முரட்டு சிங்கிள்—-சிறுகதை.

0
136

இது முழுக்க முழுக்க கற்பனை கிடையாது .என் கண் முன்னாடி நடக்குற சம்பவங்களின் தொகுப்பு தான் .

இந்த கதையோட நாயகன் பேரு முரளி.ஆனா பசங்க எல்லோரும் முரட்டு சிங்கிள் முரளின்னு தான் கூப்புடுவாங்க.எப்படி முரட்டு சிங்கிளா ஆனார்னு அவரே சொல்லி கேளுங்கள் .

எனக்கு அப்பா இல்ல அம்மா மட்டும் தான்.ஒரு தம்பி இருக்கான் பேரு கார்த்தி.எனக்கும் அவனுக்கும் ஒரு வருஷ வித்தியாசம் தான் .கஷ்டப்பட்டு அம்மா வளத்து ஆளாக்குனாங்க.படிச்சுட்டு இரண்டு பேரும் வேலைக்கு போக ஆரம்பிச்சோம் .அவனுக்கு என்னை விட சம்பளம் அதிகம் .ஒரே வருஷத்துல புரமோஷன் வாங்கி கெத்தா வந்துட்டான் .எனக்கு எங்க ஏரியா சின்ன பசங்க கூட விளையாடிட்டு இருக்க தான் புடிச்சது.கிரிக்கெட் ,பம்பரம்,கில்லின்னு ரோம்ப பிஸியா இருப்பேன் .என்னமோ தெரியல எனக்கு பொண்ணுங்க மேல ஆர்வமே வராமல் போச்சு .இதுவரையில் எந்த பொண்ணுகிட்டயும் விழுந்தது கிடையாது .வாழ்க்கை சிங்கிளா அழகா போய்ட்டு இருந்தது .

அம்மா பொண்ணு பாக்க ஆரம்பிச்சாங்க .மாசத்துக்கு எப்படியும் பத்து பொண்ணாவது பாக்க போயிருவோம்.ஒண்ணு அந்த பொண்ணுக்கு என்னை புடிக்காது இல்ல எனக்கு புடிக்காது .மனச தளரவிடாமல் அம்மா தேடிட்டு இருந்தாங்க .ஒரு நாள் என் தம்பி வந்து”டேய் நான் ஒரு பொண்ண லவ் பண்றேன்.உனக்காக தான் காத்திருந்தேன் .இதுக்கு மேல காத்திருக்க முடியாது .நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம்னு “சொன்னான் .நானும் அம்மாவும் சம்மதிச்சோம்.எளிமையாக கல்யாணம் நடந்தது .அப்புறம் தான் கதையில பெரிய ட்விஸ்ட்.எங்க வீடு சின்னது .அதனால நானும் அம்மாவும் மொட்டை மாடிவாசிகள் ஆகிட்டோம்.சொந்த வீட்ல பர்மிஷன் கேட்டு உள்ள வர்ற சூழ்நிலை எனக்கு .என் தம்பியோட ரோமான்ஸ்க்கு பயந்து நான் வீட்டுக்கு வர்றதேயில்லை.வேகமாய் பொண்ணுபாக்க ஆரம்பிச்சாங்க ஆனா இப்ப எங்க போய் பொண்ணு கேட்டாலும் என் தம்பியோட கல்யாணத்த சொல்லியே தர மறுத்துட்டாய்ங்க.ஏரியால மட்டும் இல்லைங்க நல்லது கெட்டதுக்கு கூட போக முடியல எல்லாரும் என்னை பத்தியே பேசுறாங்க .எனக்காக அனுதாபப்பட ஆரம்பிச்சுட்டாங்க அது தான்ங்க கொடுமை .இப்படி தான் முரட்டு சிங்கிள் ஆனேன் .

