மாயவனம் பகுதி 5

0
10

பகுதி 5

“ஹே மேன் வாட்ஸ் கோயிங் ஆன் தெர்….. ட்ஸ் இரிட்டேடிங் மேன்” என்று தலையில் மொட்டையும் மொழு மொழுவென்று மைதாமாவில் பிசைந்த உருவமாய் சராசரி உயரத்தில் இருந்த எல்லீஸ் ஜான் என்ற வெள்ளைகாரர்களில் ஒருவன் கங்காதரனை பார்த்து ஐ டெசிபலில் கத்திக்கொண்டிருந்தான்.

“ஹே… எல்லீஸ் வெய்ட், வெய்ட் காம் டவுன் மேன்…” என்று அவனை அடக்கிய மற்றொரு வெள்ளைகார ஆசாமி கைகளில் இருந்த இறக்கை வைத்த அம்பை குறிபார்த்து வட்டத்தில் எரிந்தான். அது குறி தப்பாமல் வட்டத்தின் மையத்தில் சென்று குத்தி நிற்க தன் ஓட்டை தமிழில் பேச ஆரம்பித்தான் அவன்.

“என்ன மிஸ்டர் கங்காதர்..இன்னும் எவ்வளவு நாள் தான் வைட் பண்றது… இல்ல ஏமாத்தலாம்ன்னு டிரை பண்றிங்களா…என்று கண்கள் இடுங்க கேட்க அவன் கூற்றில் அதிர்ந்த கங்காதரனுக்கு கோபம் வர”

கடுமையான குரலில் “எல்லீஸ் நாங்க தப்பானவங்கதான் ஆனா ஒருமுறை பணத்த வாங்கிட்டோம்னா அவங்களுக்கு நியாமா நடந்துப்போம்” என்று அவரும் முறைப்புடனே கூறினார்.

“நீங்க ஸ்டெப் எடுத்த மாதிரியே தெரியலையே?? உங்களை வேற எப்படி நினைக்கறது கங்காதர்….” என்று சந்தேக தோனியில் கேட்டவன் “உங்கலால முடியலைனா சொல்லுங்க நாங்க மூவ் பண்றோம்” என்றவனின் குரல் அமைதியாக ஒலித்தாலும் அதில் இருந்த அழுத்தம் எதிராளியை அச்சம் கொள்ள வைத்தது.

அவன் நடையும் உடையும் அவனது உருண்டு திரண்டு அஜானுபாகுவான வலுபெற்ற உருவமும் கழுத்து வரை வளர்த்திருந்த முடியும் பார்க்கவே பயங்கரமாக இருட்டில் பிடித்த கொழுக்கட்டை போல் அங்ககாங்கே வீங்கி சுண்டெலி முதல் பெருச்சாளி வரை அவன் உடலில் குடி கொண்டது போல் இருந்தான் ஜான் பேட்ரிக்கா.

“வோய் சுவாமி என்ன இந்த வெள்ளகாரன் இப்படி வள்ளு வள்ளுன்னு விழந்ததும் இல்லமா உங்களையே சந்தேகபடுறானே” என்று ஜோசியர் கங்காதரனின் காதை கடிக்க

அவரை ஒரு பார்வையில் முறைத்தவர் …. “நானே ஏகாப்பட்ட கோபத்துல இருக்கேன்… நீ வேற ஏய்யா எரியுற கொல்லில எண்ணையை ஊத்துற “என்று அவரை அடக்கியவர்.

“ஜான் நீங்க கோபபடுறது எல்லாம் நியாயம் தான்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையில போய் முடிஞ்சிடுது… நான் இல்லன்னு சொல்லல அதுக்குன்னு என்னால முடியாதுன்னு சொல்லிடாதிங்க…” என்றார் அவரின் செயலை புரியவைக்கும் நோக்குடன்.

“அந்த கோவிலை நெருங்கவே முடியல பல பெரும் போராட்டம்… இதுல கவர்மெண்ட் வேற அங்க தோண்ட ஆரம்பிச்சிட்டாங்க…. அவங்க கண்ணுல மண்ணை தூவிதானே நம்ம காரியத்தை சாதிச்சிக்க முடியும்…. இப்போ அங்க நாம எதிர்பார்த்தத விட வேகமா வேலை நடக்க போகுது… இன்னும் ஒரு வாரத்துல பொருள் உங்க கையில இருக்கும்…” என்று நயச்சியமாக பேசி அந்த வெள்ளைகாரனின் மனதை குளிர்விக்க பாடுபட்டுக் கொண்டிருந்தார் கங்காதரன்.

