மந்திரமென்ன மங்கையே -14

0
248

மந்திரம் -14

குளியல் அறையில் இருந்து வெளிப்பட்டவனின் பார்வை, அவள் தன் நெஞ்சோடு அணைத்திருந்த அந்த நோட்டின் மீது ஒருகணம் படிந்தது.

“எழுதியவன் நான்….
அங்கீகாரம் உனக்கா “

என்று அந்த உயிரற்ற அவன் உணர்வு குவியலான அந்த காகித கத்தை மீது பொறாமை துளிர்த்தது வசிக்கு.

ஏக்கத்தோடு அவளையும்.. அவள் கையணைப்பின் வெதுவெதுப்பில் கட்டுண்டு காத்தாடியின் குளிரில் அவனை பார்த்து பல்லிளித்த அந்த நோட்டை வெறுப்போடும் நோக்கியவன்… ஒரு பெருமூச்சோடு அறையை விட்டு வெளியேறிவிட்டான்.

அவன் வெளியே சென்ற பின்புதான் துஜா என்னும் சிலைக்கு உயிர் வந்தது.

“எதற்காக இந்த பார்வை? எதற்காக இந்த பெருமூச்சு..? ஏன் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டான்? காகிதத்தில் கிறுக்க மட்டும் செய்யும் கிறுக்கனோ? நேரில் அத்தனை தைரியம் இல்லையா? அப்படியும் சொல்ல முடியாதே? நம் வீட்டிற்குள்ளவே நுழைந்து தாலி கட்டிய சூரன் ஆச்சே? ஒருவேளை கவிதையில் எழுதியது போல இந்த கிறுக்கு ஏதேனும் உண்மையாகவே முடிவு எடுத்துவிட்டதா? அதுக்கு தான் இந்த விலகளா? இவன் நல்லவிதமாவே யோசிக்க மாட்டானா? திடிர்னு கல்யாணம் செய்வாராம்… அன்னிக்கே பிருஞ்சுருலாம்னு முடிவு செய்வாராம்.. ஆக எதுலயும் ‘தான் ‘ அப்படிங்கற சிந்தனை தான்… ஒருத்திய இஷ்டம் இல்லாம கல்யாணம் பண்ணமே…. அவ மனச மாத்துவோம்… அதுவரை காத்திருப்போம்னுலா இல்ல…. வேண்டாம்ணா வேண்டாம்… இவருக்கு வேணும்னா வேணும்…. அயோ மேகலை அத்தை…… இப்படி ஒரு லூச பெத்து என் தலையில கட்டிடீங்களே !!” என்றவள் மனதோடு புலம்ப,

மாடி க்ரில் கேட் திறக்கும் சத்தம் கேட்டது.

“இந்த நேரத்தில் யார்? ” என்று சிந்தித்தவள்…

“ஒரு வேல அந்த போந்தா கோழியா இருக்குமோ?? எதுவுமே உருப்படியா செய்ய மாட்டானா? இந்த குளிர்ல குளிச்ச துண்டோடு இப்போ எதுக்கு மாடிக்கு போகணும்…? அதான் இங்க ஏரியா ஒதுக்கிட்டேன்ல…? ” என்று யோசித்தவள்…

“அச்சூ… குளிர்ல சட்டை இல்லாம… ஜன்னி வந்தராதா? பேசாம போய் பேசி கூட்டிட்டு வந்தரலாமா? ” என்றவள் எண்ணம் செல்ல, அவள் மனசாட்சி அவளை பார்த்து கெக்கோலி கொட்டி சிரித்தது.

“இவ்ளோ தான் உன் வீரப்பா டி துஜா…? அவன் உன்ன மதிக்க கூட இல்லை…. நீ அவன் எழுதுன கவிதைய படிச்சதும் உருகி ஊத்துற.. சீசீ.. உனக்கெல்லாம் மனசாட்சியா இருக்கிறதே எனக்கு அசிங்கம் ” என்று அதுபாட்டுக்கு போகிற போக்கில் ஒரு காட்டு காட்ட… துஜாவினுள் உறங்கி கொண்டிருந்த பூனை விழித்துக்கொண்டது.

“எக்கேடோ கெடட்டும்… நா ரோஷக்காரிதான் ” என்று தன் மனசாட்சிக்கு பதில் சொன்னவள்,

நோட்டை கட்டில் மீது வீசிவிட்டு, போர்வையை இழுத்துபோர்த்தி கொண்டு படுத்துவிட்டாள்.

நடுநிசியில் வெளியே ஜோவென்று மழை பெய்யும் சத்தம் சங்கீதமாய் அவளை தட்டி எழுப்ப, கண்விழித்தவளின் நெஞ்சோடு ரசனை வந்து ஒட்டிக்கொண்டது.