ஒரு நாள் சொந்தக்காரர் வீட்டு கல்யாணத்துக்கு பஸ்ல போயிட்டு இருந்தேன் .ராத்திரி நேரம் .அதனால நல்ல ஜன்னல் சீட்டா புடுச்சு உக்காந்து காதுல இளையராஜா பாட்டு கேட்டுகிட்டே தூங்க ஆரம்பிச்சேன் .பஸ்ல லைட் ஆப் பண்ணிடாங்க.நல்ல அமைதி.நல்ல தூக்கத்துல மெதுவா கண் முழிச்சேன்.அப்போது என் பக்கத்துல ஒரு பொண்ணு உக்காந்திருந்தா.நிலா வெளிச்சத்தில் அவளோட முகம் அவ்ளோ அழகா இருக்கு.காத்துல பறக்குற அவளோட தலைமுடியும்,இங்கிட்டும் அங்கிட்டும் அலை மோதுற அவளோட கம்மலும் என்னை சுண்டி இழுக்குது.என் வாழ்க்கையில ஒரு பொண்ணு என்கிட்ட உக்காந்தது இது தான் முதல் முறை .அப்புறம் எப்படி தூங்குறது?எனக்கு என்னை பண்றதுன்னு தான் தெரியல.தொடர்ந்து பாக்க ஆசை ஆனா பயமா இருக்கு.பேசணும்னு ஆசை என்ன பேசறதுன்னு தெரியல .அப்ப பஸ் ஒரு இடத்தில் நிறுத்தி டீ சாப்பிட சொன்னாங்க .அப்போது அந்த பொண்ணு”சார் டீ சாப்பிட போனிங்கன்னா எனக்கு ஒரு வாட்டர் பாட்டில் வாங்கிட்டு வாங்கன்னு”சொன்னா தலைய ஆட்டிட்டு போய் வாங்கிட்டு வந்துட்டேன் .

பஸ் கிளம்புச்சு .எல்லோரும் அமைதியா தூங்கும் போது நாங்க இரண்டு பேர் மட்டும் இளையராஜாவுடன் இணைந்திருந்தோம்.காலையில நாலு மணி இருக்கும் அந்த பொண்ணு அசந்து தூங்கி என் மேல சாஞ்சிட்டா.எனக்கு முகம் எல்லாம் வேர்த்து போச்சு .என் வாழ்க்கையில என்னடா நடக்குதுன்னு தோணுச்சு .கொஞ்ச நேரத்தில் எழுந்த அவ “ஸாரி”ன்னு சொல்லிட்டு திரும்பி உக்காந்துகிட்டா.காலையில ஆறு மணிக்கு பஸ் ஸ்டாண்ட்ல இறங்கிட்டோம்.நான் மண்டபம் போக ஆட்டோ புடுச்சேன்.ஆனா போகல அவள பாலோ பண்ணி போய்ட்டு இருந்தேன் .அவ வீட்ட கண்டுபுடிச்சேன்.அப்புறம் மண்டபம் போனேன் .கல்யாணம் முடிஞ்சதும் எல்லோரும் கிளம்பும் போது நான் கல்யாண மாப்ளட்ட போய்”டேய் பங்காளி.உன் அப்பன்கிட்ட சொல்லி நான் உன் துணைக்கு இந்த ஊர்ல இருக்க ஏற்பாடு பண்ணுன்னு”சொன்னேன் எல்லாம் நினைச்ச மாதிரி நடந்தது .அவ வீட்ட சுத்தி சுத்தி வந்தேன் .புது ஏரியா எதுவுமே விசாரிக்க முடியல .என்னால ரோம்ப நாள் இங்க இருக்க முடியாதுன்னு தெரியும் அதனால் லவ்வ தைரியமா சொல்ல முடிவு செஞ்சேன் .அவ வீட்ட விட்டு வெளிய வந்து அந்த ஏரியா கோயிலுக்குள்ள போறத பாத்து பின்னாடியே போய் அவள நிறுத்தி “என்னங்க ஒரு நிமிஷம் நில்லுங்க.எனக்கு உங்கள ரோம்ப புடிச்சிருக்கு .பஸ்ல பாத்ததுல இருந்து வானத்துல பறக்குற மாதிரி இருக்கு.இதுவரையில் பொண்ணுங்க இல்லாம வாழ்றது தான் வாழ்க்கைன்னு இருந்துட்டேன் ஆனா அதை நீங்க உடைச்சு எறிஞ்சுடீங்க.இப்ப காதல் ரோம்ப புடிக்குது.அதனால் தானோ என்னவோ என்னையே எனக்கு ரோம்ப புடிக்குது .ப்ளீஸ் சீக்கிரமா யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க “என்றதும் கோயிலுக்குள்ள இருந்து வந்த பூசாரி “இந்தாம்மா உன் கல்யாண பத்திரிக்கை .பூஜை பண்ணியாச்சு.”என்றதும் அதிர்ச்சியாகி நின்ற அவனிடம் “ஸாரிங்க .வெறும் இரண்டு நாள்ல ஒரு பொண்ண இவ்ளோ உண்மையா காதலிச்சு தைரியமா வந்து சொல்றீங்க பாருங்க சூப்பர் கேரக்டர் நீங்க .என் கல்யாணத்துக்கு கண்டிப்பாக நீங்க வரணும்னு விரும்புறேன்”என்று பத்திரிக்கையை கொடுத்தாள் .

