வனமும் நீயே வானமும் நீயே 8

0
689

அத்தியாயம் 8

உடைகளை மாற்றிக்கொண்டு கீழே சென்றவன் சமையல் அறையில் இருந்து ராசாத்தியின் சிரிப்பு சத்தம் கேட்கவே அவனது முகத்திலும் சிரிப்பு தோன்றியது.

“என்னம்மா… வந்ததுமே மருமகளும், மாமியாரும் கூட்டணி போட்டாச்சா?”

“பின்னே உன்னை மாதிரி சண்டியரை எல்லாம் ஒத்தையா அடக்க முடியுமா என்ன?” என்று ரேவதி திருப்பிக் கேட்க… ராசாத்தி ஆச்சர்யமாக இருவரையும் பார்த்தாள். பின்னே அந்த வீட்டில் இருக்கும் பொழுது அவளது மாமா கூட பாண்டியனிடம் கொஞ்சம் தள்ளி நின்று தான் பேசுவார்.

என்ன தான் பாண்டியன் அவரது வேலையாளாக இருந்த பொழுதும் யாரையும் தன்னை நெருங்க அவன் அனுமதித்தது இல்லை. எல்லாரிடமும் இருந்து விலகியே இருப்பான். அவனுக்கு யாரிடமும் அன்பாக பழகத் தெரியாது என்று அவள் நினைத்து இருந்தது எவ்வளவு பெரிய தவறென்று இப்பொழுது அவளுக்கு புரிந்தது. அதே நேரம் மனதின் ஒரு மூலையில் இப்படி சிரித்த முகமாக அந்த வீட்டில் அவன் எப்பொழுதுமே இருந்தது இல்லை என்ற உண்மை தீயாய் மாறி அவளை சுட்டது. அப்படி நடந்து கொண்டதற்கு எதுவும் காரணம் இருக்கும் என்று அவள் உறுதியாக முடிவெடுத்த பிறகே அவள் மனம் இயல்புக்கு திரும்பியது.

“கடைசியில் என்னோட நிலைமை இப்படியா ஆகணும்? வெளியில் புலி… வீட்டில் எலியா?” என்று சோகமாக முடிக்க… பெண்கள் இருவரும் கலகலத்து சிரித்தனர்.

“சும்மா நடிக்காதேடா… உன்னோட பேரை சொன்னாலே ராசாத்தி மிரண்டு போறா… அந்த அளவுக்கு அவளை மிரட்டி இருக்கே” என்று ரேவதி சொல்ல… அன்னை அறியாமல் அவளைப் பார்த்து கண் சிமிட்டினான் பாண்டியன்.

“நான் ரொம்ப அப்புராணி மா… இவளைப் பார்த்து நான் தான் பயந்து நடுங்குறேன் …”

“தனியா இருக்கும் பொழுது ரூமில் என்ன செஞ்சியோ?” என்று கேட்க…

“நானா? நான் என்ன செஞ்சேன் ராசாத்தி?” என்று ஒன்றுமறியாதவன் போல கேட்க… அவனது பார்வையில் இருந்த விஷமம் அவனது இறுகிய அணைப்புகளையும், இதழ் முத்தங்களையும் நினைவுபடுத்த வெட்கம் தாளாமல் ரேவதியின் முதுகுக்கு பின்னால் மறைந்து கொண்டாள் ராசாத்தி.

“பார்த்தியா.. அவ ஒளிஞ்சுக்கிறா… இவனுக்கு எல்லாம் பயப்படாதே ராசாத்தி.. இவன் குடுமி நம்ம கையில்… நீயும் உட்கார்… ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடுங்க” என்று சொல்ல… ராசாத்தி ரேவதியையும் அருகில் அமர வைத்து விட்டு மூவரும் ஒருவருக்கொருவர் பரிமாறியவாறே சாப்பிட… வெகுநாட்களுக்குப் பிறகு திருப்தியாக உண்டதில் அவளையும் அறியாமல் கண்கள் கலங்கியது ராசாத்திக்கு.

அவளின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை மற்றவர் அறியாமல் அவள் மறைத்துக் கொண்டாலும் ரேவதியும் , பாண்டியனும் அதை கவனித்து தான் இருந்தார்கள். சின்ன சின்ன விஷயத்திற்குக் கூட அவள் எந்த அளவுக்கு ஏங்கி இருக்கிறாள் என்பது புரிய… பாண்டியனும், ரேவதியும் ஏதேதோ பேசி சிரித்தபடி அவளையும் உண்ண வைத்தனர்.

