மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் …

0
60

கதை சொல்ல போறோம் …..5 …

மணி – காலை 6.15 ……

இடம் – மைதானம் ….அரசு மேல்நிலைப்பள்ளி , காஞ்சிக்கோவில் , ஈரோடு ….

” வா வா நிலவை புடிச்சுத் தரவா.. …..
வெள்ளி பொம்மையாக்கி தரவா……
ஓஹோ விடியும் போதுதான்……
மறைஞ்சு போகுமே…… ……
கட்டிப்போடு மெதுவா….

இரவை பார்த்து மிரளாதே……
இதயம் வேர்த்து துவளாதே……
இரவுகள் மட்டும் இல்லை என்றால்……
நிலவின் அழகு தெரியாதே……….
கனவில் நீயும் வாழாதே…..
கலையும் போது வருந்தாதே…….
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்…..
கைகளில் பறித்திட முடியாதே……
அந்த வானம் போலே உறவாகும்…….
மேகங்கள் தினமும் வரும் போகும்…..
அட வந்தது போனால் மறுபடி ஒன்று……….
புதிதாய் உருவாகும்…”

பாடலை இயர்போன் மூலமாக கேட்டுக்கொண்டே ….அந்த மைதானத்தை சுற்றி நடந்துகொண்டிருந்தாள் சுதா….. அவளது அன்றாட வழக்கங்களில் அவளது மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று இப்படி பாடலை கேட்டுக்கொண்டே கால்கள் ஓயும்வரை நடப்பது …. நடந்து முடித்து நேராக அவளது வண்டியின் அருகில் சென்று அதிலிருந்து நவதானியம் நிறைந்த சிறிய டப்பாவை எடுத்துக்கொண்டு மறுபடியும் மைதானத்தின் உள்ளே சென்றாள் …எப்பொழுதும் அமரும் மரத்திற்கு பின்னால் சென்று அமர்ந்து அவளது வேலையை கவனிக்க தொடங்கினாள் … ( என்னோட மைண்டவொய்ஸ் – நம்மள விட பயங்கர சாப்பாட்டு ராமியா இருப்பா போல இவ …. )

அலைபேசியில் வந்திருந்தந்த அந்த குறுஞ்செய்தியை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் இறை ……

“டேய் அருள் எவ்ளோ நேரமா உன்னை கூப்டுட்டு இருக்கேன் …பேசுறதுக்கு என்ன கஷ்டம் உனக்கு ???? ” என்று அவனை பூஜை செய்துகொண்டே அங்கு வந்து சேர்ந்தாள் தமிழ் …… இவன் சிலையாக நின்று கைபேசியை பார்த்துக்கொண்டிருக்க அவனருகில் வந்து தோளில் ஆதரவாக கையை வைக்க …. அவளிடம் அந்த குறுஞ்செய்தியை காட்டினான் அவன் …

“அட ச்சா ….. இதை தான் இவ்ளோ நேரமா பாத்துட்டு இருக்கியா ??? ரிசல்ட் தானே வர போகுது …அதுக்கு எதுக்கு இவ்ளோ சோகமா மூஞ்சிய வெச்சிருக்க ….”

இறை: இல்ல அக்கா ..எனக்கு ரொம்ப பயமா இருக்கு …போன தடவையே வீட்டுல எப்படி பேசுனாங்கனு பாத்த தானே ……இந்த தடவையும் பாஸ் ஆகலேன்னா அவ்ளோதான் ….

தமிழ்: நம்ம அம்மா அப்பா தானே சொன்னாங்க …அதுக்குப்போய் ஏன்டா இவ்ளோ சோகமா ஆகுற …ஏதோ ஒரு கோபத்துல அப்டி சொல்லிருப்பாங்க ….மனசுல எதையும் வெச்சுகாத…. இந்த தடவை கண்டிப்பா உனக்கு அந்த காலேஜ்ல சீட் கிடைச்சிரும் …அப்புறம் பாரு நீதான் நம்ம குடும்பத்துலயே ராஜா மாதிரி இருக்க போற ….

இறை: நீ சொல்றதை கேக்குறதுக்கு நல்லா இருக்கு அக்கா …. என்ன ஆனாலும் எனக்கு மெடிசின் தான் படிக்கணும் ….. பிரைவேட் காலேஜ்ல படிக்கிற அளவுக்கு நம்ம குடும்பத்துல வசதி இல்லை ….. என்னால வேற எந்த படிப்பும் படிக்க முடியாது அக்கா /….

தமிழ்: இப்போ யாருடா உன்னை இவ்ளோ யோசிக்க சொல்றா ???? லூசு மாதிரி பண்ணாத …கண்டிப்பா இந்த தடவை பாஸ் பண்ணிருவ ….நீ எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சேன்னு நாங்கதான் பாத்தோமே ….. மனசை அமைதியா வெச்சுக்கோ ……

இறை : என்னால அப்டி இருக்க முடியல அக்கா …. இந்த தடவை நான் பாஸ் பண்ணலேன்னா அப்பா கண்டிப்பா அக்ரி அப்ளிகேஷன் போடலாம்னு சொன்னாரு …

தமிழ் : ஆமா சொன்னாரு ….. நீ 12th முடிச்சு ஒரு வருஷம் முடிய போகுது … உன்கூட படிச்ச உன்னோட பிரண்ட்ஸ் எல்லாம் ஒரு வருஷம் காலேஜ் முடிக்க போறாங்கடா …இன்னும் எவ்ளோ நாளைக்கு அப்பா உனக்கு டைம் கொடுக்க முடியும் ..நீயே சொல்லு ..அவங்க பையனோட வாழ்க்கையை பத்தி அவங்களுக்கும் கொஞ்சம் பயம் இருக்கும்ல ?????

இறை:” என்ன ஆனாலும் சரி …நான் மெடிசின் தான் படிப்பேன் …என்னை யாரவது வேற எதாவது படிக்க வைக்க முடிவு பண்ணுனா சத்தியமா என்னால அத பொறுத்துக்க முடியாது ..இப்போவே சொல்லிட்டேன் …

தமிழ் :சொல்லு டா …நாங்க வேற என்ன பண்னுன்னு சொல்ற ????