காங்கதரனின் செயல்களை பார்த்தவண்ணம் இருந்த ஜோசியர் ‘ஊர்ல சண்டியர் மாதிரி திரிஞ்ச மனுசனா இது!!!! வெள்ளைகாரனுக்கு அடிமை மாதிரி நின்னு பேசிக்கிட்டு இருக்காரு…’ என்று உள்ளுக்குள் நினைத்தபடி இருக்க ஜோசியரை பார்த்த காங்கதரன் “என்னைய்யா என் மூஞ்சில ஏதாவது எழுதி ஒட்டி இருக்கா????அவனுக்கு ஏதாவது சொல்லி சமாதனபடுத்தியா” என்று அவருக்கு மட்டும் கேட்கும் தோனியில் கூறினார்.

“ஹீ… ஹீ…” என்று இளித்து வைத்தவர் “இதோ பாருங்கோ வெள்ளைக்கார அம்பி… நான் இது வரைக்கும் கணிச்சது எதுவும் பொய்யானது இல்லை.. அப்கோர்ஸ் இப்பவும் ஆகாதுன்னு சொல்லுவேன்…” என்று கூறிககொண்டே கங்காதரன் முகம் பார்க்க ஜோசியரை உஷ்ணபார்வை பார்த்துக்கொண்டிருந்தார் அவர்

“உன் பிராதபத்தை யாரும் கேக்கலயா… உள்ளதை சொல்லு” என்று அவரின் கர்ஜனையில் “அது வந்து…. அது…. அதே போல இதவும் நடக்கும்னு சொல்ல வந்தேன் வோய்…. நீங்க கொஞ்சம் சாந்தமாகனும்” என்று கங்காதரனிடம் வழிந்தவர் “நீங்க வேனா நாளை எண்ணிண்டே இருங்கோ… இன்னும் ஏழே நாள்ல அந்த பொக்கிஷம் உம்ம ரெண்டு பேர் கையில இருக்கும்.” என்று சத்தியம் செய்யாத குறையாக பேசி அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் ஜோசியர்.

“இதோ பாருங்க கங்காதர் இன்னும் 1 வீக்ல இது நடக்கனும் இல்ல அப்புறம் நாங்க எங்களோட பலத்த காட்ட வேண்டி இருக்கும்… பலம்னா என்னன்னு தெரியுமா?” என்று கூறி சிறிது இடைவெளி விட அவரின் முகம் வெளிறிபோய் இருந்தது “மைன்ட் இட்” என்று எச்சரிக்கை போல் கூறினாலும் அதில் இருந்த அழுத்தம் நான் எதையும் செய்வேன் என்று கூறும் அளவில் ஒலித்தது.

“என்னவோய் இப்படி வறுத்து எடுக்குறான்…!!! என்னவோ செய்வேன்னு மிரட்டுறான் என்ன செய்வானோ??” என்று கேள்வி கேட்டுக்கொண்டே வர

“யோவ் கொஞ்சம் சும்மா இரு” என்று கூறி வெளியே இழுத்து வந்தவர்

“பின்ன காசு கொடுத்தவனாச்சே… அதும் பாரின் கரண்சி கொடுத்தவன் சும்மா இருப்பானா?!?!… இப்படி போட்டு உளுக்கு உளுக்குன்னு உளுக்கதான் செய்வான்… எப்படியாவது பொருளை எடுத்து அவனுங்க கையில கொடுத்தடனும்”. என்றபடி காரில் மதுரையை நோக்கி பயணமாயினர் இருவரும்.

…..………….…………….………………………………………………

இருமருங்கிலும் ஓங்கி உயர்ந்த மரங்கள், சுற்றிலும் இயற்க்கை அன்னை பசுமைமை வாரி இறைத்தார் போலும் எங்கிலும் பச்சை கம்பளம் போர்த்தியது போன்ற வயல்வெளியில் மேல் மோதிய காற்றிலிருந்து வரும் சலசலவென ஓசையிலும் , இரவின் நிசப்த்தத்தில் சுவர்கோழியின் இறைச்சல் கூட கொஞ்சம் பயம்கொள்ளத்தான் வைத்தது, காரில் பரவிய ஏசியையும் விட குளிர்ந்த தென்றலாய் வருடிய இயற்கை காற்றை சுவாசிக்க ஆவளாய் வண்டியின் கண்ணாடியை திறந்து பயணித்த வேங்குழலியும் ஈஷ்வரபாண்டியனும் இருந்த கார் தேவதனத்தை நோக்கி பயணப்பட ஊர் பெரியவர் சர்வேஷ்வரனின் விஸ்தாரமான வீட்டின் முன்னே நின்றது.

