வனமும் நீயே வானமும் நீயே Kindle Ebook

1
908

எந்த மனிதனைப் பார்த்தால் பயத்தின் உச்சிக்கே செல்வாளோ அதே மனிதனை திருமணம் செய்து கொள்கிறாள் நாயகி ராசாத்தி. அதன் பின்னர் என்ன நடக்கிறது. பாண்டியன் அவளின் மனதில் இடம் பிடித்தானா? அல்லது அவனது முரட்டுத்தனம் கண்டு அவள் அவனை விட்டு ஒதுங்கினாளா? பாண்டியன் அவளை திருமணம் செய்து கொண்டதின் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என்பதை என்னுடைய பாணியில் சொல்லி இருக்கிறேன்.படித்து தங்களின் கருத்துக்களை சொல்லுங்க மக்களே…

கதையில் இருந்து சில துளிகள் உங்களுக்காக…

பாண்டியன்… அழகன்… சிரித்தால் கம்பீரமாக இருப்பான். ஆனால் அவன் சிரித்து அவள் பார்த்தது இல்லை. அவன் அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்த அந்த ஆறு மாதத்தில் எத்தனையோ முறை கண் மண் தெரியாமல் அவளை அடித்து இருக்கிறான். அவள் பார்த்தது எல்லாம் அவனின் கட்டுக்கடங்காத கோபத்தை மட்டுமே…

கலைந்த தலையும், அழுக்கு தாடியுடன் தான் இருப்பான். திருமணத்தின்போது கூட அப்படியே தான் அவளுக்கு தாலி கட்டினான். முகத்தைக் கூட  சவரம் செய்யாமல் அவன் தாலி கட்டிய பொழுது இந்த திருமணத்திற்கு அவன் எந்த அளவிற்கு மதிப்பு கொடுக்கிறான் என்பது புரிய அவள் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அன்று காலையில் திருமணம் முடிந்த பிறகும் சரி… அதற்கு பின்னாலும் சரி அவனிடம் பேசவோ… ஏன் நிமிர்ந்து கூட பார்க்கக் கூட ராசாத்திக்கு தைரியம் இல்லையே.

அவளது குறிக்கோள் முழுக்க அந்த வீட்டில் இருந்து தப்பியோடுவதாகத் தான் இருந்தது. எப்படியும் திருமணத்திற்குப் பின் பாண்டியன் அவளை அடித்தே கொன்று விடுவான் என்று அவள் மனப்பூர்வமாக உறுதியாக நம்பினாள்.

————–

“ம்ச்… இப்போ எதுக்கு இந்த அழுகை… இன்னிக்கு தான் நமக்கு கல்யாணம் ஆகி இருக்கு… ஓ… இவன் எல்லாம் நமக்கு தாலி கட்டிட்டானேன்னு அழறியா?” என்று கேட்டவனின் கேள்வியில் பயந்து போய் மிரட்சியுடன் பார்த்தாள்.

“அதானே… நீ தான் என்னை கல்யாணம் செஞ்சுக்கப் பிடிக்காம வீட்டை விட்டு ஓட முயற்சி செஞ்சவளாச்சே… உன்கிட்டே இந்த கேள்வியை கேட்கிறதே தப்பு தான்…” என்று வார்த்தையால் சுட… தலை கவிழ்ந்து அவனின் வசவுகளை வாங்கிக் கொண்டாள் ராசாத்தி.

“ஆமா… இத்தனை நேரமா தூங்காம ஏன் முழிச்சுட்டு இருக்க… ஒருவேளை நான் தூங்கினதும் வீட்டை விட்டு ஓடலாம்ன்னு திட்டம் வச்சு இருக்கியோ”  என்று கேட்டவனின் கோபக் குரலில் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது.

‘அப்படி ஒரு எண்ணம் அவள் மனதில் இருந்தது நிஜம் தானே… தாலி கட்டிய பிறகும் கூட தப்பி ஓட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அல்லவா அவள் காத்துக் கொண்டிருந்தாள்.

