தேவையான பொருட்கள்
- உளுத்தம் பருப்பு – 1 1/2 கப்
- கோதுமை மா- 1 கப்
- செத்தல் மிளகாய் பொடி- 2 தே.கரண்டி
- பெருஞ்சீரகம் -1 தே .கரண்டி
- உப்பு- அளவாக
- எண்ணெய் – பொரிப்பதற்கு
- கறிவேப்பிலை- அளவாக

செய்முறை
- உளுந்தை 3 அல்லது 4 மணிநேரம் ஊற வைக்கவும்.
- அதன் பின் உளுந்தின் நீரை வடித்து விட்டு அதில் பாதியை அரைத்து எடுத்து கொள்ளவும்.
*அதனுடன் எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- அதன் பின் சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் வைத்து தட்டையாக அழுத்தி மெதுவாக இலையை விட்டு பிரித்தெடுத்து கொதித்த எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து பரிமாறலாம்.
(அடுப்பை மிதமான சூட்டில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்)
Facebook Comments