விழி மொழியாள்! பகுதி-15
கயல் விழி அந்த நேரத்தில் தன் அண்ணன் அங்கே வருவான் என நினைக்கவில்லை. பார்த்ததும் பயத்தில் அவள் உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டியது. வாய்
குழறி அண்….ணா.. என்றாள்.
சுரேஷ் சரவணனை ஆழமா பார்த்து கொண்டிருந்தான்.
முதலில் சுரேஷை கண்டதும் சரவணன் பயந்தான் தான் ஆனால் இது நாம எதிர் பாத்தது தானே, எப்ப இருந்தாலும் இந்த சூழ்நிலையை நாம சந்திச்சு தான் ஆகணும் என்று மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு
சுரேஷ்சை எவ்வித தயக்கமின்றி நேர் கொண்ட பார்வை பார்த்தான்.
அவனின் முகம் மாற்றம் பார்வை கண்டு மனதில் மெச்சிக் கொண்டான் சுரேஷ். சபாஷ் டா மச்சான். மனதிற்குள் சொல்லி கொண்டான்.”தான் காதலிக்கும் பெண்ணோட அண்ணன் வந்து இருக்கான்..
கொஞ்சமாச்சும் பயம் இருக்கா… என்னா தில்லா நிக்குறான் பாரு .”
இந்த தைரியம் சுரேஷ்க்கு பிடித்துதிருந்தது.
கயல்க்கு பொருத்தமானவன்.
நாங்களா தேடி இருந்தா கூட “சரவணனும் அவங்க குடும்பமும் போல நல்ல வரன் கிடைத்திருக்காது..
சரவணன் சுரேஷ்ஷின் முகம் மாறுதலை கண்டதும்; அப்பாடா ஒரு மச்சான்கு சம்மதம்னு நினைக்கிறேன்.
இன்னும் அடுத்த மச்சான் அப்பறம் அத்தை அவங்கள எல்லாம் சமாளிக்கனும். ஒரு கிணறு தாண்டிடோம் அம்மாடி இப்பவே கண்ணகட்டுதே.
இன்னும் ரொம்ப தொலைவு போனுமே.
நம்ம மனசுக்கு பிடிச்ச பொண்ண காதலிச்சு அவளையே கல்யாணம் பண்றதுனா சும்மாவா, எது வந்தாலும் சந்திப்போம். என் கயல் விழிக்காக எந்த பிரச்சனையும் எதிர் கொள்வேன் என தனக்குள் கூறி கொண்டான்.
அடேய் பேசுடா மச்சான் எவளோ நேரம் தான் நானும் மனசுக்குள்றயே பேசிட்டு இருப்பேன் வாய தொறந்து பேசுடா மச்சான் . என் தங்கச்சிய உனக்கு கொடுக்க சம்மதம்னு சொல்லு மச்சான் சரவணன் மனசுக்குள்ளற புலம்பன புலம்பல்… அவன் மச்சானுக்கு கேட்டுருச்சோ…
.
ஹ்ம் .. அப்பறம் மச்சான் வேலைலாம் எப்படி போகுது .
சுரேஷ் இயல்பாய் கேட்கவும், அதுவும் மச்சான்னு சொல்லி அழைத்ததும் அவனுக்கு சம்மதம்னு சொல்லாமல் சொல்லி விட்டான்..
சரவணனும் சந்தோசமாகவே பதில் சொன்னான் …. அதுக்கு என்ன மச்சான் சூப்பரா போகுது.
இருவரும் பேசிக் கொள்வதை பார்த்து கயலும் சந்தியாவும் விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சந்தியாவிற்கு சந்தேகம்.. ” தோன்றியது கயலோட அண்ணணா பேசுறது நம்பமுடியாமல் கையை கிள்ளிவிட்டாள்..
ஸ்ஸ்ஸ் ஆஆ…ம் மா எரும என் கையை ஏண்டி கிள்ளி விட்ட ஆஹான்.. உங்கண்ணா வானு சந்தேகம் டி அதான் கிள்ளி பாத்தேன்.. நிஜமா உன் அண்ணா தான் ..
அதுக்கு ஏண்டி “எருமை என் கையை கிள்ளுன உனக்கு சந்தேகம் நா உன் கைய கிள்ளி பாத்துக்க வேண்டிதானே என் கை தான் கிடைச்சதா.
