மின்னல் விழியே குட்டித் திமிரே 8

0
736
1551018907221|679x452

மின்னல் விழியே – 8

திரு ஹனியை தன் குழந்தை என்க, அதில் வினு மொத்தமாக உடைந்தாள்… ஆனாலும் மனதில் அவனை தவறாக நினைக்க முடியவில்லை… தவறு வேறு எங்கோ இருப்பது போல் இருந்தது…. எதையும் யோசிக்க முடியாமல் வினு செயலிழந்தது போல் திருவை பார்த்தவாறு நின்றாள்.

விக்கியை கண்ட ஹனியோ,.”டேடிடி… பேட் பாய்..”. விக்கியை சுட்டிக் காட்டி திருவிடம் ஹனி போட்டுக் கொடுக்க, ஏற்கனவே அதிர்ச்சியில் சிலையாகியிருந்தவன் ஹனியின் குற்றச்சாட்டில்,

‘அடப்பாவமே அப்பவே ஹிட்லர் மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன் ஆனா ஹிட்லரோட ரிலிஸ்சா இருக்கும்னு நினைக்கலையே’ என்று மனதில் ஹனியை நினைத்து பேய்முழி முழித்தான்.

விக்கியை பார்த்து மெலிதாக சிரித்த திரு ஹனியிடம், “விடு பேபி…லெட்ஸ் கோ” என்றவாறு அவர்கள் இருவரையும் கண்டுக்கொள்ளாது கிளம்ப…. ஹனி இருவரையும் முறைத்தவாறே சென்றாள்….

“ஹிட்லர் பார்ட் டூ” தன்னையும் அறியாமல் விக்கியின் வாய் முணுமுணுத்தது…..

அவர்களின் முன் கம்பீரமாக ஹனியை அறிமுகப்படுத்தியிருந்தாலும் வினுவின் கண்களில் தோன்றிய வேதனையும் கலக்கமும் திருவின் மனதை பிசைந்தது..

“என்னை ஏன் அப்படி பார்த்தா…. ம்ம்ஹூம் அவளுக்காக இரக்கப்படாத திரு… இது தான் சரி…. அவ என்னை விட்டு தள்ளியிருக்கிறது தான் அவளுக்கு நல்லது….” தன் மனதை சமன் படுத்த முயன்றவனிடம் அவளுக்கு நல்லதா இல்லை உனக்கு நல்லதா என மனசாட்சி எதிர் கேள்வி கேட்க… அதற்கு விடை தெரியாமலும் விடை அளிக்க முடியாமலும் தலையை அழுந்த கோதியவாறே அவளை திரும்பி பார்க்க சொல்லி தூண்டும் மனதை கடிந்தவாறே திரும்பியும் பாராமல் அங்கிருந்து சென்றான்….

தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்த விக்கிக்கு அப்போது தான் வினுவின் ஞாபகம் வர, அவசரமாக அவளை திரும்பி பார்த்தான்… அவளோ நின்ற இடத்திலேயே வேரோடி போயிருந்தாள்…

“வினு….” அவள் கைகளை பிடித்தவாறு விக்கி அழைக்க… திரும்பி பார்த்தவளின் கண்களில் இருந்த வெறுமையும் கலக்கமும் அவன் இதுவரை பார்த்திராதது…. அதில் திருவின் மேல் அத்தனை கோபம் எழுந்தாலும், முதலில் வினுவை கவனிக்க வேண்டும் என மனம் உணர்த்த, அவளை அழைத்துக் கொண்டு, அந்த ஐஸ்கிரிம் பார்லரின் ஒரு டேபிளிள் சென்று அமர்ந்தான்….

எதுவும் பேசாமல் தனக்குள் வினு உளன்றுக் கொண்டிருக்க…. விக்கி தான் பேசினான்…

“வினு…. அந்த ஹிட்லர் வேணாம் டி… அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு போல டி… இதெல்லாம் நமக்கு செட்டாகாது… நாம பேசாம இங்க இருந்து கிளம்பிடலாம்… இதானால தான் முதல்ல இருந்தே உன்ன அவாய்ட் பண்ணிருக்கார் போல டி…” தன் அக்காவை ஏமாற்றிவிட்டாறே என்று திருவின் மேல் கோபம் எழுந்தாலும் வினுவை இங்கிருந்து அழைத்து சென்றுவிட்டால் அனைத்தும் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் விக்கி, வினுவிற்கு புரிய வைக்க முயன்றான்…