இறை :என்னவோ பண்ணுங்க …..இது என்னோட 7 வருஷ கனவு அதை நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் …. என்று அவன் ஆவேசமாக பேசவும் …..தமிழுக்கு ஓர் அளவுக்கு அவன் மனநிலை புரிய தொடங்கியது …. இவள் சற்று இறங்கி ….

தமிழ் : சரிடா ..ஏன் தேவை இல்லாம இதையெல்லாம் போட்டு குழப்பணும் …… கண்டிப்பா பாஸ் பண்ணிடுவ …..

இறை:ஆனா , ஒருவேளை நான் பாஸ் பண்ணலேன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் அக்கா ……

தமிழ் : இவன் வார்த்தையை கேட்டதும் அதிர்ந்தவள் …பைத்தியம் மாதிரி பேசாதே …இங்க வா முதல …..என்ன பேசிட்டு இருக்க ????? இது வெறும் ஒரு எக்ஸாம் டா அதுக்காக சாகப்போறேன்னு சொல்லுவியா ????? இன்னொரு தடவை இப்படி சொன்ன கொன்னுடுவேன்டா ராஸ்கல் ….

(சாகப்போறேன்னு சொல்றவன்கிட்ட நீ செத்துட்டா உன்ன கொன்னுடுவேன்னு சொல்றது தாங்க உண்மையான அன்பு … பைத்தியக்கார தனமா இருக்கலாம் ….. ஆனா , அதை சொல்றவங்க கண்ணை அந்த நொடி பாத்தீங்கன்னா புரியும் …அவங்க உங்கமேல எவ்ளோ நேசம் வெச்சுருக்காங்கனு ….)

இறை: வேற என்ன அக்கா பண்ண சொல்ற ????? என்று உணர்ச்சிபொங்க கூறும்போதே கண்களில் நீர் திறந்துவிட…தமிழின் மடியில் தலைசாய்த்துக்கொண்டான் ….. அவனது மனநிலையை மாற்றும் முயற்சியில் அவனது முடியை கோதிக்கொண்டே ” போதும் போதும் எழுந்திரு …. நம்ம வீட்டுக்கு போலாம் ..இப்போவே இந்த கிரவுண்ட்ல இருக்க எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க ….டேய் …எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா ???நம்ம வீட்டுக்கு போனதும் என்னோட ஒரு ப்ராஜெக்ட் டைகிறாம் (diagram ) வரைஞ்சு குடுடா ..ப்ளீஸ் ” என்று கேட்க மனதை தேற்றிக்கொண்டு எழுந்து செல்லலானான் …. இவற்றை எல்லாம் அங்கிருந்த மரத்திற்கு பின்னால் அமர்ந்து குருவிகளை ரசித்துக்கொண்டிருந்த சுதந்திரா கேட்டிருந்தாள் …இவற்றை கேட்டுக்கொண்டிருந்தவளின் நினைவுகள் 5 வருடங்கள் பின்னோக்கி சென்றன …..( மீ :ஷார்ட் ஸ்டோரிலே கூட நாங்க பிளாஷ் பேக் போடுவோம்ல ……)

“ஹே சுதா …வா ..வா … இந்த பூண்டை கொஞ்சம் தோல் உரிச்சு கொடு …..” என்று வந்தும் வராததுமாக அவளிடம் வேலையை நீட்டினார் அவளது பெரியம்மா ….

“கொடுங்க பெரியம்மா” என்று வாங்கி தோல் உரிக்க தொடங்க …..அவளிடம் மெதுவாக பேச்சை தொடங்கினார் …

பெ : “எக்ஸாம் எப்படி எழுதிருக்க ??”

சுதா : ” நல்லா தான் பெரியம்மா எழுதிருக்கேன் .கண்டிப்பா இந்த தடவை பாஸ் பண்ணிருவேன்னு நினைக்குறேன் ….

பெரியம்மா : இதையே தாண்டா போன தடவையும் சொன்ன ….. மூனு தடவை எழுதிட்டு இன்னும் இப்படி சொன்னா எப்படி ???
சுதா : நான் என்ன வேணும்னே படிக்காமலா இருக்கேன் ???? நீங்க பாத்துட்டு தானே இருக்கீங்க ..இப்போ இப்படி கேக்குறீங்க >????
அம்மா : படிச்சும் பிரயோஜனம் இல்லைனு தான் இப்படி கேக்குறோம் ….. பாஸ் பண்ணிருந்தா நாங்க ஏன் உன்னை இப்படி கேக்குறோம் ???? நீயே சொல்லு ….பிகாம் சேர்ந்து முடி …அடுத்து இதுலாம் படிக்கலாம்னு சொன்னோம் …நீயும் உன் அப்பாவும் கேக்கல ….. இப்போ டிகிரி கூட இல்லைனா கேக்க தானே செய்வோம் ….

சுதா : ஏன்மா …அப்பாகிட்ட இதை அன்னைக்கே சொல்லிருக்க வேண்டியதுதானே ???? இப்போ என்கிட்ட சொல்லி சொல்லி காட்டுறிங்க ????

பெரியம்மா : எதுக்கு இவ்ளோ கோவப்படுற ????உனக்கும் 20 வயசு ஆயிடுச்சு …ஒரு டிகிரி கூட இல்ல ….இன்னும் ஒரு வருஷத்துல கல்யாணம் பண்ணுனா பத்திரிக்கைல என்ன போடுறது ???? என்று கேட்டவர் அவரது முகத்தை கூர்ந்து கவனிக்க …..”அவளது முகம் கறுத்து சுருங்க தொடங்கியது …
இவர்கள் உரையாடலை கேட்டுக்கொண்டே உள்நுழைந்தார் சுதாவின் பெரியப்பா …..

பெரியப்பா : ” நாங்க பத்திரிகைல +2 னு போட்டுக்குவோம் …….இல்ல சுதா ???? என்று கேட்டு மேலும் அவளை நோகடித்தார் …..

