மாயவனம் 3

0
31

பகுதி 3

அதிர்ந்து நின்றவனின் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் அணிவகுத்து நிற்க கேள்விக்கான விடைதெரியாமல் இரவு முழுவதும் நித்திரையில்லாமல் தத்தளித்து விடியலின் போது நித்திரா தேவி அவனை தழுவிக்கொள்ள கண் அயர்ந்தான் புகழ்….

மூடி இருந்த கதவுகளையும் கடந்து ஜன்னல் கம்பிகளின் இடுக்கில் நுழைந்த பூக்களின் நருமணம் நாசியை துளைத்து மணந்து கொண்டிருக்க பறவைகளின் சத்தம் காதுகளில் ரீங்கரமாய் ஒலிக்க தென்றலின் இனிமையும் காலை கதிரவனின் இதமான வெப்பமும் மனதை கொள்ளையடிக்க அழகாய் விடிந்தது காலை பொழுது. இதன் சுவடுகள் எதுவும் அவன் தூக்கத்தை கலைப்பதாக தெரியவில்லை விடியலின் போது உறங்கிய புகழின் தூக்கத்தை கதவை தட்டும் ஓசைதான் கலைத்தது.

“ஐயா…. ஐயா…. இருக்கிங்களா ஐயா…. ” என்று கதவை தட்டிக்கொண்டிருந்தான் வேலையாள் முத்து

தலையனையில் முகத்தை புதைத்தபடி “யாரு ?” என்று அறையிலிருந்து சத்தம் கொடுத்து மறுபடி தலையனையில் முகத்தை மறைத்துக் கொண்டு படுத்துக்கொண்டான் புகழ்

“ஐயா… நாந்தானுங்க முத்து பெரிய ஐய்யாவூட்டு வேலையாலுங்க” என்று அவனை அறிமுகம் செய்து கொண்டான்

“ஓ…. ஓகே ஓகே… வைட் முத்து… இதோ வரேன் ” என்றவன் கண்களை கசக்கிக்கொண்டே மெத்தையை விட்டு எழுந்து போய் கதவை திறந்தான்.

கையில் பிளாஸ்கில் காபியுடன் வந்து நின்றிருந்த முத்துவைக் கண்ட புகழ் கையில் தலையை கோதியபடி வா வா.. முத்து என்றிட

“ஏனுங்க ஐயா நல்ல உறக்கமா? ” என்றபடி காபியை ஊற்றி கொடுக்க மணியை பார்த்தவன் “சே என்னையும் அறியாம தூங்கிட்டேன்” என்று மனதோடு பேசியபடியே இரவில் நடந்ததை நினைத்து பார்த்து ” இந்த வீட்ல எலி தொல்லை தான் ரொம்ப அதிகம் முத்து தூங்கவே விடல ” என்றபடி காபியை ஒரு மிடறு விழுங்கினான்.

புகழை ஒரு மாதிரி பார்த்த முத்து சிரித்தபடியே “என்னங்கைய்யா சோக்கடிக்கிரிங்க இந்த ஊர்ல எலியா ? ” என்றபடி சிரிக்க

“இதுல என்ன முத்து ஜோக்கு இருக்கு ? ” என்று புரியாமல் கேட்க

“இந்த வீட்ல மட்டும் இல்லைங்க இந்த ஊர்லயே எலிங்க இல்லைய்யா” என்றான் முத்து

“ஆச்சரியமா இருக்கு முத்து உண்மையாவ இந்த ஊர்ல எலிங்களே இல்லையா…? அப்போ நைட்லாம் எல்லா பொருளையும் போட்டு உருட்டுச்சே ” என்று காலி கோப்பையை அவனிடம் நீட்டினான்.

“எங்க பாட்டான் பூட்டன் காலத்துலயே எலிங்க இல்லையாம் அய்யா .. அதுக்கு எங்க ஐயன் ஒரு கதை கூட சொல்லுவாருங்க ” என்று கூற அந்த கதையை கேட்க்கும் அவளுடன் நின்றிருந்தான் புகழ் .

