிய இங்க எல்லாரும் நல்லா பாத்துக்கறோம்னு நினச்சிகிட்டுதா இருக்காங்க. அண்ணியும் அப்படிதா சொல்லி வச்சிருக்காங்க.”

“ஆமா உனக்கு எப்படி அண்ணி, அண்ணா கிட்ட சொல்லமாட்டாங்கனு தெரியும் ஒருவேலை உனக்கு தெரியாமச் சொல்லிருக்கலாம்லடா.”

“லூசுமாதிரி கேள்வி கேக்காதக்கா நா அண்ணி இந்தவூட்டுக்கு வந்த ஆறுமாசமா பாத்துகிட்டுதா இருக்கேன் இதுவரைலும் அண்ணியால ஒரு பிரச்சனையும் வந்ததில்லை அதுவுமில்லாம அண்ணி அத்தைகிட்டப் பேசரப்ப நா பக்கத்துலதான் இருப்பேன் அத்தை ஏங்கிட்ட எம்புட்டு பாசமா பேசுவாங்கத் தெரியுமா?”

“உன்றகிட்ட ஆராவது நாலு வார்த்தை சிரிச்சி பேசிபோட்டாவே போதும் உனக்கு அவங்க நல்லவங்களாத்தா தெரிவாங்க…”

“உனக்கு உன்னத்தவிர மத்தவங்க எல்லாருமே தப்பானவங்கனு நினைக்கரஆளு உன்றகிட்டச் சொன்னேன் பாரு அவன் முறைத்தவாறே கூறவும், நா சொல்ரது தப்புனா அண்ணா ஏன்டா கோபமா போறார்” என்று கேட்டாள் நந்தினி.

“என்னோடக் கனிப்பு சரினா அண்ணாக்கிட்ட அண்ணி எதுவுமே சொல்லிருக்கமாட்டாங்க அண்ணாவுக்கு அண்ணி தாங்கிட்டஎதையுமே சொல்லாமஇருக்காங்கங்ர வருத்தம்தான் கோபமா மாறிருக்கு அந்தகோபம்கூட அண்ணி மேலஇருக்காது அண்ணாவுக்கு அண்ணா மேலையே கோபமா இருக்கும்” எனத்தன் அண்ணனின் மனதை சரியா கூறினான்.

நந்தினி, “உனக்கு அடுத்தவங்க மனசுல இருக்கரத சொல்ரத் திறமை இருக்குடா நீவேனா இதையே ஒரு தொழிலா எடுத்து பண்ணேன் உன்னையும் ஒரு கூட்டாம் கடவுள்னு நம்ப ஆரம்பிச்சிப்போடும் எனக் நக்கலாகக் கலாயித்தாள்.

“ச்ச்சீசீ… பே உன்றக் கிட்டப் போய் சொன்னேன்பாரு என்னச் செறுப்பால அடிக்கோணும்.” எனக் கோபமாகத் திட்டிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

“நல்லா அடிச்சிக்கோடா உன்ன ஆரு தடுத்தாங்க.”

தமிழரசி கணவனின் கையில் இருந்த காயத்தை பார்த்ததிலிருந்து நிம்மதியாக இருக்கமுடியாமல் தவித்தாள்.ஒருவார்த்தை மாமாகிட்ட கேக்காம போனதை நினைத்து தன்னை கடிந்துக்கொண்டு அவன் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

நேரம் போனதே தவிர அவன் வந்தபாடே இல்லை. இரவு ஒன்பது மணியாகியும் அவன் வராமல் இருக்கவும் வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்து ரோட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

தமிழரசி வாசல்ல உட்கார்ந்திருப்பதை பார்த்த ராதிகா அவளின் அருகில் வந்து “கண்ணு இன்னும் தூங்காம இங்க உட்கோர்ந்து என்ன பண்ணிபோட்டு இருக்க?” என்று கேட்டார்.

அவரின் குரல் கேட்டு திரும்பி பார்த்தவள் “மாமா இன்னும் வரலைங் அத்தை…” என்றாள்.

