மாயவனம் பகுதி 1

0
26

பகுதி 1

அந்த மனித சஞ்சாரமே இல்லாத இடத்தில் ஆங்கங்கே வித விதமான ஒலிகள் அவன் செவி பறைகளை தொட்டுச் சென்றது. காற்றின் வேகம் கூட பயமுறுத்தியது. அவன் இதுவரை எங்கும் கேட்டிடாத ஒலிகள் அவன் எண்ணங்கள் எங்கெங்கோ பயணித்தது. முடிவில் அதள பாதலத்தில் அவனை ஆழ்த்தியது… எங்கும் இருட்டு கண்கள் இரண்டும் இருட்டிற்கு பழக்க பட்டிருந்தாலும் இந்த கும் இருட்டில் ஒன்றும் பகுத்து காணமுடியாமல் மிகவும் சோர்ந்து போய்
கண்ணை திறந்தும் பார்க்கமுடியாமல் கால்கள் தள்ளாட காட்டிற்குள் தட்டுதடுமாறியபடியே சென்றுக்கொண்டிருந்தான் அவன்

கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தவன் வழியில் எதன் மீதோ மோதியது போல் நங்கென்ற சத்தத்துடன் அம்மா என்று கத்தினான். தான் மோதிய இடத்தை இரண்டு கைகளால் துழவி பார்க்க இரண்டு கைகளை சேர்த்து பிடித்தாலும் பிடிமானத்துக்குள் சிக்காத பெரிய காட்டுமரமாய் இருக்க “சே….. மரமா” என்றபடி மரத்தில் மோதிய தலையை தேய்த்து விட்டுக்கொண்டே சற்று நகர்ந்து நடக்க ஆரம்பித்தான்….

பத்தடி எடுத்து வைத்து நடந்திருப்பான் திடீரென வானிலை மாற்றம்…. சாதரணமாய் வீசிய காற்று ஆளையே சுழற்றி அடிக்கும் சூரக்காற்றாய் மாறி வீசி அவனையும் சேர்த்து சுழற்றியது அதன் வேகத்தில் எங்கோ ஒரு மரத்தில் மோதி இருந்தான் அவன். தப்பிக்க வழியில்லாம் அவன் மோதிய அந்த மரத்தினையே கெட்டியாய் பிடித்துக்கொண்டு கண்களை இருக்க மூடிக்கொண்டு இருந்தவனை இரண்டு பெரிய ராச்சச கரங்கள் கொண்டு மரத்தோடு ஒட்டிய அவனுடைய உடலை மரத்தில் இருந்து பிய்த்து எடுத்து தூர எரிவதுபோல் காற்று அவனை பலம் கொண்டு வீச எங்கோ ஒரு மூலையில் போய் விழுந்தான். காட்டுக்கொடிகள் அவன் உடலினை சுற்றிக்கொள்ள அதனை தன் பலம் முழுதும் கொண்டு பிடித்து உதறியவன் தடுமாறி எழுந்தான் … இப்படி அமானுஷ்யமான பயங்கரமான காட்டிற்குள் எப்படி வந்து மாட்டிக்கொண்டோம் என்பதே புரியாமல் இருக்க இங்க இருந்து எப்படி செல்வது என்று தெரியாமல் இருந்தும் எப்படியாவது இந்த இடத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதையே மனதில் மந்திரம் போல் ஜபித்தவன் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மறுபடி குருட்டுதானமாய் பாதையில் நடக்க ஆரம்பித்தான்…

நடக்க நடக்க புள்ளிபோல் ஆரம்பித்த வெளிச்சம் சுட்டெரிக்கும் சூரியன் போல கண்களை கூசசெய்தது… இரு கரங்களை கொண்டு கண்களை கசக்கி கொண்டு முன்னேற முயற்சி செய்தாலும் கால்கள் முன்னேற முடியாமல் கனத்து போய் இருக்க சரிந்து மடிந்து அமர்ந்து விட்டான்.

