பிரம்மாண்டமான ஆபீஸ்சை பார்த்தபடி உள் நுழைய வரவேற்பு அறையில் இருந்த பெண் இவர்களிடம் விவரம் கேட்டு இருவரையும் அமர வைத்தனர்…அரைமணிநேரம் காக்க வைத்த பிறகு இருவரையும் பார்ப்பதற்காக அனுமதிக்க… நுழையவும் யாரோ வயதானவரை எதிர் பார்த்து உள்நுழையவும் அங்கிருந்தவனை பார்த்த இரண்டு பேருக்குமே பெரிய அதிர்ச்சி தான்.
இருபத்தியாறு வயது இருக்குமா அவனுக்கு… ஆளுமையான தோற்றம் … நல்ல உயரம் இவர்கள் இருவருமே உயரமாக இருக்க அவனின் முன்பு இரண்டு பேருமே மிகவும் சிறுவர்களாக தோன்றினர். நான் மகேஷ் இந்த ஆபீஸோட பாஸ்… ஸாரி பசங்க பாஸ்ன்னு தான் கூப்பிடறாங்க…அதுவே வந்துடுச்சு…
சொல்லுங்க யங் பாய்ஸ் நீங்க நிச்சயமாக வீடு வாங்க வந்து இருக்க மாட்டிங்க அத உங்களை பார்த்தாலே தெரியுது. சொல்லுங்க என்ன தெரிஞ்சுக்கணும். அதுக்கு முன்னாடி உங்களோட பேரை சொல்லுங்க…
ஸாரி ஸார். பொய் சொல்லி வந்ததற்கு என்னுடைய பேர் பிரவின் இவன் கிஷோர் எப்படி கண்டு பிடிச்சிங்க…
வெரி சிம்பிள்… பார்த்தா படிக்கற பசங்க மாதிரி தெரியறிங்க அத வச்சி தான் கேட்டேன். உங்க ஏஜ்ல காசு இருந்தா எந்த சினிமா பார்க்கலாம் என்ன வாங்கி சாப்பிடலாம் இப்படி தானே யோசிப்பிங்க..
அதுவும் சரி தான் ஸார். எனக்கு ஒரு தகவல் வேணும். ஒருத்தங்கல பத்தி…
சொல்லுங்க…. தனது மொபைலை எடுத்து பிரவின் ஸார் இவற்றை பற்றி தான் தெரியணும்.
யார் குடுங்க பார்க்கறேன்.ம்… பிரவின்…. இவர பார்த்த மாதிரி தான் இருக்கு. ஆனால் எப்போன்னு தெரியவில்லை.
ஸார் நீங்கள் கட்டிக்கொடுத்த பில்டிங் குளத்தோட இடம்ன்னு இவர் போராட்டம் பண்ணினவர்…
எஸ்… எஸ் ஞாபகம் வந்துடுச்சி இவரால அந்த ப்ராஜெக்ட் முடிக்க கிட்டத்தட்ட ஒரு வருஷம் டிலே ஆச்சு..
அவரே தான் ஸார்.
என்ன விவரம் வேணும்.
இப்ப கொஞ்ச நாளா அவர காணோம் ஸோ நாங்க தேடிட்டு இருக்கறோம்… அவர் சம்மந்தப்பட்ட எல்லோர் கிட்டேயும் விசாரிக்கறதா முடிவு பண்ணி இருக்கிறோம். அதனால முதல்ல உங்க கிட்ட இருந்து…
ஆக… என் மேல சந்தேகப்பட்டு வந்து இருக்கிறீங்க… பிரவின்.. பிரவின் தான நீ. அவனை எதிரியா நினைக்கற அளவுக்கு அவனுக்கு ஓர்த் கிடையாது. புரியுதா… ஆரம்பத்தில் ரொம்ப கெடுபிடி பண்ணினான். அப்புறம் அடேய் அது நியாயமான வழியில் தான் டெண்டர் வாங்கினேன். அங்கே இன்லீகலா எதுவுமே நடக்கல அப்படிங்கறத புரிய வைத்தேன் அப்புறம் அவனே அதுல இருந்து விலகிட்டான். ரொம்ப மோசம் இல்லை ஆனால் கொஞ்சம் நல்லவன் தான்.
ஓகே ஸார் தேங்க்யூ உங்களுக்கும் அவர பற்றி ஏதாவது இன்பர்மேஷன் கிடைச்சா எங்களுக்கு சொல்லுங்க ஸார். ..
எஸ் நிச்சயமா…ஆனால் அவ்வளவு அவசரமாக தேடற அளவுக்கு ரொம்ப நெருங்கின உறவா உங்களுக்கு…
கொஞ்சம் அப்படி தான் ஸார்.
ஓகே எனக்கு இங்கே மட்டும் இல்லை நிறைய பக்கம் கிளைகள் இருக்கு. அங்கெல்லாம் சொல்லி வைக்கறேன்
அப்போது கதவை தட்டி விட்டு வந்த இவனின் செயலாளர் கையில் இரண்டு காபி கோப்பை இருந்தது. இவர்கள் இருவருக்கும் தர…
ஸார் எதுக்கு ஸார் இதெல்லாம்… நாங்கள் ஏதாவது வாங்கினா கூட பரவாயில்லை இது உங்களுக்கு நஷ்டம் தான்.
உலகத்தில் எதுவுமே நஷ்டம் கிடையாது நான் உங்களுக்கு இந்த காபி தர்றதால எதுவும் குறைஞ்சிட மாட்டேன். நீங்க உங்கள் நண்பர்களுக்கு நிச்சயமாக என்னுடைய கம்பெனி பற்றி சொல்விங்க… இப்போ இல்லாட்டியும் ஒரு நாள் நீங்கள் இங்கே வாங்குவிங்க…அப்புறம் முக்கியமான விஷயம் எனக்கு உங்கள் ரெண்டு பேரையும் ரொம்ப பிடிச்சிருக்கு…
தேங்க்யூ ஸார். நிச்சயமாக எங்களுக்கும் உங்கள பிடிச்சி இந்த டிப்ஸ் யூஸ் ஆகும். பின்னாடி பிஸ்னஸ் தொடங்கும் போது…அடுத்த பத்து நிமிடம் பொதுவாக பேசியபடி இருவரும் கிளம்ப வெளியில் வரவும் கிஷோர் தான் ஆரம்பித்தான்.
போச்சு… இனி என்ன செய்ய..பிரவின் மறுபடியும் முதல்ல இருந்தா… தொடங்கின இடத்துக்கே வந்தாச்சு.. இந்த சூர்யா எங்கே தான் போய் இருப்பாரு…
எனக்கும் தெரியலைடா இப்ப என்ன பண்ண… இன்றைக்கு ஏதாவது தகவல் கிடைக்கும்ன்னு நினைச்சோம்.
அப்படியும் சொல்ல முடியாது இது நடந்து இரண்டு வருஷம் முடிஞ்சது. இவங்களுக்கு ஞாபகம் இருந்ததே பெரிய விஷயம் தான். விடு பிரவின் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம். நிச்சயமாக ஏதாவது க்ளு கிடைக்கும். இப்ப கிளம்பலாம். இன்றைக்கு மறுபடியும் அதே ஐடிய செக் செய்யறேன். தேடலாம்…
சரி டா மறுபடியும் நாளைக்கு இத பத்தி யோசிக்கலாம். உனக்கு ஏதாவது தோணினதுன்னா எனக்கு கூப்பிட்டு சொல்லு என்றபடி தனது
வீட்டை நோக்கி வண்டியை திருப்பினான் பிரவின்.
மயங்காதே..