“இந்த ஊருல இருக்க கோவில வானத்துல இருக்க தேவர்களாம் சேர்ந்து அந்த கௌரி அம்மாக்கு கட்டினாங்களாம் ” என்று கூறிக்கொண்டே வர

“ஸ்டாப் ஸ்டாப் இதுல அந்த எலி கதையே வரலியே நீ கோவிலையும் ஊரையும் தான் டிஸ்கிரைப் பண்ணிட்டு இருக்க” என்று அவனை இடைவெட்டி நிறுத்த

“அதுங்க அய்யா…. இதுல சொன்னாதானே உங்களுக்கு புரியும் ” என்று கூற

“பஸ்ட் எலி கதைக்கு வா ” என்று கூற

” தேவதானத்துல இருந்து வடக்கால இருக்க காட்டுக்குல்ல மாயவனத்தம்மன் குடி கொண்டிருக்கா… அவ பேர் மட்டும் மாயம் இல்ல அவளும் மாயக்காரி தான் . பாம்பு தலையும் மனித உடலையும் கொண்டு இருக்கவ… ஒவ்வொரு பௌர்ணமி அன்னைக்கும் பாம்பு ரூபத்துல வந்து கௌரியம்மன் கோவில்ல நிலா வெளிச்சத்துல பால் அபிஷேகம் பண்ணிட்டு போவா எப்பவும் இந்த ஊரை சுத்தியே திருஞ்சிட்டு இருக்கரதனால இந்த இடத்துல இதுவரையும் எலியே இல்லை” என்று நீண்டதொரு விளக்கம் கொடுக்க

“ஹா… ஹா…. இட்ஸ் ஹம்பக் யாரை ஏமத்த டிரை பண்ற பாம்பு பௌர்ணமிக்கு பௌர்ணமி வந்து பால் அபிஷேகம் பண்ணுமா? அதுக்கு பௌர்ணமி அமாவாசை எப்ப வருதுன்னு தெரியுமா?!?!…என்று சிரித்தவன் இதுல ஒன்னே ஒன்னு நம்பறா மாதிரி இருக்குன்னா அது என்ன தெரியுமா பாம்பு ஊருக்குல்ல திரியறுதுனால எலிக்கு தன்னை பாம்பு சாப்பிடுமுன்னு இந்த ஊர்ல இருப்பதில்லை” என்று சிரித்தான் புகழ்.

“அப்படி சொல்லிட முடியாது இல்லிங்க தம்பி ” என்று ஒரு குரல் கேட்கவும் இருவரும் திரும்பி பார்க்க ஊர் பெரியவர் சர்வேஷ்வரன் நின்றிருந்தார்…” இது உண்மையோ இல்லை பொய்யோ எங்களோட முன்னோர் காலம் காலமா நம்பர விஷயம் அதை நாங்க உங்கள மாதிரி ஆராய்ச்சி செய்து பார்க்க முடியாது தம்பி இந்த கிராமத்துல இருக்க ஒவ்வொருத்தரும் இதை நம்புறாங்க நானும் நம்புறேன். இது நாள் வரைக்கும் பௌர்ணமி அன்னைக்கு இராத்திரி யாரும் வீட்டை விட்டு வெளியே வரமாட்டாங்க இதை நீங்க மூடபழக்க வழக்கமாக கூட எடுத்துக்கலாம் தம்பி என்றவர் இந்த கிராமத்துக்குன்னு சில கட்டுபாடுகள் இருக்கு என்று அதையும் நாங்க மதிக்கிறோம் இதுநாள் வரையிலும் பாதுக்கிறோம்” என்று சற்று அழுத்தமாக கூற.

“ஹா…. ஹா…. நீங்க ஆராய்ச்சி பண்ணாமல் இருக்கலாம் சார் ஆனா நான் கண்டிப்ப பண்ணிதான் ஆகனும் அதுதான் என்னோட வேலையும் கூட” என்று அவருக்கு பதில் அளித்தான் புகழ்.

