விழி மொழியாள்! பகுதி-13

0
453


கணேஷ்க்கு என்ன பண்ணுறதுனே யோசிக்க முடியாமல்.. திக்பிரமை பிடிச்சவன் போல அமர்ந்து இருந்தான்.

எப்படிலாம் பேசிட்டான் நான் பாத்து வளர்ந்த பையன் என்முன்னாடியே கை நீட்டி பேசிட்டு போறான் கூடப் பிறந்தவள கூட்டி கொடுக்கறியானு எவளோ பெரிய வார்த்தையை சொல்லிட்டு போறான்.

பாஸ் கொஞ்சம் ஜாலியான ஆளு தான்
இருந்தும் கயல கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னதுனால தானே நான் இப்படிலாம் பண்ணேன் இவனுக்கே இவளோ இருக்கும் போது எனக்கு இருக்காதா கயல் மேல.

கயல் கூட கல்யாணம் முடிஞ்சி அவள் கூட வாழும் போது திருந்துறதுக்கு வாய்ப்பு இருக்கே.

ஆரம்பத்துல கொஞ்சம் அப்படி இப்படி இருக்க தான் செய்யும்… அப்பறம் சந்தோஷமா இருக்க தான செய்வாள் .
பெரிய இடம் வாழ்க்கை அமையுறதுனா சும்மாவா.

இதுக்கு போய் எப்படி எல்லாம் பேசிட்டுடான் “மனசு ஆறாமல் அங்கே இங்கேனு நடந்து கொண்டிருந்தான்.

சுரேஷ் அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்லி இருப்பானா,
அப்படி சொல்லிருந்தா “அடி மனதில் பயம் சூழ்ந்துக்கொண்டது.
என்ன பண்ணுறது யோசிச்சிட்டு இருக்கும் நேரத்தில் மித்திரனே போன் பண்ணினான்.

ஹலோ கணேஷ்,

சொல்லுங்க சார் .

என்ன கணேஷ் எனி ப்ராப்ளம்.

ஆமா சார்.

ஓ…. என்ன விசயம்னு சொல்லுங்க

சார் இழுத்தான்…..

டெல்மீ கணேஷ்.

சுரேஷ் பேசுனதை ஒன்று விடாமல் சொன்னான்.

எனக்கு கஸ்ட்மா இருக்கு சார்.

ஏன் கணேஷ்…?

அவன் என்ன கேவலமா பேசிட்டான் சார், .. ” சார் உங்ககிட்ட ஒன்னும் கேக்கலாமா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே.

கேளுங்க கணேஷ்.. “

நீங்க உண்மையா கயல் ல மேரேஜ் பண்ணிப்பிங்க தான ஏமாத்திட மாட்டிங்களே. “?

கணேஷ் இப்படி கேட்டதும் சட்டுனு பதில் சொல்லமுடியாமல் அமைதியாய் இருந்தான்.

ஹலோ சார்..? லைன் ல இருக்கீங்களா.

இருக்கேன் கணேஷ் எனக்கு உங்க தங்கச்சிய ரொம்ப பிடிச்சிருக்கு யாருக் காகவும் அவளை விட்டு கொடுக்க மாட்டேன்.. (இடையில் நீயே வந்தாலும் )அவன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

நான் கயல்விழியை தவிர வேற யாரையும் மேரேஜ் பண்ணுற ஐடியா இல்லை.

கணேஷ்க்கு இது போதும் சுரேஷ் சொன்ன மாதிரி நான் கயல்க்கு அநியாயம்
பண்ணல இந்த ஒரு வார்த்தையே அவனுக்கு போதுமானதா இருந்தது.

கணேஷ் பழையபடி மாறிவிட்டான்… சார் இப்போ சுரேஷ் பிரச்சனை பண்ணுறான் சார்.

என்ன தான் சொல்றான் உன் தம்பி கோபமாக கேட்டான் மித்திரன்.