இதுவரை வாழ்ந்த நாட்களை எல்லாம் இந்த மூன்று நாட்கள் பந்தாடியது போன்ற உணர்வுடன் வீடு திரும்பினான் .இந்த ஏமாற்றம் அவனை அமைதிப்படுத்தியது.அந்த இரவு நேர பயணம் அவன் தூக்கத்தை தூக்கி வீசியது .ஆனால் இதுவும் கடந்து போகும் என்பதை உணர்ந்திருந்தான் .ஒரு மாதத்திற்கு பிறகு தனது காதலியின் கல்யாணத்திற்கு கிளம்பினான் .மண்டபத்தில் இறங்கியதும் மங்கள வாத்தியம் முழங்க திருமணம் முடிந்தது .அப்போது மேடையில் இருந்து மணப்பெண் ஏதோ சைகை காட்டினாள் .அது பக்கத்துல பார் என்று உணர்ந்து திரும்பியவன் அதிர்ந்து போனான் .கல்யாண பொண்ணு உருவத்தில் அப்படியே இன்னோர் பொண்ணு.பேச்சே வரல.அப்போது அந்த பொண்ணு”பஸ்ல பாத்தது பின்னாடி சுத்துனது எல்லாம் என் கூட.லவ்வ சொன்னது என் அக்காகிட்டயா?”என்றவள் பலமாய் சிரித்தபடியே “நாங்க ட்வின்ஸ்”என்றதும் மெதுவாக மூச்சு விட ஆரம்பிச்சேன் .கையில் இருந்த கிப்ட கல்யாண பொண்ணுகிட்ட கொடுக்கும் போது அவர் என்னிடம் “உங்கள மாதிரி முரட்டு சிங்கிள யாருக்கு தான் புடிக்காது .அவளுக்கும் புடிச்சிருக்கு “என்றதும் அவளை பார்த்து திரும்பியதும் வெட்கத்துடன் “ஆமாம் “என்று தலையசைத்தாள் .அதே மேடையில் சத்தமாக நான் கமிட்டட்னு கத்தணும்னு தோணுச்சு .

நல்ல நாள் பாத்து இரண்டு வீட்லயும் பேசி கல்யாணமும் முடிஞ்சது .இப்பவும் நான் ஏரியால கிரிக்கெட் விளையாடிட்டு தான் இருக்கேன் .என்னை இழக்காமல் ஒரு அழகான வாழ்க்கை அமைஞ்சிருக்கு.

[முற்றும் ]

வணக்கங்களுடன்

நான்
உங்கள்
கதிரவன் !

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here