பன்னீர் பூக்கள் 1

0
457

பூக்கள் 1

காலங்கள் ஓடும் வெறும் கதையாகி போகும்

என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்

தாயாக நீ தான் தலை கோதவந்தால்

உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்

என் வாழ்க்கை நீ இங்கு தந்தது

அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது….

எங்கோ கேட்ட அந்த பாடலின் உருகி வழிந்த குரலிலும் வரிகளிலும் கரைந்து காணாமல் போய்க்கொண்டு இருந்த ஆராவிற்கு கண்கள் பனித்தது ..

வீட்டின் பின்புற தோட்டத்தில் போட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து முடியா வானத்தின் எல்லை போன்ற மாயத்தோற்றம் தரும் தொடுவானத்தை வெறித்திருந்தாள் ஆரா என்கிற ஆராதனா…

ஆராதனா எம்.பி.பி.எஸ்.. எம்.எஸ்( ஜென்ரல் சர்ஜரி) மற்றும் பி.எஸ்.ஸி எமர்ஜென்சி அண்ட் ட்ராமா கேர் முடித்து அதில் பிஹச்டி மாணவி.

மனது பாரமாக உணரும் தருணங்களில் அவளுக்கு ஆறுதல் அளிக்க கூடிய இடம் இது தான்.

மாலை வேளைகளில் சில்லென்று வீசும் காற்றும், கூடு திரும்பும் பறவைகளின் கீச்சொலியும் இதமான இளவெயிலுமாக மனதுக்கு இன்பம் தருபவை, கூடவே அலைபாயும் மனதுக்கு இதமாகவும் இருக்க கூடியவை.

அவளின் சொந்த உழைப்பில் அவள் விரும்பி வடிவமைத்த வீடு அது. பழமையும் புதுமையும் கலந்து ரேழி, முற்றம், ஆலோடி, தாழ்வாரம் என்று அடுக்குகளாய் கட்டியிருந்தாள்.

திறந்த முற்றத்தில் 4 படிகள் வைத்த ஒரு சிறு குளம், செவ்வல்லியும், தாமரையும் மலர்ந்து (இங்கயாச்சும் தாமரை மலர்ந்துக்கட்டும். போனா போகுது) இருக்க அதன் நடு உத்திரத்தில் ஒரு ஊஞ்சல். ஆராவின் ப்ரத்தியேக விருப்பம் இது. அவளுக்கு அப்படி ஒரு காதல் இவ்வடிவமைப்பில். கட்டி முடிக்கும் முன் என்ஜினீயர் பட்ட பாடு சொல்லில் அடங்காது. குளத்தில் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் வண்ண மீன்கள். அதில் தங்க மீன்களும் ஏஞ்சல் மீன்களுமே அதிகம். முற்றத்தின் மேல் கம்பிகளில் படர்ந்து பூத்து மணம் பரப்பின கொடி சம்பங்கி…
வெயில் தீண்ட முடியா அம்முற்றதில் மழை குழைந்தாடும் வகையில் விரிந்திருந்த கொடியோடு இயற்கை கைக்கோர்த்து களித்தது என்றால், அந்த ஆலோடியில் ஐவர் அமரக்கூடிய ஸோஃபா டீபாயுடன் 2 தனி இருக்கையும், சுவற்றில் 52 இன்ச் எல் ஈ டி டிவி, ஒரு மினி கூலர், மரச்சட்டங்களில் தொங்கிய தஞ்சாவூர் மற்றும் சில மார்டன் ஓவியங்கள், சர விளக்குகள் என்று நாகரீகம் கொழித்து ஒவ்வோரு செங்கலிலும் ஆராவின் ரசனை தெரியும்படியாக இருந்தது அந்த வீடு.

பின்கட்டு தாண்டி தோட்டம். அங்கும் ஒரு ஊஞ்சல் உண்டு. அங்கு தான் இப்போது அவள் அமர்ந்திருப்பது…

ஆரா ……….. ஆரா………. என்று செல்லமாய் அழைத்துக்கொண்டு வீட்டின் ஒவ்வொரு இடமும் தேடிக்கொண்டு வந்தான் தாரணேஷ்.

தாரணேஷ் ஆராதனாவின் ஒட்டு மொத்த உலகம். ஏனென்றால் ஆராவிற்கென்று தற்போது இருப்பது அவன் மட்டுமே. அவர்கள் திருமணம் காதல் திருமணம் அல்லாத ஒரு காதல் திருமணம். (ரொம்ப கொழப்புறேனோ? போக போக புரியும்)

ஆராவை பொருத்தவரை தாரணேஷ் அவள் வாழ்வின் வரம். திருமணம் முடிந்து 6 ஆண்டுகள் ஆனபோதும் குழந்தை பாக்கியமில்லை. ஆனால் ஒருபோதும் அதை வைத்து ஒரு வார்த்தை ஆராவை யாரும் பேசிவிட முடியாது. ஆராவின் ஆதிஅந்தமிலா அரணானவன் தாரணேஷ். எதையும் பாசிடிவான கண்ணோட்டத்தில் பார்ப்பவன்.