“என்னால அவனை விட முடியாது…. எனக்கு அவன் தான் வேணும்… யார் என்ன சொன்னாலும் அவன் தான் வேணும் அவன் பொய் சொல்றான்… அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்காது….” தீவிர யோசனையில் இருந்தவள், கண்கள் கலங்க, உதடு துடிக்க அழுத்தமாக கூற… விக்கிக்கு அவள் மேல் கோபம் வந்தது…

“பைத்தியமா டி நீ??? அவருக்கு ஒரு குழந்தை இருக்கு டி…. “கோபத்தை கட்டுப்படுத்தியவாறே விக்கி சொல்ல…

“அது அவனோட குழந்தையா இருந்தால், இனி அவ எனக்கும் குழந்தை தான்….” உறுதியாக கூறியவளை எதைக் கொண்டு அடிக்கலாம் என்பது போல் விக்கி பார்த்தான்.

“சரி குழந்தையை ஏத்துக்குவ… ஆனா அவரோட மனைவிய என்ன பண்றதா உத்தேசம்???? அவங்ககிட்ட போய் கேட்க போறியா??? உங்க புருஷனையும் பொண்ணையும் எனக்கு குடுங்கன்னு….” விக்கி காட்டமாக கேட்க…. அவன் கூறும் உண்மை சுட்டாலும் காதல் கொண்ட மனது எற்க முடியாமல் ஊமையாக அழுதது.

“இல்ல…இல்ல…. என் திருவுக்கு கல்யாணம் ஆகியிருக்காது… அப்படி ஆகியிருந்த கண்டிப்பா இவ்வளவு நாள்ல அதை சொல்லியே என்னை அவன்கிட்ட இருந்து விலக்கியிருப்பான். ஆனா அவன் ஒரு தடவை கூட சொல்லவே இல்ல…. கண்டிப்பா அவனுக்கு மனைவின்னு யாரும் இல்ல… நீ அப்படி சொல்லாதே…” விக்கி கூறுவதை ஏற்க முடியாமல் தன் காதுகளை பொத்திக் கொண்டு வினு கத்த….. விக்கி செய்வதறியாமல் திகைத்தான்….

இவ்வளவு தூரம் திரு அவளை பாதித்திருக்கிறானா??? என விக்கி அதிர, வினுவும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தாள்….

“சரிக்கா.. நீ சொல்ற மாதிரியே அவருக்கு மனைவின்னு யாரும் இல்லாம இருக்கலாம் அதுக்காக அவரை நீ ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்க போறியா???” கேட்கும் அவனுக்கே வலித்தாலும் வினுவிற்கு நிதற்சனத்தை, நல்ல தம்பியாக உரைக்க முயன்றான்….

“நிச்சயமா…. அவன் லைஃப்ல மனைவின்னு யாரும் இல்லாட்டி நான் அவனை விட மாட்டேன்…. நான் ரெண்டாம் தாரமா போறத பத்தி எனக்கு கவலையில்லை… ஒருவேளை அவனுக்கு மனைவின்னு ஒருத்தங்க இருந்தா நான் ஒதுங்கிக்கிறேன்…” என்றவளின் குரலில் இருந்த வலியை விக்கியால் புரிந்துக் கொள்ள முடிந்தது…

‘காதல் இப்படித்தான் இருக்குமா??’ என விக்கிக்குள் ஒரு கேள்வி எழ, ‘இப்படி தான் இருக்கும்னா எனக்கு இந்த காதலே வேண்டாம்டா சாமி’ என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டான் அந்த பாசக்கார சகோதரன்.

“வினு ப்ளிஸ் புரிஞ்சிக்கோ…. லவ்க்கே நம்ம அப்பா ஓ,கே சொல்ல மாட்டாங்க… இதுல ஒரு குழந்தையோட இருக்கிறவரை கட்டிக்க ஒத்துக்கவே மாட்டாங்க….” விக்கி மீண்டும் அவளுக்கு எடுத்துரைக்க… வினுவிற்கு கோபம் துளிர்த்தது…

“ஏன் டா அவனை அப்படி சொல்ற… அவனுக்கு கல்யாணமே ஆகியிருக்காதுன்னு சொல்றேன்… நல்லா கேட்டுக்கோ… அவனை தவிர, வேற யாரையும் நான் கட்டிக்க மாட்டேன்…” கண்கள் கலங்க…மூக்கு விடைக்க கூறியவளை பார்க்க விக்கிக்கு பாவமாக இருந்தாலும் உண்மையை ஒத்துக் கொள்ள மறுக்கிறாளே என கோபமாக வந்தது….

