வனமும் நீயே வானமும் நீயே டீசர்

1
1762

தனி அறையில் சர்வ அலங்காரத்துடன் அமர்ந்து இருந்தவளின் கை, கால்கள் உதறிக் கொண்டு இருந்தது.

‘எத்தனை தூரம் போராடி என்ன பயன்? கடைசியில் கல்யாணம் நடந்துடுச்சே.
தப்புவதற்கு வழியே இல்லாமல் இப்படி அந்த ராட்சசனிடம் மாட்டிக் கொண்டேனே…’

ஒரு வாரமாக தூங்காமல் இருந்ததாலும் ஒரு பொட்டு தூக்கம் இல்லை அவள் விழிகளில்…

எப்படி தூக்கம் வரும்? இன்னும் சற்று நேரத்தில் அந்த ராட்சசன் வருவானே என்ற எண்ணமே அவளது உடலின் ஒவ்வொரு அணுவையும் பதற வைத்துக் கொண்டு இருந்தது.

ஏற்கனவே தப்புவதற்கு செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்க… இனியொரு முறை முயன்று பார்க்க சொல்லி மனம் முரண்டவே…

மெல்ல எழுந்தவள் ஜன்னல் வழி வெளியே இருந்த ரவுடிகளை நோட்டம் இட்டாள்.
ஆளாளுக்கு கொஞ்சம் ஊற்றிக் கொண்டார்கள் போலும். ஒருவரும் நிலையாக இல்லை.
ஆஹா என்று குதூகலித்தது அவள் மனம்.

இந்த வீட்டின் பின் புறமாக இருக்கும் கொல்லைப்புறத்தில் ஒரு கதவு இருக்கிறது.அதை திறந்து கொண்டு ஓடி விட வேண்டியது தான்.

இவனுங்களே இப்படி குடிச்சு இருக்கும் பொழுது.. அவங்களை விட பெரிய ரவுடி அவன் மட்டும் சும்மாவா இருப்பான்?

என்ன நடந்தாலும் சரி… அவன் கிட்டே சிக்க மட்டும் கூடாது. என்று எண்ணியவள் பூனைப் பாதம் வைத்து அறையில் பொருத்தப்பட்டு இருந்த மற்றொரு கதவில் கை வைக்கவும் .. அவள் இருந்த அறைக் கதவு அழுத்தமாக பூட்டவும் சரியாக இருக்க.. அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தாள் ராசாத்தி.

மடித்து கட்டிய வேஷ்டியில் கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு செவ்வரியோடிய விழிகளுடன் அவளை உறுத்துப் பார்த்தவனின் பார்வையில் அவளுக்கு குளிர் ஜுரம் வந்து விடும் போல இருந்தது.

பாதங்களை அழுத்தமாக தரையில் பதித்து ஒவ்வொரு அடிக்கும் அவளது உடலோடு சேர்த்து மனதையும் அதிர வைத்தபடி அவளுக்கு அருகில் வந்து நின்றான் பாண்டியன்.

வனமும் நீ வானமும் நீ…. கதையில் இருந்து…

ஏய்… மூளையே உன்னை கெஞ்சிக் கேட்கிறேன்.. ஒரு நேரத்தில் ஒரு கதையைப் பத்தி மட்டும் யோசி.. எல்லா கதையையும் ஒரே நேரத்தில் யோசிக்காதே…

ஆங்.. அதெல்லாம் முடியாது… எனக்கு என்ன தோணுதோ அதை தான் நான் செய்வேன்…

இப்ப நல்லா வியாக்கியானம் பேசு.. எபி எழுத உட்காரும் பொழுது மட்டும் ஓடிப் போய் ஒளிஞ்சுக்கோ… பிசாசே… உன்னால தான் எல்லா இம்சையும்… ஒழுங்கா அந்தப் பக்கம் போ… நான் இப்போ வேற கதை எழுதணும்…

முடியாது… முடியாது.. இப்போ நான் ராசாத்தியையும், பாண்டியனையும் பத்தி தான் நினைப்பேன்.

சே… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத மூளை… அட போங்கய்யா…

Facebook Comments

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here