ஹிஹி … அப்போ என் கையை
கிள்ளல யா அதான் எனக்கு
வலிக்கவே இல்லை.
ஹுக்கும்….. “”
ஏண்டி கயல் ” திடிர்னு உங்க அண்ணா எப்படி வந்தாரு இங்க.
அதுவும் கரெக்ட்டா கோவில் வந்து இருக்கார்.
அப்போ வீட்டுக்கு போய்ட்டுதான் .. வந்து இருக்கார் ஒரு வேலை அம்மா சொல்லிருப்பாங்க.
ஆமா டி ஆண்ட்டி தான் சொல்லிருக்கணும்.
நான் கூட உங்க அண்ணா பாத்துட்டாரே என்ன ஆகுமோ னு பயந்துட்டேன்.
எனக்கும் அந்த பயம் இருந்துச்சுடி ..
ஆனா அண்ணாக்கு பிடிச்சு இருக்கு போல அதான் சகஜமா பேசுறாங்க .
என் அண்ணா இப்ப தான்டி என் முகத்தை பாத்து பேசுறாங்க….எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா கண் கலங்க சொல்லி கொண்டிருந்தாள் கயல்.
தோழியை தோளோடு அணைத்துக் கொண்டாள் சந்தியா.
சுரேஷ் .. சரவணன் கூட பேசுனாலும் அவன் பார்வை கயல் மீதும் சந்தியா மீதும் வந்து வந்து சென்றது.
அதையும் சந்தியா கவனித்து கொண்டிருந்தாள்.. பார்ரா எங்க அண்ணா கிட்ட பேசிட்டு இருக்கும்போதே இங்க லுக் விட்றத..
ரகசியமாய் சிரித்துக்கொணடாள் சந்தியா.
அவளின் ரகசிய சிரிப்பை சுரேஷ் கவனித்து விட்டான்.
அய்யோ பாத்துடானே… உதட்டை கடித்துக் கொண்டாள்.
கயல் ..தயங்கியபடியே அண்ணானு கூப்பிட்டாள்.
சுரேஷ் க்கு வலித்தது அண்ணானு சொல்லி கூப்பிட எவளோ பயப்படுறாள். ச்சே அவன் மேலயே ஆவனுக்கு வெறுப்பு வந்தது.
நேர கயல்விழிய பார்த்து இதுவரை உன்ன எவ்வளவோ கஷ்ட்டபடுத்தி இருக்கேன் கயல் மா அதெல்லாம் மறந்து இந்த அண்ணனை மன்னிப்பாயா என கண்ணீர் மல்க கேட்டான்.
அண்ணா….. அழுகையோட கையை பிடித்துக் கொண்டாள்..இதுவரை நீ அழுதுதது …. போதும் கயல் நான் இருக்கேன் உனக்கு .. உன்ன நான் என் உயிர் கொடுத்தாவது பாதுகாப்பேன்… என கூறினான்.
சட்டென்று சீரியஸாக பேசவும் மூவரும் ஒரே நேரத்தில் சுரேஷை பார்த்தார்கள்.
என்ன ஆச்சு இவளோ நேரம் நல்லா தான பேசிட்டு இருந்தாரு திடிர்னு என்ன இப்படி குழம்பி போனார்கள் முவரும்.
மச்சான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றான் சுரேஷ்.
ஹ்ம் பேசலாம் மச்சான்.
சரவணன் திரும்பி,
சந்தியா நீ கயல கூட்டிட்டு வீட்டுக்கு போ நாங்க பின்னாடியே வறோம் நீங்க முன்னாடி போங்கனு சொன்னான்.
சந்தியாவும் கயலும் ஒன்னும் புரியாமல் பார்த்தார்கள். சரவணன் சந்தியாவிற்கு கண் காட்டினான்..
அதில் புரிந்து கொண்டு வா கயல் நாம போகலாம் அவங்க பேசிட்டு வரட்டும்..
கயல் தயக்கத்தோடு அண்ணன் முகத்தை பார்த்தாள்.
அவனும் போ கயல் வந்துடறேன் சொல்லி அனுப்பினான்.