“வினுனு…..” விக்கி எதோ கூற வர, அவன் அருகே வந்து அமர்ந்தான் ஹரி…

ஹரியை சந்திப்பதற்க்காக தான் திரு ஹனியோடு வந்திருந்தான்… சரியாக கிளம்பும் சமயத்தில் விக்கியும் வினுவும் திருவை கண்டு அவனிடம் பேச, சற்று தொலைவில் ஹனியோடு தன் மனைவியிடம் வீடியோ கால் பேசிக் கொண்டிருந்த ஹரி அவர்களை கவனித்தான். முதலில் யாராக இருக்கும் என்று யோசித்தவன் இருவரின் உருவ ஒற்றுமையில், அவர்கள் தான் திரு கூறும் இரட்டை வால் குரங்குகளாக இருக்கும் என்று அனுமானித்து தன் மனைவி மதுவிடம் பின்பு பேசுவதாக கூறி அழைபேசியை அனைத்தான்.

அவன் அருகில் செல்வதற்குள் அவனோடு நின்றிருந்த ஹனி திருவிடம் ஓட. அதன்பின் தான் திரு ஹனியை அவர்கள் இருவரிடமும் அறிமுகப்படுத்தியது.

அவர்கள் அருகில் செல்லாமல் ஹரி அங்கிருந்தே அவர்களை கவனித்தான். அவனுக்கு வினுவும் விக்கியும் நம்பத்தகுந்தவர்கள் தானா?? என்று அறிய வேண்டியிருந்தது. அதனால் திரு சென்ற பின்பும் அவர்கள் பேசுவதை அவர்கள் அறியாமல் பக்கத்து டேபிளில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். ஹனியை பற்றி அறிந்த பின்னர் திருவை விலகி செல்வார்கள் என்று அவன் நினைக்க,

அதற்கு மாறாக வினுவின் ‘ அவள் இனி என்னுடைய பொண்ணு’ என்ற வார்த்தை அவனை நிஜமாகவே சபாஷ் போட வைத்தது. மேலும் அவர்கள் பேசியது முழுவதையும் கேட்டவன் இதற்கு மேல் அமைதியாக இருக்க வேண்டான் என்று எண்ணி தான் விக்கியின் அருகில் சென்று அமர்ந்தான்..

“ஹாய் ரெட்ட வால் மங்கிஸ்” திரு அவர்களுக்கு வைத்திருக்கும் பட்டப் பெயரை வைத்து அவன் அழைக்க, வினுவும் விக்கியும் யார் இந்த புதியவன் என்பது போல் பார்த்தனர்….

“யார் நீங்க ????” விக்கி கேட்க…

“என்னோட நேம் ஹரி…. திரு என்னோட ப்ரெண்ட் தான்…உங்களை பத்தி திரு சொல்லியிருக்கான்” என்றவுடன் வினுவும் விக்கியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, மனமோ ‘ நம்மளை பத்தி சொல்லியிருக்கானா?? கண்டிப்பா நல்லதா சொல்லியிருக்க மாட்டான்’ என அந்த நிலையிலும் திருவை நினைத்து கேலி பேசியது.

அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்டுக் கொள்ளாதவன், “அப்போவே உங்களை பார்க்கணும்னு ரொம்ப ஆசை …. இப்போ தான் சான்ஸ் கிடைச்சிருக்கு….” என்றவன் வினுவை பார்த்து சிரிக்க… இவன் எதற்க்காக தங்களை பார்க்க விரும்பினான் எனப் புரியாமல் குழப்பத்துடன் பார்த்தனர் இருவரும்…

“எங்களை பத்தியெல்லாம் ஹிட்லர் சொல்லியிருக்காரா????” முதலில் வியந்த விக்கி பின் தானாகவே, “எப்படியும் நல்லதா சொல்லியிருக்க மாட்டார்” என்று உச்சுக் கொட்டிக் கொள்ள.,

அவனது ஹிட்லர் என்ற விழிப்பில் வியந்த ஹரி, “ஹிட்லரா???? யாரு திருவையா சொல்ற??? அவனுக்கு ஏத்த நேம் தான்…” அவர்கள் திருவிற்கு வைத்திருக்கும் பெயரை கேட்டு, ஹரி வெடி சிரிப்பு சிரிக்க…

விக்கி ‘அவனை லூசா இருப்பானோ’ என்ற ரீதியில் பார்த்தான்…

இருவரும் தன்னை ஒருமாதிரி பார்ப்பதை உணர்ந்த ஹரி, “சாரி …சாரி… அவனை ஹிட்லர்னு சொன்னதும் சிரிப்பு வந்திடுச்சு… நீ சொன்னது சரி தான் விக்கி… அவன் உங்களை பத்தி நல்லவிதமா சொல்லலை தான். ஆனா அவன் முதல் முதலா உங்களை பத்தி தான் என்கிட்ட பேசியிருக்கான்… நீங்க அந்த அளவுக்கு அவனை டிஸ்டர்ப் பண்ணியிருக்கிங்க…” என்றான் உண்மையாக.