“எதுனாலும் பண்ணுங்க தம்பி…. ஆனா எங்க நம்பிக்கை மேல மட்டும் கைய வைச்சிடாதிங்க” என்று சிரித்தவர்

“முத்து காலை பலகாரம் ஆயிடுச்சா மத்த அதிகாரிகளுக்கு எல்லாம் கொடுத்தாச்சா போ… போய் தம்பிக்கும் எடுத்து வை அரசங்க அதிகாரி அவங்களலெல்லாம் காக்க வைக்கக் கூடாது” என்றார் அதிகார தோணியில் .

“இதோ போறேனுங்க அய்யா என்ற முத்து அந்த இடத்தில் இருந்து அகன்று செல்ல அவன் போவதையே பார்த்துக்கொண்டு இருந்த புகழின் கவனத்தை தன்பக்கம் திசை திருப்பியவர் என்னங்க தம்பி இடமெல்லாம் எப்படி சவுரியப்படுறாப் போல இருக்கா… ஏதாவது குறைன்னா சொல்லுங்க தம்பி செஞ்சிபுடலாம் “என்று விசாரித்தார்.

“அது எல்லாம் பிராப்லம் இல்ல சார் சவுரியமாதான் இருக்கு பட் இங்க போன் பண்ணதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு சிக்னல் ரொம்ப வீக்கா இருக்கு இங்க லேன்ட் லைன் எங்க இருக்கு ” என்று கேட்க

“போன் நம்ம வீட்டுல இருக்கு தம்பி வாங்க அங்க வந்து போன் பண்ணிக்குங்க” என்றவர் ” இங்க அவ்வளவா சிக்னல் கிடைக்காது இங்கிருந்து எதுனாலும் மதுரை டவுனுக்குதான் போகனும் ” என்று கூறியவர் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுவிட்டார்.

“அவனவன் செல்போன் விக்கும்போது எல்லா ஊர்லயும் சிக்கனல் இருக்கும் நெட்கிடைக்கும்னு சொல்றாங்க போன்ல சுத்தமா ஒரு பாய்ண்ட் கூட காட்டமாட்டங்குது ” என்று தனக்குதானே பேசியவன் “ஈவினிங் அவர் வீட்டுக்கு போய் தாத்தாக்கு போன் பண்ணும்” என்று எண்ணியபடி கோவிலுக்கு செல்ல தயாரானான்.
………………………………….…………………………….……..…

கௌரி அம்மன் ஆலயம்

நேற்றிலிருந்து புகழ் இங்கு ஆய்வு மேற்கொண்டு இருந்தாலும் இந்த ஆலயத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஏதோ ஒரு சிலிர்ப்பு அவன் உள்ளுக்குள் ஓடுவதை உணர்ந்து கொண்டு தான் இருந்தான் ஆனால் மூளை தான் நம்ப மறுத்தது.

“ஹேய் புகழ் அந்த இடம் பார்த்தியா கொஞ்சம் விசித்திரமா இல்ல” என்று ஶ்ரீதரன் புகழை அழைக்க

தன்னுடை பிரஷை வைத்து கோவில் சிலைகளின் அமைப்பை ஆராய்ந்த வண்ணம் இருந்த புகழ் ஶ்ரீதரன் கூறியதில் அவனை பார்த்தான்.

“எந்த இடம்டா என்று அருகில் சென்று பார்த்தவன் அம்மன் சன்னிதிக்கும் சிவபெருமான் சந்நநிதிக்கும் இடையில் இருந்த சுவர் பகுதியில் நட்சத்திர அமைப்பு குறியீட்டை காண்பித்து கொண்டிருக்க… ஒரு நிமிடம் தரையில் சிறுவிரிசல் விடுவதை போல் சிறு பிளவு ஏற்பட்டு அது பெரிய பிளவாகி கால் இடறி டேய் ஶ்ரீ… ஶ்ரீ… என்று புகழ் மேலிருந்து கத்திக்கொண்டே அதள பாதளத்தில் விழுந்து விடுவது போல் அவனுக்கு தோன்ற அடுத்தாக அவன் “அம்மா …. அம்மா… ” என்னும் பெயரை அழைத்துக்கொண்டே சுவர் ஓரம் சாய்ந்தான்.