இவை நடந்து 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் .. அவளால் அவ்வளவு எளிதாக கடக்க முடியாத நாட்கள் அவை …… அத்தகைய நிகழ்வுகளில் மூழ்கியிருந்த சுதாவின் கையில் சிட்டுக்குருவி ஒன்று அமர ..நினைவுகளிலிருந்து மீண்டவள் ஒரு முடிவுஎடுத்தவளாக அந்த மைதானத்தை விட்டு கிளம்பினாள் …

18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த நுழைவு தேர்வின் முடிவுகள் நான்கு நாட்கள் முன்னதாக அன்றே வெளியாகி இருந்தன … அவன் எதிர்பார்த்ததை போலவே இம்முறை தோல்வியை தழுவியிருந்தான் ,…அவன் அன்னை உமா அவனது தந்தையுடன் அவ்விடம் வர ….. கண்கள் கணினியில் பதிந்திருக்க கண்ணிலிருந்து கண்ணீர் துளிகள் வழிந்து அவனது கன்னத்தை முத்தமிட்டன ……அவனது நிலையை பார்த்த பெற்றோர் இருவருக்குமே மனம் கனத்து போனது …..வழிந்த அவன் கண்ணீர் துளிகள் அவனது தேர்வின் முடிவுகளை தெளிவாக எடுத்துரைத்தன …அதற்குமேல் அங்கு நிற்க முடியாதவராக உமா அவ்விடம்விட்டு நீங்கினார் ..

அங்கு நின்று அவனை பார்த்திருந்த தந்தை எதுவும் சொல்லாமல் நேராக அவர் அறைக்கு சென்று அக்ரி படிப்பதற்கான அப்ளிகேஷனை அவன் முன் வைத்தார் … அதிர்ச்சியுடன் அவரது கண்களை அவன் விழிகள் சந்திக்க ….. அவர் பேச துவங்கினார் ..

“இறை … நீ நினைக்குற மாதிரி வாழ்க்கை இல்ல ..ஒரு விஷயம் நமக்கு வராதுன்னு தெரிஞ்சா அதுலயே நின்னு நம்ம வாழ்க்கையை வீணடிக்க கூடாது பா …உனக்கு நான் சொல்றது புரியும்னு நினைக்குறேன் ..ஏற்கனவே ஒரு வருஷம் வீணாகிடுச்சு ….உன்கூட பன்னிரெண்டாவது முடிச்ச உன்னோட பிரண்ட்ஸ் எல்லாரும் ஒரு வருஷம் காலேஜ் முடிச்சுட்டாங்க .. இதுக்குமேலயும் நீ உன்னோட வாழ்க்கையை இழந்துட்டு நிக்குறதுல எனக்கு உடன்பாடு இல்லை பா ..நாளைக்கு காலைல பதினோரு மணிக்கு நம்ம சுந்தர் கடைக்கு போயிட்டு உன்னோட அக்ரி அப்ளிகேஷன் ரெஜிஸ்டர் பண்ணிடலாம் .. 10.45 மணிக்கு ரெடியா இரு ..போயிட்டு வந்துரலாம் …இந்த அப்ளிகேஷன் படிச்சுட்டு நிரப்பி வெச்சிரு …..முடிஞ்சதை நினைச்சு உன்னோட வாழ்க்கையை வீணடிக்காத ” என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார் .. பேயறைந்தது போல அமர்ந்திருந்தான் இறை ….8 வருட கனவு இப்படி சிதைந்துபோகும் என்று அவன் எண்ணியிருப்பானா என்றால் இல்லவே இல்லை …ஆனால் , இன்றோ அப்படி ஒரு சூழ்நிலையை அவன் கடக்கவேண்டிய கட்டாயம் …

எதுவும் சொல்லாமல் எழுத்து முன்னறைக்கு சென்று டி .வி யை இயக்கியவன் சோபாவில் படுத்து கைகளை மடக்கி முகத்தின்மேலாக வைத்துக்கொண்டு படுத்திருந்தான் …

அப்பொழுது உள்ளே நுழைந்தாள் தமிழ் …பரீட்சை முடிவுகள் வெளியாகிவிட்டதாக செய்தியை கேள்விப்பட்டு அவசர அவசரமாக அவளது தோழியிடம் விடைபெற்று வீடு வந்தாள் …

ஒரு ஓரமாக நின்று உமா நின்று கொண்டிருந்த கோலத்தையும் …. அவன் படுத்திருந்த கோலத்தையும் கண்டவள் என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவுக்கு யூகித்திருந்தாள் .. உள்ளே செல்லுமாறு அவளது அன்னையிடம் சைகையில் கூறியவள் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அவனது அருகில் அமர்ந்து அவன் தலைமுடியை கோதினாள்…தமிழ் வந்துவிட்டதை அவளது தொடுகையில் உணர்ந்தவன், தலையை மட்டும் நீட்டி அவளது மடியில் முகம்புதைத்துக்கொண்டான்..

அவனது கண்ணீரின் ஈரம் மடியை நனைக்க , மெதுவாக அவனது முதுகை நீவிக்கொடுத்தாள் …..நமக்கு கஷ்டம் வரப்போ …. மனசு ஒருத்தர தேடுமே …. அப்டி ஒருத்தியா இவனுக்கு தமிழ் இருக்காங்க … பசங்க எப்போவுமே அழகா இருக்க பொண்ணுங்களை தான் விரும்புறாங்கனு ஒரு பொதுவான கருத்து இருக்கு …. ஆனா , தன்னோட உணர்வுகளை புரிஞ்சிகிட்டு அவனோட கனவுகளை அடைய அவனோட பயணிக்குற பொண்ணைத்தான் அவங்க அதிகமா விரும்புறாங்க …. அப்டி ஒரு பொண்ணு கிடைக்குறப்போ அவளோட அழகு ரெண்டாம் பட்சமா ஆகிடுது…. ( எனக்கும் கருத்து வரும்லே… மீ )

அவனும் எதுவும் பேசவில்லை …தமிழும் எதுவும் பேசவில்லை …அவள் உள்ளே வந்ததும் டி .வி யை அணைத்திருக்க ….அங்கு பெரும் அமைதி நிலவியது …அதை தமிழும் கலைக்கவில்லை இறையும் கலைக்கவில்லை …அவள் அன்னையிடம் உணவை கொண்டுவருமாறு கூறியவள் …..