“யாரு நாங்களா டிஸ்டர்ப் பண்றோம்???? அவர் தான் என் அக்காவை டிஸ்டர்ப் பண்றார்…. ஏங்க அவர் இப்படி இருக்கார்???… எப்பவும் சிடுசிடுன்னு…”. வினுவின் கலங்கிய முகத்தை கண்டதால் விக்கி ஆதங்கமாக திருவை பற்றி கேட்க…. ஹரியின் முகமோ சுருங்கியது….

“அவன் அனுபவிச்ச வலி அப்படி விக்கி… சின்ன வயசுல இருந்து நாங்க ஒண்ணா தான் வளர்ந்தோம். ஆனா இன்னைக்கு என்னைக்கூட நம்பாம விலகியே இருக்கான்…” திருவை நினைத்து ஹரி பெருமூச்சு ஒன்றை விட… வினு ஹரியின் முகத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்…

“அவர் எப்படியும் இருக்கட்டும். அவரோட மனைவி எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க… நாங்க அவங்களை பார்க்கணும்….” திருவின் மனைவியை சந்தித்தால் நிச்சயம் வினு மாறி விடுவாள் என்ற நம்பிக்கையில் மற்றவற்றை விடுத்து விக்கி கேட்க… ஹரியோ மீண்டும் சிரித்தான்…

“ஹா…. ஹா… மனைவியா???? அப்படி யாரும் திருக்கூட இல்லை…”

“ஏன் எங்க போய்ட்டாங்க???? விட்டுட்டு போய்ட்டாங்களா???” விக்கி குறைபட வினு அவனை அதட்டினாள்… “என்ன பேசுற விக்கி?,”

“நீ சும்மா இரு. எனக்கு உன் லைஃப் தான் முக்கியம்….” வினுவை அடக்கியவன் ஹரியை நோக்கி திரும்ப, அவன் இருவரையும் நெகிழ்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான்….

“நீங்க சொல்லுங்க ஹரி… ஹிட்லரோட வைஃப் எங்க இருக்காங்க???”

“திருவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா அதுவும் எனக்கு தெரியாம????” ஒற்றை விரலை கன்னத்தில் தட்டி ஹரி யோசிக்க….. அவன் பாவனையே திருவிற்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பதை வினுவிற்கு உணர்த்திவிட… அவள் முகம் சட்டென்று மின்னியது சந்தோஷத்தில்,….

“எனக்கு தெரியும் கண்டிப்பா என் அரசுக்கு கல்யாணம் ஆகியிருக்காது…. அப்படி ஆகியிருந்தா அவன் பர்ஸ்ட் நாளே என்கிட்ட அதை சொல்லி அவாய்ட் பண்ணியிருப்பான்….” சந்தோஷமாக அவள் கூற… விக்கியோ இன்னும் குழப்பத்தில்,

“வினு ஆனா அவர் கூட இருக்கிற குழந்தை…” .

“அவ இனி என்னோட பொண்ணு… என் அரசுக்கு பொண்ணுன்னா எனக்கும் பொண்ணு தான்…” உறுதியாக வினு கூறிவிட ஹரிக்கு அவளைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது….

என்னவென்று தெரியாத நிலையிலும் திரு மேல் அவள் வைத்திருக்கும் காதல் அவனை வியக்க வைத்தது… திரு நிச்சயம் இவளை கல்யாணம் செய்துக் கொண்டால் சந்தோஷமாக இருப்பான் என்ற எண்ணம் வலுப்பெற… அவளை பார்த்தவன்

“நீ சொல்றது சரி தான் மா…. அவனுக்கு என்னும் கல்யாணம் ஆகலை… ஹனி…. திருவோட தங்கச்சி சுமித்ராவோட பொண்ணு…”

திருவின் தங்கை பெண் என்றதும் வினுவின் உடலிலுள்ள செல்கள் எல்லாம் பரபரப்பாக… “சுமி….சுமித்ராவோட பொண்ணா ஹனி ???”, கண்களில் அத்தனை ஆர்வத்துடன் கேட்டவளை விக்கி வித்தியாசமாக பார்த்தான்….