“அம்மா… எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு… நான் அதை முடிச்சுட்டு … மதியம் சாப்பிட வர்றேன்” என்று சொல்லிவிட்டு கிளம்ப…. ரேவதி வாசலுக்குப் போய் வழி அனுப்பி வைத்து விட்டு வருமாறு  சொல்ல… அமைதியாகவே அவனை பின் தொடர்ந்தாள் ராசாத்தி.

“மதியம் வரும் பொழுது உனக்கு எதுவும் வாங்கிட்டு வரணுமா?” என்றவனின் பார்வை அவளது முகத்தை மொய்க்க… இல்லை என்று தலை ஆட்டினாள் ராசாத்தி.

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ…. அவ்வளவு சீக்கிரம் வந்திடறேன்” என்று சொன்னவன் அவள் கைகளைப் பற்றி லேசாக அழுத்த… அப்பொழுதும் கூட தலையை நிமிர்த்தவில்லை அவள்.

“உன்கிட்டே நிறைய விஷயம் பேசணும் ராசாத்தி.. அப்படியே நேரம் கிடைச்சா நம்ம அரங்கேற்றத்தை பகலில் கூட வச்சுக்கலாம்” என்று சொன்னவனின் தாபம் மிகுந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வீட்டுக்குள் ஓடி விட்டாள் ராசாத்தி.

மதியத்திற்கான சமையல் வேலைகளை எல்லாம் ரேவதி செய்து கொண்டிருக்க… அவருக்கு உதவி செய்தாள் ராசாத்தி.

‘இவரிடம் கேட்டால் சொல்லுவாரோ’

“உங்க பையன் எப்பவும் இப்படித் தான் சிரிச்ச முகமா இருப்பாரா அத்தை…”லேசாக நூல் விட்டுப் பார்த்தாள் ராசாத்தி.

“அவன் இருந்தாலே அந்த இடமே கலகலன்னு இருக்கும். அவ்வளவு தூரம் தன்னோட இருக்கிறவங்களை சந்தோசமா வச்சுப்பான்.”

“ஆனா… அங்கே அவர் சிரிச்சே நான் பார்த்தது இல்லை.. எப்பவும் உம்முன்னு தான் இருப்பார்…”

“…”

“இங்கே அவருக்கு தொழில் எதுவும் இருக்கா அத்தை?”

“ம்… இருக்கே” என்றவரின் குரலில் முன்பிருந்த உற்சாகம் காணாமல் போய் இருந்தது.

‘கேட்டா உண்மையை சொல்வது தானே? என்னமோ பெருசா இருக்கப் போய் தானே இப்படி மறைக்க முயற்சி செய்றாங்க’ என்று அவளுக்கு தோன்ற ஆரம்பித்தது.

“என்ன தொழில் அத்தை?”

“நமக்கு சொந்தமா தென்னந்தோப்பு இருக்குமா… அதுல வர தேங்காயை சந்தையில் வித்துடுவோம். அப்புறம் தேங்காய் நாரை வச்சு கயிறு செய்யுறது, இயற்கை உரம் செய்யுறது, இப்படி சில தொழில் செய்றோம்”

“வருமானம் எப்படி அத்தை?”

“வருமானத்திற்கு எல்லாம் ஒரு குறையும் இல்லை ராசாத்தி.. ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டோம்… ஆனா அதுக்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சமா நிமிர்ந்துட்டோம்…”

“அப்படி இருந்தும் உங்க மகன் எதுக்காக அத்தை என்னோட மாமா வீட்டில் வேலைப் பார்க்க வந்தார்?” என்று சரியான இடத்தில் தாக்க.. ரேவதி அதிர்ந்து போனார் என்று தான் சொல்ல வேண்டும்.

‘இவளிடம் வாயைக் கொடுக்க வேண்டாம்’ என்று முன்தினம் பாண்டியன் சொன்னது சற்று தாமதமாகவே நினைவுக்கு வர, தன்னையே நொந்து கொண்டார். சற்று நேரம் அந்த இடத்தில் அமைதி மட்டுமே ஆட்சி செய்தது.

“இந்த கேள்விக்கு எல்லாம் உன்னோட புருஷனுக்கு பதில் தெரியும் ராசாத்தி. எனக்கும் தெரியும் தான். இருந்தாலும் அவனே சொல்றது தான் சரியா இருக்கும்” என்று சொன்னவர் மறந்தும் அதன்பிறகு அவளிடம் அதைப்பற்றி பேசவில்லை.

