மௌன மொழி 4

0
291

மௌன மொழி 4
வாடா நல்லவனே என்னய தனியா கலட்டிவிட்டுட்டு இவ்ளோகாலைல எங்கடா போன அதுவும் போன கூட எடுக்காம..பாட்டு சவுண்ட்ல சீக்கிரம் முழிப்பு வந்துட்டு.அதான் என்ன பண்றதுனு யோசிச்சே அப்படியே வெளியே போய்ட்டு வரலாமேனு போனேன்…

ஒஹோ… அப்டியா அப்போ சார் ரத்னா வீட்டு முன்னாடி என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க…???

(எங்கேர்ந்து பார்த்தான்???)அது.. அது… ஒன்னும் இல்ல டா… சும்மா பார்த்துகிட்டு இருந்தேன்.. சரி நமக்கு தெரிஞ்ச பொண்ணாச்சே.. பேசிட்டு வருவோமேனு போனேன்… அதுக்குள்ள அவுங்க பெரியம்மா வந்து அவள உள்ள வர சொல்லிட்டாங்க.. அவ அப்டிக்கா போய்ட்டா.. நான் இப்டிக்கா வந்துட்டேன்…???? என அசடு வழிய கூறிவிட்டு.. சரிடா நான் போய் குளிச்சிட்டு வரேன் என பாத்ரும் செல்ல இருந்தவனை… சிவா இடைமறித்து… என்னடா இங்க வந்துமா பாத்ரூம்லயே குளிக்கப்போற… வாடா… நாம்ப போய் ஆத்துல குளிக்கலாம்..என அவனை ஆற்றிற்கு அழைத்துச் சென்றான்… செல்லும் வழி நெடுகிலும் இருபுறமும் ஓங்கி வளர்ந்த தென்னை…வேம்பு.. முருங்கை.. மருதமரம்…கல்யாண முருங்கை..சரக்கொன்றை என பல்வேறு மரங்களின் பச்சைவண்ண காட்சிகளும்..கண்ணிற்கு குளுமையைவாரிவழங்கின அவற்றை அனைத்தையும் ரசித்தவாறே ஆற்றங்கரைக்கு வந்தனர்…டேய் சிவா…இதமாறிலாம் படத்துல தான் டா பாத்திருக்கேன்…. செம்ம டா.. உங்க ஊரு ரம்யமா இருக்குடா என அங்கலாய்த்துக் கொண்டு வந்தான்…
ஆமா ராம்… இயந்திர மயமா வாழ்ந்து வாழ்ந்து… இயற்கைய ரசிக்க மறந்துட்டோம்டா.. என பேசிக்கொண்டு வந்ததில்… எதிரில் வந்தவரை கவனியாது இடித்துவிட்டான் ராம்.. (ரத்னாவ நெனச்சா நான் பொறுப்பு இல்ல???)
சாரீங்க.. கவனிக்கல… தெரியாம இடிச்சுட்டேன்… சாரீங்க என முகம் பார்க்காமல் கூறிச் சென்றான்…

இடிபட்டவனோ… ராமை தீப்பார்வை பார்த்துச் சென்றான்??…. அவன் எண்ணத்தில்…. ரத்னாட பேசிட்டு இருந்தவல… யார் இவன் சிவா கூட என்ன பண்றான்… என எண்ணிக் கொண்டு வந்தவனை…
இவற்றை பார்த்து கொண்டே பின் வந்த சிவா… இடிபட்டவனிடம் வந்து
டேய் முருகா… என்னடா அப்படி மொறச்சுக்கிட்டு இருக்க…அவன் தெரியாம தாண்டா இடிச்சுட்டான்… அதுக்கு ஏன்டா அவ்ளோ கோபம் உனக்கு….
சிவா… யாரு இவன்… காலைல ரத்னாட பேசிட்டு இருந்தான்.. இப்பவும் பாருங்க அவட தான் பேச போறான்… எதுவும் சரியா இல்ல… தப்பா எதுவும் கேள்விப்பட்ட… அவன் உயிருக்கு நான் பொறுப்பு இல்ல சொல்லிட்டேன்.. என முறுக்கிய மீசையை.. மேலும் முறுக்கி… வேஷ்டியை ஒரு காலால் தூக்கி மடித்து கட்டிக் கொண்டு… சீறும் பாம்பாய் சீறிச் சென்றவனை….
விழி இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தான்…
இது என்னடா புதுப்பிரச்சனையா இருக்கு…?? நமக்குன்னு எங்கிருந்து தா வராங்களோ!!!

