மின்னல் விழியே குட்டித் திமிரே – 9

0
782
1551018907221|679x452

மின்னல் விழியே – 9

திரு ப்ளட் டொனேட் செய்வதை பார்த்த விக்கி, திரு வரும் வரை வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து அவனுக்காக காத்திருக்க… சிறிது நேரத்தில் திரு வெளியே வந்தான்… அவன் வெளியே வரவும் ஒரு பாட்டி ஓடி வந்து அவன் கைகளை பற்றிக் கொண்டு நன்றியை கூற… அதை அமைதியாக ஏற்றவன்.,

“உங்க பேரனுக்கு சீக்கிரம் சரியாகிடும் பாட்டிம்மா… பணத்தை பத்தி கவலைபடாதிங்க நான் கட்டிடுறேன்…” மேலும் சில வார்த்தைகள் ஆறுதலாக பேசிவிட்டு விக்கியின் அருகே தளர்வாக சென்று அமர்ந்தான்…

அவசரமாக ஸ்கூட்டியில் வந்ததும், ப்ளட் டொனேட் செய்ததும் தலையை கிறுகிறுவென சுற்ற வைக்க…. தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்… அதை கவனித்த விக்கி ஹாஸ்பிட்டல் கேண்டினில் சென்று ஜூஸ் வாங்கி வந்து கொடுக்க… அதை வாங்கி பருகிய பின் தான் திருவிற்கு சற்று தெம்பு வந்தது போல் இருந்தது…

“தேங்க்ஸ் அன்ட் சாரி… உன்னோட பர்மிஷன் இல்லாம உன்ன கடத்திட்டு வந்ததுக்காக….” , கேலி இழையோட திரு கூற.,

“சாரி மச்சான்… நான் தான் லூசு மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டேன்…” உள்ளே போய்விட்ட குரலில் விக்கி மன்னிப்பு வேண்ட, திரு அவனது மச்சான் என்ற அழைப்பில் தன் நெற்றிக் கண் திறந்து அவனை முறைத்தான்..

அவனது முறைப்பில் தான் பேசியது நினைவு வர, ஹி..ஹி என சிரித்து வைத்தான்..

“மச்ச்… சார்…. அந்த பாட்டி யாரு??”, நெடுநேரமாக மண்டையை குடையும் கேள்வியை விக்கி கேட்டுவிட..

வினுவின் ஸ்கூட்டியில் வந்ததோ இல்லை விக்கி வாங்கி கொடுத்த ஜீஸின் மகிமையோ ஏதோ ஒன்று அனைவரிடமும் ஒற்றை வரியில் பதிலளிப்பவனை பேச வைத்தது

“அவங்க ஹரி வீட்ல வேலை பார்க்கிறவங்க… சில நேரம் என் பொண்ணை கூட பார்த்துக்குவாங்க… அவங்க பேரன் தான் அது… ஒரு ஆக்ஸிடன்ட்ல அந்த பாட்டியோட பையனும் மருமகளும் இறந்துட்டாங்க… அவங்களுக்கு இருக்கிற ஒரே ஆறுதல் அவங்க பேரன் தான்… அவனுக்கு கிட்னில ஸ்டோன்… ஆபரேஷன் பண்ணிட்டா சரியாகிடும்னு சொன்னாங்க… அதுக்காக தான் இங்க அட்மிட் பண்ணிருக்கோம்… இன்னைக்கு சர்ஜரி… லஸ்ட் மினிட்ல ப்ளட் தேவைப்பட்டுச்சு அதுக்காக தான் அவசரமா வந்தேன்…” களைப்பாக கூறியவன் தான் அமர்ந்திருந்த நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.

‘என்னத்தான் வெளியே விறைப்பா இருந்தாலும் அவன் ரொம்ப நல்லவன் டா’ வினுவின் குரல் விக்கியின் காதில் ஒலிக்க, முதல் முறையாக வினுவின் செலக்ஷன் தப்பாக போகாது என நம்பிக்கை வந்தது. இப்போதும் திருவை முழு மனதோடு ஏற்றுக் கொண்டானா?? என்று தெரியவில்லை ஆனால் நிச்சயம் தன் அக்கா அவனோடு சந்தோஷமாக இருப்பாள் என்று விக்கியின் மனம் அடித்துக் கூறியது.

அதன் பின் திரு அமைதியாகிவிட… சிறிது நேரம் கழித்து இருவரும் வினுவின் ஸ்கூட்டியில் ஆபிஸிற்கு திரும்பினர்… விக்கி டிரைவ் செய்ய திரு பின்னால் அமர்ந்து வேடிக்கை பார்த்தவாறு வந்தான்… இருவரும் ஆபிஸ் கேம்பஸிற்குள் நுழைய, வினு அவர்கள் விட்டு சென்ற இடத்திலே நின்றிருந்தாள்..

