விழி மொழியாள்! பகுதி-16
யார்டா ….. வந்தது என கேட்டு கொண்டே வந்தாள் பூங்கோதை.
“அட்ரஸ் கேட்டு வந்தாங்க மா ..
நீங்க எதுக்கு எழுந்து வந்தீங்க நான் தான் வந்து பாக்குறேன்ல…என்னமோ தெரியல டா ஒரே மயக்கமா இருக்கு தல சுத்துது.
ஓ……
அம்மா மாத்திரை ஒழுங்கா வேல வேலைக்கு போடுறீங்களா இல்லையா.
போடணும் டா காலையிலே சுரேஷ் எடுத்து கொடுத்துட்டு போனான்… போட மறந்துட்டேன் அதான் தல சுத்துது நான் போய் போட்டுட்டு வரேன் டா நீ…. அதுக்குள்ள இந்த சாமான்லாம் ஓரமா எடுத்து வச்சிடு…
அம்மா நீங்க இருங்க நானே போய் எடுத்துட்டு வரேன் மாத்திரை போட்டு நீங்க போய் படுங்க இதெல்லாம் நா பாத்துக்கிறேன்……( சுரேஷ் எதுவும் சொல்லலனு புரிந்து கொண்டான் .. அவன் திரும்பி வர்றதுக்குள்ள எல்லாம் முடிக்கணும் என்று மனதில் நினைத்து கொண்டான்.),..
“பரவாயில்ல டா … “இரு மாத்திரை போட்டுட்டு வரேன்.
“பச். ” நீங்கலாம் இப்படி சொன்னா கேக்க மாட்டீங்க…. வாங்கனு உள்ளே அழைத்து சென்றான்.
மித்திரன் கொடுத்த மாத்திரையும் சேர்த்து கொடுத்தான்..
இது என்னடா புதுசா இருக்கு மாத்திரை, கோதை கேட்டதும்.
“கணேஷ்க்கு வேர்த்து விட்டது …
பயத்தில் நடுங்கிட்டே சொன்னான்.. எல்லாம் நீங்க எப்பவும் போடுற மாத்திரை தான் மா கலர் தான் மாத்தி இருக்கான் மா … போடுங்கனு தண்ணிய கொடுத்தான். எப்படியோ பேசி சமாளித்தான்.
சரிடா …மாத்திரையை போட்டு கொண்டாள்..
மாத்திரையை முழுங்கும் வரை
அம்மாவை பார்த்துக் கொண்டிருந்தான்.
என்னடா புதுசா மாத்திரை போடற மாதிரி பாத்துட்டு இருக்க போ போய் வேலையைப் பாரு… கொஞ்சம் நேரம் படுத்துட்டு வரேன்..
ஹம்… இன்னும் அங்கயே நின்னுட்டு இருந்தா அம்மா எதுனா கேட்டு உளறி கொட்டிடுவோம்… இங்க இருந்து போறதே மேல் ….
சரிம்மா நா போய் எல்லாம் எடுத்து வைக்கிறேன் நீங்க படுங்க போர்வையை போர்த்தி விட்டு வெளியே வந்தான்.. .
வந்தவன் கவனம் முழுக்க அம்மாவின் மேலயே இருந்தது ….
அங்கே…
ஆண்ட்டி …. கிளம்பறோம் …. டைம் ஆகிடுச்சு வீட்டுல எல்லா பொருட்களும் எடுத்து வைக்கணும்…
சரி… பா. போய்ட்டு வாங்க அடிக்கடி போன் பண்ணு கயல் எங்களாம் மறந்துடாத சரியா திலகம் கண்கலங்க கூறினாள்.
கயல் விழிக்கும் கண் கலங்கியது…. எல்லோரையும் விட்டு கிளம்பறோமே.. முக்கியமா சரவணன்.. அவன் முகத்தை… ஆவலோடு பார்த்தாள்..
அவனும் அவள் பார்வைக்காகவே காத்து இருந்தவன் போல் பார்வை பட்டதும் கவ்வி கொண்டான்..
அவனின் ஆளுமையின் மாய வலையில் ஆகர்ஷிக்க பட்டாள்…இந்த நொடி இப்படியே நீடிக்கட்டும் என ஏங்கினாள்.