வீட்டின் பண்ணையாள் முத்து இவர்களை கண்டதும் முதல் ஆளாய் ஆவளாய் ஓடிவந்தவன் “பெரியத்தா சின்னைய்யா வந்து இருக்காங்க” என்று வீட்ற்குள் அறிவித்தபடியே அவர்களிடம் வந்தவன் “வாங்க சின்னைய்யா வாங்க” என்று அழைக்க அதற்கு மெல்லியதாய் சிரித்த ஈஸ்வரபாணிடியை பார்த்த முத்து “சினைய்யா நம்ம பாப்பா வரலியாங்க?” என்று கேட்டபடியே பெட்டியை வண்டியில் இருந்து எடுக்க போனான். கார் கதவை திறந்தபடியே “நானும் வந்து இருக்கேன் முத்து” குதுகலமாக கூறியபடியே காரில் இருந்து இறங்கினாள் வேங்குழலி.

“என்ன முத்து எப்படி இருக்க?” என்ற ஈஸ்வரபாண்டியனுக்கு பதிலலித்தபடியே அவர்களின் உடமையை எடுத்து வந்தவன் வீட்டிற்குள் சென்றான்.

ஐய்யா பாண்டி ராசா வந்துட்டியா…. எங்க வாரமயே இருந்திடுவியோன்னு பார்த்தேன்யா…. என்னதான் கோபதாபம் இருந்தாலும் இந்தா இருக்க அத்தாவ ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போக கூடாதய்யா…. வயசான காலத்துல காடு வா வான்னுது வீடு போ போன்னுது… உங்களையெல்லாம் கண்ணாற பாத்துட்டா இந்த கட்ட போகும்போது நிம்மதியா போகும்யா… என்று புலம்பியபடியே 70 வயது பிற்பாதியில் இருந்த பொன்னுதாயி பாட்டி மகனிடம் தன் மனகுமுறல்களை வைக்க

“எனக்கு மட்டும் உன்னை பார்க்கனும்னு ஆசை இல்லையா ஆத்தா… என் நேரம் என்னை சோதிக்குது இப்போதான் நானே வந்துட்டனே… என்று அவரை சமதானம் செய்தவர் நான் எங்கிருந்தாலும் உங்களையெல்லாம் மறப்பேனா தினமும் போன் பண்ணிகிட்டுதானே இருக்கேன்… யார் எப்படியோ நான் என் மனசுல இருந்து கசப்பு எல்லாத்தையும் அழிச்சிட்டேன்… நான் இப்போ எதையும் நினைக்கும் நிலையிலும் இல்ல ஆத்தா…. அதை விடு நீ எப்படி இருக்க ஆத்தா” என்று கேட்படியே அவரின் கைபிடித்தபடியே உள்ளே அழைத்து வந்தார் ஈஸ்வரபாண்டியன்.

“என்ன அப்பத்தா பிள்ளைய பார்த்தவுடனே ஓல்டு மெமரிஸா??? எனக்கு இப்பவே கண்ணுகட்டுது அதையெல்லாம் விடுங்க… சரி உங்க கண்ணுக்கு உங்க மகன் மட்டும் தான் தெரியுதா?? கூடவே ஒருத்தி குத்துக்கல்லு மாதிரி நிக்கிறேன் பேச்சிக்கூட வான்னு சொல்லாம… எல் கே ஜி பையன் கைய்ய புடிச்சி இழுத்துட்டு போறா மாதிரி போறிங்க உங்கபாட்டுக்கு” என்று அவரை வாரியபடி அவருக்கு முன்னே சென்றாள் வேங்குழலி.