“ஆமா மா… சுமியோட பொண்ணு தான்….”

“அவங்க இப்போ எங்க இருக்காங்க??? திருவோட தான் இருக்காங்களா??? நான் பார்க்கலாமா????” சுமியை கேட்டு வினு அடுத்தடுத்து கேள்விகளை தொடுக்க.,

“இல்லை வினு…. சுமி இப்போ திருக்கூட இல்ல… அவ எங்கன்னு எனக்கு தெரியாது…ஏன் திருவுக்குமே தெரியாது…. நான் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தான் யு.எஸ் ல படிச்சி முடிச்சிட்டு திரும்ப வந்தேன்… நான் திரும்ப வந்தப்போ, திரு ஹனியை வச்சிட்டு நின்னுட்டு இருந்தான்… பழைய திருவாவே இல்ல… எல்லார்கிட்டயும் இருந்து ஒதுங்கி தனித்தீவா இருந்தான்… என்கிட்ட கூட பேச ரொம்ப யோசிப்பான்… ஆனா நான் தான் அவனை விடாம துரத்தி துரத்தி பேசுவேன்… அவனா என்கிட்ட பேசின விஷயம்னா அது நீங்க தான்… அதனால தான் உங்களை பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன்…” அவர்களை தேடி வந்ததின் காரணத்தை ஹரி கூற,

‘என்ன சுமி இங்க இல்லையா….’ மனதுக்குள் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி எழும்ப, அயர்ச்சியாக இருந்தது வினுவிற்கு….

வினுவின் பதட்டம்…. ஆர்வம் மீண்டும் இந்த அயர்ச்சி இதெல்லாம் எதற்கு எனப் புரியாமல் விழித்த விக்கி,.

“உங்களுக்கு வேற எதுவும் தெரியாத அண்ணா….?” என்க.,

“இல்ல விக்கி… எனக்கு தெரிஞ்சது இது தான்… திருவுக்கு தெரியாம நானும் இங்க கொஞ்ச பேர்கிட்ட விசாரிச்சிப் பார்த்தேன்…. விசாரிச்சதுல திருவோட ப்ரெண்ட்டை தான் சுமி லவ் பண்ணிணதா சொன்னாங்க… அதோட சுமி காணமல் போறதுக்கு ஒரு வருஷம் முன்னாடி தான் திருவோட அப்பாவும் இறந்துட்டாங்க… என்னால அந்த நேரம் வரவும் முடியலை….” நண்பன் கலங்கி நின்ற நேரம் அவனுக்கு ஆறுதலாக நிற்க முடியவில்லையே என்று ஹரி வருத்தப்பட,

“என்ன அவங்க அப்பா இறந்துட்டாங்களா????” முகம் முழுக்க அதிர்ச்சியோடு வினு கேட்க., விக்கிக்கு வினுவின் நடவடிக்கைகள் புரியாவிட்டாலும் திருவின் இழப்பை நினைத்து கவலையாக இருந்தது…

“ஆமா இறந்துட்டாங்க…. நான் யார்க்கிட்டயும் திருவை பத்தி சொன்னது இல்ல வினு. ஆனா உன்னை பார்க்கும் போது, சொல்லணும்னு தோணுது…. திரு ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்…. நீ தான் அவன் லைஃப்ல சந்தோஷத்த கொண்டு வரணும்….” ஹரி அவளிடம் வேண்டுதலாக கூற….

“கண்டிப்பா அண்ணா.. இனி ஹனியும் அரசுவும் என்னோட பொறுப்பு. நீங்க கவலைபடாதிங்க…” என்றவள் சற்று யோசித்து… “அண்ணா நீங்க என்கிட்ட இதெல்லாம் சொன்னதா அவன் கிட்ட சொல்லிடாதிங்க…” என்க.,

“அய்யோ நீ சொல்லிடாத மா…. நான் சொன்னேன்னு தெரிஞ்சா அவன் கோபப் படுவான்…” ஹரி பதறினான்…

“சரிண்ணா நான் சொல்ல மாட்டேன்… அண்ணா அப்படியே இன்னோரு ஹெல்ப்… திரு வீட்டு பக்கம் ஒரு வீடு வாடகைக்குன்னு போட்டுருந்தாங்க… அந்த ஹவுஸ் ஓனர்கிட்ட எங்களுக்காக பேச முடியுமா??? “

