மௌன மொழி 2

கோயம்பேடு பேருந்து நிலையம்:
நண்பர்கள் இருவரும் தஞ்சை செல்லும் பேருந்திற்காக காத்திருந்தனர்…. சிவாவின் சொந்த ஊர் தஞ்சையிலிருந்து பேருந்தில் ஒரு மணி நேர பயண முடிவில் இருக்கிறது செந்தலை எனும் அழகிய கிராமம்…
இரவு தொடங்கிய அவர்களின் பயணம்….. காலை தஞ்சை பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது…. இந்த பிரயாணம் ராமின் வாழ்வையே மாற்றப் போகின்றது என அறியாது அவர்களின் பயணம் செந்தலையை நோக்கி நகர்ந்தது….. கிராமத்திற்கு செல்லும் பேருந்தில் பயணம் தொடங்கியது…. காணும் இடம் எங்கும் இயற்கை மங்கை பச்சை வண்ண பட்டுடுத்தி ….. அதில் வண்ண வண்ண மலர்களை பதிந்திருந்தால்… வழி நெடுகிலும் அரண் போல் அமைந்த மரங்கள்… பல்வேறு புள்ளினங்களின் ரீங்காரம்…. ஆங்காங்கே ஆடு மாடுகளின் அணி வகுப்பு என் அத்தனை அழகான காட்சிகளையும் மனப்பெட்டகத்தில் நிறைத்துக்கொண்டான் ராம்…..
ராம்……. டேய்ய்ய்ய் ராம்…. எவ்வளவு நேரம்தான் கண்ண தொரந்துகிட்டே கனவு காணுவ…. டேய்….. தலையில் தட்டியே அவனை சுய உணர்விற்கு
வர வைக்க இயன்றது…. (பக்கி அடி வாங்குனாதா ஒழுங்க இருப்பான் போல… )
தலையை தேய்த்து கொண்டே… ஏண்டா என்ன அடிச்ச….. என்றான்…
எவ்வளவு நேரம்தான் உன்ன கூப்டறது … அடுத்த ஸ்டாப்ல எறங்கனும்…. ரெடியா இரு.. என்று கூறிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்…
ராம் தன் பின்னால் இல்லை என்பது உணர்ந்து அவனை அழைக்க திரும்பினான்.. அங்கு ராமோ….. தன் வாயில் ஈ போவது கூட தெரியாத நிலையில் தன்னிலை மறந்து நின்றான்.. (அட ஆமாங்க நம்ப கதாநாயகி ரத்னாவ பார்த்து தான் உறைஞ்சு போய்ட்டான்)
சிவா தலையில் அடித்து கொண்டு…. இவன் என்ன அப்பப்ப ஃபிரீஸ் ஆயிடுரான் என நினைத்து கொண்டு… ராம் பார்த்த பக்கம் பார்க்க அங்கு ரத்னா தன் தோழியுடன் இருப்தை கண்டவன் … அவள் அருகில் சென்று…. ஹாய் ரத்து(ரத்னா) எப்படி இருக்க என வினவிக் கொண்டு இருந்தான்…
ராம் தலையை இருபுறமும்ஆட்டிக் கொண்டு… தன்நிலை அடைந்து…. சிவா அருகில் வந்து … டேய் நா உன் பிரென்ட் என்ன நியாபகம் இருக்கா என கேட்க…. அவனை தலை முதல் கால் வரை பார்த்தவன்….
ஓஓஓஓ…. உனக்கு நியாபகம் வந்திடுச்சா….என அவனை நக்கலாக பார்க்க…. ராமோ அசடு வழிந்து கொண்டிருந்தான்….
நான் நல்லா இருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க என சைகையில் கேட்டுக் கொண்டிருந்தால்…. (ஆமாபா நம்ப நாயகி பேச மாட்டா….. பிறவி ஊமை இல்ல …. பேச வைக்க முடியும்.. அத செய்ய தான் நம்ப ஹீரோ வந்திருக்காரே)
அவளுக்கு பதில் அளித்துவிட்டு நிறுத்தம் வந்ததும்…. அனைவரும் இறங்கினர்… மனதில் ஆயிரம் கேள்விகளோடு அவர்களுடன் பயணப்பட்டான் ராம்…..
பஸ் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்றனர்…. வழியில் ரத்னாவின் அண்ணன் வந்து அவளை அழைத்து சென்றான்… சிறு தலையசைப்புடன் விடை பெற்றுக் கொண்டாள்…. போகும் அவளையே விழி இமைக்காமல் பார்த்துக் கொண்டே நண்பனிடம்…. ஏன் சிவா அந்த பொண்ணால பேச முடியாத…. என அவளை பற்றி அறியும் ஆவலில் கேட்டான்…அவள் தான் தனக்கு உலகம் ஆக போகிறாள் என தெரியாது…
ஆமா ராம்…. பிறவி ஊமை இல்ல…. அவ சரியான வாயாடி…….. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விபத்துல அவங்க அம்மா அப்பா இறந்துட்டாங்க… அப்போ ஏற்பட்ட அதிர்ச்சில இவ பேசுற சக்திய இழந்துட்டா… இப்போ அவ பெரியப்பா வீட்ல தான் இருக்கா…. பெரியம்மாக்கு தான் இவள கண்டாலே புடிக்காது… என அவளை பற்றி கூறிக்கொண்டே… வீட்டை அடைந்தனர்…..
சிவாவின் அம்மா புனிதா இவர்களை கண்டதும் அழைத்து கொண்டே வந்தார்…. வாட சிவா…. வாப்பா ராம் பிரயாணம்லா நல்ல இருந்துச்சா …….
நல்ல படியா ஆச்சு.. நாங்க ரெடி ஆகி வரோம்.. சாப்பாடு எடுத்து வைங்க என கூறிவிட்டு தன் அறைக்கு அழைத்து சென்றான்…
ராம் என்ன ஆச்சு .. ஏன் ஒரு மாதிரி இருக்க.… ரத்னாவ பத்தி யோசிக்கிறியா என நேரடியாக கேட்டு விட்டான்….
ஆச்சரியம் விலகாமல் ஆம் என தலை அசைத்து….. உனக்கு எப்படி டா தெரிஞ்சது…..
அதா மூஞ்சில தெரியுதே..
அவ்வளவு வெளிபடையாவா இருக்கு..... ?????
டேய். நீ பஸ்ல பார்த்தப்பவே…. சந்தேக பட்டேன்…. ஏன்டா உனக்கு இந்த வேலை….
இல்ல சிவா…. இவள வேற யாரோவா நினைக்க முடியல…. என் உயிர்ல கலந்துட்டா மச்சி… என கூற. … இப்போது ஆச்சரியபடுவது சிவாவின் முறையானது… ??
என்னடா சொல்ற…. அவள பத்தி எதுவும் தெரியாமலேயே இப்படி ஒரு முடிவு எடுக்கறது தப்பு சொல்லிட்டேன்..
என்ன சிவா நீயே இப்படி சொல்ற…. உனக்கே தெரியும் நான் யாரையும் லவ் பண்ற ரகம் இல்லனு…. என்னையே ஒரு பார்வையால அவள பத்தி நினைக்க வச்சுட்டானா…. அவ எனக்கானவடா…. இனிமே அவ தான் என் உயிர் ….. இங்கேர்ந்து போகும் போது அவளையும் என் கூட அழைச்சிட்டு தான் போக போறேன் என் மனைவியாக……
சிவாவோ இவன் வார்த்தையில் தெரிந்த உறுதியை எண்ணி… ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்…