மின்னல் விழியே குட்டித் திமிரே 1

0
1277
1551018907221|679x452

மின்னல் விழியே – 1

சென்னை பெசன்ட் நகர் சாலையில் கம்பீரமாக வீற்றிருந்தது “குமார் விலாஸ்”. அதன் மூன்றுமாடி கட்டிடமும்… வெளியலங்காரமும். பார்ப்பவர்களை திரும்பி பார்க்க தூண்டும்… பங்களா என்று சொல்வதை விட குட்டி அரண்மனை என்று சொல்வது தான் சரியாக இருக்கும்… அவ்வளவு செல்வ செழிப்போடு பார்ப்பவர்கள் கூட, வாழ்ந்தால் இப்படி ஒரு வீட்டில் வாழ வேண்டும் என பொறாமை படும் அளவிற்கு அந்த அரண்மனை தலை நிமிர்ந்து நின்றது…

அந்த ஆளுயர கேட்டை திறந்தால் நடைபாதையின் ஒருபுறம் வீற்றிருக்கும் தோட்டம் கண்ணை கவர மற்றொரு புறம் வரிசையாக நிற்கும் கார்கள்.. ஒரு ரைட் போலாமா எனுமளவிற்கு கண்ணை சிமிட்டி அழைக்கும்…. வீட்டின் உள்ளே நுழைந்தால் பிரம்மாண்டமாக இருந்த ஹாலும் அலங்கார விளக்குகளும் எதோ நட்ச்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்த மாயை ஏற்ப்படுத்தியது. (சரி சரி… நீங்க எல்லாம் ஸ்டோரி முழுசும் இவ வீட்ட பத்தியே சொல்லி சாகடிச்சிருவாளோன்னு பயப்படுறது கேட்க்குது..)

முகம் முழுதும் டென்ஷனோடு வேலையாட்களை விரட்டிக்கொண்டிருந்தார் அந்த வீட்டின் தலைவர் கிருஷ்ணக் குமார்… சிறு தொப்பைக்கூட இல்லாமல் பார்ப்பதற்கு முப்பதுகளில் இருப்பவர் போல் தோன்றினாலும் அவரின் வயது ஐம்பதை கடந்திருந்தது.. தமிழ்நாட்டின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவரும் ஒருவர்.. அந்த கர்வம் எப்போதும் அவரிடம் இருக்கும்… எதிலும் எங்கும் ஸ்டேட்டஸ் பார்ப்பவர்…. அவர் ஸ்டேட்டஸ் பார்க்காமல் செய்த ஒரே விஷயம் அவரின் தந்தை கூறியதற்க்காக அவரின் நண்பர் மகள் சுதாவை கட்டிக்கொண்டது தான்… அதுவும் தந்தை சொத்து வேண்டுமென்றால் சுதாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நிபந்தனை போட்டதால் தான்… அதன் பின்னர் அவரும் சுதாவை ஏற்றுக் கொண்டார்… காரணம் அமைதியான சுதா அவருக்கு அடங்கி போனதால் தான்…

“சுதா சுதா…. டைமாச்சு… எல்லாம் ரெடியா???? இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் வந்திடுவாங்க…” கிட்சன் அருகே நின்று கொண்டு குமார் கத்த… அதில் செய்துக்கொண்டிருந்த வேலையை பாதியில் விட்டுவிட்டு ஓடோடி வந்தார் சுதா… “எல்லாம் ரெடிங்க… கிட்சன்ல எல்லாம் நானே பக்கத்துல இருந்து சரி பார்த்துட்டேன்…”

“கிட்சன் வேலை இருக்கட்டும் வினு ரெடியாகிட்டாளா?? நிகில் எங்க???” கோபம் குறையாமல் குமார் எகிறினார்..

“அப்பா நான் இங்க இருக்கேன்” என்றபடி வந்தான் அந்த வீட்டின் மூத்த வாரிசு நிகில் குமார்…. அவனை பின் தொடர்ந்து அவனது மனைவி அனுவும் அவளின் பின்னே அவர்களின் நான்கு வயது மகன் ரோஹித் குமாரும் வர… தாயின் பின்னே வந்தவன் தாத்தாவை அங்கு பார்த்தும் பயந்தில் ஓடி விட… அனுவும் மெதுவாக அங்கிருந்து நழுவிக் கொண்டாள்… அனைவருக்குமே குமாரை கண்டால் பயம்.. நிகில் மட்டும் சாதுவாக இருப்பான்… அப்பாவின் சொல் பேச்சு தட்டாத பிள்ளை… வாயே திறக்க மாட்டான்…

“நான் அமெரிக்கா போறதுக்கான ஏற்ப்பாடு எல்லாம் முடிஞ்சிதா??? அங்க ஸ்டே பண்றதுக்கு எல்லாம் அரென்ஞ் பண்ணிட்டியா??? “

“எல்லாம் பண்ணியாச்சு ப்பா…. நீங்க கிளம்புறது மட்டும் தான் பாக்கி… “அமைதியாக பதில் கூறியவனை பாசமாக ஒரு கணம் பார்த்தவர் மறுநொடி பார்வையை மாற்றிக் கொண்டார்… ஒரு நொடி தோன்றினாலும் அவரின் முகத்தில் தெரிந்த கணிவை நிகில் கண்டுக் கொண்டான்… இது மட்டுமே அவனை எப்போதும் தந்தையிடம் அடங்கி போக வைக்கும் விஷயம்… கோபப்பட்டாலும் எப்போதுமே அவருக்கு பாசம் உண்டு என்பது நிகில் எண்ணம்.

