மூன்றாம் பிறை—சிறுகதை.

0
85

(நேர்மையா காதலிக்கிற எல்லோருக்கும் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்)

எல்லோருக்கும் வணக்கம் என் பெயர் தீபன் சக்ரவர்த்தி .அப்பா சரவணப்பெருமாள்,அம்மா மகாலட்சுமி,தங்கச்சி ஆனந்தி.அப்புறம் என் அம்மா மட்டும் தங்கச்சிய பேர்ச்சொல்லி கூப்பிட மாட்டாங்க ஏன்னா அது அப்பாவோட முன்னால் காதலியோட பேர்ன்னு பின்னால் தான் தெரிஞ்சதாம்.அழகான குடும்பம் .என் அப்பா அடிக்கவும் மாட்டார் அட்வைஸ் பண்ணவும் மாட்டார் .கண் பார்வையில் எங்களை சரிப்படுத்த தெரிஞ்ச வல்லவர்.என் தங்கச்சிக்கு போன் வாங்கி தரல முக்கிய தேவைன்னா அவர் போன மட்டும் தான் தருவார் எனக்கே கோபம் வரும்.ஆனா பொள்ளாச்சி சம்பவத்துக்கு அப்புறம் அவர் மேல மரியாதை கூடியிருக்கு.படிச்சு முடிச்சு நல்ல வேலைக்கு போய் நல்லப்படியா போய்ட்டு இருந்த வாழ்க்கையில் ஒரு அழகான திருப்புமுனை.

என்னோட தெருவுல இருக்குற என் அப்பாவோட நண்பர் முரளி மாமா வீட்டுக்கு மேல அவளோட குடும்பம் வாடகைக்கு வந்தாங்க.பைக்ல நின்னு போன் பேசிட்டு இருந்தப்ப தான் மாடியில் நின்னுட்டு இருந்த அவள பாத்தேன்.யப்பா என்ன மாதிரி அழகு.எனக்கு புடிச்சமாதிரி ஒரு பொண்ணு .நீளமான மூடி .அளவான கூர்மையான மூக்கு .சின்னதா இரண்டு உதடு அவ்ளோ தான் பாத்தேன் சட்டுனு உள்ள போய்ட்டா.வீட்டுக்கு வந்து ஹோம் தியேட்டரில் சத்தமா பாட்டுப்போட்டு தங்கச்சியும் நானும் செம குத்து டான்ஸ் போட்டோம் பாருங்க அவ்ளோ சந்தோசம்.

மறுநாள் காலையில முரளி மாமா வீட்டுக்கு எதார்த்தமா வந்த மாதிரி போய் நின்னேன்.அத்தைக்கிட்ட கிச்சன்ல போய் நின்னு மேல் வீட்டுகாரங்களப்பத்தி விசாரிச்சேன்.அத்தை”அவுங்க கோயம்புத்தூர்காரங்க.மாமாவோட ப்ரண்ட் சந்திரன் இங்க அனுப்பி வச்சிருக்கார்.அவர் பெயர் நாராயணன் அந்த அம்மா பேரு கெளரி.அந்த பொண்ணு பேரு?தலைய சொறிஞ்சுகிட்டே மறந்து போச்சு “என்றதும் அத்தை மேல வந்ததே கோபம் டீய குடிச்சிட்டு சிரிச்சுட்டு வந்துட்டேன்.மறுபடியும் மறுபடியும் போக முடியாது .நாட்கள் நகர்ந்தது.தீபாவளி அன்னைக்கு மாமா வீட்டுக்கு இனிப்பு தர போயிருந்தேன்.எல்லா வீடும் கலகலன்னு இருக்கும்போது அவ வீடு மட்டும் அமைதியா இருப்பதை உணரமுடிந்தது.வழக்கம் போல அத்தைக்கிட்ட விசாரிக்கும் போது “ஆமாடா தம்பி .அந்த வீட்ல இருக்குற மூணு பேருமே யார் கூடவும் பேசறதோ பழகுறதோ இல்லை.நானும் பேசுறது கிடையாது .உங்க மாமாவும் “மேல போக வேண்டாம்னு”சொல்லிட்டாரு.”என்றதும் நான் வாசல்ல வரும் போது மேல இருந்து அவளோட அம்மா “அவந்திகா பாத்து போம்மா ரோட்ல வெடி வச்சுட்டு இருப்பாங்க”என்றதும் அவ கீழ வந்து என்னை தாண்டி போகும்போது அப்படி ஒரு பீல்.வீட்டுக்கு போனதும் கவிதை எழுதி ஆகணும்னு ஒரு பிடிவாதமே வந்திருச்சுன்னா பாருங்களேன்.