“இறை … இறை … எழுந்திரு டா ….. ” என்று எழுப்பியவள் ..அவள் அன்னை கொடுத்த சாப்பாடை அவனுக்கு ஊட்டிவிட …முகம் திருப்பியவனின் தாடையை அழுத்த பற்றி இவள் புறம் திருப்பியவள் … ஊட்டிவிட எதுவும் கூறாமல் உண்டு முடித்தான் …அதன் பின்பு அவரவர் அறைக்கு சென்றுவிட …….அவனது அறைக்கு சென்றவன் மெத்தையில் கவிழ்ந்துகொள்ள சிறிது நேரத்தில் உறங்கியும்விட்டான் ……

அன்றிரவு ராஜவேலுவிற்கு ஏனோ தூக்கம் வர மறுத்தது …… காலையிலிருந்து இறையின் முகத்தை பார்த்தவர் மனம் கலக்கமுற்று இருந்தது … அவனது எதிர்காலம் குறித்து பயம் கவ்விக்கொள்ள அதன் காரணமாகவே அக்ரி படிப்பிற்கான விண்ணப்பத்தை அவனிடம் கொடுத்தார் ……

(இதுதானே அப்பாவோட இயல்பு ….நம்ம நம்ம புள்ளை எங்கயும் தலை குனிஞ்சு நின்னுட கூடாது ,….எவன்கிட்டயும் கைகட்டியோ கையேந்தியோ நின்னுட கூடாது …… ஆயிரம் சொன்னாலும் , மிடில் கிளாஸ் வாழ்க்கையில கஷ்ட படர பல அப்பாவுக்கு இதுதான் கனவு ….. அவங்க வாழ்க்கையவே நம்ம கையில கொடுத்துட்டு ….. நம்மள மாதிரி நம்ம பையனோ பொண்ணோ கஷ்டபட கூடாது …. அவங்க கனவும் இதுவாத்தான் இருக்கு …வேண்டுதலும் இதுவாத்தான் இருக்கு …..)

தூக்கம் வராமல் புரண்டவர் நேராக இறை அறைக்கு சென்றவர் அவன் தூங்கி கொண்டிருப்பதை பார்த்துவிட்டு ..அவன் முடியை கோதிவிட்டு சென்று டி .வி யை ஆன் செய்து நியூஸ் சேனலை ஓடவிட ……அப்பொழுதுதான் கவனித்தார் ….காலையிலிருந்து பரவிக்கொண்டிருந்த செய்தி அவர் கண்களுக்கு தெரிந்தது….

பார்த்த நொடியில் அவருக்கு வியர்த்துக்கொட்ட துவங்கியது … சட்டென்று டி . வி யை அணைத்தவர் …..தண்ணீர் சிறிது பருகிவிட்டு இறையின் அருகிலேயே படுத்துக்கொண்டார் ..”என்ன ஆனாலும் நாளைக்கு அவனுக்கு புரிய வைக்கணும்” என்று மனதில் உறுதியேற்றுக்கொண்டார் ..ஆனால், இவர் பேச நினைத்தது அனைத்தையும் தலைகீழாக அவனிடம் பேச போகிறார் என்று அவர் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார் ….

காலை 5 மணிக்கு எழுந்த உமா அவர்களை எழுப்ப இறையின் மனம் சோர்வுற்ற காரணத்தினால் அவன் படுத்துக்கொள்வான் என்று நினைத்திருக்க ….. அனைவர்க்கும் முன்னதாக அவன் கிளம்பி வாக்கிங் சென்றுவிட்டான் ….

காலை எழுந்ததிலிருந்தே சுதாவுக்கு பதட்டமாக இருந்தது …எப்படியேனும் இறையின் தந்தையுடன் பேசிவிட வேண்டும் என்று மனதில் உறுதியேற்றிருந்தாள் …மனதில் பெருமளவில் பயம் குடியேறிருந்தது …… தன்னை தயார் படுத்திக்கொண்டவள் மைதானத்தை நோக்கி வண்டியை செலுத்தினாள் …மனம் முழுவதும் அவனது தந்தையிடம் எவ்வாறு பேசவேண்டும் என்பதிலேயே நிலையாய் இருந்தது …

மைதானத்தில் நுழைந்தவளின் முகம் இறையின் தந்தையை பார்த்தவுடன்தான் தெளிவாக ஆகியது … இவள் உள்ளே நுழையும்போதே ராஜவேலு இறையுடன் நடந்துகொண்டிருக்க தமிழ் இவர்கள் அளவுக்கு வேகமாக நடக்க முடியாமல் தனியாக நடந்துகொண்டிருந்தாள் ,…..இறையின் முகமே அவளுக்கு அவனது நேற்றைய கவலையின் பதிலை சொன்னது ….”ஐயோ .. அவன் முகத்தை பார்த்தாவே திக்கு திக்குனு இருக்கே …அங்கிள் என்ன சொல்லிருக்காரோ தெரியலை ..” என்று மனதுள் எண்ணிக்கொண்டே சுதாவும் தமிழுக்கு பின்னாலே அந்த மைதானத்தை வட்டமடிக்க துவங்கினாள் ….

தந்தையும் மகனும் நடந்து செல்வதை பார்க்க சுதாவுக்கு சிரிப்பாக இருந்தது ….இறையுடன் பேச வேண்டும் என்று அவர் அவனுடன் சேர்ந்து நடக்க முயன்று கொண்டிருக்க இறை அவரை தடுக்க வழி தேடி கொண்டிருந்தான் … அவர் மெதுவாக நடந்தால் இவன் வேகமாகவும் அவர் வேகமாக இவனுடன் நடக்க முயன்றால் மெதுவாகவும் அவன் நடந்துகொண்டிருக்க ..ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன் ஜாகிங் போக தொடங்கிவிட்டான் …அவன் போவதை பார்த்த ராஜவேலுவின் முகம் கவலையை தத்தெடுக்க …. தமிழை பார்த்து அவனுடன் போகுமாறு சைகையில் சொல்ல அவளும் சென்றுவிட்டாள் …

தனித்து விடப்பட்ட ராஜவேலு பொறுமையாக நடக்க துவங்க …சுதாவுக்கு இதைவிட சரியான சந்தர்ப்பம் அமையாது என்று தோன்றியது …சற்று வேகமாக நடக்க துவங்கினாள் …அவருக்கு அருகில் வந்ததும் வேகத்தை குறைத்து அவருடன் ஒன்றி நடக்க …..இறையின்மேல் பதிந்திருந்த கண்கள் இவளிடம் திரும்பியது ..அவர் தன்னை கவனிக்க சுதா மென்னகை புரிய பதிலுக்கு அவரும் புன்னகைத்தார் ….

சுதா : “ஹாய் அங்கிள் …. என் பெயர் சுதா ….”

