என் கண்ணம் பிடித்திழுத்து
கண் நேர்பார்த்து
கடவுள் மொழியில் கதைக்கிறாய்…
உன் உதட்டசைவிலும்
கண்ணொழியிலுமே..
கட்டுண்டு போகிறேன்..
ஏதேதோ மொழிந்து,
கை தட்டி… சிரிக்கிறாய்..
ஒன்றுமே புரியாவிட்டாலும்
உன்னுடன் சேர்ந்து நகைக்கிறேன்
உனக்கேற்ப முகபாவனைகள்
கூட்டுகிறேன்..
அதுசரி..,
என் கருத்தனைத்தும்
உன் குரலில் வியந்து..
பேசும் முயற்சியில் மகிழ்ந்து
உன் பாவனைகளில்
நெகிழ்ந்திருக்கையில்..
நீ என்ன மொழி
பேசினாலும்…
நின் கிள்ளை மொழியில்
தொலையத்தானே
போகிறேன்…
Facebook Comments Box