“அந்த அங்கிளை எனக்கு தெரியும்மா நான் பேசுறேன்…” திருவின் வாழ்க்கை இனி நன்றாக அமைந்துவிடும் என மனம் அமைதி பெற ஹரிக்கு நிம்மதியாக இருந்தது…. இருவரும் பேசுவதை இடையூறு செய்யாமல் விக்கி கேட்டுக் கொண்டிருந்தாலும் அவனுக்கு எதுவுமே சரியாக படவில்லை…. முதலில் வினுவின் காதலில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவளின் தீவிரத்தில் அதை ஏற்றான் ஆனால் இப்போது ஒரு குழந்தையோடு இருப்பவனை தங்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்ற கவலை ஒரு புறம் அரிக்க விக்கிக்கு வினுவை நினைத்து வருத்தமாக தான் இருந்தது…

விக்கியின் அமைதியை பார்த்த ஹரி, “என்ன விக்கி உனக்கு திருவை பிடிக்கலையா????”

“எனக்கு பிடிச்சி என்னண்ணா ஆக போகுது… இதோ இவளுக்கு பிடிச்சிருக்கு… என்ன நடந்தாலும் நான் என் அக்காவுக்கு துணையா இருப்பேன்…” சுருக்கமாக கூறினாலும் வினுவின் மேல் அவன் வைத்திருக்கும் அன்பை கண்டு ஹரிக்கு பிரம்மிப்பாக இருந்தது…

“திரு ரொம்ப நல்லவன் விக்கி… நீயே ஒரு நாள் புரிஞ்சிக்குவ….. நான் இப்போ கிளம்புறேன்” என்றவன் இருவரிடமும் விடைபெற்று கிளம்பிவிட்டான்….

ஹரி கிளம்பியதும் மகிழ்ச்சி ததும்ப அமர்ந்திருந்த வினுவை பார்த்தவன், “எனக்கு எதுவுமே சரியா படலை வினு… நம்ம வீட்டுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா????” என்றான் அவள் கண்களை நேராக பார்த்து.

“அது தெரியும் போது பார்த்துக்கலாம் டா… ஆனா என்னால திருவை விட முடியாது… என்னோட பொண்ணையும் தான்…. ஹம்ம் இனி ஹனி மனசுலயும் இடம் பிடிக்கணும்…” வினு பெருமூச்சோடு கூற… விக்கி அவளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்…

“ரொம்ப முத்திடுச்சு டி உனக்கு… பர்ஸ்ட் ஹிட்லர் உன்கிட்ட பேசுறாரான்னு பாரு அதுக்கப்புறம் அவர் பொண்ணுக்கு நீ அம்மா ஆகலாம்….” கிண்டலாக கூறியவன் எழுந்துக் கொள்ள… வினுவும் அவனோடு எழும்பினாள்…

“ஹனியை பார்த்தா உனக்கு எதுவுமே தோணலையா டா???” எதிர்ப்பார்ப்பாக வினு கேட்க… விக்கியோ அவளை கூர்ந்து பார்த்து.,

“தோணுது… ஹிட்லர் பார்ட் டூ ன்னு தோணுது….” ரகசியம் போல் கூறியவனை கண்டு வினு சிரிக்க… விக்கிக்கும் அவளின் சிரிப்பு தொற்றிக் கொண்டது…

இது தான் விக்கி… அவனால் வினுவிடம் கோபமாக இருக்கவே முடியாது…. அவனுக்கு பிடிக்காவிட்டாலும் வினுவிற்க்காக ஏற்றுக் கொள்வான்… எப்போதும் ஒன்றாக இருப்பதால் அவனுக்கு அவன் அம்மாவை விட அவள் ஒரு படி மேல் தான்… அது அவளுக்கும் தெரியும் அதனால் தான் பெங்களூருக்கு அவனையும் அழைத்து வந்து விட்டாள்….

இருவரும் தங்களது ப்ளாட்டிற்கு வர…. வினு அவசரமாக தன் அறைக்கு வந்து அகிலிற்கு அழைத்தாள்…. அவன் போனை எடுத்தவுடன் மனதில் இருந்த மகிழ்ச்சி பொங்க.,

“அண்ணா எப்படி இருக்க” என்றாள் ஆர்வமாக…

“நான் நல்லா இருக்கேன் குட்டி… நீ எப்படி இருக்க??? விக்கி எப்படி இருக்கான்..”. என்றுமில்லாமல் அதீத உற்சாகத்துடன் பேசும் தங்கையை பற்றி யோசித்தவாறே அகில் கேட்க….

“நாங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்லா இருக்கோம்… அண்ணா நீ பெங்களூர் வர்றியா???”

