மருதமலை அடிவாரத்தில் இருந்த அந்த திருமணம மண்டபத்தில் கூட்டம் அலைமோதிக்கொண்டு இருந்தது. பலதரப்பட்ட மனிதர்கள் சிலர் தெழுங்கு பேசிக்கொண்டு இருக்க இன்னும் சிலர் அழகாக தமிழில் உறையாடிக்கொண்டு இருந்தனர்.
பார்க்கும் போது அது காதல் திருமணம் என்பதை எளிதாக சொல்லி விடலாம். ஆனால் பலரது முகத்தில் நிறைவு மட்டுமே நிறைந்து இருந்தது. யாழினி,கதிர் திருமண விழாவிற்கு அனைவரையும் வரவேற்கிறோம் என்ற வாசகம் தாங்கிய ப்ளக்ஸ் பெரிதாக மண்டப வாசலில் வைக்கப்பட்டு இருந்தது.
ஒன்பது மணிக்கு முகூர்த்தம் என்ன கூறி இருக்க இரவு மண்டபத்தில் தங்க நிறைய சொந்தங்கள் கூடி இருந்தனர்.
மணமக்கள் இருவரும் மேடையில் நின்றபடி இருக்க உறவினர்கள் கூட்டம் குறையவும் இப்போது போட்டோ கிராப்பர் அவர்களை படுத்தி எடுத்து கொண்டு இருந்தார்.
முகத்தில் சின்ன சிரிப்பு நீண்ட நேரம் நின்றிருந்ததிற்கான எந்த ஒரு சிறு அலுப்பு கூட தெரியாமல் சிரித்து கொண்டு நின்றிருந்தாள் யாழினி. குதிரை வால் கூட போட முடியாத அளவிற்கு சிறு கிராப் மட்டுமே இருந்தது. கிட்டத்தட்ட இந்திராகாந்தியின் ஷேர் டைல் அவளது நிறத்திற்கு வித்தியாசமான பெண்ணாக தெரிந்தாள்.
பதினோரு மணி முடியும் போது இவர்களை உணவு உண்ண அனுப்பி வைக்க இருவருமே பேசிக்கொண்டு உணவு உண்டனர் . கதிரின் பார்வை யாழினியின் ஒவ்வொரு அசைவிலுமே இருந்தது.
“என்ன அப்படி பார்க்கறிங்க சாப்பிடுங்க” இவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசியவளை பார்த்தபடி உணவு உண்டவன் .
“கனவு மாதிரி இருக்கு எல்லாமே இதெல்லாம் நடக்கும்ன்னு நினைச்சே பார்க்கலை எங்க என்னோடது ஆசை நிறைவேறாமல் போயிடுமோன்னு நிறைய பயந்தேன் அந்த கடவுள் கூட எங்கேயோ கொஞ்சுமா என்ன நினைச்சு பார்த்து இருக்கறாரு”.
“அதுக்குல்ல சந்தோஷபட்டா எப்படி காலத்துக்கும் இனி என்னோட இம்சையை நீங்க தாங்கி ஆகணுமே ம்..இனி உங்களால ஓடவும் முடியாது ஓளியவும் முடியாது தி கிரேட் கதிர் இந்த யாழினி கிட்ட சிக்கிட்டாரு” எனக்கே உன்னை பார்த்தா பாவமா இருக்கு. இப்ப கூட டைம் இருக்கு பிடிக்கலைன்னு சொல்லிட்டு ஓடிடு..
இப்படி பேசாத யாழ் கஷ்டமாக இருக்கு ஒரு வேளை நீ இல்லாட்டி நானும் உன்னோட பின்னாடியே வந்து இருப்பேன். அவன் சொல்லும் போதே தனது கைகளால் அவனை வாயை பொத்தியவள் இனி இப்படி பேசாத கதிர் என்னால தாங்க முடியாது.
நீயும் இனி இத மாதிரி பேசாத..சாப்பிட்டு எழப் போனவனை ஒரு கை கொண்டு அமர வைத்தவள் இரு இரு ஒரு செல்ப்பி எடுத்துக்கலாம் என்க..
நீ திருந்தவே மாட்ட..
மாட்டேனே என கூறியவளை எழுப்பியன் போய் தூங்கு கண் முழிக்க கூடாது. காலையில் ஆறு மணிக்கு எழுந்தா கூட போதும் முகூர்த்தம் பத்து மணிக்கு தான்.