“சரவணன் எப்பவும் லேட்டாத்தானே வருவான் அவன் வந்தா நா சாப்பாடு போட்டுடறேன் நீ போய் தூங்கும்மா இந்தமாதிரி நேரத்துல ரொம்பநேரம் தூங்காம முழிச்சிருக்கூடாது.”

“இல்லைங்த்தை மாமா வந்ததும் போறேனே…” என தயங்கியவாறே கேட்டாள்.

அவளின் முகத்தில் தெரிந்தக் கவலையே பார்த்ததும் “சரிம்மா நா மாறன சரவணனுக்கு போன்பண்ணி வெரசா வரசொல்றேன்.”என கூறிவிட்டு ஹாலில் டீவி பார்த்துக்கொண்டிருந்த தன் மகனை அழைத்தார்.

அவன் வந்ததும் “மாறா உன்ற அண்ணனுக்கு ஒரு போன போட்டு வூட்டுக்கு வரசொல்லு” என்றார்.

“அண்ணாவுக்கு முன்னாடியே போன் பண்ணிபாத்துபோட்டேன்ம்மா போன் நாட்ரீச்சப்புல்னே வருது” என்றான்.

தமிழரசி, “கண்ணன் அண்ணாவுக்கு போன் பண்ணி கேளு மாறா” என்றாள்.

“அட ஆம்மால அண்ணா மாமாக்கூடத்தானே இருப்பார் நா அதமறந்தே போயிட்டேனே ” “சரி நீங்க போங்க நா அண்ணாவ வரசொல்றேன்” என்றவன் தன் அறைக்குச் சென்று கண்ணனுக்கு அழைத்தான்.

கண்ணன் போனை எடுத்ததும் “மாமா அண்ணாகிட்ட போனக்குடுங்க…”

“அதான் காலைலயே உன்ற அணணன்கூட நா சேரதாலதான் உன்ற அண்ணன் கெட்டுபோறானு சொல்லிபோட்டியே அப்பரம் எதுக்குடா இப்போ போன்பண்ணி என்றகிட்ட கேக்கர உன்ற அண்ணன்கிட்டையே கேட்டுக்க” என அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே “லூசுத்தனமா பேசாம அண்ணாகிட்ட போனக் குடு மாமா” என கடிந்தான்.

“ஆமாடா உனக்கும் உன்ற அண்ணனுக்கும் நா லூசுமாதிரித்தான் தெரிவேன்” கண்ணன், மதியத்திலிருந்து சரவணன் மேலிருந்த கோபத்தை எல்லாம் மாறனிடம் காட்டினான்.

“ப்ளீஸ் மாமா கோபபடாதிங்க அண்ணாகிட்ட குடுங்க நா பேசோணும்…”

“டேய் என்ன விளையாடரியா உன்ற அண்ணன நா காலைலப் பார்த்ததுதான் தேங்காப்பருப்பு இப்போ விலை கம்மியா இருக்கு நாம மதியம் போய் வாங்கிட்டு வந்து குடோன்ல வச்சிக்கலாம்னு சொன்னவன்தான் அப்பரம் ஆளையேக்காணாம் நானும் மதியத்துல இருந்து அவனுக்கு போன்போட்டு பாத்துட்டு கடைசில அவன் போன் எடுக்காததால நானே அழைஞ்சி திருஞ்சி வாங்கி அத லோடு ஏத்தி கொண்டுவந்து குடோன்ல இறக்கிபோட்டு இப்போதா வூட்டுக்கு கிளம்பபோறேன்” என்றான்.

“மதியத்துல இருந்தே அண்ணா அங்க வரலையா? மாமா உனக்கு நல்லாத்தெரியுமா? அண்ணா அங்க இல்லைனு” அவன் கூறி முடிப்பதற்குள்ளாகவே “டேய் நானே செம்மக் கோபத்துல இருக்கேன் என்ன கடுப்பேத்தாமபோன வைடா” என்றான்.

“ஐயோ மாமா வச்சிபோடாதிங்க அண்ணா மதியம் வெளிய போனவர்தான் இன்னும் வூட்டுக்கு வரலை.வூட்ல கொஞ்சம் பிரச்சனை அதுல அண்ணா கோபமாத்தா வூட்டவுட்டு போனாங்க மாமா” அதனாலநான் கேட்டேன்.