“ஓ.கே நிகில்.. நான் டிரைவர் கூட ஏர்ப்போர்ட் போய்க்கிறேன். நான் கிளம்பினதும் நீ நம்ம கம்பெனில நடக்கிற மீட்டிங்க பார்த்துக்கோ.. இம்பார்ட்டன்ட் மீட்டிங்… இந்த டீல் நமக்கு கிடைச்சிதுனா நம்ம ஸ்டேடஸ் என்னும் இந்த சோசைட்டில ரொம்ப பெரிய பொசிஷன்க்கு போய்டும்” என்றவரின் கண்களில் பணம் தான் எல்லாம் என்ற மாயை இருந்தது…. அதை உணர்ந்த சுதாவும் நிகிலும் மனதில் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று அவரை நினைத்து வருத்தப்பட்டாலும் எதிர்த்து பேச துணிவில்லாமல் அமைதியாக நின்றனர். (பெரிய பணப் பிஸ்தா தான்)

ஓ.கே ப்பா எல்லாம் நான் பார்த்துக்கிறேன்… என்றவாறு நிகில் அனுவை தேடிச் செல்ல…..

“எங்க உன்னோட ரெண்டாவது புள்ள… சம்பந்தி வீட்டுக்காரங்க எல்லாம் வந்துட்டு போறது வரைக்கும் தயவு செய்து அவன என் கண் முன்னாடி வர வேண்டாம்னு சொல்லு…” கணவனின் குணத்தை மாற்றிக் கொடு என லட்சம் தடவையாக தெய்வத்திடம் தூது அனுப்பி கொண்டு இருந்த சுதா குமாரின் பேச்சில் கதிகலங்க…

“என்னங்க…. அவன் நம்ம பிள்ளங்க… வினுக்கு அகில் மேல பாசம் ஜாஸ்தி… அவன் இல்லாட்டி வருத்தப்படுவா…” அகிலை எதாவது சொல்லி வீட்டை விட்டு அனுப்பிவிடுவாரோ என்ற பதட்டம் அப்பட்டமாக அவர் முகத்தில் தெரிந்தது… இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டே மாடியில் இறங்கி வந்தான் அகில் குமார்… குமார் விலாஸின் இரண்டாம் வாரிசு…. படிப்பை முடித்துவிட்டு தன்னோடு வந்து பிஸினசில் உதவி செய்வான் என குமார் எதிர்ப்பார்க்க அகிலோ புரியாத புதிராக வந்து நின்றான்… தாடியுடனும் எப்போதும் சோகமாகவும் வலம் வருபவனின் ரகசியம் யாருக்கும் புரியவில்லை… புரிந்தவரும் அதை கண்டுக் கொள்ளவில்லை… யாரை பழி வாங்க இப்படி இருக்கிறான் என்பது அகிலுக்கே வெளிச்சம்….

எப்போதும் போல் இந்த வீட்டிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் வந்தவன் தன் செல்லை பார்த்தவாறே வெளியேறி விட்டான்… அதில் சுதாவிற்கு புரிந்து போனது… மகன் தந்தை கூறியதை கேட்டுவிட்டான் என்று… செல்லும் மகனை தடுக்க வழி தெரியாமல் சுதா பரிதவிக்க…

“போய்ட்டானா… ரொம்ப சந்தோஷம்… தங்கச்சிய பொண்ணு பார்க்க வராங்கன்னு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா??? ராஸ்கல்…” அவர் தான் அவனை இங்கு இருக்க கூடாது என பேசினார் என்பதை மறந்து அவர் பேச… சுதாவிற்கு அத்தனை கோபம் ஆனாலும் அடக்கிக் கொண்டார்… (யோ நீ தானே யா போக சொல்லி கத்தின… இப்போ இப்படி பேசுற??)