இந்த நேரத்தை கூட அவளுக்காக செலக்ட் செய்திருந்தான் சிறிது நேரத்தில் எல்லாம் அவள் அவளது மணப்பெண் அறைக்கு செல்ல.. இங்கே வந்திருந்த நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்தான் கதிர். ஒரு மணியை தொடும் போது இவனும் சிறிது நேரம் தூங்க எனக்கு இவனது அறைக்குள் செல்ல..அடுத்த நிமிடத்திலேயே இவனது ஃபோன் சினுங்கியது. அழைத்தது மணப்பெண் யாழினி தான்..என்ன இன்னும் தூங்கலையா..
ம்..ம்.. தூக்கம் வரமாட்டேங்குது. உனக்கும் அப்படி தான் இருக்கா..
ம்.. நிறைய போராட்டத்துக்கு அப்புறம் நடக்கற திருமணம் இல்லையா.. முதல்ல நம்ப முடியலை கொஞ்சம் நேரம் ஆகும் தூங்க.. நீ ஏன் இன்னும் தூங்காமல் இருக்கற. டேப்லட் எதுவும் போடணுமா..
அதெல்லாம் தேவை இல்லைன்னு போன செக்கப் அப்பவே சொல்லிட்டாங்க இனிமேல் பயம் இல்லைன்னும்..ஆனால் இவ்லொன்டு முடியோட இவ்வளவு வேகமாக கல்யாணம் பிஃக்ஸ் பண்ணி இருக்க வேண்டாம் எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கு தெரியுமா.. கட்டற சேலைக்கு என்னுடைய ஹேர்டைல் நல்லாவே இல்லை.
என்ன யாழினி இப்படி சொல்லற இப்போது நீ வச்சி இருக்கிறது தான் ஃபேஷனே நீ இதுக்காகவா வருத்தப்படற.. இன்னும் கொஞ்ச நாள் தான் தலைமுடி வேகமாக வளர்ந்திடும் பழையபடி நீளமான வளர்ந்திடும் ஓகே வா..குழந்தைக்கு சொல்வது போல சொல்லியவன்.
அது தானே நானும் சொன்னேன் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் வைக்கலாம்ன்னு நீ தான் கேட்கலை..
ஏய்.. என்ன இது உன்னை அங்கே விட்டுட்டு இங்கே பயந்து பயந்து இருக்க முடியாது. நானே உன் கூட இருந்து பார்த்துக்கணும் இது தான் எப்போதும் என்னுடைய ஆசை..
என்ன எங்க வீட்டில் பார்க்க மாட்டாங்கன்னு சொல்ல வர்றியா..
அப்படி இல்லை யாழினி உன்ன பார்க்காமல் இருக்க முடியாது அடிக்கடி அங்கே வந்தாலும் மரியாதையா இருக்காது இப்போ என்ன நீ இங்கே நம்ம வீட்டில் இருந்து உனக்கு தோன்றும் போது அங்கே உன் வீட்டில் தங்கிவிட்டு வா நான் ஒரு வார்த்தை கேட்க மாட்டேனே..
ம்..ம்.. எனும் போதே தோன்றியது அவனது அன்பும் அவளுக்கு முழுக்க தெரியும் தானே..
ஓகே குட் நைட் கொஞ்சம் நேரமாவது தூங்கு..
ம்..நீ என்ன செய்ய போற..
ப்ரெண்டுங்க நிறைய பேர் வந்து இருக்கறாங்க எப்படியும் தூங்க விட மாட்டாங்க இன்றைக்கு சிவராத்திரி தான். உன் பக்கத்தில் யார் இருக்கறாங்க..
பக்கத்தில் அம்மா இன்னும் உறவுக்காரங்க கொஞ்ச பேர் சரி நான் போனை வைக்கிறேன் என கட் செய்து விட்டு திரும்பி பார்க்க அவளுடைய தாயார் படு யாழ்.. கொஞ்சம் நேரம் தூங்கினாதான் காலையில் முகம் பார்க்க நல்லா இருக்கும்.
ம்மா.. தூக்கம் வரல..
பரவாயில்லை கண்ண மூடிட்டாவது படு முதுகு வழி இருக்காது. கொஞ்சம் டயர்டாவது குறையும் போட்டோ எடுக்கன்னு ரொம்ப நேரம் நிற்க வச்சிட்டாங்க..
ம்.. என்றபடி அங்கிருந்த பெட்டில் படுத்து கண் மூட முதல் முதலில் கதிரை பார்த்தது கண் முன் விரிந்தது.
