மந்திரமென்ன மங்கையே – 17

0
309

மந்திரம் – 17

“உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு .
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு …”

என்ற பாடலை கசியவிட்டது வசியின் கைபேசி ..

திரையை பார்க்காத போதும் …அழைப்பது தனது தேனு தான் என்பதை உணர்ந்தவனுக்கு , அழைப்பை ஏற்க யோசனையாக இருந்தது .

‘அடுத்து என்ன சொல்ல போறாளோ ?” என்ற குழப்பத்தோடவே அவன் கைபேசியை உயிர்ப்பிக்க ..

” ஏய் போந்தாக்கோழி …போன எடுக்காம இவ்ளோ நேரம் என்ன பண்ணீங்க …லேப்டாப் மேல கவுந்தடுச்சு தூங்கிட்டிங்களா ?” என்றவள் வினவ ….

சுற்றி முற்றி பார்த்தான் வசி .

‘கெளம்பி கிளம்பி வந்துட்டாளா ? எப்படி கரெக்டா சொல்றா ? எதுக்கும் சமாளிப்போம் …..’ என்று எண்ணிக்கொண்டவன் …

குரலில் மட்டும் கம்பிரத்தை கூட்டி ..

“முக்கியமான ப்ராஜெக்ட் துஜாவந்தி ..புல் டெடிகேஷன் தேவை …அதான் ..சொல்லு எதுக்கு கால் பண்ண ? ” என்று பில்டப் குடுக்க …

கெக்கபிக்க என்று சிரிக்க தொடங்கினாள் அவள் .

அவளது சிரிப்பு என்னவோ கிண்கிணி நாதமாக தான் இருந்தது …ஆனால் ஏற்கனவே பீதியில் இருந்த வசிக்கு மட்டும் அது அதிபயங்கரமான ஒலியாய் கேட்டது .

நிறுத்தாமல் அவள் சிரித்துக்கொண்டே போக …கடுப்பான வசி , காலை கட் செய்தான் .

ஆனாலும் சிரிப்பு சத்தம் மட்டும் ஓயவில்லை .

“என்ன பேய்யா கீயா மாறிட்டாளா ?’ என்றவன் சிந்திக்கும் போதே , கதவை திறந்து கொண்டு சாத்தாட் அவன் மனைவியே நேரில் வந்து நின்றாள் .

“இவ எதுக்கு இங்க ?” என்றவன் விழிக்கும் போதே , அவளை தொடர்ந்து அவனது அலுவலக நண்பர்களும் வந்தனர் .

“பாத்தீங்களா ? இப்போ கேளுங்க , ஏன் டா யாருக்கும் சொல்லாம கல்யாணம் பண்ணணு கேளுங்க ?” என்றவள் தூண்டி விட ..

அனைவரும் அவனை சூழ்ந்துகொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு காதை பஞ்சராக்கினார்கள் .

அனைவர்க்கும் பதில் சொல்லி ஆசுவாசப்படுத்துவதற்குள் வசிக்கு குடலே வாய் வழியாக வந்துவிடும் போல இருந்தது .

அவன் திணறுவதை கண்ட துஜாவிற்கு சிரிப்பாக இருந்தது .

எல்லாம் ஓய்ந்து கூட்டம் கலந்ததும் …சிரிப்போடவே அவன் அருகே அவள் வர ..கொலைகாண்டோடு அவளை ஏறிட்ட வசி ..ஒரே பாய்ச்சலில் அவளை சுவற்றோடு சாய்த்து கைகளால் அரண் அமைத்து விட்டான் .

அவள் கண்களை ஊடுருவிய அவனது பார்வையை தளராமல் அவள் ஏறிட ..அவள் இடையை அழுந்த பற்றியவன் …

“அளவு மீறி என்கிட்ட விளையாடாத தேனு….விளைவு விபரீதமா அமையும் “

“விபரீதமானா ?”

” ஏன் உனக்கு புரியலையா ?”

” புரியலையே”

“பொய் “

“மெய் “

” எதுக்கு இந்த வேஷம் ?”

“வேஷமில்லா நேசம் “

“நம்பமுடியாது “

“ஏன் ?”

” நீ என்ன வெறுக்கற ?”

“யார் சொன்னா ?நானா ? “

“இல்லை “

“அப்பறம் ?”

” எனக்கே தெரியும் “

“எப்படி ?”

“அது அப்படி தான் “

“எது எப்படி தான் ?”

“புருஞ்சுக்கோ …இப்படி என்ன சோதிக்காத “

“நா என்ன சோதிச்சேன் ?”