மதியத்திற்கான சமையலை முடித்த பிறகு மாடியில் இருந்த அறைக்குள் சென்று ராசாத்தியை ஓய்வெடுக்க சொன்னார் ரேவதி. அங்கிருந்த அறையின் ஜன்னலில் இருந்து கணவன் வரும் பாதையையே பார்த்துக் கொண்டிருந்தாள் ராசாத்தி. தெரு முனையில் கணவன் பைக்கில் வருவதை கவனித்து விட்ட ராசாத்தி உற்சாக துள்ளலோடு படிகளில் இறங்கி ஓடினாள்.

அவள் கீழே வருவதற்கு முன் தாயிடம் அவன் பேசிக் கொண்டிருந்தது அவள் காதுகளில் விழுந்தது.

“அம்மா நீங்க அனாவசியமா பயப்படுறீங்க? மிஞ்சிப் போனா என்ன செஞ்சிட முடியும்? எதுவா இருந்தாலும் சமாளிக்க எனக்குத் தெரியும்… அதுவும் இல்லாம ராசாத்தி இப்ப நம்ம பக்கம்… அவ நம்மை மீறி போக மாட்டா… போக விடவும் மாட்டேன். அவ என்னோட இருக்கிற வரையில் அவளுக்கு கண்டிப்பா வேற எந்த நினைவுமே வராமல் நான் பார்த்துப்பேன்.” என்று பாண்டியன் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டவளுக்கு தன்னுடைய காதுகளின் கேட்கும் திறன் குறித்து சந்தேகம் வந்தது.

‘சந்தேகம் கேட்டா அதை தெளிய வைக்காமல் இதென்ன பேச்சு… வேற எண்ணமே வராத மாதிரி பார்த்துப்பேன்னு சொன்னா என்ன அர்த்தம்?’ என்று எண்ணியவள் குழப்பத்துடன் வந்த சுவடே தெரியாமல் மீண்டும் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.

“ஹே… பொண்டாட்டி… என்ன செஞ்சுட்டு இருக்க?” என்ற கணவனின் உற்சாகக் குரலில் தன்னிலை அடைந்தவள் மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“நீ… நீங்க ஏன் மாமா வீட்டுக்கு வேலைக்கு வந்தீங்க?”

“உன்னை கல்யாணம் செஞ்சுக்கத் தான்… இப்படி ஒரு ரதி பொண்டாட்டியா கிடைப்பான்னா என்ன வேணும்னாலும் செய்யலாமே” என்றவனின் பேசியபடியே அவளை நெருங்க… ராசாத்தியின் உணர்வுகள் விழித்து எழுந்தது.

“அப்படி என்ன நான் உசத்தி?” என்று பேசிக் கொண்டே இருக்கையில் அவளை மேலும் நெருங்கிய பாண்டியன் அதன்பிறகு அவளை பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. ராசாத்தியும் கூட அதுவரை ஆயிரம் குழப்பத்தில் இருந்தவள் அவன் அணைத்ததுமே அவனிடம் ஒண்டிக் கொண்டாளே தவிர , அவனை எதிர்த்து ஒற்றை விரலைக் கூட அவள் அசைக்கவில்லை.

அறை வாசலில் ரேவதியின் குரல் கேட்கும் வரை அவள் மாய உலகில் தான் இருந்தாள். சட்டென்று அவளை விடுவித்தவன் அவளது கன்னத்தை மிருதுவாக தட்டினான்.

“சாப்பிட்டு வந்திடலாம்… அதுக்கு அப்புறம் உன்னை நான் விடுவதாக இல்லை” என்று சொன்னவன் அவளை கையோடு அழைத்துக் கொண்டு சாப்பிட வைக்க… ராசாத்தியின் கவனம் உணவில் பதிய மறுத்தது.

வேறு நினைவே வராமல் எப்படி தடுப்பான் என்பது அவளுக்கு புரிந்து போனது. அவனது எண்ணத்தை மெய்யாக்குவது போல அவனது அணைப்பில் நெகிழ்ந்து போய் அடங்கி இருந்ததை எண்ணி இப்பொழுது அவளுக்கு அவமானமாக இருந்தது.