வேலு :”வணக்கம் மா …”

சுதா : நேத்திலிருந்து எனக்கு உங்ககூட பேசணுன்னு தான் அங்கிள் மனசுல ஓடிட்டு இருந்துச்சு ….. எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பெர்சோனால் விஷயம் பேசணும் ….முடியும்னா சொல்லுங்க அங்கிள் ….

” இந்த பொண்ணு எதுக்கு நம்மகிட்ட பேசணுன்னு நினைக்குது …..?” என்று மனதினுள் நினைத்தவர் …. ” யாருன்னே தெரியலை …..சரி என்ன சொல்லுதுன்னு பாப்போம் ….”என்று எண்ணியவர் …

வேலு : சொல்லுமா ….

சுதா : அங்கிள் இப்டி நடந்துட்டே பேச வேண்டாம் ….கொஞ்சம் ஓரமா அந்த ஸ்கேட்டிங் பண்ற இடத்துல இருக்க பெஞ்சிலே உட்காரலாமா ???சரி என்று தலை அசைத்து அவளுடன்செல்ல ..அங்கு சென்று அமர்ந்தனர் …..

வேலு : சொல்லுமா ….என்கிட்ட என்ன பேசணும் ????

சுதா : உங்ககிட்ட நான் பேச எதுவும் இல்லை அங்கிள் …ஒரே ஒரு வீடியோ மட்டும் காட்டணும் ….எனக்காக உங்களாலே பார்க்க முடியுமா ????

” ஒருவேளை இந்த பொண்ணு லூசா இருக்குமோ …நான் வேற இன்னைக்கு இறைக்கிட்ட பேசலாம்னு நினைச்சா …. இதுலே ..இந்த பொண்ணுவேற நேரங்காலம் புரியாம இப்படி நடந்துக்குது …. என்று மனதினுள் நினைத்தவர் வேறு வழியின்றி …” சரி மா …பார்க்கிறேன் ….காட்டு ” என்றவர் …இருபது நிமிடங்களில் அவள் இவரிடம் நீட்டிய விடியோவை பார்க்க துவங்கினார் …..

ஏதோ ஒரு செய்தி தொலைக்காட்சியின் பேட்டி நிகழிச்சி …. தொகுப்பாளினி பேச துவங்கினார் …..

தொகுப்பாளர் : ” வணக்கம் நேயர்களே …இன்று நம் “போராடு நண்பா ……” நிகழிச்சியில் நம்மகூட பேச வந்துருக்குறது ..நண்பா இல்லைங்க …நண்பி …. தமிழ்நாடு பக்கமே மொத்த இந்தியாவும் திரும்பி பார்க்கவெச்ச ஒருத்தர்….. நம்ம தமிழ்நாட்டுக்கு பெருமையை கொண்டுவந்துருக்க ஒரு பொண்ணு …இந்தியாவிலே இருக்க ஒவ்வொருத்தரும் பேசிட்டு இருக்குற ஒரு தலைப்பு ….. அகில இந்திய அளவில் நடைபெறும் சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட் எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வின் இரண்டாம் நிலையாக கருதப்படும் இன்டெர் எனப்படும் நிலையில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஒருத்தர் தான் இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கு வந்துருக்காங்க …. தோல்வினு ஒருதடவை சொன்னாலே சோர்ந்து துவண்டு போற இளைய தலைமுறை இவங்கள பார்த்து கத்துக்கனுன்னு நினைக்க வேண்டிய விஷயம் …. இந்த தேர்வில் இவங்களோட இந்த பங்களிப்பு ஆறாவது தடவை …..இருந்தும் தன்னோட முயற்சியை கைவிடாம இன்னைக்கு இந்த அளவுக்கு ஒரு வெற்றியை அடஞ்சிருக்காங்க ….நேத்து தலைப்புச்செய்தியிலே இடம்பெற்ற … மிஸ் .சுதந்திரா ….. ….அவர்கள்தான் இன்னைக்கு நம்ம நிகழ்ச்சியிலே சந்திக்க போறோம் ….வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம் ….வணக்கம் மேடம் ….வாழ்த்துக்கள் ….. “

சுதா : “வணக்கம் ….”

தொகுப்பாளர் : ” இவ்ளோ ஒரு முக்கியமான நேரத்துலே உங்க டைம்ல எங்களுக்காக இந்த நேரத்தை ஒதுக்கி வந்ததுக்கு ரொம்ப நன்றி …..”

சுதா :” உண்மையை சொல்லனும்னா ….நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் …மனசுல ரொம்ப நாளா அழுத்தி வெச்சுருக்க விஷயத்தை பகிர்ந்துக்க வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி …”

தொகுப்பாளர் : ” ரிசல்ட் வந்த ஒரு நாள் முடிஞ்சிருச்சு ….. இதுதான் உங்க ரிசல்ட் …. நீங்கதான் அகில இந்திய அளவுல முதல் இடம் பிடிச்சிருக்கீங்கனு தெரிய வந்த நொடி எப்படி இருந்துச்சு ???? “

சுதா : ” நான் உங்கள அக்கானு கூப்டுக்கலாமா ???”

தொகுப்பாளர் :” கூப்பிடலாமானு கேட்டுட்டு இருக்கீங்க …. கூப்பிடுங்க …..” என்று புன்னகைத்தவாறு கூற ….

சுதா : ” ரொம்ப நன்றி அக்கா …. என்னோட ரிசல்ட் எங்க இன்ஸ்டிடியூட் ப்ரெசிடெண்ட் எனக்கு கால் பண்ணி சொன்னாரு …. நீங்க இந்த தடவை அகில இந்திய அளவில் முதல் இடம் பிடிச்சிருக்கீங்க ..வாழ்த்துக்கள் அப்டினு சொன்னப்போ … என்னாலே நம்ப முடியல ….. நான் இந்த தடவை பாஸ் பண்ணுவேனான்னு கூட எனக்கு தெரியாது அப்டி தான் நினைச்சுட்டு இருந்தேன் …. ஏனா , நான் ஆறாவது தடவையாக இந்தமுறை பரீட்சை எழுதிருந்தேன் ….. போன அஞ்சு தடவையும் நான் பாஸ் பண்ணலை …இதுல எங்க நான் அகில இந்திய அளவில முதல் இடம் பிடிப்பேன்னு எதிர்பார்க்குறது ??? ” இப்டினு சொல்லுவேன்னு நினைக்காதீங்க …. ஹாஹாஹா ….எனக்கு பாஸ் பண்ணுவேன்னு நம்பிக்கை இருந்துச்சு ….ஆனா , இந்த வெற்றி நான் ஏதிர்பார்காதது …. நான் பெயில் ஆனப்போ கூட எனக்கு என்மேல நம்பிக்கை இருந்துச்சு …. நேத்து இந்த செய்தியை கேட்ட உடனே என் கண்ணுல இருந்து தண்ணிதான் வந்துச்சு …. இது எனக்கு ரொம்ப பெரிய சந்தோசமா தெறிஞ்சிது …நான் தொலைச்சிட்டேனு நினச்ச என்னோட மூணு வருஷ வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைச்ச மாதிரி இருந்துச்சு ,….”