“ஆஹா என் உடன்பிறப்பு இங்கயே நிற்க்குதே… இப்போ கடிச்சி குதறிடுமே…” கார் பார்க்கிங்கை அளந்துக் கொண்டிருந்தவளை பார்த்து விக்கி அலற, திரு வினுவை எட்டிப் பார்த்தான்…. இங்கும் அங்கும் ஏதோ யோசித்தவாறே திருவின் கார் அருகே நடை பழகிக் கொண்டிருந்தாள்…

கையில் போனை வைத்து கொண்டு, அதை பார்ப்பதும் பின் எதோ முணுமுணுப்பதாகவும் எரிச்சலையும் கோபத்தையும் அப்பட்டமாக பிரதிபலித்தது அவளது முகம்…

“எதுக்காக உன் அக்கா கார் பார்க்கிங்கை அளந்துட்டு இருக்கா???” திரு சந்தேகமாக கேட்க…. அவனது கிண்டலில் புண்ணகைத்த விக்கி,

“இது எங்க அண்ணா வாங்கி கொடுத்த ஸ்கூட்டி. அவளுக்கு ரொம்ப ஸ்பெஷல்… என்னை கூட தொட விட மாட்டா… ஆனா நீங்க ஸ்கூட்டியை கடத்திட்டு போய்ருக்கிங்க,… அதுக்காக தான் இப்படி…” திருவிற்கு பதில் அளித்தாலும் அவர்களின் பணிரெண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்த போது, தனது பரிசாக தந்தை அளித்த ப்ளான்க் செக்கை விட, அகில் அண்ணா வாங்கி கொடுத்த ஸ்கூட்டியை ஆசையாக சுற்றி வந்தவளை நினைத்து விக்கியின் கண்கள் கணிந்தது…

அவர்கள் வருவதை பார்த்தவள் வேகமாக விக்கி ஸ்கூட்டியை நிறுத்திய இடத்திற்கு செல்ல, திரு அவள் தன்னிடம் எதாவது பேசுவதற்குள் வேகமாக இறங்கி விடுவிடுவென உள்ளே சென்றுவிட்டான்…

“அர..சு…” திரும்பி கூட பார்க்காமல் சென்றவனை தடுக்கும் வழி தெரியாமல் விக்கியை முறைத்தாள்…

“சாரி வினு.. உனக்கு போன் பண்ண நினைச்சேன் ஆனா அங்க சிக்னல் ப்ராப்ளம்”… தான் தகவல் கூறாததற்கு தான் முதலில் திட்டு விழும் என்பதால் விக்கி முதலில் அதை கூறிவிட, வினுவும் அதை விடுத்து,

“என்ன நடந்துச்சு டா?? எதுக்காக அவ்வளவு அவசரமா போனிங்க??”, திரு சென்ற திசையை பார்த்தவாறு நின்றவள் விக்கி கூறியதில் அவன் பக்கம் திரும்பி வினவ.,

வினுவிடம் அனைத்தையும் கூறினான் விக்கி,… மேலும் அவனே தொடர்ந்து.,

“ஹீ இஸ் ரியலி க்ரேட் வினு… ப்ளட் மட்டும் இல்லை பணம் கூட மச்சான் தான் கட்டினார் தெரியுமா???? நீ செலக்ட் பண்ணின ஆள் சூப்பர் தான்…” விக்கி உணர்ந்து கூற, வினுவிற்கு திருவை நினைத்து பெருமையாக இருந்தாலும் அவள் முகம் வருத்தத்தை காண்பித்தது…

“என்னாச்சு வினு???” அவள் வருத்தம் கண்டு விக்கி கேட்க….

“என்னை தள்ளிவிட்டுட்டு போனதுக்கு பதிலா உன்னை தள்ளிவிட்டுட்டு போய்ருக்கலாம்… அரசு கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணியிருப்பேன்”… கண்களில் ஏக்கம் வழிந்தோட கூறியவளை கண்டு விக்கிக்கு பாவமாக இருந்தது…

அவளை சமாதனம் செய்து ஆபிஸிற்குள் அழைத்து வந்தவன், தங்களின் வேலையை தொடங்க… வினு மெதுவாக திரு கேபினுக்கு சென்றாள்… எப்போதும் கதவை தட்டிவிட்டு செல்லும் நல்ல பழக்கம் அவளிடத்தில் இல்லை என்பதால் அனுமதி கேட்காமலே உள்ளே நுழைந்தாள். அங்கே தன் மேஜை மீது சாய்த்து தூங்கிக் கொண்டிருந்தான் திரு.

பூனை நடையிட்டு அவன் அருகே சென்றவள் அவனை எழுப்ப மனமில்லாமல் அவனை பார்த்தவாறு அவன் அருகே நின்றாள். அலைஅலையான கேசம் அவன் நெற்றியை மறைத்திருக்க, அதை கலைத்து விளையாடினால் என்ன? என்று ஒரு மனம் வாதிட மற்றொரு மனமோ வேண்டாம் என தடுத்தது.