“சரி இருடா அவனுக்கு தெரிஞ்சவங்ககிட்ட விசாரிச்சு சொல்றேன்”

“சரி மாமா…”

மாறன் போனை வைத்ததும் கண்ணன், “வூர்ல எத்தனையோ பசங்க இருக்கப்ப இவன் அண்ணங்கூட ப்ரண்டா ஆனேன்ல அதுக்கு அண்ணனும் தம்பியும் நல்லா வச்சி செய்யறானுங்க” என புலம்பயவாறே அவர்கள் போகும் இடமெல்லாம் தேடி பார்த்துவிட்டு கடைசியில் சரவணனின் தோட்டத்திற்கு சென்று பார்த்தவன் அங்கு அவன் கண்ட காட்சி அவனை பயம் கொள்ள வைத்தது.

சரவணன் வீட்டிலிருந்து கோபமாக வெளியே வந்தவன் பைக்கை எடுத்துக்கொண்டு எங்கு போகிறோம் என்றநினைவே இல்லாமல் சென்றவன் பொழுது இறங்கும்வரையில் சுற்றிவிட்டு கடைசியாகப் பைக் வந்து நின்றஇடம் அவனுடையத் தோட்டத்தில் உள்ளபழங்கால முறைப்படி கட்டப்பட்டஓட்டு வீட்டின் முன் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வந்தவனின் கோபம் துளிக்கூடக் குறையல்லை அப்பத்தா அவனை ஒதுக்கியது,அவனுடைய அம்மா புரிந்துகொள்ளாமல் பேசியது,தமிழ் அவனிடம் சொல்லாமல் மறைத்தது எல்லாமே ஒன்று சேர்ந்து அவனை பாடாய் படுத்தியது ஒரு கட்டத்திற்கு மேல் மண்டை வலி தாங்கமுடியாமல் தன்னை மறப்பதற்காக தோட்டத்தில் தண்ணீ கட்ட இருக்கும் தோட்டக்காரனை கூப்பிட்டு அவன் கையில் பணத்தை தினித்துவிட்டு அவன் சொன்னப் பொருளை கேட்டதுமே தோட்டக்காரன் “ஐயா…” என தயங்கினான்.

அவன் போகாமல் தயங்கி நிக்கவும் “இப்போ நீ போறியா இல்லை நானே போய் வாங்கிட்டு வரட்டுமா?” எனக் கூறிக்கொண்டே அவன் கையிலிருந்தப் பணத்தை வாங்க போகவும் இந்த வூரில் சரவணனின் குடும்பத்திற்கு உள்ளமரியாதை தெரிந்தத் தோட்டக்காரனால் சரவணனை விடமனம் இல்லாமல் “ஐயா நானே போறேன்…” என்று கூறிவிட்டு சென்று சரவணன் கேட்டதை வாங்கி வந்து கொடுத்தான்.

தோட்டக்காரன் வாங்கி வந்ததும் அதனை வாங்கிக்கொண்டு அவனை போகசொன்னான்.

அவன் தயங்கி நிக்கவும் “உன்ன போனு சொன்னேன்” என கோபத்தில் கத்தினான்.

சரவணனின் கோபத்தை பார்த்து மிரண்டுப்போய் தோட்டக்காரன் சென்றுவிட்டான்.

தோட்டக்காரன் சென்றதும் அவன் வாங்கி வந்தததை குடிக்க ஆரம்பித்தான். தன்னை மறக்க நினைத்து குடிக்க ஆரம்பித்தவனால் போதை மேட்டுமே ஏறியதே தவிர தமிழின் அழுததால் சிவந்த முகமே மனக்கண்ணில் தோண்றி அவனை இம்சித்தது.அந்த கோபத்தில் கயிலிருந்த பாட்டிலை உடைத்துவிட்டு அதில் ஒரு பாதியை வைத்துக்கொண்டு “நா தோத்துட்டேன்…” என உளர ஆரம்பித்தான்.