அவளையும் பேச்சில் இழுத்து பேசிய பொழுதும் கூட அதை கண்டு கொள்ளாமல் தன் போக்கில் சாப்பிட்ட மனைவியை பாண்டியனின் பார்வை துளைத்தது. அதையும் அவள் உணர்ந்தாளில்லை. தொண்டைக்குள் இறங்க மறுத்த உணவை வலுக்கட்டாயமாக திணித்துக் கொண்டவள் அந்த குழப்பத்தின் காரணமாகவோ என்னவோ யாரிடமும் எதுவும் பேசாமல் அப்படியே மாடி ஏறி சென்று விட்டாள்.

“நான் தான் சொன்னேனே பாண்டியா… இப்போ நீயும் பார்த்த தானே… காலையில் எவ்வளவு கலகலப்பா இருந்தா… இப்போ எப்படி இருக்கா பாரு… எல்லாம் உன் கையில் தான் இருக்கு பாண்டியா” என்று சொன்ன தாயை சமாதானம் செய்தவன் மாடியில் சென்று பார்க்க அவளோ உறங்கிக் கொண்டிருந்தாள். அதாவது அப்படி நடித்துக் கொண்டிருந்தாள்.

அறைக்குள் நுழைந்த பாண்டியன் கட்டிலில் அவளுக்கு அருகில் வந்து அமர்ந்து இரண்டு முறை அவளை அழைத்துப் பார்த்தான்.

“ராசாத்தி… ராசாத்தி” அதற்குள் அவள் தூங்கி இருக்க வாய்ப்பே இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். மூடி இருந்த விழிகளுக்குப் பின்னால் அசைந்து கொண்டிருந்த அவளது கருவிழிகள் அவள் இன்னும் தூங்கவில்லை என்பதை அறிவிக்க கோபத்துடன் எழுந்து சென்று விட்டான் பாண்டியன்.

‘தூங்கினால் எழுப்பலாம்… தூங்குவது போல நடிப்பவளை எப்படி எழுப்புவது?’

சில நிமிடங்கள் கழித்து மெல்ல கண்களை திறந்தவள் கணவனைத் தேடினாள். அறைக்குள் அவன் இல்லாது போகவே கீழே இறங்கி வந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ரேவதியிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“தோப்பில் வேலை இருக்குனு சொல்லிட்டு இப்போ தான் கிளம்பிப் போனான்… இன்னிக்கு வாரக் கூலி கொடுக்கிற நாள்.. எப்படியும் முடிச்சுட்டு வர ராத்திரி ஆகிடும்..” என்று சொல்ல ராசாத்தியின் மனதில் மகிழ்ச்சியும், சோகமும் ஒருங்கே வந்து போனது.

‘அப்பாடி … கிளம்பிவிட்டான்’ என்று ஒரு மனமும் , ‘அச்சச்சோ… கிளம்பிட்டானே’ என்று மறுமனமும் போராட… மௌனமாக அறைக்குள் புகுந்து கொண்டாள்.

மாலை நேரத்தில் அவளை இயல்பாக்கும் பொருட்டு, ரேவதி செய்த எதுவும் அவளது நினைவை எட்டவில்லை. பொம்மை போல இயங்கினாள். ரேவதியின் வற்புறுத்தலின் பேரில் பேருக்கு உணவைக் கொறித்தவள்  அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்.

கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் ஏன் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்? மனதில் உண்மை இருந்தால் இதற்கு அவசியம் இல்லையே… அப்படி என்றால் ஏதோ சூது இருக்கிறது என்று தானே அர்த்தம்’ என்று எண்ணி சோர்ந்து போனாள் ராசாத்தி.

இனி பாண்டியனை தன்னை நெருங்க விடக் கூடாது… அதற்கும் மேலாக இந்த வீட்டில் இருந்து கிளம்பி விட வேண்டும் என்று விபரீத முடிவு ஒன்றையும் எடுத்தாள். எப்படியும் அவன் வர தாமதமாகும் என்று அத்தை சொன்னார். அதனால் மதியத்தைப் போலவே இப்பொழுதும் அவன் வந்ததும் தூங்குவது போல நடித்து, அவன் தூங்கியதும் வீட்டை விட்டு கிளம்பி விட வேண்டியது தான். நாலு வீட்டில் பாத்திரம் விளக்கினாலும் பரவாயில்லை. ஆனால் இங்கே இருக்கக்கூடாது என்ற தீர்மானத்துடன் படுத்தவள் மனதில் ஏற்பட்டு இருந்த குழப்பத்தின் காரணமாக உறங்க முடியாமல் தவித்தாள்.