தொகுப்பாளர் : ” எனக்கு உங்க முகத்துலயே அந்த சந்தோசம் தெரியுது …பாக்குறவங்களுக்கும் புரியும் …. நீங்க ஏன் இந்த பரிட்சையை … முக்கியமா படிப்பை இவ்ளோ முக்கியம்னு நினைக்குறிங்க ????”

சுதா :” நான் ஒன்னும் ரொம்ப பணக்கார குடும்பத்துலே பிறக்கலை …. ஒரு நோர்மல் மிடில் கிளாஸ் குடும்பம் தான் ….. எங்க வாழ்க்கையில எங்களால மேல வர முடியும்னா அதுக்கு ஒரே வழி படிப்புதான் …அப்டித்தான் எனக்கு என்னோட அப்பாம்மா சொல்லிகொடுத்து வளர்த்தாங்க …. இது எனக்கு மட்டுமில்லை …. என்னை மாதிரி மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழுற தொண்ணூறு சதவீதம் பேரு இதைத்தான் வழியா நினைக்குறாங்கனு நம்புறேன் ….”

தொகுப்பாளர் : ” நீங்களே சொல்லிட்டீங்க இது உங்க அப்பாம்மா கனவுனு ….. உங்க ரிசல்ட் போய் உங்க அப்பா அம்மாகிட்ட சொல்றப்போ அவங்களோட வெளிப்பாடு எப்படி இருந்துச்சு ….”

சுதா : ” ரொம்ப சந்தோச பட்டாங்க …நான் என்னோட வீட்டுல பாஸ் னு மட்டும்தான் சொன்னேன் …அதுக்கே என்னோட அம்மா அழுதுட்டாங்க …. என் அப்பா ஆச்சரியமா பார்த்தாரு ….ஆனா , அவ்ளோ பூரிப்பு என்னோட அப்பா முகத்துல ….”

தொகுப்பாளர் : ” உங்க முகத்திலே கலவையான உணர்வுகளை பார்க்க முடியுது …. 5 தடவை பெயில் ஆனப்போவும் நீங்க உன்னோட கனவுகளை விட்டுக்கொடுக்காம இருக்குறது ரொம்ப ஆச்சரியமா இருக்கு ….. அது எப்படி ஏன்னு சொல்ல முடியுமா ??? “

சுதா ::” அக்கா …எனக்கு ஒரு 15 நிமிஷம் டைம் கொடுக்க முடியுமா ??? எனக்கு தெரியும் இந்த நிகழ்ச்சி 30 நிமிஷம்தான் ஒளிபரப்பு செய்விங்க …இருந்தாலும் எனக்கு இந்த 15 நிமிஷம் ரொம்ப முக்கியம் ….எனக்காக இதை கொடுக்க முடியுமா ???”

தொகுப்பாளர் : சற்று யோசித்தவர் ” ம்ம்ம் …. பேசுங்க ….”