பட்டென அவனுடைய தோல்களில் ஒரு கரம் பதிய நிமிர்ந்து அந்த கரத்திற்கு உரியவரை பார்ததவனின் கண்கள் பிரம்மிப்பில் நிலைகுத்தி நின்றது. ஆயிரம் சூரியன் ஒன்றாய் சேர்ந்ததுபோன்ற ஒளியில் அவள் ஜொலித்து கொண்டிருக்க அவள் அணிந்திருந்த ஆடை, ஆபரணங்கள் அவளை தேவலோக பதுமை போன்று காட்டியது யார் இவள்…. இங்கு அதுவும் இந்த அத்துவான காட்டிற்குள் எப்படி வந்தாள் ? கண்களை கூச செய்யும் அளவு பிரகாசமான இவள் யார் ? என்று அவன் மனதில் ஆயிரம் கேள்விகள் முளைவிட்டிருந்தாலும் அவளிடம் கேட்க மறந்து இமைக்காமல் அவளின் ஸ்வர்ண ஸ்வரூபத்தையே கண்டு கொண்டிருந்தான் அவன். அவனை பார்த்து சிரித்தவள் என்னுடன் வா என்று கூறி அவனை அவன் கைப்பிடித்து அழைத்துச் சென்றாள் அந்த பூவை.அவள் கைபிடித்தவுடன் இனம்புரியாத மின்சாரம் பாய்வது போல் இருக்க

எங்கே செல்கிறோம்? ஏன் என்னை அழைத்து செல்கிறாய்? என்ற கேள்விகள் அவனிடத்தில் இல்லை. அவளுடைய தேஜஸான முகத்தையே அவனுடைய கண்கள் ஆராய்ந்து கொண்டு இருந்தன… அந்த ஒளியின் மங்கை காற்றில் பறப்பது போல அவனை அழைத்துசெல்ல அவனும் அவளுடைய கரம் பற்றி பின் தொடர்ந்துகொண்டிருந்தான்…

ஒரு கட்டத்தில் இரண்டு சர்பங்களின் சிலை தாங்கிய குகையின் ஒன்றின் முன் நின்றவள் அவனை முன்னேற சொல்லி அனுப்ப அவளின் ஆணைக்கு கீழ்படிந்தவன் போல் ஓர் அடி முன்னே வைத்தவனின் கால் அடியில் பெரிய சர்பம் ஒன்று அவனை தீண்ட பதம் பார்த்து கொண்டிருந்த தருணத்தில்

கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
ஒற்றை சிறு குருவி நடத்தும்
ஓரங்க நாடகத்தில்
சற்றே திளைத்திருந்தேன்

கீச்சு கீச் என்றது கிட்ட வா என்றது
பேச்சு ஏதுமின்றி பிரியமா என்றது
ஒரு நாள் கனவோ
இது பெரட்டை பேருறவோ… யார் வரவோ.. என்ற

பாடல் அவன் மொபைலில் ஒளித்துக்கொண்டு இருக்க தூக்கம் கலைந்தவன்…. என்ன கனவுடா சே மனுஷன மிரள வைச்சிடுச்சே அந்த பொண்ணு முகம் நியாபகம் வர மாட்டுதே…. படத்துல வர்ரா மாதிரி தொட்டதே ஷாக் அடிச்சா மாதிரி இருந்துச்சே என்று தலையில் தட்டி அந்த தங்க பதுமையின் எழில் முகத்தை மனக்கன்னில் கொண்டு வர பார்த்தவன் “ம்ஹீம் இப்போ வரமாட்டா போல போன் பேசிட்டு அப்புறம் வந்து தூக்கத்தை கட்டின்யூ பண்ணுவோம்” என்று எண்ணியபடியே கைபேசியை எடுத்தவன் சிரித்தமுகமாக “ஹாய் விச்சு எப்படி இருக்க?” என்று கேட்டுக்கொண்டே மெத்தையில் புரண்டு படுத்தான்.