‘ஒருவேளை பாண்டியனின் இந்த மறுமுகம் உனக்கு தெரியாமல் போய் இருந்தால் அவனுடன் சந்தோசமாக குடும்ப நடத்த தொடங்கி இருப்பாய் தானே?’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. தயாளன் மாமாவையே ஏமாற்ற முடிந்த இவனுக்கு நான் எல்லாம் எம்மாத்திரம்?’

நேரம் பத்தை நெருங்கும் பொழுது வாசலில் பாண்டியனின் குரல் கேட்கவே போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்குவது போல நடித்தாள். சாப்பாட்டை முடித்துக் கொண்டு அரைமணி நேரம் பொறுத்து மேலே வந்தவன் அறையின் தாழ்ப்பாளை அழுத்திப் பூட்ட… ராசாத்தியின் உடலில் மெல்லியதோர் அதிர்வு வந்தது.

‘ராசாத்தி… பயந்து நடுங்கி நீயே உன்னை காட்டிக் கொடுத்துக்காதே’ என்று தனக்குத் தானே சொன்னவள் அசையாமல் படுத்து இருந்தாள்.

அறை முழுவதும் இருள் பரவி, அவள் படுத்து இருந்த கட்டிலின் மறுமுனையில் அவன் படுப்பது தெரிய… நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

‘அப்பாடி.. கூப்பிட்டுக் கூட பார்க்கல… படுத்துட்டான்… இன்னும் கொஞ்ச நேரத்தில் தூங்கிடுவான். அப்புறம் கிளம்பிட வேண்டியது தான். அதுவரைக்கும் அவனுக்கு சந்தேகம் வராத மாதிரி அமைதியா படுத்து இருந்…’ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே வலிமையான கரம் ஒன்று அவளின் இடையில் விழுந்தது.

‘தூக்கத்தில் தெரியாமல் பட்டு இருக்கும்… கொஞ்ச நேரம் கழிச்சு அவன் நல்லா தூங்கினதும் கையை எடுத்துடலாம்’ என்று அவள் யோசிக்கும் பொழுதே அவனது கரங்கள் அவளை இழுத்து தன்னுடன் இறுக்கிக் கொண்டது.

‘இல்லை… இப்பவும் தூக்கத்தில் தான்’ என்று அவள் எண்ணும் பொழுதே… அவனது இதழ்கள் அவளது கழுத்தோரம் புதைந்தது.

‘இவன் நிஜமாகவே தூங்குறானா?’ என்ற சந்தேகம் லேசாக தோன்ற கண்களை மெதுவாகத் திறந்த ராசாத்தி பார்த்தது தாபம் நிறைந்த பாண்டியனின் விழிகளைத் தான்.

“பொய்…. ஏமாற்று…” என்றவளின் குரலில் இருந்த பதட்டத்தை அவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. கேலியாக சிரித்தான்.

“யார் ஏமாற்றினா? தூங்குவது போல நடித்து என்னை ஏமாற்ற நினைத்தது நீயா? நானா?” என்று கேட்டவன் அவளின் அதிர்ந்த நிலையை தனக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்ள… அவன் கைகளில் துடித்துப் போனாள் ராசாத்தி.

‘ம்ஹும்.. இது கூடாது… இவனை தள்ளி வைக்க வேண்டும்’ என்று அவள் மனசாட்சி ஒருபுறம் கூக்குரலிட… அவளால் அதை செயலாற்றத் தான் முடியாமல் போனது. அவனை விட்டு அவளால் ஒரு அடி கூட விலக முடியவில்லை. அதாவது அதற்கு அவன் அனுமதிக்கவில்லை.

அவளது முகம் முழுவதையும் முத்தங்களால் நிரப்பினான்.

கைகளால் இடையை அழுந்தப் பற்றினான்.

மென்மை விடுத்து வன்மையாக அவன் கொடுத்த இதழ் முத்தத்தில் அதுவரை இருந்த தைரியம் பறந்து போனது அவளுக்கு. அவளது தயக்கங்களை எளிதில் உடைத்தெறிந்தான். பயமும், திகைப்பும் சரிபாதியாக கலந்து இருந்த அவளது முகத்தைப் பார்த்து வெறி பிடித்தாற் போல சிரித்தான்.