அவனை பின்னிருந்து தட்டிய ராம்… என்னடா எப்பவும் நான் தா ஃபிரீஸ் ஆயிடுவேன்.. இன்னிக்கு என்ன நீ அப்படியே நிக்கற…
ஏன்டா சொல்லமாட்ட.. இப்போ எதுக்கு டா ரத்னாட போய் பேசுன..நீ சைட்டடிச்சதுக்கு எனக்கு வார்னிங் குடுக்கறாங்க…. எல்லாம் காலக்கொடும… என புலம்பிக் கொண்டு இருந்தான்..
சிவா தோளில் கை போட்டு.. யார்ரா அது என் நண்பன மிரட்றது… நான் அவன அடிப்ப.. திட்டுவேன்… வேற யாராவது எதாவது சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் என கூற… அப்பறம் ரத்னா என் பொண்டாட்டி … நான் எங்க வேணாலும் அவகூட பேசுவேன்…
எப்பா ராசா… உனக்கு அவனே தேவலடா.‌.. ஒரு திருத்தம் நீ அவல லவ் பண்றது எனக்கு தெரியும்.. உனக்கு தெரியும்.. சம்பந்தப்பட்ட அவளுக்கு தெரியாதுல… அத மறந்துடாத..
ஓஓஓ.. அப்டியா சரிடா… இன்னிக்கு இரண்டாவது நாள் உற்சவம் இல்லையா.. அது முடியறதுக்குள்ள நான் என் ரத்னாட என்னோட காதல சொல்றேன்… ஓகே வா… என அவன் அசால்ட்டாக கண்ணடித்து கூற.??.
சிவாவோ… அய்யோ.. நாம்பளே வாய் குடுத்து புண்ணாக்கிக்க போறோமே.. என புலம்பியவாறு.. எப்பா ராசா… நீ சொல்றதெல்லாம் சரிதான்… இப்ப நீ இடிச்சியே ஒருத்தன நியாபகம் இருக்கா.. அவன் வேற யாரும் இல்ல.. உன் ரத்னாவோட முறைமாமன்… அவனுக்குதா ரத்னாவ கல்யாணம் பண்ணி கொடுக்க போறதா பேச்சு.. ஜாக்கிரத சொல்லிட்டேன்..
ஹோ… முறைமாமனா…. அதா மொறச்சுகிட்டே இருக்கானா …
என்ன நக்கலா… நான் என்ன சொல்லிகிட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்க…
இங்க பாரு சிவா.. பேசிட்டு தான இருக்காங்க… ரத்னா இன்னும் சம்மதிக்கலல… விடு… இன்னிக்கு அவகூட நல்ல பழகி அவ மனசை புரிஞ்சிக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி நான் லவ்அ சொல்றேன்… பாரு..
டேய்.. உனக்கு ஏன் புரியமாட்டேங்குது.. அவட யாரும் இங்க சம்மதம் கேட்கமாட்டாங்க.. ஆட்ட பலி குடுக்க அது சம்மதம் வாங்க மாட்டாங்க.. அது மாதிரி தான்… ரத்னா நிலைமையும்…அவங்க அண்ணன் பெரியப்பா தான் அவளுக்கு சப்போர்ட் பண்றது… இல்லன இந்நேரம் அவள் அந்த முருகன் தலையில கட்டி வச்சிருப்பாங்க அவங்க பெரியம்மா… இன்னொரு விஷயம் கேட்டுக்கோ அவ பெரியப்பா பெரியம்மா இப்போ வாழ்ந்து கிட்டு இருக்கற சொகுசு வாழ்க்கை சொத்து எல்லாத்துக்கும் ஒரே வாரிசு ரத்னா தான்.. அந்த முருகன் அவ பெரியம்மாவோட அண்ணன் பையன்… அவனுக்கு அப்பா அம்மா இல்லை.. இவங்க வீட்ல தான் வளர்ந்தான்… அதனால இவனுக்கு ரத்னாவ கட்டி வச்சா சொத்து எல்லா தன்கிட்டயே இருக்கும்னு நினைச்சு தா.அந்தம்மா இந்த பொறுக்கிக்கு கல்யாணம் பண்ண நினைக்குறாங்க… ஆனா ஏதோ ஒரு காரணத்தால அது தடைபட்டுக்கிட்டு இருக்கு என மூச்சு வாங்க தனது நீண்ட உரையை முடித்துக் கொண்டு ராமை பார்க்க.. அவனோ.. இதனால் தனக்கென்ன என்று நின்று கொண்டு இருந்தான்…
அவனை முறைத்த சிவாவிடம் திரும்பி இங்க பாரு சிவா… அவ எனக்குனு எழுதி இருக்கு அதனால் தான் வேற யாராலும் அவள கல்யாணம் பண்ணிக்க முடியல… எனக்கொரு உதவி பண்ணு… நான் அவ பெரியப்பா அண்ணன்ட இத பத்தி பேசனும்.. கண்டிப்பா அவங்க உதவி பண்ணுவாங்க…. நான் இன்னிக்கு ரத்னாட லவ் சொல்றது கன்பார்ம்… அவள்ட சொல்லிட்டு நான் அம்மாடயும் சம்மதம் வாங்கனும்.. என அவன் வேலையில் ஆயத்தமாக…
சிவாவோ என்ன சொல்வதென்று தெரியாமல்.. எல்லாவற்றிற்கும் சரி என தலை ஆட்டி வைத்தான்… இருவரும் குளித்து முடித்து வரும் வழியில்…சற்று தூரத்தில் வயலில் இரண்டு நபர் இவர்களை நோக்கி ஓடிவந்து கொண்டு இருந்தனர்… இனி அடுத்து என்ன என பொறுத்திருந்து பார்ப்போம் ??????

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here