சுதா :” எல்லாருக்கும் வணக்கம் …. முக்கியமா நான் இப்போ பேச போறது …. இதை பார்த்துட்டு இருக்குற இல்லைனா பார்க்க போற …. 1,99,699 பேருக்கு தான் நான் இப்போ பேச போறேன் … உங்களுக்காக ஸ்பெஷலா கேட்டு பெர்மிஸ்ஸின் வாங்கி பேசுறேன் …. அது என்ன அவ்ளோ பேருக்குனு குறிப்பிட்டு சொல்றேன்னு உங்க எல்லாருக்கும் ஒரு கேள்வி வந்துச்சுனா …அதற்கான பதில் …. இந்த நிகழ்ச்சியை லைவ் ஷோ பார்த்து திட்டிட்டு இருக்க ஸ்பெஷல் தான் இவங்க எல்லாரும் ….. இரண்டரை வருஷம் நான் அனுபவிச்சதை இப்போ அனுபவிச்சிட்டு இருக்கவங்களோட பெற்றோர் ….. அப்டி உங்க பிள்ளைகளை திட்டிட்டு இருந்திங்கனா ஒரே ஒரு நிமிஷம் மட்டும் நான் சொல்றதை கேட்டுட்டு அப்புறம் அவங்களை திட்டுங்க ..ப்ளீஸ் ….. நான் சி .ஏ . எடுக்குறதுக்கு முக்கிய காரணம் என்னோட அப்பாதான் /….. எனக்கு 8th படிக்கிற வரைக்கும் எனக்கு ஒரு டீச்சர் ஆகனுன்னு தான் ஆசை … என் அப்பா நான் 9th படிக்கிறப்போ ஒருநாள் சி .ஏ .பத்தி சொன்னாரு … அவரு என்ன சொன்னாருன்னுலாம் எனக்கு அப்போ புரியவே இல்ல …. ஆனா , என் அப்பா என்கிட்ட பேசுன விதம் …அவரு முகத்துல தெரிஞ்ச சந்தோசம் ..அதுலாம் எனக்குள்ள என்னவோ அவ்ளோ சந்தோசம் கொடுத்தது …. அப்போதைக்கு முடிவு எல்லாம் எடுக்கலை …. ஆனா , 12th முடிச்சப்போ என் அப்பா என்கிட்ட கேட்டாரு …சரினு சொன்னேன் ….. எனக்கு என்னோட அப்பா படினு சொல்லாம …படிக்கிறியான்னு என் விருப்பம் கேட்டதே சந்தோசமா இருந்துச்சு ….. முதல் நிலை பரீட்சை எழுதினேன் …. முதல் தடவையே பாஸ் பண்ணிட்டேன் …… அப்போ என்கூட எழுதுன 20 பேருல 4 பேரு பாஸ் பண்ணோம் … நான் 11th 12th சைன்ஸ் குரூப் படிச்சேன் … அப்போ நான் பாஸ் பண்ணுவேன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு …அதே நம்பிக்கையோட இன்டெர் எக்ஸாம் படிக்க ஆரம்பிச்சேன் …. ரொம்ப நம்பிக்கையோடதான் எக்ஸாம்க்கு படிச்சேன்… ஆனா, பாஸ் பண்ண முடியலை… ரொம்ப வருத்தமா இருந்துச்சு… ஆனா என்னோட அப்பா என்கூட நின்னாரு …உன்னால முடியும்…. தைரியமா படி…அப்டினு அவ்ளோ சப்போர்ட் பண்ணாரு…ரெண்டாவது தடவை எழுதினேன்…. அப்போவும் பாஸ் பண்ணல…… கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு…நம்பிக்கையை விடாம படிச்சேன்….. ஆனா, அதுக்குஅப்புறம்தான் உண்மையான உலகம் பார்க்க ஆரம்பிச்சேன்…. ஏதாவது ஒரு பொருள் வேணுன்னு கேக்க கூட ஒரு கூச்சம் வர ஆரம்பிச்சுது….. அப்டி இருக்கப்போ ஒரு வாய்ப்பு கிடைச்சுது ..ஒரு ஆடிட்டர் ஆபீஸ்ல ஆள் எடுக்குறாங்கனு தெரிஞ்சிட்டு அங்க போயி சேர்ந்தேன்….. ஆபீஸ் போயிட்டு வந்து படிச்சேன்…. அந்த சம்பளம் சின்ன அமௌன்ட் தான்….ஆனா, அது எனக்கு கொடுத்த சந்தோஷமும் நிம்மதியும் தன்னம்பிக்கையும் அவ்ளோ ஈஸியா சொல்ல முடியல ….. போன தடவை பெயில் ஆனப்போகூட என் அப்பா அவ்ளோ எடுத்தெறிஞ்சி பேசுனாரு …. பி.காம் கரெஸ்பாண்டென்ஸ் மட்டும் போதும் னு சொன்னாரு …தண்டத்துக்கு இருக்கேனு சொன்னாரு ….உண்மையா சொல்லனும்னா …என்னை அவரை திட்டிட்டு அவரே வருத்தப்பட்ருப்பாரு …. அவருக்கு எப்டியோ நினைச்ச நம்ம பொண்ணு வாழ்க்கை இப்டி ஆயிருச்சுனு வருத்தம் …….. ஆனா , அந்த சூழ்நிலையிலயும் …எனக்கு அவருமேல கோவம்தான் வந்துச்சு … அது நியாயமா அநியாயமானு எனக்கு இப்போ வரைக்கும் தெரியல ….
சி .ஏ ரொம்ப கஷ்டம் …பொண்ணுதானே எதுக்காக அதுலாம் படிக்க வைக்கணும் …டிகிரி முடிச்சுட்டு கல்யாணம் பண்ணுனா உன் கடமை முடியும்னு என் சொந்த காரங்க சொன்னப்போ என் அப்பாக்கு முக்கியமா தெரிஞ்ச வாழ்க்கை … நான் கஷ்டப்படறப்போ …என் சொந்த காரங்க சொன்னது தான் பெருசுனு நினைச்சாரு … அதுக்காக எனக்கு மாப்பிளை கூட பார்த்துட்டு இருக்காரு …என் அப்பாக்கு இப்போல்லாம் அவ்ளோ நம்பிக்கை நான் பாஸ் பண்ண மாட்டேன்னு ……இவரு என் அப்பா தானான்னு சந்தேகம் கூட சில நேரத்துலே வரும் … இன்னும் சொல்லணுனா இப்போ இருக்க என் அப்பாமேல எனக்கு மரியாதை இருக்கு …ஆனா , என் அப்பா அப்படிங்கிற லவ் இப்போ இல்ல ….. ஒரு கஷ்டம்னா அவரு இருக்காருங்கற ஒரு பாதுகாப்பு உணர்வு இப்போ சுத்தமா இல்லை ……. ” சொல்லும்போதே கண்களில் கண்ணீர் துளிகள் உருண்டோட துவங்கின …. டேபிளில் இருந்த பாட்டிலை திறந்து சிறிது பருகியவள் விட்ட இடத்திலிருந்து பேச துவங்கினாள் …..

” நீங்கி ஒரு பிசினெஸ் பண்ணுனா கூட அதுல லாபம் நட்டம் ரெண்டும் வரலாம் …. ஆனா , உங்க பொண்ணோ பையனோ அவங்க எப்போவுமே பெஸ்டா இருக்கனும் …எல்லாத்துலயும் பெஸ்ட்டா இருக்குனு எதிர்பார்க்குறீங்க …. இது எல்லாத்தையும்விட … உங்க பிரண்ட் பொண்ணு இல்லைனா பையன் பாஸ் பண்ணிட்டு உங்க புள்ளை பாஸ் பண்ணலேன்னா அவங்க எதுக்குமே லாயக்கி இல்லாதவங்கனு கிடையாது …. அன்னைக்கு நான் பாஸ் பன்னிருந்தா …எல்லாரோட உண்மையான முகத்தை பார்த்திருக்க முடியாது …. அது எல்லாத்துக்கும் மேல இந்த வெற்றியை நான் இவ்ளோ சந்தோசமா அனுபவிச்சிருக்க முடியாது …

இது பெயில் ஆனா எல்லாருமே சாதாரணமா சந்திக்கிறது …. இன்னும் சிறப்பா பொண்ணுங்களுக்கு கல்யாணம்னு ஒரு பிரச்சனை வரும் …என்னோட 19 வயசுல ..என்னோட பெரியப்பா ஒரு வரன் கொண்டுவந்தார் …. என் வீட்டுலயும் கல்யாணம் பண்ணி அனுப்பிவைக்கிற முடிவுல இருந்தாங்க …ஏதோ ஜாதகம் செட் ஆகலேன்னு விட்டுட்டாங்க …. இதுவே ஜாதகம் செட் ஆயிருந்தா … இப்படி நான் பேசிட்டு இருந்துருக்கு முடியாது …. அப்டினு எனக்கு அப்போ தோணுச்சு …என் அப்பா மேல இருந்த நம்பிக்கை மொத்தமும் அப்போ உடைஞ்சிருச்சு …..இதுதான் உண்மை எது நடந்தாலும் நல்லதுக்குனு எடுத்துக்கிட்டு போயிட்டே இருக்கனும் …. அன்னைக்கு நான் பெயில் ஆனது தான் ..இன்னைக்கு நான் வாங்கியிருக்க முதல் இடத்தோட முதல் படி …..