அப்போதுதான் அவனைத் தேடிவந்த கண்ணன் அவன் இருந்த நிலைப்பார்த்தும் பயத்துடன் ஓடிப்போய் சரவணனின் கையில் இருந்தக் கண்ணாடி பாட்டிலின் உடைந்தப் பாகத்தை தட்டிவிட்டுவிட்டு சரவணனின் கண்ணத்தில் ஓங்கி அறைந்தான்.

கண்ணன் அறைந்ததும் திரும்பி பார்த்தவன் எதுவும் பதில் கூறாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.

“என்ன காரியம்டா பண்ணி தொலைச்சிருக்க அறிவு இருக்கா இல்லையாடா? உன்ன எங்கெல்லாம் தேடரது” என திட்ட ஆரம்த்தான்.

ஆனால், சரவணனோ அவன் திட்டுவதை காதிலே வாங்காமல் தலையை குனிந்தவாறே அமர்ந்திருந்தான்.

“இப்படியே எல்லாத்தையும் மனசுலையே போட்டு வச்சிக்கிட்டே இரு ஒருநாள் நீ மட்டும் சாகாம மத்தவங்களையும் சேர்த்து சாகடிக்கப்போரடா.” என்றவன் அவனை எழுப்பி அங்கிருந்த கட்டில் உட்கார வைத்துவிட்டு அங்கு உடைந்துகிடந்த பாட்டிலை கூட்டி அள்ளி கொட்டிவிட்டு வந்தவன் இளமாறனுக்கு போன் பண்ணினான்.

கண்ணனின் போனிற்காக காத்துக்கொண்டிருந்தவன் போன் வரவும் அவசரமாக எடுத்து “மாமா அண்ணாவ பாத்துபோட்டிங்ளா ” என்று கேட்டான்.

“இப்போ தோட்டத்து வீட்லதான் இருக்கோம் நீ ஆருக்கும் சொல்லாம சாப்பாடு எடுத்துகிட்டு வெரசா வாடா…” என்றான்.

“ஏனுங் மாமா அண்ணா இன்னும் கோபத்துலதான் இருக்காரா?”

“உன்ற அண்ணனுக்கு கோபம் வரமா இருந்தாத்தா அதிசையம் இன்னைக்கு சார் புதுசா ஒரு காரியம் பண்ணி வச்சிருக்கார் அதனாலதான் வூட்டுக்கு கூட்டிவரவேணாம்னு உன்ன வரசொல்றேன்.”

“என்ன மாமா சொல்ரிங்க? அண்ணா புதுசா என்னப் பண்ணிபோட்டாங்க…”

“ண்ணி அடிச்ப்போட்டு புல் போதைல இருக்கான்டா நா சொல்ரதக் காதுலையே வாங்காம எதையோ பறிகுடுத்தவன் மாதிரி உட்கோர்ந்துருக்கான்…”

“அண்ணா தண்ணி அடிச்சிருக்காங்ளா மாமா” மாறன் அதர்ச்சியாகக் கேட்கவும், ஆமாடா நீ ஆருகிட்டையும் சொல்லாம வந்து சேர் கண்ணன் அழைப்பைத் துண்டித்ததும் மாறன் அறையை விட்டு வெளிவந்தவன் வாசலில் தமிழை பார்த்ததும் அதிர்ந்துப்போய் ‘அண்ணி…” என்றான்.

ராதிகா எவ்வளவு சொல்லியும் மனது கேக்காமல் ஹாலிலே உட்கார்ந்துக்கொள்ளவும் அவரும் அவளை வற்புறுத்தாமல் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.ஹாலில் உட்கார்ந்திருந்தாள். மாறனின் போன் வரவும் எழுந்து வந்தவள் மாறன் பேசியதைக்கேட்டு வாசலிலே நின்றுவிட்டாள்.

“நானும் வறேன் மாறா…” அவள் கூறியதை கேட்டதும் அதிர்ந்துப்போய் “அண்ணி…நீங்க வரவேணாம் இங்கையே இருங்க நா பாத்துக்கறேன்” என்றான்.

“ப்ளீஸ் மாறா…” அவள் கெஞ்சவும் அவளையும் கூட்டிக்கொண்டு சென்றான்.

