மின்னல் விழியே குட்டித் திமிரே 2

0
1037
1551018907221|679x452

மின்னல் விழியே – 2

திரு தன் காரில் வந்து மோதிய பெண்ணை அறையவும் அதை பார்த்து வினுவும் விக்கியும் திகைத்து நின்றனர்.

“இவ்வளவு வேகமா வர்றீயே இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடா??? உனக்கு சாக ஆசையா இருந்தா வேற எங்கயாச்சம் போய் செத்துப் போ,… என்னோட வண்டி தான் கிடைச்சிதா???” என்றவனின் குரலில் அத்தனை ஆத்திரம்… கன்னத்தை பிடித்துக் கொண்டிருந்த பெண்ணோ பயத்தில் நடுங்கியே போனாள்….

கண்களை கூலர்ஸ் மறைத்திருந்தாலும் அவன் அந்த பெண்ணை முறைப்பது நன்றாகவே வினுவினால் உணர முடிந்தது… கோபமாக இரண்டு பெண்களையும் பார்த்தவன் தன் காரில் ஏறி அமர… டிரைவர் வண்டி எடுக்கவும் கிளம்பிவிட்டான்… அந்த பெண்களும் பயத்தில் ஏதோ தங்களுக்குள் பேசியவாறே கிளம்பி விட அதிர்ச்சியில் அங்கயே நின்றது வினுவும் விக்கியும் தான்… ( இது தான் அதிர்ச்சியில உறையுறதோ??)

**“ஹப்பா என்னவொரு அடி… சும்மா இடி மாதிரி அந்த பொண்ணு கன்னத்துல இறங்கிச்சு….” விக்கி அவனின் அடியை சிலாகித்து கூற வினு அவளை முறைத்தாள்… **

“போடா பாவம் அந்த பொண்ணுங்க… அவங்க மட்டும் நம்மள க்ராஸ் பண்ணி போகாட்டி இப்போ இந்த அடிய நான் வாங்கியிருப்பேன்… அது மட்டுமா அந்த திமிர் பிடிச்சவன பார்த்தியா அந்த பொண்ணுங்கள கூட தூக்கிவிடாம டிரைவர பார்த்து சைகை வைக்கிறான்… பெரிய உத்தமன்னு நினைப்பு…. சரியான ஹிட்லர்.” ( ஹிட்லர்… வாவ் நைஸ் நேம்)

**“ஹேய் அவர் என்ன மாதிரி முரட்டு சிங்கிளா இருப்பார் டி… அதான் அப்படி தள்ளி நின்னு பேசுறாரு…. பட் ஹிட்லர் அவருக்கு ஏத்த நேம் தான்…சும்மா அதிர்ந்துடுச்சு அவர பார்த்து..”.கெத்தாக தன் முன் நின்றவனை ரசித்து விக்கி கூற… அதில் கடுப்பாகிய வினு, **

**“தூக்கி விட மட்டும் கை கொடுக்க மாட்டாராம் ஆனா அடிக்க மட்டும் கை ஓங்கிடுவாரோ???? எவ்வளவு தைரியம்… பப்ளிக்ல ஒரு பொண்ண அடிச்சிருக்கான்… சரியான திமிரு பிடிச்சவனா இருப்பான்…” முகத்தை சுளித்தவாறு வினு கூற… விக்கி சிரித்துவிட்டான்…. **

**“ஹா ஹா வினு உனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை தான் டி வேணும்… அப்போ தான் நீ பண்ற அட்டூழியத்த எல்லாம் தாங்குவாரு…. பேசாம இவர் யாரு என்னன்னு விசாரிக்கட்டுமா???” குறும்பு சிரிப்புடன் விக்கி கேட்க அவனை அடிக்க எதாவது தென்படுகிறதா என வினு சுற்றி முற்றி பார்த்தாள்… அவள் என்ன செய்ய போகிறாள் என உணர்ந்து விக்கி சுதாரிப்பதற்குள் தன் கையை வைத்தே அவன் முதுகில் ஒரு அடி வைத்தாள். **

