முப்பத்து மூன்று %

0
53

கிரீச்…..தனது புத்தம் புது ஆக்டிவா வை ஆஃப் செய்து சிக்னலில் நிறுத்தினாள் குந்தவை,பிரபல கல்லூரி ஒன்றின் லெக்சரர்..வண்டியின் கண்ணாடி வழியாக பின்னால் வரும் வண்டிகளை வேடிக்கை பார்த்தாள்.120 விநாடிகளை தள்ள வேண்டுமே!

டுர்..டுர்…சிக்னலில் நிற்க பொறுமை இல்லாமல் தனது வண்டியை உறும விட்டு நின்றான் தேவ்…’இவன் யாரோ?”இவன் யாரோ?’ என மியூசிக் பிளேயரை மைன்ட் வாய்ஸ்-ல் ஆன் செய்து மூளையின் ஸ்டோரேஜை பேக் அப் செய்தாள்……….

அன்று மகளிர் தினம்….கல்லூரியில் பேராசிரியர்களுக்கான விவாத மேடை…தலைப்பு “பெண் சுதந்திரம்”…அனைவரும் பெண்களுக்கு, அவர் சுதந்திரம் தர வேண்டும்..இவர் தர வேண்டும்..இந்தந்த விசயங்களில் தர வேண்டும்…என வாதிட்டனர்.

ஆனால் பொறியியல் கல்லூரியின் சார்பில் பேச வந்தான்,தேவ்…ப்பா!!!…என்ன ஒரு பேச்சு! பெண்களுக்கு சுதந்திரத்தை யாரும் தர வேண்டியதில்லை.சுதந்திரம் என்பது தனது இயல்புடன் இருத்தலே….!ஆண்கள் யார்!?பெண்களுக்கு சுதந்திரம் தர!எந்த ஆண்பிள்ளையும் தான் விருப்பப்பட்டதைச் செய்ய யாரிடமும் அனுமதி வாங்குவதில்லை..33%இட ஒதுக்கீட்டுக்கு இவ்வளவு techie ஆன உலகத்திலும் பெண்கள் போராட வேண்டி உள்ளது?யார் யாருக்கு இடம் தருவது?ஒரு பெண் தனது கருவறையில் இடம் தந்தால் மட்டுமே ஆண் பிறக்க முடியும்…..!குடும்பத்தில் அடிமை விலங்காகவும் சமுதாய த்தில் விளம்பர பொருளாகவும் ஏன் இருக்க வேண்டும்?யோசியுங்கள்…பெண்களே!என பேசி விளாசினான். கைத்தட்டலில் காது செவிடு ஆனது ….அன்று கலக்கல் மன்னனாக கல்லூரியை வலம் வந்தவன்,தானே இவன்!!! என குந்தவையின் மூளை தேவை பற்றிய வீடியோவை ஓடவிட்டு பாஸ் செய்தது…

சே ..!அன்று இவனிடம் பேச முடியவில்லையே….இன்று பேசலாமா என நினைத்து mirror ல் அவனை மறுபடியும் பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்து விட்டான்… என்ன?.. என்றான், கண்களால்தான்…. உடனே பதறி ஒன்றும் இல்லை என தலையசைத்தாள் .சிக்னல் பச்சை ஆனது.. வண்டியை இவள் ஆன் செய்த நிமிடம் தேவ் அவளைத் தாண்டி சென்றான் …

குந்தவையும் காலேஜ் செல்லும் பாதையை நோக்கி முன்னேறினாள்.இவன் ஏன் நம் பாதையில் வருகிறான்?என்ற கேள்வியோடு (மைண்ட் வாய்ஸில் தான்) வண்டியின் வேகத்தை கூட்டினாள்..

என்ன இவள்? இவ்வளவு வேகமாக செல்கிறாள்?இங்கு என்ன ரேஸா நடக்கிறது? எல்லோரும் என்னை என்ன நினைப்பார்கள் ?என்ற கேள்வி கணைகளோடு வேகமாக்கினான் வண்டியை.அவனிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற சிந்தனையோடு அவளும் வண்டியை வேகமாக்கினாள். இருவரும் அறியாமலேயே அந்த இடம் ரேஸ் களமானது.கல்லூரி வாயிலை அடைந்தனர் ஒரே நேரத்தில் இருவரும்….

இவனும் சராசரி ஆண்தான் போல, வண்டியில் முந்துவதை கூட இவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என நினைத்துக் கொண்டே வண்டியை செட்டில் விட்டாள்.தேவ்வின் முன்னே சென்று ஹலோ என்றாள். அவன் அவளை முந்த முடியாத எரிச்சலில் இருந்தான்.பதில் கூட சொல்லாமல் முறைத்தான்.. நீங்கள் அன்று எங்கள் கல்லூரியில் பேசியதை கேட்டேன்… உங்கள் பேச்சு மட்டும் சூப்பர் சார் என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்…அவனது பதிலை எதிர்பார்க்காமல் ஆடிட்டோரியம் நோக்கி நகர்ந்தாள்.

பேச்சு மட்டுமா?என்ன சொல்ல வருகிறாள் இவள்?தலையை உலுக்கி வந்த வேலையை பார்க்கச் சென்றான் .ஆம்.. இன்று கல்லூரியில் நடைபெறவிருந்த மாநில அளவிலான விவாத மேடைக்கு ஜட்ஜ் தேவ் தான்…அனைத்து மாணவ மாணவிகளும் குழுமியிருந்தனர் பெண்ணைப் பற்றி பேச …ஆனால் தேவ்வின் கவனம் அங்கு இல்லை… மனம் முழுவதும் குந்தவையின் பேச்சும் ,அதில் அவனுக்கு இருந்த செய்தியும்…. பேச்சு மட்டும் என்றால் என்ன சொல்ல வருகிறாள், என்று யோசித்துக் கொண்டிருந்தான்..

விவாதம் நிறைவுற்றது.பரிசுக்கான அறிவிப்பை வெளியிட்டார் பிரின்சிபால்..இவர் ஏன் அறிவிக்கிறார்?தேவ் தானே ஜட்ஜ்! என்று நினைத்து அவனை பார்த்தாள். அவனும் மேடையிலிருந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் …இப்போது கண்களால் என்ன என கேட்பது அவள் முறையானது.

அந்நேரம் தேவ் வை பேச அழைத்தார்கள்..மைக்கில் அனைவருக்கும் வணக்கம் கூறி விட்டு பேச்சை விட செயல் தான் முக்கியம்..இதை இன்றைக்கு நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் உணர்ந்து கொண்டேன்..அதனால் இன்றைக்கு ஜட்ஜ்மென்ட் சொல்ற தகுதி எனக்கு இல்லை..என்று கூறி விட்டு அவளுக்கு புன்சிரிப்பை பதில் ஆக்கினான்..

பெண்களுக்கு எப்பொழுது 33%இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பது புரியாத புதிர்!ஆனால் குந்தவையின் உள்ளத்தில் 100% இடத்தைப் பெற்றான் தேவ்!!!

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here