கண்ணன், மாறனுடன் வந்த தமிழை பார்த்ததுமே கோபமாக பைக்கின் அருகில் சென்றவன் மாறனை பார்த்து முறைத்தவாறே ஏன்டா உனக்கு மண்டைல மூளைனு ஒன்னு இருக்கா இல்லையா? நா உன்றகிட்ட என்ன சொன்னேன் நீ என்ன செஞ்சி வச்சிருக்க…” எனக் கடிந்தான்.

கண்ணன் மாறனை திட்டவும் தமிழரசி, “அண்ணா மாறன ஒன்னும் சொல்லாதிங்க நாந்தான் வறேனு சொன்னேன் அதனாலதான் கூட்டிவந்தான்” என்றாள்.

கண்ணன், “நீ ஏங்கண்ணு இன்னேரத்துல இங்க வந்த? சாப்பாட மாறன்கிட்டையே குடுத்துவிட வேண்டியதுதானே” என்றான்.

ப்ளீஸ் அண்ணா நா மாமாவ பாக்கோணும்…”

“புரியாம பேசாத கண்ணு அவன் கோபத்துல இருக்கப்ப மனுசனேக்கிடையாது இப்போ அவன் சுயநினைவுலக்கூட இல்லை. உன்ன எதாவது காயப்படுத்துர மாதிரி பேசுனாலும் பேசிப்போடுவான் அதனால நீ உள்ள வராத” அவன் குரலில் இருந்த அழுத்தமே அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது. “சரிங்ண்ணா நா உள்ள வரலை ஆனா மாமாவ எப்படியாவது சாப்ட வைச்சிப்போடுங்க மாமா காலைலயும் சாப்டல மதியமும் சாப்ட்ருக்க மாட்டார்” என்றாள்.

அவள் கையில் இருந்த சாப்பாட்டு பையை வாங்கிக்கொண்டவன் “சரிம்மா நீ வூட்டுக்கு போ நா பாத்துக்கறேன்” என்றவன் மாறனிடம் “மாறா தமிழ கூட்டிட்டு போடா” என்றான்.

மாமா சாப்ட்டதும் போறேனுங்ண்ணா” என கெஞ்சவும்,மேலும் அவளை வற்புறுத்தாமல் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றவன் சரவணனை பார்த்தான்.

சரவணன் தலையை இரு கைகளில் பிடித்துக்கொண்டு குனிந்தவாறே உட்கார்ந்திருக்கவும் சாப்பாட்டு பையை கீழே வைத்துவிட்டு சரவணனுக்கு மட்டும் தட்டில் சாப்பாட்டை போட்டு எடுத்துக்கொண்டு அவனருகில் சென்று அவனின் தோளில் கைவைத்து டேய் மாப்பிள்ளை அவனை கூப்பிட்டவாறே சாப்பாட்டை பிசைந்து ஊட்டப்போனான்.

அமர்ந்தவாக்கிலே நிமிராமல் “எனக்கு வேண்டாம் எடுத்துபோட்டு போ…” என்றான்.

அறைதான்டா வாங்கப்போற உன்ற மனுசுல என்ன நினச்சிபோட்டு இருக்க ஒழுங்கா சாப்புடு” அவன் கூறிக்கொண்டிருக்கும்போதே வேகமாக அவன் கையில் இருந்தத் தட்டை தட்டிவிட்டதும் தட்டு பறந்துசென்று சுவறில் பட்டு சாப்பாடு சிதறியது.

வெளியே திண்ணையில் உட்கார்ந்திருந்தவர்கள் சத்தம் கேக்கவும் உள்ளே ஓடிவந்தனர்.

“நாந்தா சொல்றேன்ல வேண்டாம்னு ஒருதடவை சொன்னா புரியாதா இன்னும் கொஞ்சநேரத்துல இதலா எடுத்துபோட்டு போகல நா மனுசனா இருக்கமாட்ன்” என கத்தினான்.

“ஆமா இப்போ மட்டும் நீ மனுசனாவா இருக்க” சரவணன் முறைக்கவும், “என்னடா முறைக்கர நீ முறைச்சா நா பயந்துடுவேனாக்கும் ஒழுங்கா நா சொல்ரத கேளு இல்லைனா அம்முச்சிக்கு போன்பண்ணி சொல்லிப்போடுவேன்.”