‘ஹா… ஹா…” என்று அவள் பேச்சில் சிரித்தவர் “பேச்சில என் மருமகளுக்கு சலச்சவ இல்லைன்னு நிருபிச்சிட்ட கண்ணு..” என்று அவரை ஊச்சி முத்தம் இட்டு பக்கத்தில் அமர வைத்தவர் “உன் ஆத்தா கூட இதே போலதான் கண்ணு என் கூட மல்லுக்கு மல்லு நிப்பா ஆனா எம்மேல அம்புட்டு பாசம் வைச்சிருக்காவ” என்று மருமகளின் நினைவில் பேத்தியை பார்த்தவர் “இப்போ எப்படி இருக்கா ராசா.. அவளை அழைச்சிட்டு வரலியா” என்று கேட்டபடியே உள்ளே வேலையாய் இருந்த தன் பெரியமருமகளை அழைக்க

“அடடே வாங்க கொழுந்தனாரே வாங்க இந்த ஊரு பக்கமே வராம இருந்துடிங்களே…. என் தங்கச்சி அலமேலு எப்படி இருக்காவ” என்றவர் வேங்குழலியை கண்டதும் “என் கண்ணு எம்புட்டு பெரியபுள்ளையா வளந்துருச்சி இந்த பெரியாத்தாவ நியாபமிருக்கா தாயி” என்று அனைத்துக்கொண்டார்.

“உங்களை மறப்பேனா பெரியம்மா” என்று அவளும் அவரை அனைத்துக்கொண்டாள்.

“வேதனையுடன் சிறு புன்னகையை சிந்தியவர் நால்லா இருக்கேன் மதனி… என்னோட தொழில் அப்படி எப்போட அடிச்சி பிடிச்சி பின்னுக்கு தள்ளளாம்ன்னு காத்துக்கிட்டு இருக்கானுங்க… அதான் என்னால எங்கேயும் வரமுடியல மதனி” என்றவர் தாயிக்கும் அண்ணிக்கும் சேர்த்து பதிலளிக்க துவங்கினார். என்ன சொல்ல ஆத்தா ஒன்னும் புரியல… அவளுக்கு ஒன்னு போனா ஒன்னு வருது …” என்று வேதனைமுகமாக கூற

“என்னய்யா பாண்டி என்ன ஆச்சி எம் மருமவளுக்கு” என்று பதற அதற்குள் சர்வேஷ்வரனும் வீட்டிற்கு வந்துவிட்டார். உள்ளே வரும்போதே தம்பி வந்திருப்பதை முத்துவின் மூலம் அறிந்துகொண்டவர் தம்பி மகளை பார்த்ததும் அவரின் மேல் உள்ள வருத்தம் எங்கோ பறந்து கண்காணமல் போய்விட “ஏ… மரகதம் எம் புள்ள வந்துருக்கா அவளுக்கு ஏதாச்சும் சாப்பிட கொடுத்தையா” எனறு குரல் கொடுத்தபடியே மகளின் அருகில் சென்றவர் அவளை எப்படி தாயி இருக்க என்றார் சர்வேஷ்வரன்.

அண்ணன் சர்வேஷ்வரன் வரும் அரவம் கேட்டு அவர் பேசமாட்டாரா என்று அவர் முகத்தையே பதைபதைப்புடன் பார்த்திருக்க சர்வேஷ்வரன் விஸ்வத்தின் முகத்தை கூட பார்க்கவில்லை.

பெரியவரை பார்த்ததும் தாவி அணைத்துக்கொண்டவள் “போங்க பெரியப்பா உங்க கிட்ட நான் பேச மாட்டேன்.. உங்களுக்கும் அப்பாக்கும் கோபம் நா நான் என்ன செஞ்சேன் என்னை ஏன் யாருமே வந்து பாக்கவே இல்ல” என்று சிறுபிள்ளையாய் கொஞ்ச

“எம் புள்ளைக்கு என் மேல எம்புட்டு கோபம் வருது… என்று அவள் கோபத்தையும் ரசித்தவர் தம்பியை விடுத்து மகளிடமே பேசினார் “தாயி உன்ற அம்மா அதான் என் அத்த மவ எப்படி இருக்கா பாத்து பல வருசமாச்சே” என்று கேட்க

“அம்மா … அம்மா ஆஸ்பிட்டல்ல இருக்காங்க பெரியப்பா” என்று திக்கி திணற அனைவருக்குமே அதிர்ச்சி

‘என்னைய்யா ஆச்சி எம் மருமவளுக்கு என்று பெரியாத்தா ஈஸ்வரபாண்டியை பார்க்க அவர் அனைவரையும் பார்த்திருந்தார்.