“நானா??? நான் எதுக்கு டா…. நான் வரலை…” ஒரு காலத்தில் பெங்களூரை விட்டு சென்னை வருவதற்கு அவன் எவ்வளவு யோசிப்பான் என்ற உண்மை தாக்க… அவன் குரலில் அத்தனை கவலை…

அதை உணர்ந்தவள், “நீ வருவ அண்ணா…. கண்டிப்பா வருவ…. உனக்கு சொந்தமானது இங்க இருக்கு. அதை தேடி நீ கண்டிப்பா வருவ…” முற்பாதியை அவனிடம் கூறியவள் பிற்பாதியை மனதுக்குள் கூறிக் கொண்டாள்….

தங்கை எதார்த்தமாக கூறுகிறாள் என நினைத்தவன்… வேறு கதைகளை பேசிவிட்டு போனை வைத்தான்…

அகிலிடம் பேசிய பின்னர் பால்கனியில் நின்று வானத்தில் ஜொலித்த நட்சத்திரங்களை பார்த்தவள்., மாலை திருவோடு பார்த்த ஹனியின் முகத்தை மனதில் கொண்டு வந்தாள்….

“விக்கி சொன்னது சரி தான்… நான் சின்ன வயசுல இருந்த மாதிரியே ஹனி என்னை அப்படியே உரிச்சி வச்சிருக்கா…. ஆனா என்ன இந்த லிப்ஸ்ல இருக்க மச்சம் மட்டும் மிஸ்சிங்….” ஹனியை நினைத்து சந்தோஷமாகவே அந்த நாளை கடத்தியவள் மறுநாள் ஆபிஸிற்கு கிளம்பினாள்….

எப்போதும் போல் மலர்ந்த முகமாக வினு தன் ஸ்கூட்டியை கிளப்ப, விக்கி அவள் பின்னால் அமர்ந்துக் கொண்டான்…

“ஏய் வினு… என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க… நான் என்னும் உன் லவ்வுக்கு ஓ.கே சொல்லவே இல்ல…” விக்கி வேண்டுமென்றே அவளை சீண்ட… அவளோ புன்னகைத்தாள்…

“எனக்கு உன்னை பத்தி தெரியும்டா… எனக்கு பிடிச்ச எதையும் உன்னால வெறுக்கவே முடியாது… அதனால மரியாதையா ஹனி குட்டிய எப்படி இம்ரெஸ் பண்ணலாம்ன்னு யோசி…”

“போடி ஒரு யூத்த பார்த்து குழந்தைய இம்ரெஸ் பண்ண சொல்றியே… உன் கூட மட்டும் இல்லாம இருந்திருந்தா, நான் இந்நேரம் நாலு பொண்ணுங்கள உஷார் பண்ணியிருப்பேன்…” விக்கி அலுத்துக் கொள்ள… வினுவோ,

“எப்படி டா நேத்து அந்த பச்சை சுடிகிட்ட அடி வாங்கினியே அந்த மாதிரியா????” விக்கியை கிண்டல் செய்ய…

“வினுனுனூனூ… உன்னை…. சும்மா இருடி… அது கூட உன் பொண்ணு பண்ணின வேலை தான்….” அந்த பச்சை சுடி பெண்ணையும் ஹனியையும் நினைத்து விக்கி பல்லை கடிக்க… அவர்களின் ஆபிஸ் வந்திருந்தது….

பார்க்கிங் ஏரியாவில் திரு தன் காரோடு போராடிக் கொண்டிருக்க…. வினு அவள் ஸ்கூட்டியை அவன் அருகே நிறுத்தினாள்…

“அரசு என்னாச்சு டா??? ஏன் கார் கூட சண்டை போட்டுட்டு இருக்க….??” கார் இன்ஜினில் எதாவது பிரச்சனையா என சரி பார்த்துக் கொண்டிருந்தவன் வினுவின் கேள்வியில் அவளை நிமிர்ந்துப் பார்த்தான்…

“காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா…. என்ன கோவப்படுத்தாம இங்க இருந்து போய்டு…” அவளை திட்டியவன் மீண்டும் இன்ஜினை சரி பார்க்க.,

“உனக்கு ப்ராப்ளம் இல்லாட்டி, என்கூட வா அரசு. நான் ட்ராப் பண்றேன்…” குறும்பு குரலில் வினு கூற… திரு அவளை எரித்து விடுவது போல் பார்த்தான்….