புரிதல் என்ற வார்த்தை பெருமை படும்படி வாழும் ஆதர்ஷ தம்பதிகள் இவர்கள்.

தனக்கு குழந்தை பிறக்காததற்கான ஒரு காரணத்தை ஆராவின் மனது தீர்க்கமாக நம்பியபோதும் தாரணேஷ் அதை ஒப்புக்கொண்டதே இல்லை.

“நம்மமேல யார் கண்ணும் விழுந்துட கூடாதுனு நமக்கு கடவுள் வச்ச திருஷ்டிபொட்டு டா இது…” என்று சீரியஸாய் தத்துவமாய் சில நேரமும்.

“ஊர்ல உள்ளவனுக்கு ஒரு ஸ்டேட்டு. ஓடி போறவனுக்கு பல ஸ்டேட்டு. பெத்துகிட்டா ஒரு புள்ள பாத்துக்கிட்டா ஊரெல்லாம் புள்ள” என்று காமெடியாய் சில நேரமென அதையும் சாதகமாக எடுத்து அவன் சொல்லும்போது எந்த மாதிரியாக தான் உணர்கிறோமென்றே புரியாமல் அவனை பார்த்திருப்பாள் ஆரா.

ஆராவின் ஆறாத காயங்கள் பலவற்றிற்கு தாரணேஷ் எனும் புணுகு மிக அவசியம். கண் கொட்டாது அவனை பார்த்திருப்பதே அவளுக்கு மிக பிடித்த பொழுதுபோக்கு..

பல நேரங்களில் தாரணேஷ் ” காதலாட காதலாட காத்திருந்தேனே..

ஆசை நூலில் பாச பூக்கள் கோர்த்திருந்தேனே” என்று பாடி அவளை கிண்டலடித்தாலும். அவனுக்கும் அவள் பார்வை அமுதம் பருக பருக தீராதது தான்.

ஆராவை தேடி அவளின் வழக்கமான இடத்தில் கண்டுக்கொண்டவன்

ஹேய் ஜிங்கிலி, இங்கருக்கியா?
நான்கூட “எங்கலாம் தேடுவதோ.. என் உயிரின் உயிரான என் ஆராவை எங்கெலாம் தேடுவதோ” அப்டினு பாடனுமோ னு நெனச்சேன் என்று குறும்பாக சொல்லிக்கொண்டே வந்து அவள் தோளில் கைப்போட்டு அருகில் அமர்ந்து கொண்டான்.

உனக்கு ஒரு சந்தோசமான
விஷயம் சொல்ல போறேன். பதிலுக்கு நீ என்ன தருவ??
என்று பேரம் பேசியவனை உணர்ச்சிகளே இன்றி பார்த்தாள் அவள்.

சொல்லு பேபி என்றான் மறுபடி…

அவனது ஆராவிடம் இவன் ஆரவாரத்திற்கு எந்த எதிர்வினையும் இல்லாதுபோக..

என்ன கேளேன் டா என்று சிணுங்கி அழுவது போல கண்ணைகசக்க..

அவளின் மனநிலையை மாற்ற தான் இத்தனை கொஞ்சல் என்று அவளுக்கு தெரியுமே இருந்தும் அதில் முழுதாய் மூழ்கி முடியாது நான் எந்த மாதிரி மூட்ல இருப்பேன்னு தெரியாதா உனக்கு என்று அங்கலாய்த்தது அவள் மனது.

இருந்தும் பாவமாய் அவன் பார்க்கும் பார்வையில் சிரிப்புவர சின்ன மென்னகையுடன் என்ன பா என்றாள்…

அவளது என்னபாவில் அவள் மனநிலை புரிந்தது அவனுக்கு. மற்ற நேரங்களில் தரண், தாரு, தாருகுட்டி, தாஷி, டேய், அப்பு என்று பலவாறாக அழைப்பவள் ஏதேனும் சரியில்லாத சமயங்களில் மட்டுமே வாப்பா போப்பா என்று அழைப்பாள்.

நான் கேட்டதுக்கு நீ ஒன்னுமே சொல்லியே என்று மீண்டும் அதிலேயே அவன் நிற்க, ப்ளீஸ் புரிஞ்சிகோயேன் என்றொரு கெஞ்சல் பார்வை அவனை அதோடு நிறுத்தி அடுத்து பேச வைத்தது..