“என்ன மிரட்ரியாடா…”

“ஆமா அப்படியே வச்சிக்கோ ரெண்டுபேரும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போதே தமிழரசி இன்னொரு தட்டில் அவனுக்கு சாப்பாடை போட்டு எடுத்துவந்து அவனின் முன்னால் நீட்டினாள்.

“நண்பனை முறைத்துக்கொண்டிருந்தவன் திடிரென்று தன் முன்னால் சாப்பாட்டு தட்ட்டை நீட்டிய வளையல் அணிந்த கரத்தையுடையவளை பார்த்ததுமே அமைதியாக அவளின் முகத்தை வெறிக்க ஆரம்பித்தான். ‘இப்படி ஒவ்வொன்னையும் எனக்காக பாத்து பாத்து செஞ்சித்தான்டி என்ன உன்றமேல பைத்தியமா மாத்தி வச்சிருக்க இன்னும் என்னத்தான்டி வேணும் உனக்கு’ என மனதிற்குள்ளே அவளிடம் கேள்வி கேட்டான்.

அவன் அமைதியாக பார்க்கவும் மாறன் அவளின் காதில் “அண்ணி அண்ணா கையில கட்டு போட்ருக்கு” என மெதுவாக கூறினான்.

அப்போதுதான் அவளுக்கு அவனின் காயம் நினைவு வந்தது. திரும்ப தட்டை மாறனிடம் நீட்டியவள் “மாறா நீயே ஊட்டிவிடு” என்றாள்.

“ம்க்கும் நா மாட்டேன் அண்ணி, பாத்திங்கல மாமா ஊட்டபோனதுக்கே தட்டு பறந்தது.மாமாவுக்கே இந்த நிலமைனா நா போனா அம்புட்டுதான்” என்றவன் உங்க புருசன்தானே நீங்களே ஊட்டிவிடுங்க என்ன எதுக்கு கோத்துவிடரிங்க…”

“நானா…” அவள் இழுக்கவும் ஆமா நீங்கதானே பொண்டாட்டி அப்ப நீங்கதான் பண்ணோனும்” என்றவன் இவர்கள் மெதுவாக பேசுவது புரியாமல் இவர்களை பார்த்துக்கொண்டிருந்த கண்ணனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே சென்றான்.

வெளியே வந்ததும் “டேய் என்னடா பண்ற இப்போ எதுக்கு அந்த கிறுக்கன்கிட்ட தமிழ வுட்டுபோட்டு என்ன இழுத்துட்டு வர” கண்ணன் கேட்கவும், “நீங்க செத்தநேரம் சும்மா இருங்க மாமா உள்ள சத்தம் கேட்டா மட்டும் போலாம்.”

“நீ பண்றது எனக்கு ஒன்னும் புரியலைடா உன்ற அண்ணன்வேர கோபத்துல தமிழ எதாவது சொல்லிப்போடப்போறான் ஏங்கைய விடு நா போறேன்” என்றான்.

உங்களுக்கு புரிஞ்சிருந்தாத்தா இன்னேரத்துக்கு கல்யாணம் ஆகிருக்கும் என்ற அண்ணனாவது நிம்மதியா சந்தோசமா இருந்துருப்பார் அவன் மெதுவாக முனகவும்.

மாறன் முனகியதில் முன்பாதி மட்டுமே கேட்ட கண்ணன், “இப்போ கண்ணாலத்துக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம் அண்ணனும் தம்பியும் சேர்ந்து என்ன பைத்தியக்காரனா ஆக்காம விடமாட்டிங்களாடா?”

“ஐயோ மாமா செத்தநேரம் அமைதியா இருங்க அப்பரம் உங்களுக்கே புரியும்.”

மாறன் கண்ணனை கூட்டிக்கொண்டு வெளியே போகவும் மனதில் பயம் இருந்தாலும் அவன் சாப்டாமல் இருப்பது கவலையளிக்க சாப்பாட்டை பிசைந்து கையில் எடுத்து அவனின் வாயின் அருகில் கொண்டுப்போனாள்.