முயன்று தன்னை கட்டுப்படுத்தியவள் மெதுவாக அவன் முகம் அருகே குனிந்தாள்… தன் இதழை அவன் நெற்றி அருகே கொண்டு சென்றவள் நூலிடை இடைவெளியில் சுதாரித்து மென்னகையோடு தன் விரலில் முத்தம் ஒன்று வைத்து அவன் நெற்றியில் அவள் விரலை பதித்தாள்…

“லவ் யூ டா அரசு… சீக்கிரம் எனக்கு ஓ.கே சொல்லிடு அப்புறம் இந்த வினு எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்… ஹனிக்கு மட்டும் இல்ல டா உனக்கும் இன்னொரு அம்மாவா இருப்பேன்….” தூங்கிக் கொண்டு இருந்தவனிடம் கூறியவளின் பார்வை நெற்றியில் தவழந்துக் கொண்டிருந்த கேசத்தின் மீது பட, தடுக்க முயன்றும் முடியாமல் பட்டும்படாமலும் அவன் தலையை மெதுவாக கோதி விட்டுட்டு அங்கிருந்து சென்றாள்….

அவள் காலடி சத்தம் மறையும் வரை கண் மூடி இருந்தவன் அவள் சென்றுவிட்டதை உறுதி செய்துவிட்டு, பிடித்து வைத்திருந்த மூச்சை விட… கைகள் தாமாக எழுந்து அவள் பதித்த நெற்றி முத்தத்தை தடவியது…

வினு உள்ளே நுழைந்ததுமே திரு விழித்துவிட்டான்… கண் விழித்தால் நிச்சயம் ஏதாவது பேசி தொல்லை செய்வாள் என்பதால் தான் தூங்குவது போல் நடித்தான்…. அவள் தன் அருகே நெருங்கவே ஏனென்று தெரியாமல் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.அவள் அருகாமையில் அசையாமல் இருக்க பெரும்பாடுபட்டுப் போனான்.

அவள் மேல் இருந்து வந்த வாசனை அவளை அப்படியே வாரி அணைத்து முகர்ந்து பார்க்க சொல்ல… அதில் அனைவரையும் ஒரு எல்லைக்கு அப்பால் வைத்திருக்கும் அவனே விதிர்விதிர்த்து போனான்… தன் உணர்வுகளை அடக்கியவன் அடுத்து அவள் பேசியதில் மொத்தமாக அவள் பக்கம் சாய துடிக்கும் மனதினை தடுக்கும் வழியறியாமல் திணறித்தான் போனான்… அவள் செல்லும் வரை அசையாமல் சிலை போல் இருந்தவன், அவள் சென்ற பின் தான் சீராக மூச்சுவிட்டான்.

மனம் அவள் விட்டு சென்ற வார்த்தைகளின் தாக்கத்தில் அலைபாய., தன் மனதை கடிந்துக் கொண்டான். அவளை தள்ளியே நிறுத்த வேண்டும் என ஆயிரம் கட்டளைகளை தனக்கு தானே போட்டுக் கொண்டவன்., பொய்யாக மனதை சமாதனம் செய்துக் கொண்டு தன் வேலையில் கவனம் பதித்தான். .

அதன் பின் அடுத்த வந்த இரண்டு நாட்களும் வினுவின் அட்டகாசங்களுடனும் திருவின் முறைப்புடனும் கழிய… மூன்றாம் நாள்., நவின் மதிய இடைவேளையின் போது உற்சாகமாக வந்தான்.

தன் டீம் மெம்பர்ஸ் அனைவரையும் திரட்டியவன், “ப்ரெண்ட்ஸ் ஒரு குட் நியூஸ்… நாம லான்ச் பண்ணின ப்ராஜக்ட் சக்சஸ் ஆகிடுச்சு… ஸோ அதை செலிப்ரேட் பண்ணறதுக்கு, நம்ம டீம் ஹெட் நமக்காக பார்ட்டி ஆர்ங்கனைஸ் பண்ணிருக்கார்… அதனால இந்த வீக் எண்ட் நம்ம கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்ல செலிப்ரேட் பண்ணப் போறோம்….” ஆரவாரமாக நவின் முடிக்க.,

அனைவரும் கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்… ஒரு நொடியில் அந்த இடமே சந்தோஷத்தாலும் கேலிப் பேச்சுக்களாலும் நிரம்பியது… வினுவிற்கும் விக்கிகும் இது புதிது என்பதால் அமைதியாக வேடிக்கை பார்த்தனர்…

“வினு விக்கி நீங்களும் கண்டிப்பா வந்துடுங்க… மூணு மாசம் உழைச்சதுக்காக நம்ம கம்பெனில தர்ற டீரிட்… மிஸ் பண்ணிடாதிங்க….” நவின் அவர்களுக்கும் அழைப்பு விடுக்க… ஒரு கணம் யோசித்த வினு,

“நம்ம டீம் லீடர் வருவாங்களா???” திருவை பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆவல் அவளிடத்தில்.

“நோ வினு… சார் வர மாட்டாங்க… இந்த மாதிரி எங்களுக்காக பார்ட்டி அரேன்ஜ் பண்றதோட சரி…. அவர் கலந்துக்க மாட்டார்.”.

“ஓ…. சரி நாங்க வந்துடுவோம்…” நவினுக்கு பதிலளித்தவள் திருவை தேடிச் செல்ல., விக்கியும் பலியாடு போல் அவளை பின் தொடர்ந்தான்..