“வினு ரெடியாகிட்டாளா????” அகிலை மறந்து அவர் வினுவை பற்றி கேட்க,

“அவ அவளோட ரூம்ல ரெடியாகிட்டு இருக்காங்க…“ குமாரிடம் பேச பிடிக்கவில்லை என்றாலும் பதில் சொல்லாவிட்டால் கத்துவார் என்பதால் அமைதியாக சுதா கூற,

“சீக்கிரம் ரெடியாக சொல்லு…. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இப்போ வந்திடுவாங்க… நிச்சயம் முடிஞ்சதும் நான் அமெரிக்கா கிளம்பணும்…”

நிச்சயம் என்றதில் அதிர்ந்த சுதா… “என்னங்க…. பொண்ணு தானே பார்க்க வராங்கன்னு சொன்னிங்க…. இப்போ என்ன இப்படி சொல்றிங்க??? நம்ம வினுக்கு பிடிக்க வேண்டாமா??? “ பெற்ற தாயிடம் கூட தன் மகளை பற்றி கூறவில்லையே என்று ஆதங்கமாக அவர் கேட்க,

“அதுக்கென்ன… அவளுக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டாலும் என் ப்ரெண்ட் ரகுவோட பையன் ராம் தான் இந்த வீட்டோட மாப்பிள்ளை.. அவனை கல்யாணம் பண்ணிகிட்டா உன் மக பெரிய கோடீஸ்வரியாகிடுவா.. எனக்கு அடுத்து கோடீஸ்வரன் லிஸ்ட்ல ரகு தான் இருக்கான்… வினு கல்யாணம் முடிஞ்சதும் நாங்க புது பிஸ்னெஸ் ஒன்னு தொடங்க போறோம். அதனால அவளுக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டியும் ராம் தான் என் மருமகன். உன் பொண்ண தயாரா இருக்க சொல்லு” என்றவர் வாசலில் கார் சத்தம் கேட்டு வாசலுக்கு விரைந்தார்.. பெண்ணின் கல்யாணத்தை கூட பிஸினசாக பார்க்கும் குமாரை வெறுப்பாக பார்த்த .சுதாவும் வேறு வழியில்லாமல் அவரை பின் தொடர, வாசலில் ரகு அவரது குடும்பத்தோடு வந்துக்கொண்டிருந்தார்….

இதற்கு முன்பும் ரகு குடும்பத்தை தொழில் முறை சந்திப்பு என தன் குடும்பத்திற்கு அறிமுகப் படுத்தியிருந்தார் குமார் அதிகம் பேசியதில்லை என்றாலும் குமார் வீட்டில் அனைவருக்கும் பரிட்ச்சயமே. ராம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் அவன் கண்களில் உண்மையில்லையோ என எப்போதும் சுதாவிற்கு தோன்றும்…. அவர்களை வரவேற்று சோபாவில் உட்க்கார வைத்தவர் சிறிது நேரம் பிசினஸ் பற்றி பேச… ராம் மாடியை பார்த்துக் கொண்டிருந்தான்… அதை கவனித்த குமார், “சுதா நீ போய் வினுவ வர சொல்லு… “

சரி என்பது போல் தலையசைத்த சுதா மாடிக்கு செல்ல…. சென்ற வேகத்தில் ஓடி வந்தார்…. “என்னங்க இங்க பாருங்க… வினுவ காணோம்ங்க…. அவ பெட்ல இந்த லெட்டர் தான் இருந்துச்சு…” என கைகளில் லெட்டரோடு ஓடி வந்தவர் மூச்சிரைக்க குமாரிடம் அதை நீட்ட…. சுதா சொன்னதில் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் சிலையாக நின்றனர்….

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க அனு தன் அத்தையின் கையில் இருந்த லெட்டரை படபடப்புடன் வாங்கி பிரித்தாள்… அனைவரையும் ஒரு முறை சுற்றிப் பார்த்தவள் சுதாவின் அதை படி என்னும் ஜாடையில் அதை வாசித்தாள்…

அன்புள்ள அப்பா அம்மாவுக்கு,
நான் உங்ககிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு… ஆனா நீங்க கேட்கிற மாதிரி இல்ல அதான் நான் இப்படி ஒரு முடிவு எடுத்திட்டேன்… எனக்கு வேலைக்கு போகணும்…. எனக்கு பிடிச்ச ஒருத்தங்கள மீட் பண்ணி அவங்கள நிறைய லவ் பண்ணி சந்தோஷமா வாழணும்… என் மேல செம்ம கோபத்துல இருப்பிங்கன்னு எனக்கு தெரியும்… கவலைப்படாதிங்க நான் யார் கூடவும் ஓடிப் போகல… ஆனா என்னோட சப்போர்ட்க்கு என்னோட எருமை… சே சே அருமை தம்பி விக்கிய கூட்டிட்டு போறேன்… எங்களுக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சிருக்கு அங்க தான் போறோம்… எங்கள தேட வேண்டாம்… சீக்கிரம் உங்க கோபம் குறைஞ்சதும் நாங்க தங்கப்போற அட்ரஸ் கம்பெனி நேம் எல்லாம் சொல்றேன்…. அப்புறம் இந்த லெட்டர் ரீட் பண்ணும் போது அந்த சப்ப மூக்கு ராம் அங்க தான் இருப்பான்… அவன்கிட்டயும் சொல்லிடுங்க… எனக்கு அவன சுத்தமா பிடிக்கல… அவனும் அவன் சப்ப மூக்கும்…. டேய் சப்ப மூக்கு ராம்… உன் பெயர் வேணும்னா ராம்மா இருக்கலாம் ஆனா நீ கேடின்னு எனக்கு தெரியும் டா… இந்த வினு உனக்கு எப்பவுமே கிடைக்க மாட்டா…. போய்ட்டு வரேன் அம்மா அப்பா…
இப்படிக்கு உங்கள் அன்பு மகள்