இவள் வேலைக்கு சேர்ந்து முழுதாக மூன்று மாதங்கள் முடிந்து இருந்தது இவள் வேலை செய்வது பைனான்ஸ் நிருவனம் ஒன்றில்.. டூவிலர் புதிதாக வாங்க ,விற்க ,அடமானமாக வண்டி ஆர்சி புக் வாங்கிக்கொண்டு பணம் தர என இவர்களது நிருவனத்தின் வேலை.. அதுவும் இவளது வேலை மிகவும் எளியது தான்.
தேவையான ஆவனங்களை பெற்றுக்கொண்டு கையெழுத்து வாங்கி அனுப்பி வைப்பது. மாதம் தவனையாக தரும் பணத்திற்கு வவுச்சர் போட்டு தருவது.
எப்போதும் சிரித்த முகம் இடுப்பு வரை நீண்டிருந்த கூந்தல் பளிரென்ற வெண்மை முகம் கண்களுக்கு தலைவலி காரணமாக அணிந்து இருக்கும் கண்கண்ணாடி..
முதல் முதலாக கதிரை பார்த்தது அன்று தான் நண்பன் ஒருவனுக்கு வண்டி வாங்க இவன் அழைத்து வந்திருந்தான்.
எக்ஸ்கியூஸ்மீ என்ன இவளை அழைக்க இவள் பார்க்கும் போது அவனும் சிரித்த முகமாக நின்றிருந்தான். நீலநிற ஜூன்ஸ் பேண்ட் இளநீல நிறத்தில் முழுக்கை சட்டை.. கழுத்தில் பட்டையாக தங்க செயின் அதே போல் கையில் பட்டையாக ப்ரேஸ்லட் இன்னொரு கையில் ரோலக்ஸ் வாட்ச்.. பார்க்கும் போதே வசதியான வீட்டு பையன் என்பது புரிய..
சொல்லுங்க சார் உங்களுக்கு என்ன உதவி செய்யனும் கேட்கும் போதே இவளது குரலில் விலகல் இருந்தது.
இவன் என்னுடைய ப்ரெண்ட் இவனுக்கு டூ விரல் வாங்கணும் அங்கிள் எனக்கு தெரிஞ்சவர் தான்
என்னென்ன தேவைன்னு சொல்லறிங்களா..
எந்த மாதிரி வேணும் இங்கே இருபது பர்சன்டேஜ் ஸ்பாட் கேஷ் கட்டணும்
ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் அப்புறம் ரேஷன் கார்டு, நான்கு போட்டோ..
ஹலோ லைனா சொல்லிட்டு போனா ஞாபகம் வச்சிக்கறது கஷ்டம் பேப்பரில் எழுதி தாங்க…
அவன் கேட்ட துவனி இவளுக்கு சிரிப்பை தர.. இருங்க என பேப்பரில் எழுதி தரவும் சிரித்தபடி புறப்பட்டான்.
வாசலை தாண்டும் போதே இவனுடைய நண்பன் இவனை பிடித்து கொண்டான் என்னடா நடக்குது மொத்த காசும் வண்டி வாங்க எடுத்துட்டு வந்தாச்சு நாளைக்கு வரேன்னு இழுத்திட்டு வரே..
நாளைக்கு மட்டும் இல்லை இனி மேல் அங்கே தான் வேலையே..
டேய் என்ன சொல்லற..
ம்.. அந்த பொண்ணு அழகாக இருக்கறா எனக்கு ரொம்ப பிடித்து இரூக்கு..
டேய் இதெல்லாம் ஓவரு பார்த்து பத்து நிமிஷத்திலேயா நம்பற மாதிரி சொல்லு..
அதெல்லாம் அப்படி தான்.
டேய் எனக்கு எப்போது வண்டி கிடைக்கும்.
பத்து நாள்ல..
என்னது பத்து நாள் ஆகுமா..
ம்..நாலு தடவை வந்த பிறகு தான் வண்டியவே செலக்ட் பண்ணற.. ஒகே
டேய் அது வரைக்கும் நான் என்ன செய்ய..
என்னுடைய வண்டியை எடுத்துக்கோ..
இதோ அன்று சொல்லி சென்றவன் முழுதாக இரண்டு மாதம் முடிந்து இருந்தது. இது வரை பத்து வண்டியாவது நண்பர்களுக்கு எடுத்து தந்திருப்பான் வாரத்திற்கு மூன்று நாட்கள் அவள் வேலை செய்யும் இடத்திற்கு வந்து சென்று கொண்டு இருக்கிறான். இயல்பான பேச்சு மாறி இப்போது நல்ல நட்பு உதயம் ஆகி இருந்தது.