“கொஞ்ச நாளவே அவ முகம் சரியில்ல…ஆத்தா அப்பப்போ எதையோ நினைச்சி தனியா உட்காந்துகிட்டு இருப்பா… நானா போய் கேட்டாலும் ஒன்னுமில்லைன்னு என்னை கடந்து போய்டுவா… ஆனா அவ கண்ணுல ஜீவனே இருக்காது ஒரு நாள் மயக்கம் போட்டு விழுந்தவ தான் ஆஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு ஓடினேன்… அவளுக்கு பிரலிக் அட்டக் வந்து இருக்குன்னு சொல்லிட்டாங்க அவளால சரியா பேசவோ எழுந்து நடக்கவோ முடியாது… ஒரு பக்கம் உடலுருப்பு பூறா செயலிழந்து போயிருக்குன்னு சொல்றாங்க…. என்னும் போதே குலுங்கி அழ ஆரம்பித்தார் ஈஸ்வரபாண்டி. மேலும் அவரே தொடர்ந்தார். நானும் எவ்வளவோ மருத்துவம் பார்த்துட்டேன் ஆத்தா உடம்புக்குதானே மருந்தே தவிர அவ மனசுக்குள்ள இருக்கரத்துக்கு மருந்து தேட முடியல… இந்த மாயவனத்தம்மனாவது என் மனக்குறைய தீர்த்து என் அலமேலுவ என்கிட்ட நல்லபடியா திருப்பி தராதான்னுதான் அவகிட்ட வேண்டிகிட்டு அவ காலடியில விழ வந்தேன்” என்று முடிக்கவும்

அதுவரை மகன் கூறுவதை கேட்டபடியிருந்த பெரியாத்தா மருமகளின் நிலை எண்ணி கண்ணீர் வடிக்க மகன் அழுவதை தாங்கி கொள்ள முடியாமல் அய்யா பாண்டி அழுவாதையா எம் மருமவளுக்கு ஒன்னும் ஆகாது அந்தா ஆத்தா துணையிருக்கா என்று கூறி ஏய் பெரியவனே சர்வம் பாத்துக்கிட்டே இருக்கியே உந்தம்பிய சமாதனப்படுத்துயா நாலு நல்ல வார்த்த சொல்லி தம்பிய தேத்து ராசா என்று கேட்க

இதுவரை தம்பியிடம் பேசாத இருந்த சர்வேஷ்வரன் கூட தம்பியின் கண்ணீரில் கரைந்துபோய் பேச்சிழந்து இருக்க அவரே மேச ஆரம்பித்தார். பாண்டி நீ தைரியமா இருக்கனும்யா…. நம்ம அலமேலுக்கு ஒன்னும் ஆகாது அவ நல்லபடியா குணமாகி பூரண ஆயிலோட இன்னும் கொஞ்ச நால்ல எழுந்துடுவா பாரு… அவ மனசு என்ன இருந்து அடிச்சிக்குதுன்னு நமக்கு தெரிய வரும் யா… நாம சரி பண்ணலாம்.. அதை நினைச்சி நிம்மதியா இரு”. என்று கூறவும் அண்ணனின் பேச்சில் உள்ளம் நெகிழ்ந்தவர் அவரின் கைபிடித்து கொண்டு “என் மேல கோபம் இருந்தா என்னை மன்னிச்சிடுங்க அண்ணா நான் தப்பு பண்ணிட்டேன் அதை நான் நல்லா உணரவும் செஞ்சிட்டேன்” என்று கூறி கண்கலங்க

என்ன பாண்டி இந்த நேரத்துல என்ன பேசுறலே… எனக்கு உன் மேல கோபம் இல்லையா வருத்தம் தான்… அதுவும் என் புள்ளையா கமிச்சதுல அதுவும் இல்லமா போயிடுச்சியா” என்றவர் மேலும் தோண்டி துருவாமல் குழலியை பார்க்க அவளும் கண்களை கசக்கியபடியே இருக்க எம்மவ கண்கலங்குறா பாரு நீ பயப்புடுறா மாதிரி எதுவும் நடக்காது யா… நீ மனச போட்டு குழப்பி ,எம்மவளையும் அழ விடாத” என்றவர் “மரகதம் புள்ளைய கூட்டிட்டு போய் சாப்பிட கொடு அப்படியே எங்களுக்கும் எடுத்து வை” என்று அனுப்பி வைத்து தம்பியிடம் சகஜமாக பேச ஆரம்பித்தார்.
………………………………………………………..…..…………….…

“என்னடா இன்னும் தூங்கலையா?” என்றபடி ஶ்ரீ புகழின் அறைக்குள் பிரவேசிக்க டார்ச் லைட்டின் பேட்டரியை ஆராய்ந்தபடி அதை டேபிள் மேல் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தான் புகழ்.