“என்னடி முழிக்கிற முழியே சரியில்ல.. அப்போ அப்படித் தான் திட்டம் போட்டு வச்சு இருந்தியா?” என்று அதட்ட… நின்று போன அழுகை மீண்டும் வரத் தொடங்கியது அவளுக்கு.

———————

“எனக்கு நேரமாச்சு அத்தை.. நான் போய் அவருக்கு காபி கொடுத்துட்டு டிபன் வேலைகளை பார்க்கணும்” அவளுக்கு அருகில் இருந்த டேபிளில் காபி டம்ளரை வைத்து விட்டு அவள் நகர முயல, அவளது தலைமுடி பின்னால் இருந்து கொத்தாக பற்றப்பட்டது வேணியால்.

வேணி இழுத்த வேகத்தில் ராசாத்தியின் கையில் இருந்த சூடான காபி டம்ளர்கள் அத்தனையும் அவள் முகத்திலேயே கொட்டி விட… வலியில் துடித்துப் போனாள்.

“என்னடி ஒரே நாள் ராத்திரியில்  உனக்கு உடம்பில் திமிர் கூடிப் போச்சா? பேசிக்கிட்டு இருக்கும் பொழுதே… நீ பாட்டுக்கு போற…”

“இ.. இல்லை அத்தை.. அவருக்கு காபி..”

“அந்த ஒண்ணுமில்லாத பயலுக்கு இப்போ என்னடி காபிக்கு அவசரம்… முதலில் போய் எனக்கு குளிக்க சுடுதண்ணி போட்டு வை போ”

“அ.. அவருக்கு காபி கொடுத்துட்டு…”

“ஏன் அந்த வெறும் பயலுக்கு இதுநாள் வரை நீ தான் உன் கையால காபி கொடுத்துட்டு இருந்தியா? நேத்து வரை ரோட்டுக் கடையில் தானே குடிச்சான்… இனியும் அப்படியே இருந்துப்பான்.. நீ போய் நான் சொன்னதை செய்.. இல்ல உன்னை அப்படியே ஆஞ்சுடுவேன் ஆஞ்சு” என்று ஆங்காரமாக சொல்ல.. அதுநாள் வரை அவரது பேச்சை மீறி பழக்கம் இல்லாத ராசாத்தி அழுது கொண்டே  அவருக்காக சுடுதண்ணி வைக்க திரும்பி நடந்தாள்.

இரண்டு அடி தான் எடுத்து வைத்திருப்பாள்…

“ராசாத்தி… உன்கிட்டே காபி கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு? இன்னும் என்ன செய்ற?”என்று அழுத்தமான குரலில் கேட்டபடி அங்கே வந்து நின்ற கணவனின் குரலைக் கேட்ட பொழுதும் அவள் திரும்பவில்லை. அவள் மனதுக்குள் கசந்து வழிந்தது.

சூடாக முகத்தில் ஊற்றிக் கொண்ட காபியோடு அவன் முன்னால் நிற்க வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க… அவன் மட்டும் என்ன செய்து விடப் போகிறான்… அத்தை எப்படி காயப்படுத்தினாளோ அதே போல அவனும் அவளைப் போட்டு அடிக்கப் போகிறான். இந்த நரகத்தில் இருந்து எனக்கு விடுதலையே கிடையாது போல என்ற எண்ணியவள் அவனை திரும்பியும் பாராமல் மேலே தொடர்ந்து நடக்க… வேணியின் முகத்தில் தெரிந்த வெற்றிக்குறியை பொறுத்துக்கொள்ள முடியாமல் இரண்டே எட்டில் அவள் முன்னால் வந்து நின்றவன் அதிர்ந்து போனான் அவள் முகத்தைப் பார்த்து…

முழுவதுமாக படிக்க கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.

Facebook Comments

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here