பக்கத்தில் இருந்த ஶ்ரீதரன் “டேய் புகழ் புகழ் என்னடா என்ன ஆச்சி நல்லாதானே இருந்த திடீர்ன்னு என்னடா என்னென்னமோ உளர்ற என்றவன் மைதிலி மேடம் சாகர் இங்க வாங்க” என்று ஆளுக்கு ஒரு திக்கில் வேலை பார்த்தபடி இருந்தவர்களை அழைக்க அப்போதுதான் தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல “டேய் ஶ்ரீ எனக்கு ஒன்னும் ஆகலையே இந்த பூமி பிளந்துடுச்சிடா ஏதோ உள்ள இருந்து வெளிச்சமா வெளியே வர டிரை பண்றமாதிரி இருந்துச்சிடா நானும் உள்ள விழுந்துட்டேன் ” என்று வெட்டி வெட்டி கூற ஒன்றும் புரியாமல் இருந்தது ஶ்ரீதரனுக்கு.

“ரிலாக்ஸ், ரிலாக்ஸ்…. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க புகழ் காலைல இருந்து நாம இங்கயே சுத்திட்டு இருக்கோம்ல அதோட எஃபெக்ட்டா இருக்காலாம் டோன்ட் வொரி இந்த இப்போதான் முத்து வந்து கொடுத்துட்டு போனான் இந்தா மோர் குடி” என்று மோர்குவளையை புகழிடம் கொடுத்தான் ஶ்ரீதரன்.

அவன் கொடுத்த மோரை ஒரே மூச்சில் குடித்தவன் ஏன் இதுபோல அமானுஷ்யமா எல்லாம் நடக்குது எனக்கு ஒன்னும் புரியல என்னோட இமெஜின் னா இதெல்லாம் என்று யோசித்தபடி அமர்ந்திருக்க “புகழ் நீ கொஞ்ச நேரம் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு நாங்க இன்னைக்கு இருக்க வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்துறோம் ” என்று ஶ்ரீ அவனிடம் கூற

“இல்ல ஶ்ரீ எனக்கு ஒன்னும் இல்ல ஏதோ கொஞ்சம் கன்ஃபூயூஸ் ஆகிட்டேன் இப்போ அயம் ஆல்ரைட் வா அந்த இடத்தை பார்க்கனும் ” என்று எழுந்து அதன் அருகில் சென்று அதை தொட்டு பார்க்க அவன் தொட்ட இடத்தில் நட்சத்திர குறியீடு பிரகாசமாய் மின்னியது போல் தென்பட அவன் கையில் கிடைத்த நட்சத்திரமும் இதுவும் ஒரே போல இருப்பதை அப்போதுதான் உணர்ந்தான்.

……………………………….…………………………………………….

“என்ன ஜோசியரே இன்னும் என்னத்தை குறிச்சிட்டு இருக்கிங்க… அவன் வந்து அங்க தோண்டவே ஆரம்பிச்சிட்டான் அவன் கையில எதுவும் கிடைக்க கூடாது அப்படி கிடைத்தாலும் அதை எப்பாடுப்பட்டாவது நாம அதை அடிச்சிடனும் அந்த ஆஸ்திரேலியாகாரனுங்க வேற ரொம்ப கார்னர் பண்றானுங்க” என்று அதிகார குரலில் பேசியபடி கங்காதரன் தன் எதிரில் இருந்த காவி உடையும் தங்க சங்கிலியில் ருத்திராட்சமும் கைகளிலும் விரல்களிலும் தங்கத்தில் பளபளக்க பணக்கார செழுமையும் கொண்ட வித்யாதரனை ஏவிக் கொண்டிருந்தார் அவர் .

” வோய் சுவாமி அவன் ஜனன ராசியே இதை வைச்சி தான் வோய் கணிச்சி இருக்கு இந்த ஜாதக அமைப்பு இருக்கவா தான் இந்த பொங்கிஷத்தை உலகரிய செய்யமுடியுன்னு குறிப்பிட்டு இருக்கு சுவாமி … நாமதான் அவன் கிரக பலன்களை கணிச்சி எப்படி அவன் தேடினாலும் இந்த பொக்கிஷம் அவன் கையில் சிக்காம இருக்கத்தான் ஒரு மந்திர செப்பு தகட்டை அவனுக்கு தெரியாம அவன்கிட்ட சேத்திட்டோமே … சோ நீங்க கவலையே படாதிங்க இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அவங்களுங்கு எதுவும் கிடைக்காம அங்கிருந்து வெறும் கையாதான் போக போறாங்க ” என்று அவரும் கங்காதரனுக்கு குருட்டு தைரியத்தை கொடுத்து கொண்டிருந்தார்.