“ஹாங்… அரை இஞ்ச் வளந்துட்டேன் டா தடியா ” என்று அவனை வாரியவர் “நேத்துதானே நைட்டு படுக்கும் போது பேசினே அதுக்குள்ள என்ன வந்துட போகுது?” என்று சிரிக்க

“விச்சு உனக்கு இருக்க லொல்லுக்கு முடியல விச்சு” என்று செல்லம் கொஞ்சியவன் “நாலு பெரியதலைங்க உக்காந்து ஊர் கதையும், உலக கதையும் பேச ஆரம்பிச்சாச்சா?” என்று மீண்டும் அவரை கிண்டலடிக்க

“டேய் ஒல்ட் இஸ் கோல்டு டா…. காலைல எந்திரிச்சி சுத்தமான காத்த சுவாசிச்சி பாருடா, நாலு நல்ல விஷயங்கள பேசி பழகுடா… எப்பவும் கிண்டலடிச்சிட்டு” என்று அவனை வைதாலும் அதிலும் ஒரு பாசம் இருக்கவே செய்தது “அப்புறம் ஏதோ இன்னைக்கு முக்கியமான ஒருத்தரை மீட் பண்ணணும்ன்னு சொன்னியே ரெடியாகிட்டியா?” என்று அவனுக்கு நியாபகப்படுத்த

“நல்ல கெடுத்த போ விச்சு” என்று அவன் பரபரப்புடன் படுக்கையை விட்டு எந்திரிக்க

“என்னடா என்ன ஆச்சு பேராண்டி?” என்றார் பெரியவர்

“உன்கிட்ட என்ன சொன்னேன் விச்சு? என்ன சொன்னேன்?” என்றான் காட்டமாக

“என்ன சொன்ன… நாளைக்கு யாரையோ மீட் பணணும்ன்னு சொன்ன..”

“என்னை சீக்கிரமா எழுப்பி விட சொன்னேன்ல… இனி நான் குளிச்சி, ரெடியாகி ,போனமாதிரிதான் உன்னை வந்து பேசிக்கிறேன்”. என்று அவன் அவரிடம் கோபித்துக்கொள்ள

“நான் காலைல 5.மணியில இருந்து உனக்கு டிரை பண்றேன். லைனே கிடைக்கல இபபோதான் கிடைச்சிது, உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன்… நான் எழுப்பும் வரை காத்திருக்காதேன்னு. சொன்ன கேட்டாதானே ஏதேதோ பேசி வாயை அடைச்சிட்டு…. இப்போ வந்து என்னை திட்டு… ஒழுங்கா இனி அலாரம் வச்சி எழுந்துக்க வழிய பாரு” என்றார் கண்டிப்புடன்

“இங்க பாருங்க தமிழ் வாத்தியாரே இப்ப மட்டும் இல்ல, இனியும் நீங்கதான் எழுப்பனும் நடைமுறையெல்லாம் மாத்தகூடாது புரியுதா… சரி ,சரி கிளம்பனும் வந்து மத்த கதையெல்லாம் சொல்றேன்”. என்று குளியலறைக்குள் புகுந்தான் புகழ் எனும் புகழேந்தி.

சிரித்தபடியே அவனின் தாத்தா விச்சு எனும் விஸ்வாநாதன் பேரனின் அன்பை எண்ணி அகம் நெகிழ்ந்து போனார்.

புகழேந்தி சிறுவயதில் இருக்கும்போதே தாய் தந்தையரை ஒரு சாலை விபத்தில் ஒரே நேரத்தில் பறிகொடுத்தவன். அவனை எடுத்து வளர்த்தது எல்லாம் அவன் அப்பாவின் தந்தை விஸ்வநாதன்.

விஸ்வநாதன் ரிட்டையர்ட் தமிழ் வாத்தியார் தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக, தர்மம் போதிக்கும் ஆசானாக, சிரித்து மகிழ்ந்து கதைகளை பேசும் உற்ற நண்பனாக இருந்து பார்த்துக்கொண்டார். அவரை பிரிந்து சென்னையில் பணிபுரிந்தாலும் தினமும் அவர் எழுப்பினால் தான் எழுந்து கொள்வான் அதே போல் தூங்கும் போதும் இரவில் அவர் பேச வேண்டும். இது புகழேந்தியின் எழுதப்படாத சட்டம் விஸ்வநாதனும் புகழிடம் எவ்வளவோ எடுத்து கூறிவிட்டார் “ஏதோ ஒரு நாள் அசந்தர்பமாக தூங்கி விட்டேன்னா என்னடா செய்வ உனக்கு தான்டா கஷ்டம்”. என்றபோதும் … ஏதேதோ காரணங்களை கூறி அவரின் வாயை அடக்கிவிட்டான் புகழேந்தி…


“டேய் கொஞ்சம் பெறுமையா போடா”….