தன் கேபினுள் ஏதோ ஒரு ஃபைலில் ஆழ்ந்திருந்தவனின் பர்மிஷனுக்காக கூட காத்திராமல் கதவை பெயரளவில் தட்டிவிட்டு புயல் போல் வினு உள்ளே நுழைய, திரு அவளை கண்கள் இடுங்க பார்த்தான்…

“அரசு… நீ பார்ட்டிக்கு போக மாட்ட தானே டா…. போய்டாத ப்ளீஸ்… இப்போ தான் நவின் சொன்னான்… அது டிரிங்ஸ் பார்ட்டியாம்… எனக்கு டிரிங் பண்றவங்களை பிடிக்காது… நீ போன உன்னையும் கெடுத்துடுவாங்க… அதனால நீ போகாத…..” கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாமல் உளறியவளை, திரு தலையும் புரியாமல் பார்த்தான் என்றால் விக்கியோ ஙே எனப் பார்தான்…

விக்கியின் எண்ணவோட்டம் முழுதும் கேபினுக்குள் நுழையும் முன்னர் வரை திருவை எப்படியாவது பார்ட்டிக்கு வர வைக்க வேண்டும் என தன்னிடம் புலம்பியபடி வந்தவளா இவள் என்றிருந்தது…

“ஜஸ்ட் ஷட்டப்… நான் என்னப் பண்ணணும்னு எனக்குத் தெரியும் நீ சொல்ல வேண்டாம்… உன்னோட வேலைய மட்டும் பாரு… பார்ட்டிக்கு போகணுமா வேண்டாமான்னு நான் தான் யோசிக்கணும் நீ இல்லை”… திரு அவளை அதட்ட.,

அதற்கெல்லாம் அசராதவளோ… “நான் சொல்றதை கேளு அரசு… பார்ட்டி எல்லாம் வேண்டாம். எப்பவும் போல வீட்ல இரு… லாஸ்ட் டைம் மால்ல வச்சி நம்ம பொண்ண சரியா பார்க்கலை… அதனால நாங்க இந்த வீக் எண்ட நம்ம வீட்டுக்கு வரலாம்னு இருக்கோம்” இடைவெளி விடாமல் படபடவென்று பொறிந்தவளை திறந்த வாய் மூடாமல் பார்த்திருந்தான் விக்கி.

‘திரும்பவும் ஹிட்லர் வீடா’ இதயம் ஒரு நிமிடம் துடிப்பதை நிறுத்திவிட்டது போல் தோன்ற தன் நெஞ்சில் கை வைத்தவாறு விக்கி அவள் முகத்தை பார்க்க… திருவோ கடுமையாக அவளை முறைத்தான்…

“நான் பார்ட்டிக்கு போக போறேன்… நீ எங்கயும் போ… இப்போ கெட் லாஸ்ட். அதோட அவ என்னோட பொண்ணு… அண்டர்ஸ்டன்ட்…” விறைப்பாக கூறியவன் எழுந்து சென்றுவிட…

விக்கி பிடித்திருந்த நெஞ்சை நீவி விட்டுக் கொண்டான்…

“நம்மள போக சொல்லிட்டு அவன் போறான் பாரேன்…” வினு சிரிக்க.. விக்கிக்கு ஒன்றும் புரியவில்லை..

“என்னடி இது… நீ தானே ஹிட்லர எப்படியாச்சும் பார்ட்டிக்கு வர வச்சிடணும்னு சொன்ன… இப்போ என்னடி இப்படி சொல்ற??? அப்போ நாம போக போறது இல்லையா???,”

வினுவுடன் இருந்தால் பீர் பாட்டிலை கூட கண்ணால் காண முடியாது என்பதால், பார்ட்டியில் அவளுக்கு தெரியாமல் ஒரு சிப்பாவது குடித்துவிட வேண்டும் என எண்ணமிட்டவனுக்கு அவள் சட்டென்று திருவிடம் செல்ல வேண்டாம் என்று கூறவும் ஆதங்கமாக விக்கி கேட்க….

வினுவோ விஷம சிரிப்புடன்… “யார் சொன்னா நாம போக போறது இல்லைன்னு…. இப்படி பேசினா தான் நம்ம மச்சான் வருவான்.. அதுவும் இப்போ பேசின வேகத்தை பார்த்தா, நம்ம எல்லாரை விடவும் முதல் ஆளா வந்து நிற்பான்…”.

இப்போது விக்கிக்கு அனைத்தும் விளங்கிவிட வாயில் கை வைத்தவன் அடிப்பாவி என்பது போல் ஒரு லுக் விட..

“ரொம்ப ஷாக் ஆகாத டா பக்கி… வா போலாம்… பார்ட்டிக்கு ரெடியாகுறோம்….” கெத்தாக கூறியவள் தன் இடத்திற்கு செல்ல… விக்கி ஹிட்லரை நினைத்து பரிதாபப்பட்டான்…..

