பகுதி-9

0
222

காரை விட்டு இறங்கியவனின் பிம்பத்தை கண்டவளின் சப்த நாடியும் அடங்கியது இதயம் ஒரு நிமிடம் இயக்கத்தை நிறுத்தியதைப் போல் நெஞ்சடைத்தது. மூளை தன் செயல் திறனை இழந்து ஸ்தம்பித்தது. உடல் தடுமாறியது . தன் கண்களை அழுந்த மூடி ஒரு நிமிடம் தன் நிலமையை சீராக்கியவள் ” இவன் இங்கு எப்படி???…இவனுடைய பெயரையோ இல்லை இவன் நிறுவனத்தின் பெயரையோ எங்கும் பார்த்ததுபோல் நியாபகம் இல்லையே! “என்று ஏதோ தோன்றியவள் நாம நல்லாதான் செக் பண்ணோமா ?” என்று யோசித்தவளாக ஒரு முறைக்கு இருமுறை தேடலானாள்.

அவளது தவிப்பையும் கண்களில் தோன்றி மறையும் மாறுதல்களையும் கண்டவனின் இதழ்கள் அவளின் பற்களிக்கிடையே கடிபட்ட இதழ்களின் மேல் காதல் கொண்டது. தலை முதல் பாதம் வரை ரசனையுடன் அளந்தவன் தன் கண்களில் அவள் மதி முகத்தை நிறைத்துக் கொண்டான். இது ஏதுவும் அறியாதவளின் கவனம் ஃபைல்களில் மூழ்கி இருக்க ஏதோ உறுத்துவதை போலிருக்க சட்டென்று நிமிர்ந்தாள்.

அவன் பார்வையின் தீவிரத்தை கண்டு தடுமாறியவள் தனது முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் பிரதிபலிக்காமல் இருக்க தன் தலையில் அணிந்து இருந்த சன் கிளாசை அணிந்துக் கொண்டாள்.

அவளின் முழுக்கை கருப்பு சர்ட்டும் வெளிர்நீல நிற ஜூன்சும் அலட்சியமாக அள்ளி முடிந்து கிளிப் இட்ட முடியும் முகத்தில் எந்த வித ஒப்பனையும் இல்லாமல் அணிந்திருந்த கூலர்சும் அவளது தோரனையையும் கண்டவன் “மை டியர் ராங்கிக்காரி உன்னோட கோபமும் திமிரும் இன்னும் கொஞ்சம் கூட குறையுல டார்லிங் ஆனா நீ என்னை பார்த்து ஜர்க்கான ஒரு நிமிஷம் போதும் டியர் என்னை நீ இன்னும் மறக்காமல் இருக்க என்பதை எனக்கு உணர்த்த” என்று நினைத்திருந்தான் கௌஷிக்.

அவன் இருப்பதை கணடுக்கொள்ளாமல் அதே அலச்சிய தோரனையுடன்
“மிஸ்டர் ராய் இந்த சைட் J V EXPORTS நேம்ல இருக்கு இந்த சைட்டுக்கு இவங்க ஏன் வந்து இருக்காங்க? இவருக்கும் சைட்டுக்கும் என்ன சம்மந்தம்??”.

“மேம் இந்த இடத்துல கட்டப்போர பில்டிங்கே இவர்து தான் மேம் இது அவங்களோட இன்னோறு கம்பனியோட நேம் மேம் இவர் R K TEXTILES INDUSTRY யின் MD மிஸ்டர் கௌஷிக் “மேனேஜர்.

“சார் இவங்க எங்க builders வோட சீஃப் இன்ஞினியர் வைஷ்ணவி இந்த பிராஜக்ட்டுக்கு இவங்கதான் ஹெட் சார் “மேனேஜர்.