லெட்டரை படிக்க படிக்க அனுவிற்கு சிரிப்பு வரும் போல் இருந்தது ஆனால் சிரித்தால் இருக்கும் கோபத்தில் தன் மீது அனைவரும் பாய வாய்ப்பு உள்ளதால் சிரிப்பை முழுங்கிவிட்டு அனு அனைவரையும் கலவரமாக ஏறிடுவது போல் பார்க்க, குமார் கோபத்தின் உச்சியில் முகம் சிவக்க நின்றிருந்தார்.. சுதா கைகளை பிசைந்து கொண்டு நிற்க நிகிலோ வினுவின் தைரியத்தை எண்ணி வியந்துக் கொண்டிருந்தான்…

“என்ன அங்கிள் இதெல்லாம்… எங்கள வர வச்சி அவமானப்படுத்துறிங்களா??” அவளை பார்த்த முதல் நாளிலிருந்தே எப்படியாவது அவளை அடைந்து விட வேண்டுமென திட்டம் தீட்டி ஒவ்வொரு காயாக அவன் நகர்த்தியிருக்க அதை உடைத்து எறிந்து விட்டு சென்றவளை நினைத்து அடக்கப்பட்ட கோபத்துடன் ராம் கத்த… குமார் என்ன சொல்வது என புரியாமல் வினுவை மனதில் திட்டித் தீர்த்தார்…

“மாப்பிள்ளை… நீங்க கோபப்படாதிங்க… அவ எதோ சின்ன பொன்னு வேலைக்கு போகணும்னு ஆசைல இப்படியெல்லாம் பண்ற… நான் அவகிட்ட பேசி கண்டிக்கிறேன்…” அடங்கி போவது தன் குணம் இல்லையென்றாலும் ராம் தான் மருமகனாக வர வேண்டும் என்ற ஆசை அவரை பேச வைத்தது…

“எங்க எல்லாரோட முகத்துலயும் கரிய பூசிட்டு போயிருக்க… அவள சின்ன பொண்ணுன்னு சொல்றிங்களா அங்கிள்… பிடிக்காட்டி முதல்லையே சொல்லியிருக்கலாம் இப்படி வீடு வரைக்கும் வர வச்சி கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்…. இதுக்கான பதிலடிய கண்டிப்பா நான் தருவேன்…. டேட் மாம்.. இன்னும் என்ன இங்கையே நின்னுட்டு இருக்கிங்க வாங்க போகலாம்..” என்றபடி அனைவரையும் முறைத்தவாறே ராம் தன் பெற்றோரோடு கிளம்ப.. குமார் அவர்களை தடுக்கும் வழி தெரியாமல் நின்றார்… ரகுவிற்கு தன் நண்பனின் அந்த நிலை வருத்ததை அளித்தாலும் மகனின் சொல் மீறி எதாவது சொன்னால் அவனிடம் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டும் என்பதால் அமைதியாகவே ராமை பின் தொடர்ந்து சென்றுவிட்டார்.

வெளியே வந்த ராமோ அந்த வீட்டை திரும்பி பார்த்தவன், “நான் சப்ப மூக்கு ராம்மா…..என்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறன்னு நானும் பார்க்கிறேன் டி…” மனதில் வினுவை சும்மா விடக்கூடாது என முடிவெடுத்தவன் தன் காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான்…

ராம் கிளம்பவும் அமைதியாக நின்றுக்கொண்டீருந்த சுதாவிடம் வந்த குமார் “என்னடி எதுவும் தெரியாதவ மாதிரி நிக்கிற… சொல்லு உன் பொண்ணு எங்க??? அவள உடனே வரச் சொல்லு… “ நண்பன் குடும்பம் முன்பு தன்னை அவமானாபடுத்திவிட்டாளே என குமார் கத்த,.