“போடி நான் வரல வீட்டுக்கு போறேன் இப்போவே என்ன அடிக்கிற அங்க வந்தா என்ன கொலை கூட பண்ணுவ… நான் வரமாட்டேன்..”. முதுகை தேய்த்தவாறே விக்கி முறுக்கி கொள்ள, (டேய் நீ என்னடா எப்பவும் சின்ன புள்ள மாதிரி கிளம்புறேன் கிளம்புறேன்னு அழுற??)

“சாரி டா பட்டுக் குட்டி இனி அடிக்க மாட்டேன் ஓ.கே… என் செல்ல தம்பி தானே… நான் அடிச்சதுக்கு ஈக்குவல்ல நீ டிரைவ் பண்ணு நான் பின்னாடி உட்கார்ந்துக்கிறேன்…”

**“நீ அடிச்சதுக்கு நான் டிரைவ் பண்றது ஈக்குவல்லா” என முனங்கினாலும் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தான்… அவன் பின் ஏறிக் கொண்ட வினு சற்று முன்பு பார்த்தவனை நினைத்து மனதில் பொருமியவாறே வந்தாள்… மனதுக்குள் அவனை திட்டி தீர்த்தாலும் விக்கி சொல்வது போல் அவன் செய்ததும் சரியே என ஒரு மனம் வாதிட்டது…அவளையும் மீறி அவனை ரசிக்க வைத்தது… **

“செம்ம அடி… நம்ம மேல விழுந்திருந்த எப்படி இருந்திருக்கும்.. ஹும்… நல்லா வலிச்சிருக்கும்” என மனது கவுண்டர் கொடுக்க தன் கன்னத்தை தேய்த்துக் கொண்டாள்…. “கூலர்ஸ் போட்டுருந்தாலும் எப்படி முறைச்சான்… அனல் காத்து இங்க வரைக்கும் வீசிச்சு…. எல்லா பசங்கள விடவும் இவன்கிட்ட என்னமோ ஸ்பெஷல் இருக்கு…நம்மளையே அவன பத்தி யோசிக்க வச்சிட்டானே” என மீண்டும் மனம் அவன் பின்னாலே செல்ல ஆரம்பிக்க… இது சரியில்லை என உணர்ந்த வினு அவனை பற்றி யோசிப்பதை கைவிட்டுவிட்டு விக்கியிடம் வம்பு வளர்க்க அப்படியே பேருந்து நிலையமும் வந்திருந்தது…

**அங்கிருந்த ஒரு ஏஜென்ஸி மூலமாக நான்கு நாட்களுக்குள் ஸ்கூட்டியை தாங்கள் செல்லும் பெங்களூர்க்கு வர வைக்கும் ஏற்ப்பாட்டினை முடித்தவர்கள் பெங்களூர் செல்லும் பேருந்தை தேடிபிடித்து ஏறினர்… எப்போதும் போல் வினுவே ஜன்னல் இருக்கையில் முந்திக் கொண்டு அமர விக்கி தலையில் அடித்துக் கொண்டான்… தங்களின் லங்கேஜை உரிய இடத்தில் வைத்தவன் வினு அருகில் அமர… வினுவோ இவ்வளவு நேரம் ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருந்த போனை ஆன் செய்து தங்களின் தாய்க்கு அழைத்தாள்… **

சுதா அட்டென்ட் செய்து ஸ்பீக்கரில் போட வினுவும் தன் போனை ஸ்பீக்கரில் போட்டாள்…

**“அம்முக்குட்டி என்னடா பண்ற??? அக்கா கூட சமத்தா இருக்கியா??” சுதா விக்கியிடம் கேட்க வினு விக்கியை பார்த்து நக்கலாக சிரித்தாள்… (அம்முக்குட்டியா அடப்பாவி இப்படி தான் உன்ன கூப்பிடுவாங்களா??? நாங்க கூட வினுவ சொல்றாங்கன்னுல நினைச்சோம்) **