வினு ஆர்வமாக எதிர்ப்பார்த்த வீக் எண்டும் வந்துவிட உற்சாகமாகவே கிளம்பினாள்…அவள் எதிர்ப்பார்த்தது போல் திரு தான் முதல் ஆளாக நின்றுக் கொண்டிருந்தான்… வந்திருந்த அனைவருமே அவனை ஆச்சரியமாக கவனித்தனர்…

எப்போதும் பார்ட்டிக்கு பர்மிஷன் வாங்கிக் கொடுப்பது மட்டுமே அவன் வேலை.. அந்த பக்கம் எட்டிக் கூட பார்க்க மாட்டான். ஆனால் இன்று வினுவிடம் இருந்து தப்பிப்பதற்க்காவே முதல் ஆளாக வந்துவிட்டான்.

அனைவரும் தன்னை விசித்திரமாக பார்ப்பது போல் தோன்ற, தன்னை இந்த நிலையில் நிறுத்திய வினுவை மனதில் சபித்தவாறே அனைவரையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்…

ஹரியின் மனைவி இரண்டு நாட்கள் முன்பு தான் தனது தோழியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தாய் வீட்டில் இருந்து ஹரி வீட்டுக்கு வந்திருக்க, ஹனியை அவர்களிடம் விட்டு வந்திருந்தான்… எப்போது வேண்டுமானாலும் ஹனி தன்னை தேட வாய்ப்பு இருப்பதால் பதட்டமாகவே அடிக்கடி ஹரிக்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தான்.

கம்பெனிக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸின் லானில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்க ஒரு பக்கம் பஃபே முறையில் உணவும் மற்றொரு பக்கம் மது பானமும் இருந்தது… பார்ட்டி இப்போது தான் தொடங்கியது என்பதால் அனைவரும் பேசியவாறு அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருக்க… அந்த இடமே விளக்கொளியில் ஜொலித்தது.

திருவை தேடியவாறே வந்த வினு அவனை பார்த்ததும் அவன் அழகில் உறைந்து தான் போனாள். நீல நிற ஷர்டும் அதன் மேல் அவன் போட்டிருந்த மிதமான வெள்ளை நிற கோட்டும் அவனை பேரழகனாக்க, வலது கையை பேண்ட் பாக்கெட்டில் நுழைத்தவாறும் இடது கையால் போனை பார்த்தவாறும் அடங்காத சிகை நெற்றியில் புரள நின்றிருந்தவனை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை வினுவிற்கு.

கண்கொட்டாமல் திருவை பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளை விக்கி செருமி கலைக்க… திருவும் திரும்பி பார்த்தான்… சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டாலும் கண்ணங்கள் இரண்டும் சூடாகுவது போல் தோன்ற கால்களை தரையில் அழுத்த பதித்து தன்னை சமன் செய்ய முயன்றாள்… வினுவை பார்த்த திருவுக்குள்ளும் லேசான சலனம் எட்டிப் பார்த்தது… அவனுக்கு பொருத்தமாக வெள்ளை நிற கவுனும் அதில் ஆங்காங்கே தெறித்திருந்த நீல நிற பூக்களும் அவளை மலர்ந்த நீல ரோஜாவாக காட்டியது…

ஒரு நொடி என்றாலும் திருவின் கண்களும் வினுவின் கண்களும் சந்தித்துக் கொள்ள… அவளது பார்வையில் தெரிந்த எதோ ஒன்று அவனை கட்டிப் போட்டது…. இருவரும் மோன நிலையில் ஒருவரையொருவர் பார்க்க… இடையில் விக்கி தான் திண்டாடிப் போனான்…

விட்டு விலகலாம் என்றால் அனைவரும் திரு மற்றும் வினுவின் உடை ஒற்றுமையை வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்… அதை உணராமல் இருவரின் பார்வைகளும் கவ்விக் கொண்டிருக்க கடைசியில் விக்கியே கரடியாக மாறி தொண்டையை செருமினான்…

அதில் இருவரும் கலைய… முதலில் சுதாரித்தது திரு தான்… என்ன செய்கிறோம் என்று தன்னையே நொந்தவன் திரும்பி நின்று அழுத்தமாக தன் தலையை கோதிக் கொள்ள… வாயோ “ஷீ இஸ் மெஸ்மெரைஸிங் மீ” என்று முணுமுணுத்தது…

வினு ஏதோ பேச வர, அதற்குள் நவின் வந்து இருவரையும் இழுத்துக் கொண்டு சென்றான்… அந்த கெஸ்ட் ஹவுஸில் இவர்களின் டீமும் மற்றொரு டீமும் மட்டுமே இருந்தனர்.

பார்ட்டி உற்சாகமாக தொடங்க., நவின் நடுநாயகமாக சென்று நின்று.,

“ஹாய் ப்ரெண்ட்ஸ்… நாம எல்லாரும் த்ரி மன்ந்த்ஸ் உழைச்சதுக்காக, நம்ம டீம் லீட் அரென்ஞ்ச் பண்ணின இந்த பார்ட்டிக்கு உங்க எல்லோரட சார்பா நம்ம டீம் லீடர்ஸ்க்கு நான் தேங்க்ஸ் சொல்லிடுறேன்…” என்றதும் அனைவரும் கைத்தட்டி தங்களின் நன்றியை திருவிற்கும் மற்றொரு டீம் லீடரான ரகுவிற்கும் தங்களின் நன்றிகளை தெரிவிக்க. இருவரும் சிறு புன்னகையோடு அதை ஏற்றுக் கொண்டனர்.