“இவர்களை அறிமுகம் படித்தியவுடன் எதுவுமே தெரியாததை போல் ஹாய் மிஸஸ் வைஷ்ணவி என்று கூறியவன் அவள் அவளுடைய கணவனுடைய பெயரை கூறுவதற்க்கு சற்று இடைவெளி விட்டு் ” உதட்டோர புன்னகையுடன் கரம் நீட்டினான்

மேனேஜர் பக்கத்தில் இருப்பதால் முகத்தில் பிளாஸ்டிக் புன்னகையை தவழ விட்டவள் “ஹலோ சார் call me just vaishnavie… only vaishnavie” காரமான பதிலுடன் குலுக்குவதற்கு கரத்தை நீட்டினாள்.

அவளின் இந்த பதிலில் மனது கனத்தாலும் இத்தனை வருட பிரிவிற்கு பின் கிடைத்த அவளின் தளிர் கரத்தை பற்றியவனின் இதயம் மகிழ்ச்சியில் துள்ளியது

நாட்டையே கட்டி ஆண்ட ராஜவாயினும் தன் காதலியின் கடை கண் அசைவிற்க்காக காத்திற்க்கும் சேவகன் தானே!

பல தொழில்களில் எதிரியை ஓட விட்டவன்… தன் விரல் அசைவில் காரியத்தை முடிப்பவன்… அவளின் கரத்தை பிடித்தவுடன் குறும்பு மேலிட உள்ளங்கையில் விரலால் சீண்டினான்.

பட்டும் படாமலும் கரத்தை கொடுக்க இவன் செயலில் நெலிய ஆரம்பத்தவள் கையை உருவ முயன்றாள் . கௌஷூகின் பிடி இன்னும் இறுகியது அவன் முகத்தில் உண்டான குறும்பு புன்னகையுடன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கண் அடித்தான். ( அடேய் கௌஷூக் படி படியா முன்னேறனும் காஞ்ச மாடு கம்புல புகுந்தாமாறி செய்துட்டியேடா ! அவ என்ன பண்ண போறாளோ? )

இவனின் செய்கையில் கண்ணங்கள் சூடேற நின்றவள் எரிச்சலுடன் கைய விடுறீங்களா மிஸ்டர் கௌஷூக் ? என்று பற்களை நறநறவென்று கடித்து வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

மேனேஜரிடம் திரும்பியவள் “மிஸ்டர் ராய் இந்த வொர்க் நீங்க வேற ஆள்கிட்ட கொடுங்க நான் நம்ம MD கிட்ட பேசுறேன்” என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் சொன்னவளின் மனதில் இந்த வோர்க் நான் எடுத்த இங்க வர போக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் நாம இதுல இருந்து வெளியே வரனும் என்று நினைத்திருந்தாள்.

அவள் கூறியதை கேட்டவன் ஏன் மிஸஸ் வைஷ்ணவி நீங்க இந்த வோர்க் வேண்டாமுன்னு சொல்றிங்க? என்னை கண்டா பயமா இருக்க?

அவன் கூறியதில் முகம் கறுத்தவள் நானா…? எனக்கா … பயமா ? …ஹா…. ஹா… அது என் அகராதியிலேயே கிடையாது.

“ஹோ அப்போ ஏன் இங்க வொர்க் பண்ண மாட்டேன்னு சொல்றிங்க??”.

“இங்க பாருங்க சார் எனக்கு எங்க புடிச்சி இருக்கோ அங்க தான் சார் கான்ஸன்ரேட் பண்ணி வேலை பார்க்க முடியும் ” என்றாள் இருகிய குரலுடன்.

‘அப்போ இங்க வந்த என்னை பார்த்த கான்ஸன்ரேட் போயிடுது இல்ல” என்றான் நக்கலாக.

அவன் கூறியதில் முகம் பாறையை ஒத்த கடினத்தை பெற்றது என்றாலும் அவன் கூறுவதும் உண்மை தானே அவனை பார்த்த நோடி உடலின் இயக்கங்கள் அனைத்தும் வேலையை நிறுத்தியது தானே என்று தனக்கு தானே பட்டி மன்றத்தினை நடத்தி கொண்டிருந்தாள்.

