விழியிரண்டில் வேதனையை
வலியின்றி தந்துவிட்டு
புன்சிரிப்புடன் சென்றாயே
முதல் முடிவு எடுத்தவளாய்….
விரும்பிய இதயத்தில்
உறைந்ததடி இரத்தமும்
பொறுமையினை இழந்துவிட்டு
வெறுமையுடன் திரிகின்றேன்
பைத்தியமென ஊர்சொல்லி
பித்தனாய் அழைத்தேனே
தொலைந்துபோன உனையெண்ணி
தொலைதூரம் கடந்தேனே
உறவுகளை மறுத்துவிட்டு
துறவினை ஏற்றாலும்
சிந்தனையிலே நினைவுகளும்
வெந்தழலில் கொல்லுதடி
ஆசைகொண்ட புத்தரை போல
வழிதேடி அலைகின்றேன்
ஒருமுறை உனைகாண
நித்தமும் துடிகின்றேன்
காதல் கண்மணியே…
கல்லறையில் சேரும்முன்
கடைசியாய் ஒருசொல் வேண்டுமடி
காதலித்த நாட்களிலே
காதலித்தாயா என்று????
- சேதுபதி விசுவநாதன்
Facebook Comments