அவன் எதுவும் கூறாமல் அமைதியாக அதை வாங்க்கொள்ளவும் பயம் நீங்கியவளாய் மீண்டும் ஊட்ட ஆரம்பித்தாள்.

அவள் நின்றுக்கொண்டே இருக்கவும் அவளின் மற்றொரு கையை பிடித்து கட்டிலில் தன் அருகில் உட்கார வைத்தான்.

ஊட்டுவது அவளுக்கு எப்படியோ ஆனால் சரவணனுக்கு அவளின் கையில் சாப்பிடுவதை மனதில் ரசித்தான்.

அவன் சாப்பிட்டு முடித்ததும் தட்டிலே கையை கழுவிக்கொண்டு அவனின் வாயையும் துடைத்துவிட்டவள் தட்டில் உள்ள தண்ணீரை ஊற்ற எடுத்துக்கொண்டு வெளியே சென்றவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

வெளியே வந்த தமிழை பார்த்ததும்தான் கண்ணனுக்கு புரிந்தது. அடப்பாவி பயளே பொண்டாட்டி கையல சாப்டதான் இம்புட்டு வீம்பு பண்ணானா அப்போ இத்தனை நாளா அந்த புள்ளைய புடிக்காதமாதிரி நடிச்சதெல்லாம் பொய்யா’ என மனதில் நினைத்தவன் மாறனிடம், இங்க என்னடா நடக்குது? அண்ணனும் தம்பியும் என்ன வச்சி காமெடி ஏதும் பண்றிங்களாடா?” என்று கேட்டான்.

“இதுக்கூட தெரியாமத்தான் என்ற அண்ணன்கூட இம்புட்டு நாளா கூடவே சுத்திட்டு இருக்கிங்ளா மாமா” என நக்கலடித்தான்.

“நா என்னத்தடா கண்டேன் உன்ற அண்ணன்தா கல்லுளி மங்கனாச்சே ஒருவார்த்தை வாயில இருந்து வாங்கமுடியுமா?”

“அப்போ நா மட்டும் என்ன அண்ணா சொல்லியா தெரிஞ்சிகிட்டேன் அண்ணா அண்ணிய பாக்கரப்ப அவரோட கண்லகாதல் தெரியும் அதவச்சிதான் கண்டுபுடிச்சேன்” என்றான்.

ஆமா உனக்கு எப்படிடா இந்த காதல பத்திலா தெரியுது ஒருவேலை பொண்ணு ஏதும் எங்களுக்கு தெரியாம கரெக்ட் பண்ணிபோட்டியாடா?”

மாறன் பதில் சொல்லாமல் வெட்கப்படவும் “டேய் அப்போ நா கேட்டது உண்மைதானா? ஆருடா அந்த பொண்ணு?”

“அந்த பொண்ண ஒருதடவைத்தான் பாத்துருக்கேன் மாமா…”

“அது எப்படிடா ஒருதடவை பாத்ததுலையே லவ் வரும்.”

“பாத்தப்ப எல்லாம் வரல அந்த பொண்ணபத்தி கேட்க கேட்கத்தா என்ன அறியாமையே புடிக்க ஆரம்பிச்சிடுச்சு.”

“என்னடா உளர்ர ஆருடா அந்த பொண்ணு?”

“உங்களுக்கும் தெரிஞ்ச பொண்ணுதான் மாமா…”

“இழுக்காம சொல்லைத்தொலைடா மனுசனுக்கு பீபீ ஏறுது.”

“இப்போ சொல்லமாட்டேன் அந்த பொண்ணுகிட்ட லவ் சொல்லிபோட்டு அந்த பொண்ணு என்ற லவ் ஏத்துக்கிட்டாத்தான் சொல்லுவேன் மாமா.”

“அடகிறுக்குபயலே, அப்போ நீ இன்னும் அந்த பொண்ணுகிட்ட லவ்வ சொல்லவே இல்லையாடா?”

அவன் இல்லையென தலையாட்டவும் “வெளங்கிடும் நல்ல அண்ணன் நல்ல தம்பி உங்ககிட்ட மாட்டிகிட்டு நாந்தா முழிக்கறேன்டா” என பொலம்பினான்.