“ம்மா அம்முக்குட்டினு கூப்பிடாத… நான் பெரிய பையன்… நான் தான் வினுவ பார்த்துக்கணும்னு நீ சொல்லணும் அதவிட்டுட்டு அவள போய் என்ன பார்த்துக்க சொல்ற??? நான் உன் மேல கோபமா இருக்கேன்.” சிறு பிள்ளை போல் விக்கி கூற…. அந்த பக்கம் சுதாவும் அனுவும் சிரிக்கும் சத்தம் கேட்டது….

**“அம்மா நாங்க பஸ் ஏறிட்டோம்… நாளைக்கு ரீச்சாகிடுவோம்மா… அங்க நிலவரம் எப்படி இருக்கு… அப்பா என்ன பண்றாங்க???” வினு ஆர்வமாக கேட்க, **

**“ம்க்கும் உன் அப்பா அப்போவே கிளம்பி அமெரிக்கா போயாச்சு….” வீட்டில் நடந்த அனைத்தையும் சுதாவும் அனுவும் கூற… வினு அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டாள்… தன் அப்பாவுக்கு பணம் தான் அனைத்தும் என தெரியும் ஆனால் தான் காணமல் போனதை கூட கண்டுபிடிக்கவோ தன்னை பற்றி கவலைபடவோ நேரம் இல்லை என்பதை நினைத்து மன வருத்தமாக இருந்தாலும் இது எப்போதும் நடப்பது தானே என தன்னை சமாதனம் செய்துக் கொண்டாள்… ( நீ ஓடி பிடிச்சி விளையாடுவ அந்த மனுஷன் எல்லா வேலையையும் விட்டுட்டு உன் பின்னாடி வரனுமாக்கும்… போம்மா போ… போய் வேலைய பாரு) **

**“வினு… அத்தைய சும்மா சொல்லக் கூடாது… லெட்டர தூக்கிட்டு ஓடி வந்து ஒரு பெர்பாமன்ஸ் கொடுத்தாங்க பாரு… அந்த சரோஜா தேவியே நேர்ல வந்த மாதிரி இருந்துச்சு… பட் என்ன அந்த சைட் ரோசாப்பூ தான் மிஸ்சிங்…” அனு தன் அத்தையை கலாய்க்க… வினுவும் விக்கியும் வாய்விட்டு சிரித்தார்கள்…. ( ஏம்மா அனு நீ சரோஜா தேவிய முன்ன பின்ன பார்த்துருக்கியா இல்லையா?? சும்மா வாய்ல வந்ததெல்லாம் அடிச்சி விடுறது..) **

“அம்மா கலக்கிட்ட போ…. ஆனாலும் குமார் முன்னாடி உன்னால மட்டும் எப்படிதான் நடிக்க முடியுதோ… எனக்கெல்லாம் பேசவே பதறும் …” விக்கி தன் தந்தையை நினைத்து கூற… சுதாவோ புன்னகையோடு, “அந்த மனுஷன் நல்லவர் தான் டா ஆனா குடும்பத்தோட அருமை புரியல… பணம் பணம்னு ஓடுறாரு…. எல்லாம் நமக்காக தான் டா…” தன் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசியதில் அவரின் காதல் புரிய இதற்காகவாவது தன் தந்தை கொஞ்சம் மாறினால் என்ன என்று தான் வினுவிற்கு தோன்றியது…

**“சரிம்மா… நாங்க நாளைக்கு அங்க போனதும் போன் பண்றோம் … நாளைக்கே வேலைல சேரணும்னு சொல்லிருக்காங்க…. அதனால ஒரு ஏழு மணிக்கு எங்களுக்கு போன் செஞ்சு எழுப்பி விட்டுரு மா …. வினு தன் தாயிடம் கெஞ்ச…. சுதாவும் சரி டா குட்டி மா… அம்முக்குட்டிய பத்திரமா பார்த்துக்கோ” …என்றவர் போனை அனுவிடம் கொடுத்துவிட்டு ரோஹித்தை கவனிக்க சென்றார்… அவர் கையால் சாப்பிட்டால் தான் அவன் சரியாக சாப்பிடுவான்… **