“இப்போதானே டா டின்னர் முடிச்சேன்.. நான் தூங்க இன்னும் நேரம் ஆகும். சரி நீ இந்நேரம் இலியானா இல்ல நயன்தாரா கூட டூயட்ல இருப்பியேன்னு நினைச்சிட்டு இருந்தா இங்க வந்து நிக்கிற” என்றான் புகழ் ஆச்சர்யபாவத்துடன்.

“போடா ரொம்பதான் ஓட்டுற என்றபடி சிறிது வழிந்தவன்… கனவுல டூயட் பாடி என்ன பண்றது மச்சி… நமக்கு யோகம் ஒன்னு வேனுமே எனக்குதான் ஏழரை கூடவே வந்து நிக்குதே…” என்று கடுப்பாய் கூற

அவனை ஒருமாதிரி பார்த்துக்கொண்டு அடுத்த பொருளை கையில் எடுத்துக்கொண்டே உனக்கா மச்சி அப்படி என்னடா ஏழரை வந்து நிக்குது” என்றான் புகழ்.

“மச்சி என் மாமா பொண்ணு ரேவதி இருக்கால இந்த வருஷம் அவ படிப்பு முடியுது… நானும் வீட்டுல அந்த மனுஷகிட்ட கல்யாண விஷயத்தை பேசுவாங்க பேசுவாங்கன்னு பார்த்த… என் மாமாங்காரன் திடீர்ன்னு என் தலைல கல்லை தூக்கி போடுறா மாதிரி அவளை மேல படிக்க வைக்க பாரின் அனுப்ப போறேன்னு ஒரு அனுகுண்டை தூக்கி போட்டுடாருடா… அவளே என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா கூட, இவரு விடமாட்டாரு போல டா!!! எனக்குன்னு வந்து அமையுது பாரு” என்று பரிதாபமாய் கூற

“ஹா… ஹா…. “என்று வாய்விட்டு நகைத்தான் புகழ்.

அவனை கடுப்பாய் பார்த்தவன் “என் பாடு உனக்கு சிரிப்பா இருக்கா என்று முறைத்துக்கொண்டு கேட்டவன் டேய் என் கல்யாணம் நடக்க ஏதாவது ஒரு ஐடியா கொடுடா” என்றான் பாவமாய்

“ஐடியாவா!! நானா!!! என்று யோசித்தவன் இந்த பொண்ண தரலனா என்ன உங்க இன்னோரு மாமா பொண்ணு இருக்குல அவங்க பேரு ம்… ரியா அவளை கல்யாணம் பண்ணிக்க கேக்கலாம் ல” என்றான்

“புகழ் கூறவும் அவனை ஒரு உஷ்ணபார்வை பார்த்த ஶ்ரீ அதுக்கு எனக்கு காலம் பூற கல்யாணம் ஆகம பிரம்மச்சாரி யாவே இருக்கலாம் உன்கிட்ட போய் கேட்க வந்தேன் பாரு என்ன எதால அடிச்சிகிரதுன்னே தெரியல” என்று புலம்ப

“ரொம்ப தேடாத டா … வாசல்ல தான் இருக்கும் எடுத்துட்டு வரவா” என்று கேட்க

“உன்னை என்றவன் வெறுப்பு ஏத்தறிங்க ல எல்லாரும் எனக்கும் ஒரு காலம் வரும் டா அப்போ வைச்சிக்கிறேன் உனக்கு குட் நைட்” என்று கூறிவிட்டு விறு விறு என புறப்பட்டு வெள்யே சென்றான். ‘அப்பாட போயிட்டான்… டைம் வேற ஆகுது இன்னும் எடுக்க வேண்டிய பொருளையெல்லாம் எடுத்து வைச்சிடனும் அப்புறம் எதையும் தேடுறாமாதிரி இருக்க கூடாது’ என்று தனக்கு தானே பேசியபடி அனைத்தையும் எடுத்து வைத்து பௌர்ணமி இரவில் மாயவனத்தம்மன் செய்யும் பூஜையை காண ஆயத்தமாகி கொண்டிருந்தான் புகழ்

……………………………..……………………………………………..