“நீங்க செல்றது எல்லாம் சரிதான் ஜோசியரே!!! முதல்ல அந்த சின்ன தகடு அவனை எப்படி தடுத்து நிறுத்தும், அவனுக்கு ஒன்னும் கிடைக்காம போறது இருக்கட்டும் நாம எப்படி அதை தேடி எடுக்க போறோம் ? முதல்ல இந்த கேள்விக்கு எல்லாம் பதில் வேனும்….. இந்த கோவில்ல இப்படி ஒரு பொக்கிஷம் இருக்குன்னு கண்டுபிடிக்கவே இவ்வளவு நாள் ஆகிடுச்சி . அது இங்க தான் இருக்குன்னு கண்டு பிடிக்க எவ்வளவு நாள் ஆகும் கை நீட்டி காச வாங்கியாச்சி இனியும் அந்த வெள்ளைகாரணுங்க பொறுத்து கொண்டிருப்பாங்கன்னு எனக்கு தோனலை . எப்போ எப்படி யாரை வைச்சி எடுக்கலாம் ” என்று அவரும் வித்தியாதரணிடம் விவாதித்த படி அலைபேசியை எடுத்தார்.

“நான் ஸ்டீபனுக்கு போன் பண்ணி அங்க போக சொல்றேன். இனியும் சென்னையிலேயே உட்காந்து இருந்தா வேலை ஆகும்ன்ற நம்பிக்கை எனக்கு இல்லை” என்று கூறி பத்து இலக்க எண்களை அழுத்தி காதில் பொறுத்தினார்.

“ஹலோ… நான் கங்ஙாதரன் பேசுறேன்”

“சொல்லுங்க சார் எப்படி இருக்கிங்க.. என்ன சார் போன்லாம் பண்ணி இருக்கிங்க புது ப்ராஜக்ட் எதுவும் இருக்கா எனக்கு ?” என்று ஆர்வமாய் கேட்க

“ஆமா ஸ்டீபன் ஒரு ஆப்ரேஷன் இருக்கு. நீ உடனே புறப்பட்டு மதுரை பக்கத்துல இருக்க தேவதானத்துக்கு போகனும் அங்க தான் உன்னோட வேலை ஆரம்பம் ஆகுது”
என்றிட

“ம் ஒகே சார் நாளைக்கு காலைல அங்க இருப்பேன்… அங்க என்ன வேலை தெரிஞ்சிங்காலாமா ” என்று கேட்டிட

“முதல்ல நீ அந்த இடத்துல போய் இறங்கு உனக்கு தேவையான தகவல் எல்லாம் நாளைக்கு காலைல டீட்டைலா அனுப்பி வைக்கிறேன்” என்ற கங்காதரன் அவனுக்கு அனும்ப வேண்டிய தகவலை எடுத்துக்கொண்டு இருந்தார்..

“என்ன சுவாமி அவனுக்கு போன் பண்ணிட்டேல் . அவன் ஊருக்கு புதுசு எங்க தங்குவான் யாருக்கும் சந்தேகம் வரக்குடாது இது பயங்கர ரிஸ்கா தெரியர்தே ” என்று ஜோசியர் பேசிட

“ரிஸ்க் தான் ஜோசியரே ரிஸ்க் தான் ஆனா அவன் மாறு வேஷத்துல தான் ஊருக்குல்ல வருவான். யாருக்கும் அவன் மேல சந்தேகம் வராத மாதிரி பாத்துக்குவான் கண்டிப்பா இந்த வேலைய அவன் முடிச்சிட்டு வெற்றியோட திரும்பி வருவான்” என்றார் கங்காதரன்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here