” என்ன சீண்டாத “

“ஏன் ?”

“அதான் சொன்னனே விளைவு விபரீதமா அமையும்னு “

“விபரீதமானா ?”

“மறுபடி மொதல்ல இருந்தா ?”

“ஹாஹாஹா “

“என்னடி சிரிப்பு ?”

” என்னடா அதட்டுற ?”

“அப்படி தான் டி அதட்டுவேன் “

“நானும் அப்படி தான் டா சிரிப்பேன் “

இருவருமே ஒருநிமிடம் மௌனமாகிவிட்டனர் .

இடையை பற்றியவனின் கைகளின் அழுத்தம் கூடிக்கொண்டே சென்றது .

“போதும் ..விடு “

“முடியாது “

“வசி …ப்ளீஸ் …வலிக்குது “

என்றவள் கண்களில் இரஞ்சலோடு கெஞ்ச ..கைகளை விலக்கி கொண்டவன் ..மென்மையாக அழுத்திய இடத்தை வருடி கொடுத்தான் .

இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி குறைந்து கொண்டே வர , அவனை விலக்க தோன்றாது அவன் கழுத்தில் கைகளை மாலையாக போட்டு அவனை மேலும் துஜா சோதிக்க …

இதழ்கள் இரண்டும் இணைய ஒரு நூல் அளவு மட்டுமே இடைவெளி இருந்த அந்த நேரத்தில் ..சத்தமாக அவன் அரை கதவை யாரோ திறந்துகொண்டு வந்தனர் .

வந்தவள் ரவீத்தா …வசியோடு பணிபுரிபவள் …

இருவரும் சட்டென சுதாரித்து விலகிவிட்ட போதும் …இருவரின் முகமே அவர்களை காட்டிக்கொடுத்து விட ,

“சாரி சார் ” என்று வந்த வேகத்திலேயே திரும்பி சென்றுவிட்டால் அவள் .

இடக்கையால் தலை முடியை கொதிக்கக்கொண்டே …துஜாவை வசி ஏறிட, உதட்டை கடித்துக்கொண்டு ஏதோ தீவிர சிந்தனையில் மூழ்கி இருந்தாள் துஜா .

“ஓய் தேனு ” என்றவன் உற்சாக குரலில் வினவ …நிதானமாக அவனை ஏறிட்டு பார்த்தாள் அவள் .

அவள் முகமாற்றம் அவன் நெஞ்சை பிசைய …

“என்னாச்சு தேனு ?” என்று அவள் அருகே வந்தான் .

ஒரு எட்டு பின்வைத்தவள் …

“ரெசிப்சன் சமந்தமா உங்க கிட்ட பேசத்தான் வந்தேன் ….அதுவும் எல்லாம மதியம் எங்க அத்தை வீட்ல இருந்து நம்மள பாக்க வீட்டுக்கு வராங்க ….அதான் உங்ககிட்ட சொல்லி கூட்டிட்டுபோலாம்னு …வந்தேன் ” என்றவள் நிறுத்தி நிறுத்தி பேச …

“எப்படி வந்த தேனு ?” என்று வினவினான் வசி ..

“பஸ்ல “

“லூசி ..வெயில் வேற ..போன் பண்ணி சொல்லிருந்தா வந்துருப்பேன்ல ..எதுக்காக மெனக்கெட்டு வந்த ?”

“இல்ல …அங்க வீட்லயும் உங்க சொந்தகாரங்க சிலபேரு எதேர்ச்சியா வந்துட்டாங்க …உங்ககிட்ட கொஞ்சம் தனியாவும் பேசவேண்டி இருந்தது ..போன்ல பேச பிரைவசி கிடைக்கல …அதான் ” என்றால் அவள் .

“ஹ்ம்ம் ” என்றபடி கைக்கடிகாரத்தை பார்த்தவன் …

“சரிவா கிளம்பலாம் “

“மணி பதினொன்னு தான ஆகுது …நா போறேன் ..நீங்க ரெண்டு மணிக்கு வந்தா போதும் “

“இல்ல வா …” என்றபடி அவள் கைபிடித்து காருக்கு அழைத்து சென்றவன் , அவளை இருக்கையில் அமர்த்திவிட்டு ….தனது அலுவலக நண்பனிடம் விஷயத்தை சொல்லி விட்டு வந்தான் .

நேராக கார் அவளது நாட்டிய பள்ளிக்கு சென்றது .

“வசி !!”

“தேனு “

“இங்க எதுக்கு ?”

“சாரி மா “

“எதுக்கு ?”