மனசு டாப்கியர்ல போக ஆரம்பிச்சது.அவ ஆபிஸ் போறவரைக்கும் தெருமுனையில காத்திருந்து பாத்துட்டு நைட் அவளுக்கு முன்னாடி வந்து காத்திட்டு இருந்தேன் .காலேஜ்ல இருந்து வந்த என் தங்கச்சி இரண்டு மூணு தடவை பாத்துட்டா.அவ வாயை அடைக்க இரண்டு சுடிதார் வாங்கி தந்திருக்கேன்.ஒவ்வோரு நாளும் அவந்திகாவுக்காக காத்திருந்து அவ என்னை தாண்டும் போது இதயத்துடிப்பு சட்டைய கிழிச்சுட்டு வெளிய வந்து விழுற மாதிரி இருக்கும் .கொஞ்ச கொஞ்சமாக அவ எனக்குள்ள முழுசா வளந்து நின்னா.இதுக்கும் மேல மறைக்கக்கூடாதுன்னு தைரியத்த வரவழைச்சுட்டு ஸ்கூட்டி வரும் கை காட்டுனா நிறுத்தாம போயிட்டா.மறுநாளும் காட்றேன் நிறுத்தல.அடுத்த நாள் குறுக்க போய் நின்னுட்டேன் நிறுத்திட்டா.ஒரு செகண்ட் அமைதிக்கு பிறகு “எனக்கு உங்கள பிடிச்சிருக்கு.கல்யாணம் பண்ணிக்கலாமா?ன்னு”கேட்டதும் வண்டிய எடுத்துட்டு கிளம்பிட்டா.அவ திட்டி இருந்தா கூட பரவாயில்லை ஒண்ணுமே சொல்லாம போய்ட்டாளே ஒரே குழப்பம்.மறுநாளும் குறுக்க போய் நின்னேன் .அவ நிமிந்து பாத்து “உங்க குடும்பத்தோட நாளைக்கு எங்க வீட்டுக்கு வாங்க”அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டா .

நேரா வீட்டுக்கு போய் என் அப்பா,அம்மா அட ஏங்க என் தங்கச்சி கால்லக்கூட விழுந்து என் காதல்ல பத்தி சொன்னதும் என் அம்மா”அப்பன போலவே புள்ள சரியா பொறந்திருக்கு பாரு”என்று சிரிக்க மறுநாள் பெண் கேட்டு கிளம்பினோம்.எங்களுக்கு முன்பே முரளி மாமாவும் அத்தையும் போயிருந்தாங்க.அத்தை என்ன ஒரு பார்வை பாத்தாங்க “இதுக்காடா கிச்சனையே சுத்தி சுத்தி வந்த நானும் பயலுக்கு நம்ம மேல பாசம்னு நினைச்சுட்டேன்”என்பதை போல.எல்லோரும் அமைதியா இருந்தாங்க எங்க அப்பா பேச ஆரம்பிக்கும் போது அவளோட அப்பா தடுத்து பேச ஆரம்பிச்சார்”முதல்ல நாங்க ஏன் இங்க வந்தோம்னு சொல்றேன்.கோயம்புத்தூர்ல இருக்கும்போது உங்க பையன மாதிரியே ஒரு பையன் என் பொண்ணு பின்னாடியே சுத்திட்டு இருந்தான் .ரோம்ப சின்சியர் லவ்னு சொன்னான் .நானும் வீட்டுக்கு கூப்பிட்டு என் பொண்ணு மூன்றாம் பாலினத்த சார்ந்தவன்னு உண்மைய நேர்மையா அவன்கிட்ட சொன்னேன்.”என்றதும் எங்க எல்லோருடைய முகத்திலும் அதிர்ச்சி ரேகை வேகமாய் பரவியது .பேசுவதற்கு வார்த்தைகள் இன்றி அமைதியானோம் அவர் தொடர்ந்தார் “ஆனா அந்த பையன் இந்த விஷயத்த அவனோட ப்ரண்ட்ஸ் சொல்லிருக்கான்.அவனுங்க வாட்ஸ்அப் ,பேஸ்புக்ல எல்லாம் என் பொண்ணோட போட்டோவ போட்டு இது ஒரு அரவாணி இதை யாரும் பொண்ணுன்னு நினைச்சு பின்னாடி போகதீங்கன்னு போட்டு விட்டுடானுங்க.யாருக்கும் தெரியாம இருந்த விஷயம் எல்லோரும் தெரிஞ்சு போச்சு.வீட்ட விட்டு வெளிய போக முடியல.நாங்க என்னங்க தப்பு செஞ்சோம்.என் பொண்ணு ஒரு தேவதை.கடவுளோட கைக்குழந்தை.அவள ஏன் சார் நசுக்குறீங்க?என் பொண்ணு நம்ம எல்லாத்த விட படிச்சு சம்பாதிக்குறா.அவளுக்கு நம்ம அன்பு தான் வேணும் .அவள சின்ன வயசுல இருந்தே இந்த சமுதாயத்துக்கு பயந்து பயந்து ஒளிச்சு வச்சே வளத்தோம்.அவளுக்கு மத்தவங்களுக்கு கிடைக்குற சின்ன சின்ன சந்தோசம் கூட கிடைக்காம ஏங்கும் போது பெத்தவனா குற்றஉணர்ச்சில செத்து செத்து பொழைக்குறேன்.எங்கள விட்டுட்டு போயிருங்க சார் இங்க இருந்தும் ஓடி ஒளிய முடியாது”என்றவர் கதறி அழ அவருடைய மனைவியும் மகளும் தாங்கிபிடித்தனர்.