“மதியத்தைப் போலவே இப்பவும் தூங்குற மாதிரி நடிச்சு என்னை ஏமாத்திடலாம்ன்னு நினைச்சியா? அந்த அளவுக்கு முட்டாளா நான்?”என்று ஆத்திரத்துடன் கேட்டவன் அந்த கோபத்தை அவளது இதழ்களில் காட்டினான்.

“உனக்கு பிடிச்சாலும், பிடிக்காமப் போனாலும் மிச்சம் இருக்கிற உன்னோட வாழ்க்கை முழுக்க என்னோட தான். அதை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும். ஏற்கனவே சொன்ன மாதிரி இன்னிக்கு உன்னை நான் எடுத்துக்கப் போறேன். என்னுடைய மனைவியா… எனக்கு மட்டுமே சொந்தமானவளா..” என்று அழுத்தத்துடன் சொன்னவன் தன்னுடைய கரங்களில் வேகத்தை கூட்ட ,அவனது அழுத்தமான பிடியில் அவளுக்கு மூச்சுத் திணறியது. ராசாத்தியால் திகைப்பில் இருந்து மீளவே முடியவில்லை. அவனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றவில்லை அவளுக்கு.

முத்தங்களின் எண்ணிக்கை கணக்கில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு எண்ணிக்கை நீண்டு கொண்டே போனது. அவனது கரங்கள் அவளது மேனியில் அத்துமீற… ரத்தவோட்டம் நின்று போனதைப் போல இருந்தது அவளுக்கு.

கன்னி மனம் தவித்தது…

அவன் மூச்சுக்காற்று அவளது காதோரம் தாபச் சீறலாய் தெறித்தது. அவன் கைகளில் அவள் மேனி சிக்குண்டது…. வீணையாய் அவள் மேனியை மீட்டினான். தேர்ந்தெடுத்த கலைஞனைப் போல அவன் அவளை கையாண்ட விதத்தில் ராசாத்தியின் கண்கள் தன்னையும் அறியாமல் மூடிக் கொண்டது.

பயத்தில் நடுங்கிய அவளது தேகத்திற்கு அவனே ஆடையுமாக மாறிப் போனான். பெண்மைக்கே உண்டான அச்ச உணர்வுகள் தலை தூக்க… கணவனின் தள்ளி நிறுத்த முயன்றாள். அவனை மறுத்து தள்ளி வைக்க முயன்ற அவளது கைகள் இரண்டையும் தன்னுடைய ஒற்றை கையால் அடக்கியவன் தொடர்ந்து முன்னேறி தனக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டான். அவனது முரட்டுத்தனமான கூடலில் அவள் அயர்ந்து போனாள்.

அவன் அணைப்பில் இருந்த பொழுதும், அவனுடன் கூடிய பொழுதும் இல்லாத வருத்தம் அவனது விலகலில் அவளுக்கு ஏற்பட்டது. அவனிடம் இருந்து கொஞ்ச நேரமாவது தள்ளி இருந்து வாய் விட்டு கதறி அழுதால் தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றியது அவளுக்கு. அதற்கு மேலும் அங்கேயே இருந்து கொண்டு அவனது அணைப்பிற்குள் அடங்கிக் கிடக்க அவளுக்கு மனமில்லை. அவன் தொட்ட இடமெல்லாம் நெருப்பாய் தகித்தது. எனவே  போர்வையை போர்த்திக்கொண்டு குளியல் அறைக்குள் ஓட முயன்றவளை மீண்டும் அருகில் இழுத்தவன் மோகத்துடன் முன்னைக் காட்டிலும் வேகத்தைக் கூட்ட… முதலில் முரண்டு பிடித்த ராசாத்தி பிறகு சோர்ந்து போனாள்.

‘இனி தடுத்து எதை காப்பாற்றிக் கொள்ளப் போகிறேன்?’ என்று எண்ணியவள் மீண்டும் அவன் தொட்ட பொழுது எதிர்ப்பை காட்டாமல் இருக்க, அவனுக்கும் அதுவே போதுமானதாக இருந்தது போலும். தயக்கங்கள் அற்றுப் போன அந்த கூடலில் அவனின் மனம் இனித்தது.

விடியும் வரை அவளை ஆக்கிரமித்தவன் அதன்பிறகும் அவளை விடாமல் தன்னுடைய அணைப்புக்குள் வைத்தவாறே தூங்கிப் போனான்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
5
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here