“நா பண்ண தப்புக்கு “

“தேவையில்ல வசீகரன் ….ஒரு சாரி கடந்த காலத்தை மாத்திராதுல “

“எதிர்காலத்தை மாத்தும் “

“எப்டி ?”

“தே ..துஜா …எப்படி சொல்றதுன்னு தெர்ல ….நேற்று ஒரு நாள் …என்ன பொறுத்தவரை அந்த நாள் ..நான் நானாகவே இல்ல தேனு ….உன்ன மொதமொத பாத்தப்ப அழகான குழந்தைய ரசிக்கற உணர்வு தான் எனக்கு …அப்பறம் உன்ன எப்போவும் பாத்துட்டே இருக்கனும் ..உன்கூடவே இருக்கணும்னு ஒரு இனம்புரியாத ஆசை …ஆசைன்னு சொல்றத விட வெறி ….முதல் பார்வையிலேயே எனக்குள்ள வந்துட்ட …என் காதல உனக்கு புரியவெக்கணும்னு நெனச்சேன் ..ஒருவாரம் உன்பின்னாடியே வந்து உன்ன பத்தி ஒவ்வொன்னும் தெரிஞ்சுகிட்டேன் …உன் நடை உடை எல்லாமே பதிஞ்சுபோச்சு …அதுக்கு அப்பறம் தான் உன் டான்ஸ் ஸ்கூலுக்கு வந்தது …அங்கையும் மோதல் தான் ..ஏனோ உன்ன பாக்கறப்ப எல்லாம் உன் வாசனைய ஸ்வாசிக்கறபோது எல்லாம் ….எனக்குள்ள ஒரு பதற்றம் …யோசிக்காம உங்கிட்ட பேசுவேன் …அன்னிக்கு கூட அப்படி தான் உங்கிட்ட பேசுனேன் …அடுத்தநாள் அதுக்காக உங்கிட்ட மன்னிப்பு கேக்கணும்னு நெனச்சு வந்தப்போ …ஆபீஸ்ல முக்கிய வேலையா மும்பை போக வேண்டி வந்துச்சு ..போயிட்டு நான் திரும்பி உன்ன பாக்க வந்தப்போ நீ இல்ல …சாரு தான் உனக்கு நிச்சயம் ஆகப்போறதா சொன்னா ..ரெண்டு நாளுல எதை நான் எதிர்பாக்கல …என்ன செய்யறதுன்னு தெர்ல …உங்க வீட்ல வந்து பேசுனா கூட , நீ என்ன எதுக்குவங்கற நிச்சியம் எனக்கு இல்ல …உனக்கு விடவும் மனசு இல்ல ..என்ன செய்ய ?எது செய்யனு ? புரிபடல …சரிதான்னு இந்த முடிவுக்கு வந்துட்டேன் …..கண்டிப்பா திருமணம்னு ஆகிட்டா நீ விலக மாட்டேன்னு ஒரு நம்பிக்கை தான் மா ….”
என்றவன் நீளமாக பேச …

” ஆனா என்ன பத்தி …என் மனச பத்தி யோசிச்சேங்களா வசி ? உங்க சுயநலம் மட்டும் தான் இல்லையா ? ஒருவேளை நான் கௌதம காதலிச்சு இருந்தா ?”

” இல்ல துஜா …நீ சாருக்கிட்ட ஒருதடவை சொன்ன …என் கழுத்துல தாலின்னு ஒன்னு ஏறுன அப்பறம் தான் நான் அவங்கள நேசிப்பனு …அந்த நம்பிக்கைல தான் …” என்று இழுத்தான் வசி ..

“ஆயிரம் சொன்னாலும் நீங்க சொன்னதை என்னால ஏத்துக்க முடியாது வசி ….மன்னிக்கவும் முடியாது ….” என்று சொல்லி முகத்தை வெளிப்புறமாக திருப்பிக்கொண்டாள் துஜா …

மனதில் அவன் மீதான வன்மம் இருந்தாலும் ..அவளுக்கே இப்போது அவளது மனநிலை குறித்து ஒரு தெளிவு கிடைக்கவில்லை ….

அவனை அவன் செயலை மன்னிக்க கூடாது என்று தனக்குளாகவே உருபோட்டுக்கொண்டிருந்தவளின் பார்வை வட்டத்தினுள் , பள்ளி முடிந்து தனியாக வெளிவந்த சாரு தென்பட்டாள் .

சற்றும் யோசிக்காமல் “சாரு” என்று அழைத்தபடி , அவள் காரில் இருந்து இறங்க ..எதிர் திசையில் வந்த லாரி அவளை தூக்கி வீசியது .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here