முருங்கைக்காய் தொக்கு

0
24

இது என் ஆஃபிஸ் கலீக் ஒருவரிடம் கற்றுக் கொண்டேன். இப்பொது எங்கள் வீட்டில் இது எல்லாருக்கும் ஃபேவரிட். முக்கியமாக எனக்கு 😜😜😜
ஏன்னா எனக்கு முருங்கைக்காய் பிடிக்காது..

தேவை:

பிஞ்சு முருங்கைக்காய் 2
வெங்காயம் : 2 மீடியம் சைஸ்
தக்காளி : 1 மீடியம் சைஸ்
ப. மிளகாய் : 1
பூண்டு : 5 பல்
மிளகாய் பொடி காரத்துக்கேற்ப
மஞ்சள் பொடி : 1 தே.கரண்டி
உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க
ந. எண்ணெய் : 2 குழி கரண்டி
கடுகு :1 தே.கரண்டி
உளுந்து : 1 தே. கரண்டி
பெருங்காயம் ஒரு சிட்டிகை
க.வேப்பிலை : ஒரு கொத்து

முருங்கைக்காயை ஒன்றரை சென்டிமீட்டர் அளவு துண்டுகளாகவும், வெங்காயம் தக்காளி நீள வாக்கிலும் நறுக்கி கொள்ளவும். ப. மிளகாய் கீறினால் போதும்.

டைப் 1
எண்ணெய் சூடானதும் தாளித்து க. வேப்பிலை, ப.மிளகாய் பூண்டு போட்டு வதக்கி, பின் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கி தக்காளி மசிந்ததும் உப்பு, மஞ்சள் பொடி, காரப்பொடி சேர்க்கவும். 1 நிமிடம் வதங்கியதும் முருங்கைக்காய் போட்டு வதக்கி 1டம்ளர் தண்ணிர் விட்டு 5 நிமிடத்திற்கு மூடி வேக விடவும். காய் வெந்து எண்ணெய் பிரியத் தொடங்கியதும் இறக்கலாம்.

டைப் 2

முருங்கைக்காய் துண்டுகளை தண்ணீரில் வேக வைத்து எடுத்து உள்ளே உள்ள சதைப்பற்றை வழித்து சேகரித்து கொள்ளவும்.

எண்ணெய் சூடானதும் தாளித்து க. வேப்பிலை, ப.மிளகாய் பூண்டு போட்டு வதக்கி, பின் வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கி தக்காளி மசிந்ததும் உப்பு, மஞ்சள் பொடி, காரப்பொடி சேர்க்கவும். 1 நிமிடம் வதங்கியதும் முருங்கைக்காய் விழுது போட்டு வதக்கி 2 நிமிடத்திற்கு மூடி வேக விடவும். சுருண்டு வதங்கி எண்ணெய் பிரியத் தொடங்கியதும் இறக்கலாம்.

இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
ரசம், தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம்.
விழுது போட்டு செய்த தொக்கு இட்லி தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here