நொறுங்கிய இதயங்களோடு வீடு திரும்பினோம்.சாப்பாடு ,தூக்கம் எதுவுமே புடிக்கல.யாரும் யார் முகத்துலவும் முழிக்குறதும் இல்ல.இந்த சமுதாயத்தில் அவுங்கள ஏன் மறைச்சு வைக்குறோம்?இல்ல ஒதுக்கி வைக்கிறோம்.எனக்குள் நிறைய கேள்விகள் .சாலைகள்ல,பஸ்ல,இரயில்ல என்னை ஆசிர்வதிக்கும் அந்த கைகளோட எனக்கும் ஏதோ உறவு இருக்குற உணர்வு ஏற்பட்டது .அவந்திகா ஆபிஸ் விட்டு வரும்போது அவள தனியா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போய் “என்னாள யோசிச்சு கூட பாக்க முடியல நீ இல்லாம வாழ முடியுமான்னு.புரட்சி ,புண்ணாக்கு எதுவுமே கிடையாது நான் உன்னை லவ் பண்றேன் அவ்ளோ தான்.என் பொண்டாட்டி நீ தான் இந்த உயிர் போற வரைக்கும் .நீ மறைஞ்சு வாழக்கூடாது இனி தலை நிமிந்து வாழனும் திருமதி.அவந்திகா தீபன் சக்ரவர்த்தியா சரியா?என்று முடிப்பதற்குள் என் பின்னால் ஓடி வந்து கட்டியணைத்தாள்.அவள் கண்ணீர் ஈரம் என்னில் படர்வதை உணர்ந்தேன்.அவளை இழுத்து என் மார்பில் சாய்த்து “நீ அழறது இது தான் கடைசியா இருக்கணும்”என்றதும் சிரித்தபடியே தலையசைத்தாள்.நான் வீட்டிற்கு வரும்போது போது தரகர் வந்திருந்தார் .அம்மா,அப்பாவிடம் எப்படி சொல்வது என்று தவிக்கும் போது என் அப்பா”தரகரே இரண்டு வருஷம் ஆகட்டும் பொண்ணு காலேஜ் முடிக்கட்டும்”என்றதும் தரகர் “பையனுக்கு பாக்கலேமே” என்றதும் அப்பா “பையனுக்கு பாத்தாச்சு இதே தெருவுல தான்.பேரு அவந்திகா”என்றதும் ஓடிப்போய் காலில் விழுந்தேன்.என் அப்பா “இவன் வேற எதுக்கெடுத்தாலும் கால்ல விழுந்துட்டு”என்றதும் எல்லோரும் சிரித்தனர்.

[எல்லார் முன்னிலையும் கல்யாணம் சிறப்பா முடிஞ்சது.ஒரு வருஷம் கழிச்சு அபர்ணா மற்றும் கெளதம்னு இரண்டு குழந்தைகள தத்து எடுத்து வளத்திட்டு இருக்கோம்.அவ மேல இருந்த காதல் மட்டும் வளந்திட்டே இருக்கு போங்க]

நம்ம உடன்பிறப்புங்க திருநங்கைகள் அவுங்களுக்கு உளமாற இந்த கதையை சமர்பிக்கிறேன்.

நன்றிகள்!
வணக்கங்களுடன்!

நான்
உங்கள்
கதிரவன்!
[தங்களுடைய கருத்துக்களை 9600532669 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தெரிவிக்கவும்

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here