“என்னங்க நிஜம்மா எனக்கு எதுவும் தெரியாதுங்க… வினு இப்படி பண்ணுவான்னு நானும் எதிர்ப்பார்க்கலங்க…” கலங்கிய கண்களோடு சுதா உரைக்க… அவரை முறைத்தவர்,

“இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வச்சிக்காத… உனக்கு தெரியாம உன் பொண்ணு எதுவும் பண்ண மாட்ட… அவ அப்படியே பண்றதா இருந்தாலும் உன் செல்ல பிள்ள உன்கிட்ட சொல்லியிருப்பான்…. இப்போவே அவங்களுக்கு போன் பண்ணு….உடனே வீட்டுக்கு வர சொல்லு..”. குமார் கர்ஜிக்க…. சுதாவின் கண்களில் இப்பவா அப்பவா என தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தை தொட்டது…

தாயின் கலங்கிய முகத்தை கண்ட நிகில், அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சிருக்காது… வினுவும் விக்கியும் இப்படி பண்ணினதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க… என்றவன் தந்தைக்கு ப்ளைட்டிற்கு நேரமாவதை உணர்ந்து, “அப்பா நீங்க இப்போ கிளம்புங்க நான் எல்லாம் பார்த்துக்கிறேன்… நீங்க திரும்ப வரும்போது வினுவும் விக்கியும் இங்க இருப்பாங்க… அதுக்கு நான் பொறுப்பு… “

ஒரு நிமிடம் தன் நெற்றியை தேய்த்து யோசித்தவர்… தான் பேசுவதை விட நிகில் பேசினால் வினு திரும்பி வர வாய்ப்பு அதிகம் உள்ளதாலும் அடுத்ததாக தனக்கு காத்திருக்கும் வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதாலும் நிகில் சொல்வதை கேட்கலாம் என முடிவெடுத்தவர் சுதாவிடம், “இங்க பாரு இப்போ நான் கிளம்பறேன் ஆனா நான் திரும்பி வரும்போது ரெண்டு பேரும் இங்க இருக்கணும்… நான் வந்ததும் ராம்க்கும் வினுவுக்கும் கல்யாணம் நடக்கும்… நான் நடத்திக் காட்டுறேன்…”. சுட்டுவிரலை நீட்டி சுதாவை எச்சரித்தவர் விறுவிறுவென்று படிகளில் ஏறி மறைந்தார்…

அவர் சென்றதும் அங்கிருந்த சோபாவில் சுதா அமர அவரின் கைகளை பிடித்துக் கொண்டு அனுவும் அவர் அருகில் அமர்ந்துக் கொண்டாள்… அடுத்த அரைமணிநேரத்தில் குமார் சுதாவை முறைத்தவாறே கிளம்பிவிட நிகில் அவரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தவன் அடுத்து தன் மீட்டிங்கிற்கு நேரமாவதை உணர்ந்து விடுவிடுவென உள்ளே வர… அங்கு சுதாவும் அனுவும் சிரித்த முகத்துடன் ஜுஸை பருகிக் கொண்டிருந்தார்கள்…

“அப்பா திட்டிட்டு போயிருக்காங்க… வினுவும் விக்கியும் காணாம போய்ருக்காங்க ஆனா அத பத்தியெல்லாம் கவலைபடாம இவங்க என்ன இப்படி இருக்காங்க… அப்பா சொன்ன மாதிரி அம்மாக்கு வினு போனத பத்தி தெரியுமோ” என நினைத்தவாறே நிகில் தன் தாயின் அருகில் அமர…. டேபிளில் தயாராக இருந்த மற்றொரு க்ளாஸ் ஜுஸை எடுத்து நிகில் முன்பு நீட்டினாள் அனு….

“என்ன நடக்குது இங்க… ம்மா… தங்கச்சி காணாம போய்ருக்கா நீங்க இப்படி இருக்கீங்க..”. ஒன்றும் புரியாமல் நிகில் கேட்டாலும் இவ்வளவு நேரம் தந்தை என்ன செய்வார் என்ற படபடப்புடன் இருந்ததால் கைகள் தானாக ஜுசை வாங்கி பருகியது.

“வினு காணாம எல்லாம் போகல டா நான் தான் அனுப்பி வைச்சேன்” என சுதா அசால்ட்டாக கூறிவிட்டு ஜுஸை ரசித்து குடிக்க.. நிகிலுக்கு புரையேறியது… அவசரமாக அவன் தலையை தட்டிய அனு… பார்த்துங்க… “மெதுவா குடிங்க… நம்ம விக்கியும் கூட தானே போய்ருக்கான் அதனால கவலைப்படாதிங்க….”

“அப்போ இந்த நடிப்புல நீயும் கூட்டா” என்பது போல் நிகில் அனுவை முறைக்க… அனுவோ உளறிட்டோமா என அசடு வழிந்தாள்…

“டேய் நிகி எதுக்கு மருமகள முறைக்கிற????? நான் தான் வினுகிட்ட அந்த ராம் உனக்கு வேண்டாம்னு சொன்னேன்… கரெக்ட்டா பெங்களூர்ல வேலை கிடைச்சிது…. சரின்னு ரெண்டு பேரையும் அனுப்பிட்டேன்..”. எதோ சாதனை செய்தது போல் சுதா பெருமை பீற்றிக் கொள்ள…

“என்னம்மா நீங்க… இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லாட்டி சொல்லியிருக்கலாம் அத விட்டுட்டு இப்படி பண்ணியிருக்கிங்க… அப்பாக்கு இதனால கோபம் தான் அதிகம் வரும்… ரெண்டு பேரையும் வர சொல்லுங்க…”