வினுவும் பெருமை பொங்க திருவை பார்த்தவாறு நின்றிருந்தாள்.

நவின் மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு, “நாம ஏன் சின்னதா ஒரு கேம் விளையாட கூடாது ப்ரெண்ட்ஸ்??” நவின் கேட்கவும் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.. விக்கி ஒரு பௌலை கையில் ஏந்தியவாறு வந்தான்…

“இதுக்குள்ள இங்க இருக்க எல்லாரோட பெயரும் இருக்கு… நீங்க ஒவ்வொருத்தரா வந்து ஒரு பெயர் எடுத்து அவங்களை பத்தி சொல்லணும்… பிடிச்சது மட்டும் இல்ல பிடிக்காதது கூட சொல்லலாம்….” நவின் கூறவும் அனைவரும் உற்சாகமாக கைத்தட்ட… அனைவரும் வட்டமாக நாற்காலிகளை போட்டு அமர்ந்தார்கள்.

ஒவ்வொருவராக சென்று ஒரு துண்டு சீட்டை எடுத்து அதில் வந்திருந்த பெயரை வாசித்துவிட்டு அவர்களை பற்றிக் பேச… சிறிது நேரத்தில் அங்கே சிரிப்பு சத்தம் நிரம்பியது… முதலில் நல்லதை மட்டும் கூறியவர்கள் பின் அவர்கள் சொதப்பிய தருணங்களையும் ஆபிஸில் அவர்களுக்கு இருக்கும் பட்டப் பெயர்களையும் கூற…விளையாட்டு சூடு பிடிக்க துவங்கியது. அனைவரும் அதை விளையாட்டாகவே எடுத்துக் கொண்டதால் அங்கு சிரிப்பிற்கு பஞ்சமில்லாமல் போனது.

விக்கி பௌலுடன் அமர்ந்திருக்க., வினு அவன் அருகில் அமர்ந்திருந்தாள்… விளையாட்டை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தவனை உலுக்கியவள்…

“விக்கி… டேய் விக்கி…”

“என்னடி” விளையாட்டை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தவனை தொந்தரவு செய்துவிட்டதில் விக்கி கடுப்புடன் அவளை பார்க்க.

“எனக்கு அரசு நேம் தான் வரணும்… அவனுக்கு என்னோட நேம் தான் வரணும்…” வினு கட்டளையிட விக்கி அவளை முறைத்தான்….

“லூசாடி நீ… அதெல்லாம் முடியாது…” விக்கி மறுக்க…

“இப்போ நீ செய்வியா மாட்டியா??? செய்யாட்டி நீ பச்சை சுடிக்கிட்ட அடி வாங்கினதை எல்லார் முன்னாடியும் சொல்லுவேன்…” வினு தயவு தாட்சன்யம் பாராமல் மிரட்ட… விக்கி வேறு வழியில்லாமல் அவள் சொல்வதற்கு ஒத்துக் கொண்டான்….

யாரும் அறியாமல் சில துண்டுகளில் வினுவின் பெயரை எழுதியவன் சரியாக திருவின் முறை வரும் போது சீட்டுகளை கையிலிருந்த பௌலில் போட்டான். திருவும் மேலோட்டமாக இருந்த துண்டுகளில் ஒரு துண்டு சீட்டை எடுக்க.,

அதில் வினுவின் பெயர் இருந்தது… புருவம் ஏற்றிப் பார்த்தவன் எதாவது தில்லு முல்லு இருக்குமோ என்பது போல் இருவரையும் ஏறிட்டான்… இருவரும் பச்சை பிள்ளைகள் போல் முகத்தை வைத்துக் கொள்ள… இருக்காது என முடிவு செய்து மற்றவர்களை நோக்கி திரும்பினான். …

“வினு ஸ்ரீ” …. வினுவின் பெயரை கூறியவன் அமைதியாக நிற்க….

“என்னோட நேம்மா பாஸ்…” சீக்கிரம் பேசுங்க…. ஆர்வம் மின்னக் கேட்டவளை முறைத்தவன் மனதில்.,

‘சரியான இம்சை… சூ ல இருக்க வேண்டியது எல்லாம் என்கிட்ட வேலை பார்த்து என்னை டார்ச்சர் பண்ணுது….’ என வசைபாட அது அறியாத மற்றவர்களோ திரு என்ன சொல்ல போகிறான் என்பது போல் பார்த்தனர்…

அனைவரின் ஆர்வப் பார்வையும் எதிர்க் கொண்டவன் தன் தொன்டையை செருமிக் கொண்டு.,.

“வினுவை பத்தி எனக்கு அதிகம் தெரியாது…. எனக்கு தெரிஞ்சதை சொல்றேன். வினு நம்ம கூட வந்து ஜாயின் பண்ணி ஒரு மாசம் தான் ஆகுதுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அந்த அளவுக்கு எல்லார் கூடவும் க்ளோஸ்… ரொம்ப டெடிக்கேஷன்… அதோட சின்சியரும்… எவ்வளவு விளையாட்டுத்தனம் இருந்தாலும் அவங்க வேலையை கரெக்ட் டைம்க்கு முடிச்சிடுவாங்க…. அதுனால அவங்களுக்கு எவ்வளவு ப்ராப்ளம் வந்தாலும் பரவாயில்ல….” என்றவனின் மனம் அவள் தன் துணி கிழிந்த போதும் மீட்டிங் ஹாலிற்குள் வந்த அசட்டுத்தனத்தை நினைத்துப் பார்த்தது..