“டேய் விக்கி… வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வந்துடு டா… நான் மறந்துட்டேன்” என விக்கியை கிளப்ப வினு முயல…. அது புரியாதவனும் அவளை திட்டியவாறே இறங்கி சென்றான்…

போனை ஸ்பீக்கர் மோடில் இருந்து நார்மல் மோடிற்கு மாற்றியவள், “சொல்லுங்க அன்னி… அந்த ராம் ரியாக்ஷன் எப்படி இருந்துச்சு????”

“அதெல்லாம் செம்ம காண்டுல தான் போய்ருக்கான்…அவன பத்தி ரொம்ப யோசிக்காத.. நீ போற வேலைய மட்டும் பாரு….”

**“அதுக்காக தானே அன்னி கஷ்டப்பட்டு அந்த கம்பெனில வேலைல சேர்ந்திருக்கேன்… இனி நீங்க சொன்ன ஆள்ல கண்டுபிடிக்கணும்… சீக்கிரம் அகில் அண்ணாவோட சந்தோஷத்த திருப்பி தரணும்….” அமைதியாக கூறினாலும் அதில் இருந்த அழுத்தம் கண்டிப்பாக நான் செய்வேன் என்ற உறுதி அனுவை தான் சரியான ஆளிடம் தான் அகிலை பற்றி கூறியிருக்கிறோம் என நிம்மதி கொள்ள வைத்தது…. **

**“சரி வினு… ரெண்டு பேரும் பத்திரமா இருங்க… பெங்களூர் போனதும் போன் பண்ணுங்க… விக்கிய பார்த்துக்கோ டா… அம்மா இல்லாம ரொம்ப கஷ்டப்படுவான்…” என்றவாறு அனு போனை கட் செய்ய… வினு ஜன்னல் வழியே விக்கியை தேடினாள்…. **

வினுவிடம் பேசிவிட்டு திரும்பிய அனு தன்னை பார்த்துக் கொண்டு நின்றிருந்த அகிலை பார்த்து திகைக்க….

**“என்ன அனு??? வினுவும் விக்கியும் எங்க போய்ருக்காங்க???? இன்னைக்கு அவள பொண்ணு பார்க்க வர்றதா அம்மா சொன்னாங்க???” சந்தேகத்தோடு அகில் கேட்டான்… அனுவும் அகிலும் ஒரெ கல்லூரியில் படித்தவர்கள்…. ஆனால் வேறு வேறு டிபார்ட்மென்ட்… அதோடு குமாரின் நண்பரின் மகள் என்பதால் சிறு வயதில் இருந்து இருவருக்குமே ஒருவரையோருவர் நன்கு தெரியும். **

“அது அகி… வினுக்கு இந்த கல்யாணம் பிடிக்கல அதனால லெட்டர் எழுதி வச்சிட்டு அவளுக்கு கிடைச்ச வேலைக்கு போய்ட்டா…” அகிலிடம் அனைத்தையும் கூறியவள் அவர்கள் பெங்களூர் சென்றதை கூறிவிட்டு அகிலின் முகத்தை கூர்ந்து பார்க்க….. அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவனின் முகம் பெங்களூர் என்றதும் கலவரமானது…

“அங்க எதுக்காக போகணும்… இங்க எவ்வளவு வேலை இருக்கு… அதெல்லாம் விட்டுட்டு அந்த ஊருக்கு தான் போகணுமா… உடனே அவங்க ரெண்டு பேரையும் வர சொல்லு…” முகத்தில் அத்தனை பயத்தோடு கூறியவனை அனு வித்தியாசமாக பாரக்க….

