மந்திரமென்ன மங்கையே – 8

0
174

மந்திரம் – 8

அதிர்ச்சியில் நின்ற அனைவரும் , நடந்ததை இன்னும் நம்பமுடியாமல் நிற்க , உறைந்து நின்ற துஜாவிற்கு சினம் தலைக்கேறியது . “சீ …நீயும் ஒரு ஆம்பளையா ?” என்று அவனை உதாசீன படுத்தியவள் , அவன் கட்டிய தாலியை கழட்ட முற்பட , அவள் கையை பிடித்து தடுத்தான் வசீ . அவன் பற்றி இடம் சிவக்க , வலியில் துடித்தாள் துஜா .

வசீயின் தோளை அழுத்தமாக பற்றி அவனை தன் பக்கம் திருப்பிய துரை , திருப்பிய வேகத்தில் அவன் கன்னத்தில் அறைந்தார் . ” டேய் ..மனுசனா டா நீ ..விடுடா என் பொண்ண ..பாவி …எங்க சந்தோசத்த நாசம் பண்ணனும்னே வந்தியா டா ?” என்று கேட்டு கொண்டே மீண்டும் அவர் அவனை அரைய முற்பட , லாவகமாக அதை தவிர்த்தான் வசீ .

வெளியே ஒரு அரவம் கேட்டது . சத்தத்தை கேட்டதுமே அங்கு இருந்தவர்கள் அனைவருக்குமே மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டது புரிந்தது . என்ன சொல்லி சாமளிப்பது என்றவர்கள் கையை பிசைந்து கொண்டு நிற்க , அவர்களை முந்தி கொண்டு , துஜாவையும் இழுத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றான் வசீ .

உள்ளே நுழைந்து கொண்டிருந்த அத்தனை தலைகளும் பிரேக் போட்டது போல நின்றது . உரிமையாக அவளை அவன் பற்றி இருந்த விதமும் , அவள் கழுத்தில் தொங்கிய தாலியும் அவர்களுக்கு ஆயிரம் கற்பனைகளை தோற்று வித்தது . நடந்ததை விளக்க துரை வாய் திறக்க , கை நீட்டி அவரை நிறுத்தினார் அந்த ஆத்தாக்கிழவி . துஜாவின் வசம் துளை இடும் பார்வையை வீசியவர் “இவன் தான் அந்த வசீயா ?” என்று வினவினார் .

“இவருக்கு எப்படி என் பெயர் தெரியும் ?” என்று மனதிற்குள் அவன் குழம்ப , அனைவரின் முகத்திலும் துஜாவின் பதிலுக்கான எதிர்பார்ப்பு இருந்தது .இப்படி ஒரு நிலை வரும் என்று அறியாமல் அவர்கள் முன் கற்பனையாக அவள் உரைத்தது நடித்தது எல்லாம் ,இப்போது நிஜமாகி கொண்டிருப்பதை உணர்ந்தாள் துஜா . நுணலும் தன் வாயால் கெடும் ..என்பது அவள் விசயத்தில் உண்மையாகி கொண்டிருப்பதை அவளால் ஏற்க முடியவில்லை .

அவளது மௌனம் அவர்களை உலுக்கியது . ” என்னமா ? அவங்க கேக்கறாங்களா பதில் சொல்லுடி ?” என்றவள் தாய் அவளை இடிக்க , சட்டென்று பொய் சொல்ல வராமல் “ஆமாம் ” என்று சொல்லிவிட்ட துஜா , சொன்னதின் அர்த்தம் புரிந்ததும் நாக்கை கடித்துக்கொண்டாள் .