பால்கனி கதவை திறந்துகொண்டு வெளியே சென்றவள்… கைகளை நீட்டி மழையெனும் மழலையை கையில் ஏந்தி கொஞ்சி குலாவினால்.

தன் நெற்றியில் பட்டு தெரித்த துளி தந்த சில்லிப்பில், உடம்பெல்லாம் சிலிர்த்தது. ஊதல் காற்று உடலை தீண்ட… கைகளை மார்பின் குறுக்காக கட்டி தன்னை காத்தவளுக்கு… சூடாக ஒரு கோப்பை காபி பருகவேண்டும் போல தோன்றியது.

மெல்ல இறங்கி சமையல் அறைக்கு சென்றவள், தனக்கான காபியை கலந்துகொண்டு மீண்டும் தனது அறைக்குள் வந்தாள்.

பால்கனியின் கூடை ஊஞ்சலில் வாகாக அமர்ந்து ஆடிக்கொண்டே பருகியவள், கடிகாரம் பார்க்க தன் கட்டில் அருகே நோக்கும்போது தான், அந்த கவிதை நோட் மீண்டும் அவள் கண்களில் பட்டது.

“அய்யோ வசி !!” என்று ஒருவழியாக கணவனின் ஞாபகம் வந்ததும், பதற்றத்தோடு அவள் எழ, அவள் கைகளில் இருந்த அந்த பீங்கான் கோப்பை கீழே விழுந்து சிதறியது.

அதையும் பொருட்படுத்தாமல், கையில் சிக்கிய போர்வையை துண்டை எல்லாம் அள்ளிக்கொண்டு மாடிக்கு ஓடினாள் துஜா.

மாடியில் அங்கே தோட்டம் உண்டு.

பல வண்ண மலர்களின் வாசனையோடு மண்வாசனையின் மோகனமும் அவள் நாசியை தாக்க, அதன் நடுவே இருந்த தேக்கு ஊஞ்சலில் தேகம் குறுக்கி நடுங்கியவனின் தோற்றம் அவளை உலுக்கியது.

வேகமாக அவனருகே ஓடியவள் துண்டையும் போர்வையையும் அவனை சுற்றி போர்த்த, நடுக்கத்தோடு அவளை ஏறிட்டான் அவன்.

அவளது தீண்டலை அவன் நிராகரிக்க, கோவம் வந்தது துஜாவிற்கு..

“ஏய் லூசு.. சீன் போடாம மரியாதையா என்கூட வா ” என்றவள் கட்டளை இட, தலையை இடமும் வலமுமாக அசைத்து தனது மறுப்பை பதிவு செய்தான் வசீகரன்.

வம்படியாக அவன் கைகளை பற்றி அவள் இழுக்க, தம்கட்டி அவளது இழுவைக்கு முட்டுக்கொடுத்தான் வசி.

இந்த இழுபறி போராட்டத்தில் அவனை காக்க வந்த துஜாவும் மழையில் தொப்பலாக நனைந்துவிட்டாள்.

நடுங்கிய விரல்களோடு அவன் கையை பற்றி மீண்டும் அவள் இழுக்க, அவளது நடுக்கத்தை உணர்ந்தவன் சட்டென்று எழுந்துகொண்டான்.

பற்கள் தந்தி அடிக்க, “வாங்க என்கூட ” என்று அழைத்தவளின் கரிசனம் குளிரையும் தாண்டி அவனுள் இதம் பரப்பியது.

மறுபேச்சின்றி அவளோடு இணைந்து நடந்தவன், அவள் உடல் நடுங்குவதை கண்டு அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.

அவனும் நனைந்து தான் இருந்தான்.. அவன் உடலும் ஜில்லென்றுதான் இருந்தது. ஆனால் அதையும் தாண்டி அவளுள் சூடு பரவியதை எண்ணி அவளுக்கு வியப்பாக இருந்தது.

காப்பாற்ற சென்ற கணவனின் கையணைப்பில் அறை வந்து சேர்ந்தவளை, கட்டிலில் தன்னருகே அர்த்திக்கொண்டான் வசி.

இப்போது பொறாமை படுவது அவனது கவிதைகளின் முறையாயிற்று.

கையருகே தட்டுப்ட்ட அந்த நோட்டை பார்த்தவன்….

“பார்த்தாயா !! என்னவள் என் வசம் தான்…
துஜாவை தாஜா பண்ணலாம் என்று கணக்கு போட்டாய் அல்லவா?
இப்போது பார்…. பார்… “

என்று அவன் உள்ளம் குதியாட்டம் போட்டது.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here