வண்டிக்காக மட்டும் வருவது இல்லை சில நேரங்களில் நண்பர்களுக்கு வண்டியை புக் கொடுத்து பணம் வாங்கவும் வந்து கொண்டு இருந்தான். இவள் கூட நிறைய நேரம் எத்தனை ஃப்ரெண்டுங்க உங்களுக்கு இருக்கறாங்க என்ன கேட்டு இருக்கிறாள்.
அது இருக்கறாங்க எக்கச்சக்கம். கேட்டா ஹெல்ப் பண்ண வேண்டியது தான் அதை தவிர என்ன வேலை நமக்கு சரி உங்கள் வீட்டில் எத்தனை பேர் ..
ம்.. நானும் என்னுடைய தம்பி அப்பா அம்மா ஏன் கேட்கறிங்க..
சும்மா தான் தெரிஞ்சுக்க..ஏதோ ஒன்றை பேசி அவளை பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருந்தான். இவள் தான் சுத்த டியூப்லைட்டாக சுற்றி கொண்டு இருந்தாள். பேசும் போது ஒரு முறை அவனது முகத்தை பார்த்து இருந்தால் எப்போதோ கண்டுபிடித்து இருப்பாள் அவன் அவளை விரும்புவதை..
பெரிதாக எதுவும் அவளுக்கு தோன்றாமல் இருக்க அவனது மனதில் நினைத்தது அப்போது மட்டும் அல்ல எப்போதும் அவளுக்கு தெரிந்து கொள்ளும் எண்ணம் துளி கூட இல்லாமல் வளம் வந்து கொண்டு இருந்தாள். அவனது அன்பு கூட அவளுக்கு தெரியும் காலம் மிக விரைவிலேயே வந்தது. அதுவும் அவளே எதிர் பாராத தருணத்தில்..
எப்போதும் போல அன்றும் அலுவலகம் வேகமாக வந்தவளுக்கு எப்போதாவது வரும் தலைவலி அன்று வரும் போதே வரவும் தலையை அமுத்தி பிடித்தபடி
அந்த இடத்தில் சில நிமிடம் நிற்க தலைவலி குறைவது போல தெரியவில்லை அதிகமாகி கொண்டே போக ஒரு சில நிமிடத்தில் வலி உச்சம் பெற என்ன செய்கிறோம் என தெரியாமல் நின்ற இடத்தில் அமர்ந்து தலையை அமர்ந்து தலையை இருக்கமாக பிடிக்க…
அதற்கும் அடங்காமல் அடுத்த வலி அலையாய் தொடர்ந்து உடல் முழுவதும் பரவ என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் அந்த இடத்தில் விழுந்து உருள ஆரம்பித்தாள்.
சில நிமிடத்திலேயே கூட்டம் சேர ஆரம்பித்து இருந்தது. அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர உதவும் எண்ணம் யாருக்கும் இல்லை. சிலர் போனில் கூட போட்டோ எடுத்தனர்.ஒரு சிலரோ யார் பெத்த பிள்ளையோ பேய் கிய் பிடிச்சிடுச்சி போல இருக்கு. நடு ரோட்டில் இப்படி படுத்து உருளுது என்ன பேசிக்கொண்டு இருக்க.. அந்த நேரம் கதிர் வழக்கம்போல அந்த வழியே வந்தான்.
இப்போது அல்ல யாழினியை பார்த்த நாளில் இருந்தே.. அவளை ஏதாவது ஒரு இடத்தில் பின் தொடர்வதை வாடிக்கையாக வைத்து இருந்தான் இன்றும் அதே வழியில் வர.. கூட்டமாக நிற்பதை பார்த்தவன் தனது வண்டியை ஓரமாக நிறுத்தியபடி கூட்டத்தை விலக்கியபடி பார்க்க..
யாருக்கோ அக்ஸிடென்ட் முடிந்த உதவியை செய்யலாம் என நினைத்து வந்தவனுக்கு இங்கே யாழினியை பார்க்கவும் ஒரு நிமிடத்தில் அவனது உயிர் அவனிடம் இல்லை..மொத்த அதிர்ச்சியும் முகத்தில் தாக்க …ஆட்டோ என கத்தியபடி அவளை தனது கரங்களில் தாங்கி இருந்தான் .
தொடரும்.