அவர்கள் சென்றதும்… சொல்லுங்க மச்சான் என்ன பிரச்னை சரவணன் இப்படி கேட்டதும் .
சுரேஷ்க்கு இத எப்படி சொல்லுறதுனு
யோசிச்சான் என்ன இருந்தாலும் இவர் எங்க வீட்டுக்கு மருமகனா வர போறவர் இவர் க்கு அண்ணனை பத்தி தெரிந்தால் அவர்க்கு மரியாதை கிடைக்காமல் போகலாம்..
சொல்லுங்க மச்சான் “.
ஹ்ம் .. மச்சான் கயல்விழிக்கு ஆபத்து இருக்கு.
என்ன மச்சான் சொல்லுறீங்க……?
ஆமா மச்சான்.. அவனும் அவன் பிரண்ட்டும் சென்னையில் விசாரித்தது, வீட்டுக்கு வந்து அண்ணனிடம் பேசுனது ,
பேசி விட்டு நேர இங்க வந்தது.. அனைத்தும் சொல்லிவிட்டான்.
சுரேஷ் க்கு தெரியும் நாம எதிர்க்க போறது சாதாரண ஆளில்லை அதிகாரம் பணம் செல்வாக்கு உள்ளவன்.
அவன் கிட்ட இருந்து கயல காப்பாத்த என்னால தனியா செயல்பட முடியாது அதற்கு சரவணனும் கூட இருக்கனும்.
சுரேஷ் சொல்ல சொல்ல சரவணன் கோவம் கொஞ்சம் கொஞ்சமா ஏறி கொண்டிருந்தது. கை முஷ்டி இறுகியது.
அதே கோவத்தோடவே கேட்டான்…
உங்க அண்ணன் கயல்விழிக்கு அண்ணன் தானே மாமா இல்லையே. தடித்த வார்த்தையை கொட்டினான்.
எதுக்கு மாமா வேலை பாக்குறாரு..
ச்சீ மரியாதை ஒண்ணு தான் குறைச்சல் கூட பொறந்த வள கொஞ்சகூட வெக்கமே இல்லாம கூட்டிக் கொடுக்கிறான் பார்..
சுரேஷ்க்கு அவமானமா இருந்தது… கணேஷ் பண்ணின அசிங்கமான செயல் என்னாலேயே ஜிரணிக்க முடியல கட்டிக்க போறவன் எப்படி சும்மா விடுவான்.
சுரேஷ்க்கு…… சரவணனின் கோவம் ஆறுதலாக இருந்தது.. இவன் பாத்துப்பான் என் தங்கையை..
எந்த சூழ்நிலையலும் கயல்விழியை கை விட மாட்டான். சுரேஷ்க்கு அந்த நம்பிக்கை பிறந்தது.
மச்சான்.. தயங்கி கூப்பிட்டான்.. சுரேஷ்
சட்டென்று திரும்பியவன் கோவத்தின் உச்சியில் இருந்தான்..
அதே கோவத்தோட சொன்னான் மச்சான் அந்த, மித்திரனும் சரி, உங்க அண்ணனும் சரி கயல்விழிக்கு ஆபத்து உண்டு பண்ணாங்க அவங்கள கொலை பண்ணிட்டு ஜெயில்க்கு கூட போக தயங்க மாட்டேன்.
சரவணன் உங்கள மாதிரி தான் எனக்கும் ஆத்திரமா வந்துச்சு. ஆனா இதுல நாம அவசரப்பட்டாக்க காரியம் கெட்டு போய்டும்.
நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து சாதுர்யமா செயல்பட்டு அவங்க திட்டத்தை முறியடிக்கனும்.
கயல்விழிய நீங்க தான் கல்யாணம் பண்ணிக்கனும் சரவணன். என் தங்கைக்கு உங்கள விட ஒரு நல்ல பையன் கிடைக்க மாட்டாங்க.. நீங்க கயல நல்லா பாத்துப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு.
சரவணன் சுரேஷ் கையை பிடித்து கொண்டான். கண்களில் கண்ணீர் ததும்பியது.
என் உயிர் இருக்குற வரை உங்க தங்கச்சி கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் கூட வராம பாத்துப்பேன் என்றான்.
இணைந்த கைகள் குள்ள நரியை வேட்டை ஆடுமா?
……வளரும்.