**“என்னால முடியாது அகி… இது அவளோட லைஃப் அவ தான் முடிவெடுக்கணும்… அதோட நான் ஏன் அவங்ககிட்ட சொல்லணும்… உன்னோட தங்கச்சி தானே நீயே பேசு… என்ன??? இவ்வளவு நாள் வீட்ல யார்க்கிட்டயும் பேசாம தானே இருந்த இப்போ மட்டும் என்ன புதுசா அக்கறை… போடா போய் வேலைய பாரு…. வந்துட்டான் பெருசா பேசுறதுக்கு…..” நீளமாக பேசியவள் அவனை கண்டுக் கொள்ளாமல் தன் மகனை காண சென்றாள்… இந்த வீட்டில் அனைவரையும் விட அவனுக்கு அவர்களின் மேல் பாசம் அதிகம் என்று தெரிந்தாலும் வேண்டுமென்றே அகிலுக்கு வலிக்க வேண்டும் என்று தான் அனு அப்படி பேசியது… **

அனு வீசிச் சென்ற குற்றச்சாட்டில் இருந்த உண்மை அகிலை சுட அடுத்த நொடி வினுவிற்கு அழைத்தான். ஆனால் அதுவோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்று செய்தியை சொல்ல கடுப்பாகி மீண்டும் வினுவிடம் பேச முயன்றான்….

விக்கி வெளியே நின்றுக் கொண்டு கையை ஆட்டி வினுவை வெளியே அழைக்க… வினுவும் பேருந்தில் இருந்து இறங்கி அவனிடம் சென்றாள்…

“என்னடா???? எதுக்கு கூப்பிட்ட?? பஸ் இப்போ கிளம்பிடும்….”

தான் வாங்கி வைத்திருந்த வாட்டர் பாட்டிலை அவள் கையில் திணித்தவன் தான் ஆர்டர் செய்திருந்த ஆப்பிள் ஜுசை பருக தொடங்கினான்… வினு அவனை முறைக்க..

**“ப்ளீஸ் வினு…. தனியா சாப்பிட ஒரு மாதிரி இருக்கு அதனால நீ ஜஸ்ட் கம்பெனி கொடு” என்றவாறு அவசர அவசரமாக ஜுசை அவன் காலி செய்ய…. **

**“சரி பரவாயில்ல..எனக்கு கொஞ்சம் கொடு”…… நான் உன் அக்காடா என வினு நிருபிக்க… விக்கி சட்டென்று முடியாது என்பது போல் கப்பை அவளிடம் இருந்து மறைத்து வைத்து குடித்தான்.. **

“டேய் இப்போ தரப்போறியா இல்லையா??? கொடுடா… இல்ல இப்போ என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது….”

**“நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ ஆனா நான் தர மாட்டேன்… போடி… உனக்கு வேணும்னா நீ வாங்கிக்கோ..”. என்றவாறு தன் க்ளாஸிலிருந்ததை அவசரமாக அவன் காலி செய்ய… வினுவிற்கு வந்ததே கோபம்… கையில் இருந்த வாட்டர் பாட்டிலை திறந்தவள் அவன் மேல் நீரை ஊற்றப் போக…. அதை உணர்ந்த விக்கி கடைசி நிமிடத்தில் நகர… அவன் பின்னால் வந்துக் கொண்டிருந்த நபரின் மேல் பாட்டிலில் இருந்த தண்ணீர் மொத்தத்தையும வினு கொட்டியிருந்தாள்… **

**இதை எதிர்ப்பார்க்காத வினு அதிர… விக்கியோ மாட்டினியா என்று சிரித்தான்… அவனது சிரிப்பும் உறைந்தது அங்கு மொத்தமாக நனைந்திருந்த அந்த ஹிட்லரை பார்த்து… **