“பச் கொஞ்சம் கத்தாம வாடா வாய் மூடிக்கிட்டு இருடா”

“டேய் நான் முழுசா ஆபீஸ் போய் சேருவேனாடா?…ஹை வேல போற மாதிரி போறியேட இப்படி ஓட்டுறியே டா”

” அடச்சீ நீ என்ன சின்ன குழந்தையாடா எருமை கடா வயசு ஆகுது … உனக்கு பயமா இருந்தா கண்ணமூடிக்கிட்டு உட்காருடா”

“சொல்லமாட்டா….. டேய் நான் வீட்டுக்கு ஒரே புள்ளடா…. இன்னும் கல்யாணம் கூட ஆகலடா ஒரேடியா என்னை பரலோகத்துல அனுப்பிடுவ போல இருக்கே?” என்று அழாத குறையாக கெஞ்சிகொண்டிருந்தான் ஶ்ரீதர்.

“வண்டிய கெட்டியா பிடிச்சிக்கிட்டு சைலண்டா உட்காருடா விழுந்து தொலைக்க மாட்ட” என்று அவனை அடக்கி அமர வைத்தான் புகழ்.

“சைலண்டா உட்காந்துட்டு வர மாதிரியாடா வண்டி ஒட்டிக்கிட்டு வர நீ ஓட்டுறது பைக்குடா…. பிளைட் ரேஞ்சிக்கு பறக்குர!!! மனுசனுக்கு பீதியாகுதுல?” என்றான் பயம் கலந்த குரலில்

“நீ வாய மூடல….. மவனே நானே உன்னை கீழே
தள்ளி விட்டுட்டு போயிட்டே இருப்பேன் டா எருமை… டைம் வேற ஆகுது, நானே லேட்டாகுதுன்னு நினைச்சிட்டு இருக்கேன்.”என்ற புகழின் மிரட்டலில் அடுத்து அவன் பேசினால் தானே!!! ஶ்ரீ உள்ளுக்குள் உதறலுடன் சேதாரம் ஆகாமல் நல்லபடியாய் போய் சேர வேண்டும் என்று வேண்டாத தெய்வம் இல்லை

“ஹாய் புகழ்,ஹாய் ஶ்ரீ என்று முகமன்னுடன் அவர்களுக்கு கை அசைத்தபடி 30 வயது மதிக்க தக்க அவர்களுடன் இணைந்து கொண்ட மைதிலி ஶ்ரீயின் வெளிறிய முகத்தை கண்டு “உன் முகம் ஏன் பேய் அறைஞ்ச மாதிரி இருக்கு ஶ்ரீ?” என்றாள் அவனிடம்

அவள் கேள்வியில் ஶ்ரீ புகழை முறைத்தான் எல்லாம் உன்னாலதான் என்பது போல் அவனின் செய்கை சிறுபிள்ளை போல் இருக்க குரலில் கேலி இழையோட “ஏன் மைதிலி நீ பேய்கிட்ட அறையெல்லாம் வாங்கி இருக்கியா என்ன??? கரெக்கட்டா சொல்ற??? என்ன சுரேஷ் நம்பர் இருக்கு கேட்கவா?” என்றபடி தொல்பொருள் ஆராய்ச்சி மையத்திற்குள் நுழைந்தான் புகழ்.

“அட அரம்பிச்சிட்டியா காலையிலையே !!!!வேண்டாடா சாமி, ஆள விடு ஏற்கனவே அவருக்கும் எனக்கும் புகையுது… கேஸே இல்லாம டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுவ போல இருக்கு… எனக்கு நிறைய வேலை இருக்கு. இதுல உன் அராத்து வேற தாங்கமுடியாது” என்றபடி அவளது ஆய்வு கூடத்திற்குள் சென்று விட

“ஹா… ஹா…” என்று வாய்விட்டு சிரித்தவன் நேரே தலைமை அதிகாரியயை பார்க்க சென்றான்.