உன் தீசிஸ் பிரிட்டிஷ் மெடிக்கல் அஸோஸியேஷன் ல செலக்ட் ஆகி அப்ரூவ் ஆயிடுச்சு டா.

உனக்கு தி ராயல் காலேஜ் ஆஃப் எமெர்கென்சி மெடிசின் ல ஸீட் கெடைச்சிருச்சு என்றான் குரலில் குதூகலம் காட்டி.

ஆராவின் கண்களில் சிறு மின்னலும், எதையோ சாதிக்க போகும் துடிப்பு இதழ்களிலும் வந்து போனது. அவ்வளவு தான். தான் கண்டது மெய்யா பொய்யா என்ற சந்தேகம் தாராணேஷுக்கு.

அவளிடம் பெரிதான ஒரு சந்தோஷ ஆர்பாட்டத்தை எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான் இருந்தாலும் இப்போதைக்கு இதுவே போதும் என்றே தோன்றியது.

நிதானமாக எழுந்து தன் அறைக்கு வந்த ஆரா தன் அலமாரியில் வைத்திருந்த அந்த பழைய கையேடை எடுத்து ஆதூரமாக தடவி பார்த்தாள்.

அது ஒரு பழைய புத்தகம் அந்த புத்தகத்திற்கு ஆராவை விட 2 வயது தான் குறைவாக இருக்க கூடும்.
ஆனால் அது அவளுக்கு எல்லாவற்றையும் விட பெரிது அவள் என்றுமே தொலைத்துவிட விரும்பாத பொக்கிஷம்.

அழிந்துவிட்ட அழகான நாட்களின் அழியாத சான்றாக இருக்கும் அழகான ஓவியம்.

ஆராவின் இன்றைய நிஜத்திற்கு இந்த நிழலும் ஒரு காரணம்.

ஆரா ஒரு மருத்துவர். அதுவும் ட்ராமா கேர் எனப்படும் அவசர சிகிச்சை தான் அவள் லட்சியம்.

நம் ஊரில் பல மருத்துவ மனைகள் இருந்தாலும் சாலை விபத்து, தீவிபத்து, கட்டுமான விபத்து, துப்பாக்கிச் சூடு போன்றவைகளில் மிகுந்த காயங்களோடு வருபவர்களை குணப்படுத்த ஜெனரல் மெடிசின் படித்தவர்கள் தான் அதிகம் கவனிக்கிறார்கள்.

அந்த அவசர காலங்களிலும் அவர்கள் கையாள்வது என்னவோ சாதாரண மருத்துவ முதலுதவி முறைகளே.

ஒருவரை விபத்து காயங்களோடு கொண்டு வருகையில் முதலில் அவருடைய ரத்த போக்கை நிறுத்த வேண்டியது தான் முதல் கடமை.

அதிகமான ரத்த போக்கு எங்கே உள்ளது என்று ஆராய்ந்து அதை தடுத்து நிறுத்துவது தான் ஆரம்பநிலை மற்றும் உயிர்காக்கும் மருத்துவம். அதிலும் அதிக மற்றும் மிக அதிக காயங்களோடு வருபவர்களுக்கு முதலுதவி தாண்டி இந்த ட்ராமா கேர் தான் அத்தியாவசிமாகிறது.

ஆனால் ஜெனரல் ப்ராக்டிஷனர்ஸ் முதலில் அவர்களில் காயங்களை ஆராய்வதிலும் மேல் காயங்களை சுத்தப்படுத்துவதிலுமே முனைப்பு காட்டுகிறார்கள்.

சாதாரண சிராய்ப்பு, எலும்புமுறிவு, சிறிய வகை ரத்த காயம் என்று வரும் நோயாளிக்கும் இதுவே தான் முதல் சிகிச்சை.

ஆனால் இதுவே அவசர கால சிகிச்சைக்கு உதவுவது இல்ல பெரும்பாலும்.

இதனாலேயே விபத்து இறப்புகள் பெருகிவருகிறது என்பது ஆராவின் எண்ணம்.
அதற்காகவும் தான் இவள் இந்த துறையை தேர்ந்தெடுத்தது.

அவசர கால மருத்துவம் மற்றும் ஆலோசனைகள் என்பது தன் அவள் ஆராய்ச்சியின் கோட்பாடு.

அதற்காக அவள் எழுதிய தீசிஸ் தான் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் மேற்படிப்புக்காக ஆராவிற்கு அனுமதி கிடைத்துள்ளது.

லண்டன் ஆக்டேவியாவில் 1 வருட சிறப்பு படிப்பு.
தாரணேஷை விட்டு செல்ல வேண்டுமே என்று இருந்தாலும் இந்த படிப்பு அவள் கனவு மட்டும் அல்ல கடமையும் கூட.