மேலும் தொடர்ந்தவன்… “ரொம்ப தைரியம்… அவங்களுக்கு தோனினதை பட்டுன்னு சொல்லிடுவாங்க…” தன்னிடம் முதல் நாளே காதல் சொன்னவளை நினைத்துப் பார்த்தவன் மெலிதாக புன்னகைக்க… அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர்….

அவன் பேசி முடிக்கவும் அங்கு அப்படி ஒரு அமைதி…. அனைவரும் தன்னை வாய் பிளக்காத குறையாக பார்ப்பதை உணர்ந்தவன் என்ன என்பது போல் பார்க்க…. நவின் எழுந்து வந்து அவன் முன் நின்றான்….

“நண்பர்களே நம்ம சார் இவ்வளவு பேசுவாரான்னு நீங்க ஷாக் ஆகிட்டிங்கன்னு புரியுது… அதுக்காக சாரை இப்படியா சைட் அடிப்பிங்க..”. நவின் இலவகுவாக கூற அனைவரும் சிரித்தனர்… அதோடு நவின் கூறியதும் சரி என்று ஆமோதித்தனர்…

வினுவோ, “தெரியாது தெரியாதுன்னு சொல்லிட்டு நம்மளை நல்லா நோட் பண்ணிருக்கான்….” என மனதுக்குள் அவனை செல்லமாக வைதாள்…

திரு தன் இடத்தில் சென்று அமர, அடுத்து விக்கியின் முறை என்பதால்… பௌலை வினுவின் கையில் கொடுத்தவன் அதில் இருந்து ஒரு சீட்டை எடுத்தான்.. மேலே இருந்த சீட்டுகளில் வினுவின் பெயர் இருப்பதால் நன்றாக குலுக்கி. அடியில் இருந்து ஒரு துண்டு சீட்டை எடுக்க., அதில் இருந்த பெயரை பார்த்து அதிர்ச்சியானான்…. கண்கள் தாமாக வினுவின் புறமும் திருவின் புறமும் திரும்பியது…

‘அய்யய்யோ ஹிட்லர் நேம் வந்திடுச்சே… அவ தான் ஹிட்லர் பத்தி பேசுவேன்னு சொன்னா.. இப்போ எனக்கு அவரோட நேம் வந்துட்டுன்னு சொன்னா வினு என்னை சாகடிச்சிடுவாளே…. என்னப் பண்றது பேசாம வேற யார் பெயராச்சும் சொல்லிடுவோமா???’ விக்கி திருதிருவென்று முழிக்க., நவின் வந்து அவன் கையில் இருந்த சீட்டை பிடுங்கி பார்த்தான்..

“ஹேய் நம்ம திரு சார் நேம்….. சொல்லுடா விக்கி நம்ம சார் பத்தி…” விக்கியின் தோளில் தட்டியவன் தன் இடத்தில் சென்று அமர வினுவோ விக்கியை உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தாள்…. அதில் இன்னைக்கு நீ செத்த டா மகனே என்ற மறைமுக செய்தி இருந்தது…

“அது..அது…. ஹிட்ல… ஹி ஹி திரு சார் ரொம்ப நல்லவங்க…. ரொம்ப நல்லவங்க தான் சார்….” வினுவின் முறைப்பில் வார்த்தைகள் வராமல் விக்கி ஏதேதோ உளற., அனைவரும் அவனை பார்த்து சிரித்தனர்….

“விக்கி ஒழுங்கா பேசு டா….” சுற்றியிருந்ததில் ஒருவன் அவனை உற்சாகப்படுத்த…. எச்சில் கூட்டி விழுங்கியவன்…. வினு பக்கம் திரும்பாமல்.,

“திரு சார் ரொம்ப நல்லவங்க…. ரொம்ப ஹார்ட் வர்க் பண்ணுவார்… சிரிச்சா ரொம்ப அழகா இருப்பார் ஆனா சிரிக்க மாட்டார்… எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவார் ஆனா வெளிய காமிச்சிக்க மாட்டார்… பேசினா ரொம்ப ஜாலியா பேசுவாரா இருக்கும் ஆனா பேச மாட்டார்…” விக்கி திருவை பற்றி இருக்கு ஆனா இல்லை என்ற ரேன்ஞ்சில் பேச அனைவரும் கெக்கபெக்கேவென சிரித்தனர்… திருவிற்கும் சிரிப்பு எட்டிப் பார்த்தது ஆனால் அடக்கிக் கொண்டான்…

ஒரு வழியாக அனைவரின் கேலிகளையும் தாங்கிக் கொண்டு விக்கி திருவின் அருகில் சென்று அமர்ந்துவிட., இறுதியாக வினு மட்டுமே பேசாமல் எஞ்சியிருந்தாள்… அதுவும் விக்கியை பற்றி மட்டுமே யாரும் பேசவில்லை என்பதால் சீட்டு எடுக்காமலே அனைவரும் விக்கியை பற்றி பேச சொல்ல… பற்களை நறநறவென கடித்தவள் எழும்ப… அதற்குள் விக்கி எழும்பி,