“மே ஐ கம்மின் சார்?”

“எஸ் கம்மின் மிஸ்டர் புகழேந்தி”.

“சாரி சாரி லிட்டில் பிட் லேட் அயம் வெரி சாரி சார்..”

“இட்ஸ் ஒகே மிஸ்டர் நோ பிராப்ளம்…” என்று கூறிய அதிகாரி

“இதை பாருங்க” என்று ஒரு கோவில் வரைபடத்தை காட்டினார் அவனிடம்

அதன் அழகு அவனை பிரம்மிப்பூட்ட என் கனவுல வந்த இடம் ஆனா குகை மட்டும் கொஞ்சம் சேஞ்ச் ஆனா மாதிரி இருக்கு என்று நினைத்தாலும் “வாவ் ரொம்ப அழகா இருக்கு சார்… என்றபடி அதை கையில் வாங்கி பார்த்தவன் “இது இது எந்த இடம் சார்” என்றான் அதை தெரிந்து கொள்ளும் ஆவளில்…

“இது மதுரை பக்கத்தில இருக்க தேவதானம்… இந்த ஊருக்கு இன்னொரு பெயரும் இருக்கு “மாயவனம்” இந்த கோவில் பத்திய ஆராய்ச்சில தான் நீங்களும் உங்க டீமும் இறங்க போறிங்க” என்றார் மூத்த அதிகாரி

அந்த ஊரின் பெயர் அவனை என்னவோ செய்ய காலையில் கண்ட கனவு அவன் அழைக்காமலேயே அவனின் நினைவிற்கு வந்து அவனை அலைகழித்தது . சிலைபோல் அங்கு இருந்தவனை திடுக்கிட வைத்தது புகழேந்தி என்ற மேலதிகாரியின் அழைப்பு

“சார் சொல்லுங்க”

” என்ன ஆச்சி புகழ் ?”

“நத்திங் சார்… இந்த இடத்தை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்”.

“ம் குட்… போய் பாருங்க நமக்கு தேவைப்படும் தகவல் கிடைச்சாலும் கிடைக்கலாம்… ரொம்ப பழைமையான கோவில். இப்போ கேட்பாறற்று ரொம்ப சேதரமாகி இருக்கு. இது இந்து அறநிலையதுறை கீழ் சேர்க்கப்பட்டு அரசாங்கத்தோட நேரடி பார்வையில் செயல்பட இருக்கு சிதிலமடைந்த கோவில் திருப்பணியும் நடக்க இருக்கு. என்றார் கூடுதல் தகவலாக

“ஓ…. ” என்றவன் “ஒகே சார் என்னைக்கு கிளம்பனும்”. என்று கேட்க

“இன்னும் 3 டேஸ்ல கிளம்பனும் புகழ்… எல்லோருக்கும் இன்பார்ம் பண்ணிடுங்க ஆர்டர் உங்க கைக்கு நாளைக்கு வந்து சேரும் ” என்றதும்

“ஒகே சார்” என்று அவரிடம் விடைபெற்றவன்
அறையில் இருந்து வெளியே வந்தான்.

கையில் இருக்கும் வரைபடம், காலையில் கண்ட கனவு, கனவில் வந்த பெண்… இவற்றையெல்லாம் மாற்றி மாற்றி நினைத்தவனின் தலை வலிக்க
இது எதுவும் ஒன்னோட ஒன்னு சம்மந்தபடுத்தி வர்ற மாதிரியே இருக்கு…. திடீர்ன்னு ஏன் இந்த கனவு வரனும் அப்புறம் அந்த பொண்ணு அவ முகம் கூட சரியா நியாபகம் வர மாடங்குது என்று யோசனையுடனே தனது அறைக்கு வந்தவன் அவனுடைய குழு ஆட்களை அழைத்து விவரத்தை கூறி இன்னும் இரண்டு நாட்களில் செல்ல வேண்டும் என்றும் அறிவித்தான்…

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here