முகம் முழுதும் நீரில் நனைந்திருக்க வினுவை உறுத்து விழித்தவனின். கண்கள் இரண்டும் கோவைப் பழம் போல் சிவந்திருக்க கழுத்து நரம்புகள் அனைத்தும் புடைத்து கோபமாக அவன் வினுவை பார்க்க…

“இவனா… இவன் மேலயா ஊத்தினோம்… கூலர்ஸ் போடலையா?? இவன் கண்ணா இது…. என்னம்மா முறைக்கிறான்…. பெரிய முறைப்பு மன்னார்சாமியா இருப்பானோ…. ஆனாலும் அழகா தான் இருக்கான்… இனி கூலர்ஸ் போடாதன்னு சொல்லனும்…” சம்பந்தமே இல்லாமல் வினு அவனை நினைத்து மனதில் பேசிக் கொண்டிருக்க.. விக்கி அவனிடம் மன்னிப்பை வேண்டிக் கொண்டிருந்தான்…

“சாரி சார்… ரொம்ப சாரி…,…. தெரியாம பட்டுருச்சி சார்….” விக்கி முயன்றவரை இறங்கி பேச… அவனை கோபமாக முறைத்தவன்… “யூ இடியட்ஸ் அறிவு இல்ல உங்களுக்கு… இப்படி தான் மத்தவங்க மேல தண்ணி ஊத்தி விளையாடுவிங்கிளா??? இன்டிசன்ட் ஃபூல்ஸ்… வர வர ரோட்ல லவ்வர்ஸ் தொல்லை தாங்க முடியல…” என கடைசியாக கூறியதை வாயில் வைத்து அவன் முனக… வினுவிற்கு அப்படியொரு கோபம்… தங்களை முதலில் பார்ப்பவர்கள் கூட அண்ணன் தங்கையா என்று கண்டு பிடித்துவிடுவார்கள்… அந்தளவிற்கு இரண்டு பேருக்குள்ளும் முக ஜாடை ஒத்துப் போகும் ஆனால் இவனோ லவ்வர்ஸ் என்றதும் வினு பொங்கிவிட..

**“ஹேய் மைன்ட் யூவர் வேர்ட்ஸ்… நாங்க எங்க விளையாடனும்னு எங்களுக்கு தெரியும்…. நீங்க சொல்லத் தேவையில்லை…” வினு கோபமாக கத்த… அப்போது தான் அவன் வினுவை கூர்ந்து நோக்கினான்…. தன் நெஞ்சின் அளவே மொத்தம் இருந்தவளை கேலியாக பார்த்தவன்….” குள்ள கத்தரிக்கா” என்க…. வினுவிற்கு வந்ததே கோபம்… **

விக்கி உயரமாக வளர்ந்திருக்க தான் மட்டும் ஐந்தடியோடு நின்றுவிட்டதை நினைத்து வினுவிற்கு எப்போதும் கவலை உண்டு… இப்போது அதையே அவன் கூற….” யார பார்த்து டா குள்ள கத்தரிக்கான்னு சொல்ற???? நீ தான் டா வளர்ந்து கெட்டவன்… ஆளூம் மூஞ்சியும் பாரு….”என்றவளின் கண்கள் பேசிய பாஷை அனைவரையும் கட்டியிழுக்கும் ஆனால் அசராமல் அவளை நோக்கியவன் அவள் தன்னை மரியாதையில்லாமல் ஒருமையில் விழிப்பதில் ஆத்திரமடைந்தான்….