“என்னப் பத்தி என் அக்கா சொன்னா என்னப்பா இன்ட்ரஸ்டிங்கா இருக்க போகுது… டைமாகுது வாங்க சாப்பிடலாம்” வினு தன்னை பற்றி கழுவி ஊத்துவதற்குள் விக்கி அனைவரையும் அப்புற படுத்த முயல… வினுவும் விக்கியை தனியாக கவனிக்க வேண்டியிருந்ததால் அமைதியாக இருந்தாள்….

ஏற்கனவே நேரம் ஒன்பதை நெருங்கிவிட்டதால் அனைவரும் விக்கி கூறியதும் சரியென்று மதுவின் பக்கமும் சாப்பாட்டின் பக்கமும் சென்றுவிட., விக்கி தனியாக வினுவிடம் மாட்டிக் கொண்டான்…

“வினு ப்ளீஸ் வேணாம்… எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சா தான் இருக்கணும்….. விட்டு டி….” தன்னை அடிக்க தயாராக இருந்தவளிடம் கெஞ்சியவன்., லானில் விக்கி ஓட, வினு அவனை துரத்திக் கொண்டு இருந்தாள்…

“நில்லு டா… எனக்கும் அரசுக்கும் கெமிஸ்ட்ரி செட்டாகும்னு பார்த்தா ஒவ்வொரு தடவையும் வில்லி மாதிரி வந்து நீ கெமிஸ்ட்ரி செட் பண்றியா???? நில்லுடா… நில்லு… உன்னை சும்மா விட மாட்டேன்….”

“அய்யோ வினு… ஹிட்லர் கூட கெமிஸ்ட்ரி செட் பண்ணி நான் என்னடி பண்ணப் போறேன்… எனக்கு அந்த மனுஷன பார்த்தாலே உதறல் எடுக்கும் டி… விட்ரு டி என்னை.. நான் அம்மாக்கு கடைசி ஒரே பையன் டி”… விக்கி அலற…

வினு ஓடிச் சென்று அவனை பிடித்து அவன் முதுகில் நான்கைந்து அடிகளை வழங்க… விக்கி தான் அப்பாவியாக மாட்டிக் கொண்டு அவள் கொடுத்த அடிகளை சுமைதாங்கியாக மாறி தாங்கிக் கொண்டான்..

இருவரும் அடித்துக் கொண்டே அந்த நீண்ட லானிலிருந்து சற்று தொலைவு வந்திருக்க., அவர்களின் சண்டையை கலைத்தது அங்கு கேட்ட பேச்சு சத்தம். அலங்காரத்திற்காக புதர் போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டிருந்த செடியின் பின் நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள் அவர்கள் இருவரம். மெல்லிய வெளிச்சத்தில் அவர்களின் உருவம் இவர்களுக்கு தெரிந்தாலும் இவர்கள் நிற்பதை அவர்கள் கவனிக்கவில்லை.

“டேய் நான் சொன்ன மாதிரி செஞ்சிட்டியாடா….” வினுவும் விக்கியும் ஆபிஸில் சேர்ந்த முதல் நாளன்று., திருவிடம் அடிவாங்கி விட்டு வெளியேறியவன் கேட்க…

மற்றொருவனோ, “ஆமாம் டா. நீ போதை மருந்து கலந்துக் கொடுத்த ஜீசை திருகிட்ட கொடுத்திட்டேன்… இன்னும் கொஞ்ச நேரத்துலளு அதோட வேலைய காட்ட ஆரம்பிச்சிடும்…. “

“காட்டணும் டா… இந்த பிரகாஷ் யாருன்னு காட்டணும்டா… ஒரு ப்ராஜக்ட் முடிக்கலை அப்படிங்கறதுக்காக என் மேலயே கை வச்சிட்டான்… சந்தர்ப்பம் கிடைக்கும் போது பழி வாங்கிடணும்னு தான் இவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்… இன்னைக்கு இத்தனை பேர் முன்னாடி அவன் போதைல தள்ளாடணும்… அசிங்கப்படணும்” என்றவனின் குரலில் அத்தனை பழிவெறி….

இருவரும் மேலும் சில வார்த்தைகள் திருவை திட்டிப் பேச… வினுவிற்கும் விக்கிக்கும் திக்கென்று இருந்தது…

“வினு இப்போ என்னப் பண்றது???” விக்கி பதட்டத்துடன் கேட்க….

“நீ இவனுங்களை கவனிச்சிக்கோ விக்கி… நான் அரசுவை பார்க்கிறேன்….” சட்டென்று முடிவு எடுத்தவள் திருவை தேடி பார்ட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல… அங்கே அவனை காணவில்லை….

“எங்க போய்ட்டான்????” வினு கண்களால் அனைத்து இடங்களையும் துளாவ., திரு அங்கு எங்குமே இல்லை…

விழிகள் தொடரும்…….

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here