“என்ன வைஷ்ணவி பதிலையே காணும்” என்றான் கேளியாக.

“உங்கள பாத்து நான் எதுக்கு டிஸ்டப் ஆகனும் “அப்படி ஒரு எண்ணம் இருந்த அத இதோட நிருத்திக்கோங்க மிஸ்டர் கௌஷூக்” படபடவென்று எண்ணெயில் இட்ட கடுகு போல் பொறிந்தாள்.

“அப்போ இந்த பிராஜக்ட் நீங்க செய்ங்க அதை ஏன் முடியாது வேண்டாமுன்னு சொல்றிங்க அப்போ அதுக்கு இதுதானே அர்த்தம்”. என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கண்களால் கனை தொடுத்தான்.அவளின் கோபத்தை தூண்டி எப்படியாவது இந்த பிராஜக்டில் வேலை செய்ய வைக்க எரிச்சலை ஏற்படுத்தினான்.

அவன் விட்டால் இன்னும் வம்பு செய்வான் என்று நினைத்தவள் “மிஸ்டர் ராய் எனக்கு தலைவலியா இருக்கு இதை பத்தி நாளைக்கு பேசலாம் . எம் டி கிட்ட எதையும் சொல்ல வேண்டாம்”.

திரும்பி கார் நின்ற இடத்திற்கு சென்றாள் அவளை விடாமல் பின் தொடர்ந்வன் “என்ன வைஷ்ணவி எந்த பதிலும் சொல்லாம போறிங்க ? ஏன் இங்க என் கூட வேலை செய்த மனசு மாறிடும்ன்னு பயமா ? என்றான் சாதாரண குரலில்.

இந்த பிராஜக்ட் ஆரம்பிக்க காரணமே உன்னை இங்க வரவழைக்கதான் அவ்வளவு சீக்கிரம் போக விட்டுவேன் நினைச்சையா டியர்

“அடி மனசுல ஏற்பட்ட வலி வடு ரெண்டுமே மறையாது மாறது உங்க கூட வொர்க் செய்துதான் நிருபிக்குணுமுன்னா அதுக்கும் நான் தயார்”.

அவன் தன்னைபுரிந்திருப்பான் என்ற செய்தி அவளிடம் பேசும் பேச்சிலும் செயலிலும் அறிந்தவள்.

அவன் மனதிலும் வாழ்க்கையிலும் வேறு யாருக்கும் இடம் கொடுத்திருப்பானா இல்லையா என்று தெரிந்து கொள்ளவும் நினைத்தாள் அது அவன் வாயால் கேட்கும் சக்தி அவளிடம் இல்லை அதற்காகவே அவனை விட்டு விலக நினைத்தது.

எஸ் மிஸ்டர் கௌஷூக் இந்த பிராஜக்ட் நான் எடுத்துக்கிறேன் என்றவள் மறு மொழி கூறாது சட்டென்று காரில் ஏறினாள்.

வாவ் வைஷ்ணவி உங்க முடிவை நான் வரவேற்கிறேன் all the best இனி அடிக்கடி மீட் பண்ணுவோம் .என்றான் சந்தோஷமாக.

அவன் கூறுவதற்கு பதில் கூறாமல் கல்லென அமர்ந்திருத்தாள்.

“ஓகே சார் நாங்க கிளம்பறோம் “ராய்.
“ஓகே மிஸ்டர் ராய்”.கௌஷிக்.

கார் சென்ற திசையை பார்த்து கொண்டிருந்தவன் சந்தோஷ கடலில் தத்தளித்து கொண்டிருந்தான். இரு கைகளிலும் தலை முடியை அழந்த கோதியவனின் இதயம் நம்ம தமிழ்நாட்டு ஸ்டைல்ல குத்தாட்டம் போட சட்டென்று தன் நிலை பெற தன் தலையை தட்டியவன் சட்டையை சரிசெய்து கொண்டு காரை நோக்கி நடந்தான்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here