“அடடே வாங்க வாங்க வாத்தியாரே என்ன இந்த பக்கம் என்று பழத்தபழும் போல் நெற்றியில் பட்டையாய் விபூதியும் கையிலும் கழுத்திலும் உத்திரச்சமும் தீட்சண்யமான முகமும் 50 வயதிலும் கட்டுக்கோப்பான உடலுடனும் காவி வேட்டியும் அங்கவஸ்திரமுமாக இருந்த நல்லசிவம் வரவேற்றார்.

“எப்படி விவரிக்கரதுன்னே தெரியல ரொம்ப சந்தோஷம் ஐய்யா என்னை நியாபகம் வைச்சி இருந்ததுக்கு” என்று இரு கரம் கூப்பி வணங்கிணார் விஷ்வாநதன்

“வாத்தியரைய்யா ஒரு சிலரோட முகத்தையும் அவங்க நல்ல பண்பையும நாம எவ்வளவு நாள் ஆனாலும் மறக்கமுடியாதுங்க.. அதுல நீங்களும் ஒருவர்” என்றதோடு “அய்யா என்ன காரணமா வந்து இருக்கிங்கன்னு தெரிஞ்சிக்கலாம” என்று கேட்கவும்.

“பையில் இருந்த புத்தகத்தல எடுத்தவர் இதுல என் பேரனோட பிறந்த தேதியும் அவன் ஜாதகமும் இருக்கு இந்த வருஷத்துல கல்யாணம் பண்ணலான்னு இருக்கேன் பையன் பிடிகொடுக்க மாட்டேன்றான் அதான் ஒரு எட்டு பார்த்துட்டு போலம்னு வந்தேன்” என்று கூறி புத்தகத்தை நீட்டினார்.

“அதற்கென்ன தரளமா பாரத்திடலாம் அய்யா”என்ற மகிழ்ச்சியாய் புத்தகத்தை திறக்க அவர் கண்களுக்கு மட்டும் பொக்கிஷத்துடன் மூன்று அடி கௌரி அம்மன் சிலை அவன் கைகளில் தம்பதி சமேதராய் தெரிய ஒரு முறை கையில் இருந்த நாட்குறிப்பை அப்படியே கிழே வைத்துவிட்டு அதை இரு கைகளாலும் தொட்டு கும்பிட்டார். இதை பார்த்திருந்த விஷ்வநாதனுக்கு ஒன்றும் புரியாமல் அவரையே அதிர்ச்சி விலாகமல் பார்ததபடி இருந்தார்.

“அய்யா இது உங்க பேரனோடதுதானா!?” என்றதும் தான் சுயத்திற்கு வந்தார் விஷ்வநாதன்.

“ஆமா இது அவனோடதுதான் இதுல ஏதாவது குழப்பமா?? என்னன்னு சொல்லிடுங்க ரொம்ப பதட்டமாகவும், பயமாகவும் இருக்கு என் பேரனுக்கு ஒன்னும் இல்லையே அவனுக்கு ஒரு ஆபத்தும் இல்லலயே” என்று கேட்க

“அய்யா உங்க பேரனுக்கு ஒன்னும் இல்லை அவனுக்கு மலை போல ஆபத்து வந்தாலும் அது பனிமோல விலகி போய்விடும் அவன் ஜாதக ரகசியமே தெய்வீக பொக்கிஷத்தை வெளியே எடுத்து வருவதுதான்… அந்த அம்மனோட அருள் பரிபூரணமாய் நிறைஞ்சி இருக்கு… இப்போ உங்க பேரன் உங்க கூட இல்லை தானே இது உண்மையா என்று அவரிடம் கேட்கவும் ஆம் என்று தலை ஆசைத்தார் விஷ்வநாதன்… ம் தெரியுது கட்டங்கள் சொல்லுது ஆனா என்று தயங்கியவர் உங்க பேரனோட ஜாதகத்துல எந்த அளவு தெய்வத்தோட அருள் நிறைஞ்சி இருக்கோ அதே அளவு அவனை சூழ்ச்சிகளோட மாயவலையில சிக்கவைக்கவும் பாத்துக்கிட்டு இருக்காங்க” என்றதும் திடுக்கிட்டு விழித்தார் விஷ்வநாதன்.
………………………….…………………………………………..…

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here