“முடியாது டா… என் பிள்ளைங்க கொஞ்ச நாள் அவங்க ஆசைப்படி இருக்கட்டும்… இங்க வந்தா உன் அப்பா அடுத்த ப்ளைட்ல இங்க வந்து குதிச்சி அந்த ராம்க்கு என் பொண்ண கட்டி கொடுக்கிற வேலைய பார்ப்பாரு…”

சுதா சொல்வதும் நியாயமாக படவே நிகிலும் அமைதியாக இருந்தான்…. ராமை பற்றி கேள்வி பட்டிருக்கிறான் தான்… தண்ணி தம் என அனைத்து கெட்ட பழக்கங்களிலும் ஊறியவன் என்பதால் தன் தந்தையிடம் இந்த சம்பந்தம் வேண்டாம் என தன் பயத்தையும் மீறி கூறிவிட்டான்… ஆனால் அவரோ வினுவுடன் கல்யாணமாகினால் எல்லாம் சரியாக போய்விடும் என சமாளித்துவிட்டார்…

நிகிலின் அமைதியை பார்த்து சுதாவே மீண்டும் பேசினார்…” ப்ளீஸ் நிகி… இந்த அம்மா உன்கிட்ட கெஞ்சி கேட்டுக்கிறேன்… வினு அவ சந்தோஷப்படி இருக்கட்டும்… அந்த ராம்ம கல்யாணம் பண்ணி அவ கஷ்ட்டப்படுறத என்னால பார்க்க முடியாது டா …”. கண்களில் கண்ணீர் தளும்ப தன்னிடம் யாசிப்பது போல் அவர் பேசியதும் சட்டென அவர் கைகளை பற்றிக் கொண்டவன்… “ம்மா.. என் தங்கச்சி வாழ்க்கைய நான் கெடுக்க நினைப்பேனா??? எனக்கும் இந்த ராம்ம பிடிக்கல மா… நானும் எதாச்சும் சந்தர்ப்பம் கிடைச்சா ஸ்டாப் பண்ணிடலாம்னு தான் பார்த்துட்டு இருந்தேன்…. ஆனா நீங்க எல்லாரும் முந்திக்கிட்டிங்க…” என்றவன் சுதாவின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டான்…

ஒரு வழியாக நிகில் புரிந்துக் கொண்டான் என்பதில் அனுவும் சுதாவும் சந்தோஷமாக… நிகில் மீண்டும் பதட்டத்துடன் “ம்மா அப்பா தான் இன்னும் த்ரி மன்ந்த்ஸ்ல வந்துடுவாங்களே அதுக்க அப்புறம் எப்படி தப்பிக்கிறது??? “

“அது அப்போ பார்த்துக்கலாம் டா…. உன் அப்பா பிஸ்னெஸ் பிஸ்னெஸ்ன்னு ஓடும் போது நிறைய மனசுக்குள்ள திட்டியிருக்கேன் ஆனா இன்னைக்கு அந்த பிஸ்னெஸ் தான் என் பொண்ண மூணு மாசம் காப்பாத்த போகுது….” என்றவரின் பேச்சில் அப்படியொரு வெறுமை… தன் மாமியாரின் மற்றொரு பக்கம் வந்தமர்ந்த அனு அவரின் கைகளை பிடித்துக் கொண்டு உங்களுக்கு நாங்க இருக்கோம் என்பது போல் அவர் தோளில் சாய்ந்துக் கொண்டாள்… நிகிலும் தன் தாயின் கரத்தை ஆதரவாக பற்றிக் கொண்டான்….

“வினு இப்போ என்னம்மா பண்ணிட்டு இருப்பா ????” நிகில் வினுவின் நினைவில் கேட்க…. சுதாவும், “வினுவ விடுடா என் பையன் அவகிட்ட மாட்டிட்டு என்னப் பாடு படுறானோ” என கவலையாக கூற.. நிகிக்கு சிரிப்பு வந்தது… கண்கள் தாமாக எதிப்புற சுவரில் மாட்டியிருந்த வினு மற்றும் விக்கியின் ஒரு வயது பிறந்த நாள் கொண்டாட்ட படத்தில் நிலைத்தது… விக்கி அழுது கொண்டிருக்க அவனது வாய்க்குள் பெரிய துண்டு கேக்கை அடைக்க முயன்று கொண்டிருந்தாள் அவனது இரட்டை சகோதரி வினு….

இருவரும் இரட்டையர்கள் என்பதால் ஒரே பள்ளி ஒரே காலேஜ் என ஒன்றாகவே அமைய விக்கி தான் அவளிடம் மாட்டிக் கொண்டு முழிப்பான்…. வேலை கிடைத்ததும் வினுவிடம் இருந்து தப்பித்து விடுவேன் என வீர வசனம் பேசியவன் இப்போது வினுவுடன் வேலை செய்ய போகிறான் என்பதில் நிகிலுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர….. மற்றவர்களும் அதே நினைவில் சிரித்தனர்….