நான் இப்போவும் சொல்றேன் …. போட்டி தேர்வுகள் எழுதுறவங்க எண்ணிக்கை நீங்க எதிர்பார்க்குறதை விட அதிக அளவுல இப்போ கூடிருச்சு …. ஒரு 100 பேரு எழுதுற எக்ஸாம்ல மீறி மீறி போனா 25 பேரு பாஸ் பன்றாங்க …. அதுக்குன்னு மீதி இருக்குற 75 பேரு வாழறதுக்கு தகுதி இல்லாதவங்களா ???? நீங்களே யோசிச்சு பாருங்க … உங்களால ஏத்துக்க முடியலன்னு ……தோல்வியே வராத மாதிரி ஒரு படிப்பை கண்டுபிடிச்சு படிக்க வைங்க ….

அப்புறம் … நண்பா மற்றும் சகி ….. ஒன்னு மட்டும் மனசுல வெச்சுக்கோங்க ….. இப்போ பேசுற யாரும் நீங்க ஜெயிச்சதுக்கு அப்புறம் பேச மாட்டாங்க …எவனோ பேசுறான் …..அதுக்கு நாம நம்ம வாழ்க்கையை விட்டு கொடுக்க முடியாது … நாம உண்டு நம்ம கனவு உண்டுன்னு போயிட்டே இருக்கனும் ….

இன்னொரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்காங்க ….. சொந்தக்காரங்கனு சொல்லிட்டு வந்து கொளுத்தி போடுற அவங்களுக்கு ஒரு வேண்டுகோள் …. உங்க குடும்பத்து வேலையை மட்டும் நீங்க பாருங்க …. அதுவே நீங்க எங்களுக்கு பண்ற ரொம்ப பெரிய மோட்டிவேஷன் தான் ….

நண்பா …இன்னொரு முக்கியமான விஷயம் மறந்துட்டேன் …. செத்துட்டா எந்த பிரச்னையும் தீராது …..அதுக்கு எடுத்துக்காட்டு நம்ம தங்கை அனிதா …. அவங்க இறந்ததுனால யாரு என்னத்தை இழந்தாங்க ….??. அவங்க இன்னொரு முயற்சி பண்ணிருந்தா …. கண்டிப்பா அவங்க ஜெயிச்சிருக்க வாய்ப்பு நிறைய இருந்துச்சு … இன்னைக்கு அவங்க குடும்பம் அவங்கள இழந்துட்டு நிக்குறாங்க ….

நீங்க இறந்துட்டா ..நீங்க மட்டும் சாகல …உங்ககூட உங்க கனவும் சாகுது ….. என்ன ஆனாலும் என்னால முடியும்னு ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தா போதும் …கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க …இத சொல்றதுக்கு எனக்கு என்ன தகுதின்னு நீங்க நினைச்சா …இதை சொல்றதுக்கு எல்லா தகுதியும் என்கிட்ட இருக்கு …நான் அன்னைக்கு என்மேல வெச்ச குருட்டு தைரியம்தான் எனக்கு இன்னைக்கு இப்படி பேசுற ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கு …. …அதை நினைச்சுட்டு அடுத்த அடி எடுத்து வைங்க ……

எனக்கு நீங்க கொடுத்த டைம் முடியப்போகுது …. அதை ஒரு பாட்டோட முடிக்கிறேன் ….. ரொம்ப தேங்க்ஸ் …இதுவரைக்கும் கேட்டதுக்கு …. அந்த பாட்டு எனக்கு எப்போ கஷ்டம்னாலும் கேப்பேன் …… அதுல கொஞ்ச வரிகள் உங்களுக்காக ….

” கடல் தாண்டும்
பறவைகெல்லாம் இளைபாற
மரங்கள் இல்லை கலங்காமலே
கண்டம் தாண்டுமே….

முற்றுபுள்ளி அருகில்
நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள்
வைத்தாய் முடிவு என்பதும்
ஆரம்பமே

வளைவில்லாமல்
மலை கிடையாது வலி
இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா

அடங்காமலே
அலைபாய்வதேன்
மனமல்லவா

காட்டில் உள்ள
செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே
இல்லை தன்னை
காக்கவே தானாய்
வளருமே

ஓஹோ ஓ பெண்கள்
நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்
தானே உன்னை தோன்றினால்
இன்பம் தோன்றுமே

விடியாமல் தான்
ஒரு இரவேது வழியாமல்
தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா

அடங்காமலே
அலைபாய்வதேன்
மனமல்லவா

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே ……”

என்று வீடியோ முடிந்திருக்க …. அங்கிள் நீங்கதான் முடிவு பண்ணனும் .. இப்போ இறை நின்னுட்டு இருக்குறது ஒரு முற்றுப்புள்ளி …. கொஞ்சமா நீங்க புள்ளிகள் வைப்பிங்கனு நான் நம்புறேன் அங்கிள் ……ஒரே ஒரு தடவை இறைக்கு வாய்ப்பு கொடுங்க …. என்று அவள் விடைபெற ….

நேராக வீட்டிற்கு சென்றவர் …இறை பில் செய்துகொண்டிருந்த அப்ளிகேஷனை கிழித்தவர் …அவனை கட்டிக்கொண்டு …. இன்னொரு தடவை முயற்சி பண்ணு இறை …கண்டிப்பா உன்னாலே முடியும் …என்ன ஆனாலும் அப்பா உன்கூட இருப்பேன் ….என்று கூற அவனும் அவரை ஆற தழுவினான் … இதை பார்த்து கொண்டிருந்த …தமிழின் கண்களில் கண்ணீர் வடிய துவங்கியது …..

கண்டிப்பா … டாக்டர் இறை ஆவாருன்னு நம்பிக்கையோட விடைபெறுவோம் மக்களே …..

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here