எண்ணங்களில் ஏக்கம் மிக அந்த கையேட்டை நெஞ்சொடு அணைத்துக் கொண்டு..

“உனக்கு செய்ய முடியாததை எல்லாருக்கும் செஞ்சு தீத்துக்க போறேன் என் பாவத்தை” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.

பின்னோடு வந்த தாராணேஷ் ஆராவை தோளோடு அணைத்து, இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் இப்டியே மறுக போற.

இன்ஃபாக்ட் இதுல உன் தப்பு என்ன டா இருக்கு சொல்லு என்று கேட்க பதில் சொல்ல முடியாமல் தொண்டை அடைக்க எச்சில் கூட்டி விழுங்கிகொண்டு சொன்னால் தரண் இன்னிக்கு ஆகஸ்ட் 23 என்று…..

ஆராவின் வலியை பகிர்ந்து கொள்வது போல கண்மூடி ஒரு ஆழ்ந்த மூச்செடுத்தான் தாரணேஷ்…

அவளை தற்சமயத்திற்கு திசை திருப்பும் பொருட்டு எங்கேயாவது வெளில போலாமா என்று கேட்க, தனது எண்ணங்களால் அவனை துன்பபடுத்த கூடாதேயென்று சம்மதித்தாள்.

உன்னை நான் அறிவேன் என்பதாக லேசாக அணைத்து முன்னுச்சியில் முத்தமிட்டு இப்போ ஒரு காபி மட்டும்
எடுத்துட்டு தோட்டத்து ஊஞ்சலுக்கு வந்திரு குடிச்சிட்டு கிளம்பலாம் என்று இயல்பாக பேசி அனுப்பிவைத்தான்…

சோர்ந்து போய் போகும் அவனவளை ஒரு பெருமூச்சோடு பார்த்திருப்பதை விட என்ன செய்ய முடியும். வருடம் முழுக்க அவள் தன்னை, தன்னுணர்வுகளை அடக்கியாள பழக்கியிருந்தாளும் இந்த நாளில் அவள் அவளாக இருப்பதில்லையே.

எல்லாம் முயன்று பார்த்தான். அவளை வெளியுலகில் அதிகம் பழக வைத்தான். அவள் நடவடிக்கைகளை ஒரு நாளும் அவன் ஒரு வார்த்தை கூட சொன்னதில்லை.

அதனால் அவன் பெற்றோர்களோடு பிரச்சனை வர அவளை அழைத்துக்கொண்டு வேறு ஊருக்கு குடிவந்தான்.

ரம்யமான சூழ்நிலையில் அவளின் மனம் மாறக்கூடும் என்று சைக்காலஜி டாக்டரிடம் பெற்ற ஆலோசனையின் பேரில் தான் தன் தொழில் நிமித்தமாக என்று சொல்லி அவளை இங்கு கூட்டிவந்தான்…

இங்கு அவளுக்கு பெரும் புகழ் கிட்டியது. கைராசியான டாக்டர் என்ற பேரும், மரியாதையும் கிட்டியது. இருந்தும் அவளின் தேடல் இன்னும் முடியவில்லை. அவளின் பெரும்கனவு இப்போது அவள் கைக்கு கிடைத்திருக்கும் இந்த படிப்பு மூலமாக தான் ஆரம்பிக்கவே போகிறது…….

காபியுடன் வந்தவள் ஒரு கப்பை தாரணேஷிடம் கொடுத்து விட்டு தனக்கொன்றோடு
அவனருகில் அமர்ந்து தோள் சாய்ந்து கொண்டால்.

தானாகவே மனது கடந்த கால நினைவுகளில் அலைமோதின. என்றுமே மறக்காத மறக்க முடியாத மறக்க கூடாததாக அவளை கவ்வி பிடித்த நினைவுகளால் கண்கள் நீர்கோர்க்க தொடங்கியது.

சிங்கம் தன் காயங்களை வலிக்க வலிக்க நக்கி கொள்வது போல இவளும் தன் காயங்களை ஒவ்வொரு முறையும் கீறி மருந்திடுகிறாள்….

கட்டுக்குள் கொண்டு வரமுடியாத மனதை அதன் போக்கிலேயே ஓடவிட்டாள்.

மூடிய கண்களுக்குள் ஒரு ரோஜா முகம் சிரித்தது, விளையாடியது, கொஞ்சியது, கெஞ்சியது, சீண்டியது இறுதியில் கண்ணீர் விட்டது।

துள்ளி ஓடும் அந்த சின்ன உருவத்தின் பின்னேயே ஆராவின் நினைவுகள் ஓடத்தொடங்கியது….

பூக்கும்…..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here