டிராபிக் மிகுந்த அந்த சாலையில் ஆகாய வண்ணத்தில் இருந்த அந்த ஸ்கூட்டி பெப் பறக்க… அதை ஒட்டியவளோ இதை விட வேகமாக செல்ல முடியாதா என்பது போல் ஆக்சிலேட்டரை திருகினாள்…. அவள் திருகிய வேகத்தில் வண்டி மேலும் வேகமெடுக்க… எதிர்ப் புறத்தில் வந்த வண்டியை இடிக்குமளவிற்கு சென்று கடைசி நொடியில் வளைத்து திருப்ப அந்த வண்டியை ஓட்டிப் போனவனோ சனியன்.. போறத பாரு என சத்தமாகவே திட்ட… போடா என்பது போல் திரும்பி அவனை முறைத்தவள் தன் வண்டியின் வேகத்தை கூட்டினாள்….

அவள் வினு ஸ்ரீ… பிரம்மன் அவளை மட்டும் படைக்க ஒவ்வொரு நிமிடமும் மிகுந்த ஈடுபாட்டோடு செலவழித்திருப்பாரோ என தோன்றுமளவிற்கு அவ்வளவு அழகு…. சிறிய வட்ட முகம்… இயற்கையாவே திருத்தப்பட்டது போல் அமைந்த புருவம்… முகத்தில் கண் மட்டும் தான் இருக்கிறதோ நினைக்கும் அளவிற்கு இரண்டு பெரிய காந்த கண்கள்… சிறிய மூக்கு அதில் ஒற்றை பக்கத்தில் சிறு வைரம் போல் மின்னிய மூக்குத்தி…. பிங்கிஷ் நிறத்தில் இருந்த சிறிய உதடுகள்… அதற்கு மற்றவரின் கண் பட்டு விடக் கூடாது என கீழ் இதழின் மேல் ஒரு மச்சம்… மொத்ததில் பார்ப்பவரை கட்டியிழுக்கும் பேரழகியவள்….

அலைலையாக காற்றில் மிதந்த அவளது கேசம் பின்னால் அமர்ந்து உயிரை கையில் பிடித்திருந்த விக்கியின் வாய்க்குள் சென்று வினுவை போல அவனை கொலைவெறியாக்க… அதை ஒதுக்கியவன்… “டீ வினு கொஞ்சம் மெதுவா போடி … ரோட்டுல போறவன் எல்லாம் திட்டுறான் டி..”

“ம்ப்ச் அமைதியா இருடா… அக்கா உன்ன பத்திரமா கொண்டு போய் சேர்த்திடுவேன்….” என்றவள் பேருந்து நிலையத்திற்கு நேராமாவதை உணர்ந்து இன்னும் வேகத்தை கூட்ட…

ம்க்கும் இவ போற ஸ்பீட்க்கு எமன்கிட்ட தான் பத்திரமா கொண்டு சேர்ப்பா போல இருக்கே… டேய் விக்கி இப்படி வந்து மாட்டிக்கிட்டியே டா தன்னை நினைத்தே பரிதாபமாக நினைத்துக் கொண்டவன் வெளியே, “என்ன விட ஒரு நிமிஷம் முன்னாடி பிறந்த நீ எனக்கு அக்காவா??? அம்மாவோடா வயித்துக்குள்ள கூட அடங்கி இருக்கமாட்டேன்னு என்ன தள்ளிவிட்டுட்டு பர்ஸ்ட் பிறந்தவ டி நீ….”

“டேய்ய்ய்…. இப்படியெல்லாம் பேசின அப்புறம் உன்ன பஸ்சுக்குள்ள தள்ளி விட்டுட்டு போய்டுவேன் ஜாக்கிரதை” என வினு மிரட்ட…. விக்கியும் அவள் செய்தாலும் செய்வாள் என்பதால் அமைதியாகிவிட… ஸ்கூட்டி வினுவின் கைகளில் பறந்தது..

சற்று நேரம் அமைதியாக இருந்தவன் மீண்டும் “ இங்கையே எதாச்சும் வேலை தேடிக்கலாம் டி… என்னால அம்மாவ பார்க்காம இருக்க முடியாது… அதான் அப்பா அமெரிக்கா போய்ருப்பாங்களே… போயும் போயும் அந்த ராம்க்காக நாம ஊர விட்டு ஓடிப்போறதா ப்ளீஸ் டி… இங்கயே வேலை தேடிக்கலாமா??.” தாயின் நினைவில் விக்கி கெஞ்ச…