நாங்க யாரும் சென்னைக்கு வரமாட்டோம்னு கோவமா சொல்லிட்டு போறான் என்ன பண்ணுறது சார்.

அப்படியா என்று கன்னத்தை சொறிந்து கொண்டே,

கணேஷ் என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு பட் அத சொன்னா நீங்க அக்ஸப்ட் பண்ணுவிங்களா.

சொல்லுங்க சார் என்ன ஐடியா வச்சு இருக்கீங்க?

வெயிட் … ப்யூ மினிட்ஸ் ஐ வில் கால் யு .பேக்.

ஒகே சார்.

ஹலோ கணேஷ்”

சொல்லுங்க சார் என்ன ஐடியா வச்சிருக்கீங்க.

கணேஷ் “

சார் சொல்லுங்க எதுக்கு சைலன்ட்டா இருக்கீங்க.

கணேஷ் உங்க அம்மாக்கு டேப்லெட் போடுற பழக்கம் உண்டா.

இத .. “எதுக்கு இப்போ கேக்குறாரு குழப்பமாவே சொன்னான் ஆமா சார் போடுவாங்க.
எதுக்கு கேக்குறீங்க சார்..?

சொல்லுறேன் ஏன் அவசரம் படுறிங்க “,..

கணேஷ்க்கு கயல் பத்தி பேசிருந்த டென்ஷன் ஆகிருக்க மாட்டான்.

ஆனால் அம்மா பத்தி சொன்னதும் டென்ஷனோட கேட்டான் சார் ப்ளீஸ் சொல்லுங்க எதுக்கு கேட்டீங்க.

இப்போ இருக்குற ஒரே வழி உங்க அம்மாக்கு ஹார்ட் அட்டாக் வரணும்.

சார்….???? அலறி விட்டான் கணேஷ்.

பயபடாதீங்க கணேஷ் அப்படி செட் அப் பண்ணனும் அவ்ளோ தான்.

புரியல சார்.

மித்திரன் ஒன்னு கவனிச்சான் அவன் பேச்சில் இதுவரை இருந்த ஈடுபாடு அவன் அம்மாவை சொன்னதும் அவனுக்கு அதில் உடன்பாடு இல்லைனு தெரிஞ்கிட்டான்.

எனக்கு வேற கால் வருது அப்புறம் பேசுறேன் கணேஷ் என்று கூறி
போன் கட் பண்ணிட்டான் .

கணேஷ் பயந்து போய் விட்டான் .

மித்திரன் சார் போன் கட் பண்ணிடாரே.

சிறிது நேரம் கழித்து கணேஷ் போன் செய்தான்.

அங்கே மித்திரன்
யோசனை பண்ணிக் கொண்டிருந்தான் .

கணேஷ் போன் பண்ணும் போது

கயல்விழி போட்டோவை ஆசையாக பார்த்துக்கொண்டிருந்தான்.

கயல்விழி போட்டோவை வால்பேப்பரில்
செட் பண்ணி வச்சிருந்தான்.

அவளுடைய முகத்தை பார்த்து உன்னை அடைய யார் குறுக்கே வந்தாலும் நான் அவங்கள இல்லாம பண்ணிடுவேன்.

அது உன்னோட அண்ணணா இருந்தாலும் சரி உன் அம்மாவா இருந்தாலும் சரி அவங்கள உலகத்தை விட்டு அனுப்ப தயங்க மாட்டான் இந்த மித்திரன்.

எனக்கு நீ வேணும், கயல் நானும் எவளோ பொண்ணுங்கள பாத்து இருக்கேன் டி”
ஆனா உன்ன மாதிரி எவளும் பார்வையாலே கட்டிபோடல டி உன்ன பார்த்ததற்கு அப்பறம் எவளும் வேணாம்னு தோணுது “
அவளுடைய பிம்பத்த
பார்த்து விழியின் அழகை இரசித்த படி தனக்குள் கூறி கொண்டான்……..!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here