தன் அலைபேசி அடிக்கவும் அதை எடுத்தவன்… எதிர் பக்கத்தில் சொன்ன விஷயத்தில் பதட்டம் ஏற… கடைசி நொடியில் சொதப்பிய காரின் டையரில் தன் காலை கொண்டு ஓங்கி மிதித்தான்…

“ஷிட்… இந்த கார் வேற… நேரம் காலம் இல்லாம மக்கர் பண்ணுது…” சன்னமாக முனகியவன் தன் செல்லில் ஹரியை அழைக்க முயல… அதுவோ ஸ்விட்ச் ஆப் என்று வந்தது…

“அரசு இஸ் எவ்ரிதிங்க ஓ.கே??? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க????” அவனின் பதட்டம் வினுவிற்கு பயத்தை கிளப்ப, என்னவாக இருக்கும் என்பது போல் கேட்டாள்…

சட்டென்று அவளையும் அவள் ஸ்கூட்டியையும் பார்த்தவன், படாரென்று அவளை ஸ்கூட்டியில் இருந்து ஒரு கையால் பற்றி விலக்கியவன்., அடுத்த நிமிடம் அவள் இடத்தில் அமர்ந்து ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு பறந்தான்…

“டேய் டேய்… அரசு….” வினு கத்த …. அதை கேட்க அவன் அங்கு இல்லை… தரையை காலால் உதைத்தவள் அவன் சென்ற திசையை வெறித்தாள்….

ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு சென்றவனோ அசுர வேகத்தில் செல்ல…. “அய்யய்யோ என்னை காப்பாத்துங்க… காப்பாத்துங்க..” என்ற குரலில் தான் பின்னால் விக்கி அமர்ந்திருப்பதை கவனித்தான்…

“ஹேய் நீ என்னடாப் பண்ற இங்க???” கேள்வி விக்கியிடம் இருந்தாலும் வேகமாக தான் சென்றுக் கொண்டிருந்தான்…

“யோ என்ன கடத்திட்டு வந்துட்டு., இங்க என்னப் பண்றேன்னு கேட்குறியா???” மரியாதையெல்லாம் காற்றோடு பறக்க… ஒருமையில் கத்தினான்…

“ஷட் டப் விக்கி…. எனக்கு ரொம்ப அவசரமா போகணும் நீ கொஞ்சம் அமைதியா இரு….”

“உனக்கு அவசரமா போகணும்னா நீ மட்டும் தனியா போய்யா எதுக்கு என்னயும் கூட்டிட்டு இல்ல கடத்திட்டு போற????” அந்த நிலைமையிலும் விக்கி கிண்டலாக கூற… திருவிற்கு இவனை இப்படியே தள்ளிவிட்டு விட்டு சென்றுவிடலாமா என்று தோன்றியது

“நீ ஏன் டா இறங்காம இருந்த????”

“நான் இறங்குறதுக்கு நீ எங்கய்யா டைம் குடுத்த… இப்படி பச்சப்பிள்ளைய கடத்திட்டு போறியே… கொஞ்சம் மெதுவாச்சும் போயேன்…. இந்த சின்ன வயசுலையே எதையும் அனுபவிக்காமா நான் செத்துப் போகணுமா????” திரு ஒவ்வொரு வண்டியையும் அசுர வேகத்தில் கடந்து செல்லும் அழகில் விக்கியின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது…

“ப்ளிஸ் விக்கி…. கொஞ்சம் அமைதியா இரு… உன்னை பத்திரமா கொண்டு போய் திரும்ப உன் அக்காகிட்ட சேர்த்திடுவேன்…” திரு உறுதியளிக்க அதில் சற்று அடங்கியவன் கத்தாவிட்டாலும் புலம்பியவாறே வந்தான்…

ஒருவழியாக ஸ்கூட்டியை நிறுத்திய திரு அதை பார்கிங்கில் கூட விடாமல் அப்படியே இறங்கி அந்த ஹாஸ்பிட்டலை நோக்கி ஓடினான்… அவன் சென்று விடவும் ஸ்கூட்டியை பிடித்த விக்கி அதை பார்க்கிங்கில் விட்டுவிட்டு என்ன செய்வது என தெரியாமல் நின்றவன்.,. உள்ளே செல்லலாமா வேணாமா என யோசித்துவிட்டு மறுநொடி எதற்க்காக இங்கு திரு வந்தான் என தெரிந்துக் கொள்வதற்க்காக அந்த ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தான்…

எந்தப் பக்கம் செல்வது எனத் தெரியாமல் குத்து மதிப்பாக சென்றிருந்தவனின் கால்கள் ஒரு அறையில் ப்ளட் டொனேட் செய்துக் கொண்டிருந்த திருவை பார்த்து நின்றது….

விழிகள் தொடரும்……

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here