தமிழரசி தட்டை கழுவி எடுத்துக்கொண்டு உள்ளே வந்தவள் மீதி சாப்பாட்டை மூடி எடுத்து வைத்ததும் அவளின் கையை பிடித்து தன்னருகில் அமரவைத்து அவளின் மடியில் படுத்துக்கொண்டான்.

அவன் கையை பிடித்து இழுத்து உட்காரவைக்கவும் ஒன்னும் புரியாமல் அவனின் முகத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவளின் மடியில் படுத்து அவளின் வயிற்றை அணைத்துக்கொண்டான்.

அவனின் செயலில் அதிர்ந்தவள் “மாமா வெளிய அண்ணாவும் மாறாவும் இருக்காங்க” என தயங்கியவாறே கூறவும் “கொஞ்சநேரம் மட்டும்…” அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை அவனுக்காக விட்டுக்கொடுக்க சொன்னது.

சிறிதுநேரம்தானே என நினைத்து அமைதியாக அவனின் முகத்தை பார்த்தவாறே உட்கார்ந்திருந்தவள் அவளையறியாமளே கண்ணயர்ந்துவிட்டாள்.

ரொம்ப நேரம் ஆகவும் கண்ணன், “டேய் மாறா இன்னும் என்னடா ரெண்டுபேரும் பண்றாங்க எனக்குவேர பசி கண்ண கட்டுது. நாம்போய் சாப்டபோறேன்% என்றவன் “எனக்கும் சேர்த்துதானே எடுத்து வந்த” எனக் கேட்டான்.

“தெரியலை அண்ணிதான் போட்டு எடுத்துவந்தாங்க மாமா”

“அப்போ தமிழ் எனக்கும் சேர்த்திதான் எடுத்துபோட்டு வந்துருக்கும்” எனக் கூறிக்கொண்டே எழுந்து உள்ளே சென்றவன் அங்கு கண்ட காட்சியை நம்பமுடியாமல் பார்த்தவாறே “மாறா… இங்க வாடா” என மெதுவாக கூப்பிடவும் மாறனும் எழுந்து உள்ளே வந்தான்.

மாறனும் அங்கு கண்ட காட்சியில் வியந்தவன் தன் மொபைலில் அந்த அழகிய காட்சியை போட்டோ எடுத்தான்.

“டேய் என்னடா பண்ற இது உன்ற அண்ணனுக்கு தெரிஞ்சது உன்ன கொன்றுவான் முதல்ல அந்த போட்டோவ டெலிட் பண்ணுடா” என்று திட்டினான்.

அவன் கூறுவதை காதிலே வாங்காமல் அந்த போட்டோவை அண்ணனின் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பியவன் தன் மொபைலில் இருந்த போட்டோவை டெலிட் செய்தவாறே “இந்த போட்டோ எடுத்ததே என்ற அண்ணாவுக்குதான் மாமா நீங்க சாப்பாட்ட எடுத்துபோட்டு வெளிய வாங்க அண்ணா முழிச்சிக்கபோறாங்க” எனக்கூறியவாறே வெளியே சென்றுவிட்டான்.

கண்ணனும் அவர்களின் தூக்கத்தை கலைக்காமல் சாப்பாட்டு பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன் திண்ணையில் உட்கார்ந்தவாறே இன்னைக்கு நமக்கு சிவராத்திரிதான்டா” என்றான்.

“ஒருநாள் தானே மாமா என்ற அண்ணனுக்காக இதுக்கூட செய்யமாட்டிங்ளா?”

“இந்த வாய் காலைல வேர என்னமோ சொன்னதே மாறா” அவன் இழுக்கவும்,

“அத விடுங் மாமா நீங்க பசிக்குதுனு சொன்னிங்கல சாப்பிடுங்க.”

நண்பனும் தம்பியும் தங்களுக்கு காவல் இருப்பதைக்கூட உணராமல் நிம்மதியாக சரவணன் அவளின் மடியில் தலை வைத்தும் தமிழரசி அவனின் மேல் தலைவைத்தும் நிம்மதியாக உறங்கினர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here