**“ஏய் வார்த்தைய அளந்து பேசு… சும்மா போய்ட்டு இருந்தவன் மேல தண்ணிய ஊத்தினதும் இல்லாம மரியாதை இல்லாம பேசுறியா???” **

**“நான் அப்படி தான் டா பேசுவேன்… நீ வார்த்தைய அளந்து பேசு டா… அதான் தண்ணி கொட்டினதுக்கு சாரி கேட்டுடோமே அப்புறம் எதுக்காக ஓவரா பேசற???” என்றவள் தன் இடுப்பில் கை வைத்து முறைக்க… **

தன்னை ஒரு சிறு பெண் எதிர்த்து பேசுவதா என ஆத்திரம் பொங்க அவளை அடிக்க அவன் கை ஓங்க…… விக்கி சுதாரித்து அவன் கையை பிடித்தான்…. அவன் கை ஓங்கியதில் அடித்து விடுவானோ என்ற பயத்தில் வினு அவனை அறைந்திருந்தாள்…. ( ஹேய் இங்க என்ன அறையுற காம்பெட்டிஷனா நடக்குது??? )

இதை சற்றும் எதிர்ப்பாராத விக்கி ஸ்தம்பித்து நிற்க… அந்த ஹிட்லரோ கோபத்தில் தன்னை பிடித்திருந்த விக்கியின் கையை உதறியவன் வினுவை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்க… விக்கி வினுவின் கைகளை பிடித்து இழுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தான்… அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து கிளம்ப… ஓடிச்சென்று படியில் ஏறியவர்கள்…. தங்களின் பின்னால் ஓடி வந்து தங்களை பிடிக்க முடியாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்த அந்த ஹிட்லரை பார்த்தவாறே சென்றனர்….

பஸ்சில் தன்னிடமிருந்து தப்பித்து செல்லும் அவர்களை பார்த்தவன்… என்கிட்ட மாட்டும் போது இருக்கு உங்களுக்கு என மனதில் கறுவிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்….

**பேருந்தில் தன் இருக்கையில் வந்து அமர்ந்தவர்கள்… பிடித்து வைத்திருந்த மூச்சை விட… **

“ஹப்பா தப்பிச்சோம்… ஏன் டி அந்த ஹிட்லர அடிச்ச??? அவனிடம் மாட்டியிருந்தால் என்னவாகியிருக்கும்” விக்கி பதற…

“நான் அடிக்காட்டி அவன் என்ன அறைஞ்சிருப்பான் டா… அதான் நான் அறைஞ்சிட்டேன்….”

“லூசு… அவர் கை ஓங்கினாலும் பாதியில நிறுத்திருப்பாரு… அவர் கையை பிடிச்சதும் என்னால அத புரிஞ்சிக்க முடிஞ்சிது…. நீ தான் பெரிய ஜான்ஸி ராணி மாதிரி அடிச்சிட்ட…”

“நீ அந்த ஹிட்லருக்கு ஏன் டா சப்போர்ட் பண்ற???? “

**“உன்மைய தான் சொல்றேன் வினு…. அவர் எவ்வளவு கம்பீரமா இருந்தாரு… என்னப் பாரு.. காத்தடிச்சா பறந்துருவேன் மாதிரி இருக்கேன்… என்னால அவர் கைய பிடிச்சி தடுக்க முடியும்னு நினைக்கிறியா??? அவரே நிறுத்தினதுனால தான் என்னால அவர் கைய பிடிக்க முடிஞ்சிது…” விக்கி வினுவிற்க விளக்கிவிட நினைக்க… **

வினுவோ சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு… “ஓத்துக்கிறேன்… “என்றதும் இப்போதாவது புரிந்ததே என்பது போல் விக்கி பார்க்க… “நீ காத்தடிச்சா பறக்கிற மாதிரி தான் இருக்கிறன்னு நான் ஒத்துக்கிறேன்” என வினு சிரிக்காமல் கூற… விக்கி இவள் திருந்த மாட்டாள் என அவன் தலையில் அவனே அடித்துக் கொண்டான்… (சரியான ஊம குசும்பியா இருப்பா போல இருக்கே..)

“சரி விடு டா… அதான் நாம தப்பிச்சிட்டோமே… இனி அந்த ஹிட்லர பார்க்கவா போறோம்” என சிரிக்க… விதி அவர்களை பார்த்து சிரித்தது… (நாமளும் சிரிச்சிப்போம்…. ஹா ஹா…ஹா..)

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here