“அந்த ராம் எல்லாம் எனக்கு விஷயமே இல்லடா விக்கி… நான் போறது நம்ம அகில் அண்ணாவுக்காக… அவன் சந்தோஷம் அங்க இருக்குனு தெரிஞ்ச அப்புறம் எப்படிடா சும்மா விடுறது… அப்பா திரும்ப வரதுக்குள்ள நம்ம அகில் அண்ணா தொலைச்ச சந்தோஷத்த நான் திருப்பி கொடுப்பேன்… அதுவரைக்கும் நீ என்கிட்ட மாட்டிக்க வேண்டியது தான்” என மனதில் நினைத்தவள்…. “ஏன் டா அம்மா அம்மான்னு பிறந்த குழந்தை மாதிரி அழுற??? அம்மா தான் நம்மள அனுப்பி வச்சது அத மறந்துடாத…” என்றாள்…

“பொய் சொல்ற உனக்கு எப்படியாச்சும் பெங்களூர் போகணும் அதுக்கான சான்ஸ் பார்த்துட்டு இருந்த … சரியா இந்த ராம் விஷயம் வந்ததும் அம்மாவ ப்ரைன் வாஷ் பண்ணி கிளம்பிட்ட… அதுவும் என்னையும் சேர்த்துகிட்டு…” விக்கி அவளின் எண்ணத்தை சரியாக கணிக்க… ஆனால் அதை ஒத்துக் கொண்டாள் அது வினு இல்லையே……

“அப்போ இந்த அக்காவுக்காக நீ எதுவும் செய்ய மாட்ட அப்படி தானே??? அந்த ராம்ம கட்டிக்கிட்டு நான் கஷ்டப்படணும் அது தானே உன் ஆசை” என கத்தியவள் இவ்வளவு நேரம் விக்கி பேசுவதால் சற்று மெதுவாக ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டிருந்தவள் மீண்டும் வேகத்தை அதிகரிக்க… விக்கிக்கு பயத்தில் குலை நடுங்கியது…

“வினு ப்ளீஸ் ஸ்லோவா போ… நான் உன் கூடவே வரேன்… எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம்… நீ தான் என்னோட பெஸ்ட் அக்கா.. என் செல்லம் நீ… என்னோட ரெண்டாவது அம்மா நீ…” என பயத்தில் உளறினாலும் அவன் கூறிய அனைத்தும் உண்மையே….

வேகமாக சென்றுக் கொண்டிருந்தவள் விக்கி கூறியதில் சற்று சமாதனமாகி தன் வேகத்தை குறைத்து அந்த திருப்பத்தில் திருப்ப. முயல… அவளை கடந்து அதிவேகத்துடன் சென்றது மற்றொரு ஸ்கூட்டி.. கிட்ட தட்ட வினு சென்ற வேகத்தில் அந்த ஸ்கூட்டியில் சென்ற இரண்டு பெண்கள் திருப்பத்தின் எதிர்ப்பக்கத்தில் இருந்து வந்த காரில் மோதி கீழே சரிந்தனர்… சட்டென்று தன் கண் முன்னே நடந்து விட்ட நிகழ்வில் வினு அதிர்ச்சியாகி தன் ஸ்கூட்டியை சடன் ப்ரேக் போட்டு நிறுத்த… விக்கியும் கீழே சரிந்துகிடந்த பெண்களுக்கு உதவி செய்யும் நோக்கில் ஸ்கூட்டியை விட்டு இறங்கினான்…

கார் அவ்வளவு வேகத்தில் வராததால் காரின் டிரைவர் வண்டியை சட்டென்று நிறுத்திவிட்டாலும்… வேகமாக ஸ்கூட்டியில் வந்த பெண்கள் கடைசி நிமிடத்தில் ப்ரேக் பிடித்தாலும் காரில் மோதி சரிந்திருந்தனர்… வினுவும் விக்கியும் உதவி செய்யும் பொருட்டு இறங்க அதற்குள் அந்த காரின் பின்பக்கத்தில் இருந்து இறங்கிய அந்த ஆறடி உருவம் அந்த பெண்களை நோக்கி முன்னேறியது…..

கண்களை கூலர்ஸ் மறைத்திருக்க வெள்ளை நிற கோட் சூட்டில் பார்க்க கம்பீரமாக இருந்தவன்… விழுந்திருந்த அப்பெண்களின் அருகில் சென்று நின்று டிரைவரை பார்க்க… அவர் ஓடோடி வந்து அந்த பெண்கள் எழ உதவி செய்துவிட்டு கீழே கிடந்த ஸ்கூட்டியை தூக்கி ஒதுக்கி வைக்க… நடுங்கி கொண்டிருந்த பெண்களில் வண்டியை ஓட்டி வந்த பெண்னை அருகே வருமாறு சைகை செய்தவன் அந்த பெண் அருகில் வரவும் பளாரென்று அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தான்….

இதை சற்றும் எதிர்ப்பாராத அந்த பெண் கன்னத்தில் கை வைத்து திகைத்து நிற்க…. இது தனக்கு விழ வேண்டிய அடி என்பது போல் வினுவும் அவனின் செய்கையில் உறைந்து நின்றாள்…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here