“விளையாட்டு பொண்ணு ..பொய் சொல்றன்னு நெனச்சது எங்க தப்பு தான்” என்று சொல்லி பெருமூச்செறிந்தார் மாப்பிள்ளையின் தந்தை . கலங்கிய கண்களோடு துஜா அவர்களை நிமிர்ந்து பார்க்க , அவன் நின்றுகொண்டிருந்தான் . அவன் , அவள் மனம் கவர்ந்தவன் ..புகைப்படத்திலேயே அவளை வசியம் செய்தவன் ..ஆனால் அவன் கண்களில் என்ன பாவம் அது ? யாரை இவ்வளவு அருவறுப்போடு நோக்குகிறான் ? தன்னை தானா ? ஆனால் ஏன் ? அவளுது மணிக்கட்டு வலித்தது . ஒ இவன் என்னை பற்றி இருப்பதாலா ? நான் தவறு செய்யவில்லையே ? அவனது ஆசைக்கு என் கனவுகள் பலியாக வேண்டுமா ?

துஜாவின் குடும்பத்தின் கெஞ்சல்கள் ஏதும் வந்தவர்களை தடுக்கவில்லை . திரும்பி பார்க்காமல் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர் . சாருவுக்கு குற்ற உணர்வாக இருந்தது .”ஒருவேளை அவனிடம் அவள் பற்றிய செய்தியை கூறாமல் இருந்திருந்தால் , இப்படி நடந்திருக்காதோ ? அவனுக்காக பாவம் பார்த்தது தவறோ ? ” என்று எண்ணாமல் இருக்க அவளால் முடியவில்லை .

வேகமாக உள்ளே நுழைந்த பத்மா , ஆத்திரத்திலும் அவமானத்திலும் துஜாவை அடிக்க , குறுக்கே வந்து விழுந்தான் வசீ . ஆங்காரத்தில் அவனை தள்ளி விட்டவர் ” காதலிக்கறேன்னு முன்னமே சொல்றதுக்கு என்னடி ? எப்படி எங்களை அசிங்க படுத்தீட்டியே ?” என்று அழ , ” வாய மூடு பத்மா ,நம்ம துஜா அப்படி பட்டவ இல்ல …இவன் ..இந்த ராஸ்க்கல் ..இவன் தான் எல்லாத்துக்கும் காரணம் ” என்று அவனை வெறித்துப்பார்த்தார் .

சூழ்நிலையை உணர்ந்த சாருவும் , வசீகரன் குறித்து அனைத்தையும் சொல்லி பத்மாவை தேற்ற , உண்மையை அறிந்து அவனின் செயலுக்கான காரணத்தையும் யூகித்து கொண்ட துரை , யோசனையோடு அவனை பார்த்தார் .

அழுகையோடு அண்ணியின் தோள்களில் சாய்ந்து நின்ற மகளை எழுப்பியவர் , ” கவலைப்படாத கண்ணா ..உன் இஷ்டம் இல்லாம இவன் பண்ணது கல்யாணமே இல்ல ..இவன கோர்ட்டுக்கு இழுத்து என்ன செய்யறேன் பாரு ?” என்று துரை மொழிய, ” என்ன பேசறீங்க நீங்க …இந்த நாசமா போனவனாலா ..நம்ம பொண்ணு பேரும் ஊரெல்லாம் நாரனுமா ?” என்று அவரை அதட்டினார் பத்மா .

கோவமாக வசீ ஏதோ சொல்ல வாய் திறக்க , ” அப்பா ..அம்மா ..நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம் ..எதுவும் செய்யவும் வேண்டாம் ..இனி என் வாழ்க இவரோட தான் ..நா இவர் கூட போகிறேன் …” என்று உறுதியாக கூறியவளை கண்டு வசீயே அதிர்ந்து விட்டான் .

“என்னமா ? நீயும் ஒளர ?” என்றவர் ஆற்றாமையோடு வினவ , பதில் சொல்லாமல் தனது அறைக்குள் சென்று விட்டால் துஜா .வெளியே வந்தவளின் கைகளில் இருப்பைகள் இருந்தது .

ஒருபையை வசீயின் கைகளில் திணித்தவள் , அவர்கள் சொல்ல சொல்ல கேட்காமல் அவனோடு வண்டியில் புறப்பட்டுவிட்டாள் .

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here