இது போல் தருணம் திரும்ப வாய்க்க பெறாமலே போகலாம் என எண்ணினால் போலும்…. பேதை மனம்..
ஹுக்கும்….. “சந்தியா கணைக்கவும் ..
இருவரும் இயல்பு நிலைக்கு வந்தார்கள்.
சிவந்து போய் நிற்கும் கயல்விழியை பார்த்ததும் திலகம்க்கு சந்தேகம் வந்தது… அதே சந்தேகதோடு சரவணனை பார்த்தாள் ..அவளின் சந்தேகம் உறுதியானதும் .. சிரித்துக் கொண்டாள்..
அதே சிரிப்போடவே, சுரேஷ் தம்பி கூடிய சீக்கிரம் நாங்க சென்னைக்கு வருவோம்…
அதுக்கென்ன ஆண்ட்டி எப்ப வேணா வரலாம் …வாங்க..
நிச்சயமா… வருவோம் தம்பி எல்லாம் நல்ல விசயமா பேசத் தான் ..
சுரேஷ் க்கு எதுவோ புரிந்தது போல் இருந்தது …. ஆண்ட்டி மனதில் எதுவோ நினைத்து தான் சொல்லுறாங்கனு புரிந்து கொண்டான்…அவனும் சரிங்க ஆண்ட்டி நாங்க கிளம்பறோம்..
வா கயல்னு அழைக்கும் போது …
கொஞ்சம் இரும்மா.. திலகம் .. நிறுத்தினாள். திரும்பி சந்தியாவிடம் பூஜை அறையில் குங்குமம் இருக்கும் எடுத்துட்டு வா சந்தியா.. சொல்லி அனுப்பினாள்.
ஹம் சரிம்மா சந்தியா போய் எடுத்துட்டு வந்து கொடுத்தாள்..
திலகம் எடுத்து கயல் நெத்தியில் வைத்து ஆசிர்வாதம் பண்ணினாள்.
கயல்விழியும் திலகம் காலில் விழுந்து வணங்கினாள்.போய்ட்டு வரேன் மா.. கயல் சொல்லவும் ..
நல்லபடியா போய்ட்டு வா மருமகளே… சொல்லி வழி அனுப்பினாள்…
மூவரும் அதிர்ச்சியில் பார்க்கவும் .. .
சிரித்துக் கொண்டே.. எல்லாம் எனக்கும் கொஞ்சம் தெரியும் டா மகனே … சரவணனை பார்த்து சொன்னாள்; எல்லாம் கவனிச்சுட்டு தான் இருக்கேன்.. அதான் நீ கோவில் கூட்டிட்டு போறேனு சொல்லவும் நான் எதுவும் சொல்லாம அனுப்பி வைச்சேன்.
அம்மா….???..சந்தோச அதிர்ச்சியில் உறைந்து நின்றான் சரவணன்.
அம்மா னா அம்மா தான் என்று கட்டிக் கொண்டான்.
இருவரும் ஒன்றாக காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டார்கள்.
சுரேஷ்க்கு நடக்கறது எல்லாம் கனவா நனவானு சந்தேகமே ஏற்பட்டது.
சுரேஷ் சட்டென்று சந்தியாவை பார்த்தான்..
அவ்ளோ நேரமும் சுரேஷை மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள்.. அவன் சட்டுனு திரும்புவான்னு எதிர் பாக்காத சந்தியா அவனின் பார்வையில் தடுமாறினாள்…
அவளின் தடுமாற்றத்தில் சுரேஷ்க்கு அவள் மனசு புரிந்தது..ரகசியமாய் சிரித்து கொண்டான்…
அப்போ நாங்க வர்றோம் ஆண்ட்டி.. சுரேஷ் சந்தியாவை பார்க்க, கயல்விழி சரவணனிடம் விழியாலே விடை பெற்றாள்..
சுரேஷும் கயலும் வீட்டில் நுழையும் வேளையில் …
கணேஷ்… நெஞ்சு வலிக்குதுடா என்று அலறியபடி தரையில் சரிந்தாள் கோதை…
அம்மாவின் சத்தம் கேட்டு இருவரும் வீட்டிற்குள் ஓடினார்கள்.
கணேஷும் சத்தம் கேட்டு அம்மாவின் அறைக்கு ஓடினான்.
மூவரும் அம்மா அம்மா என்னாச்சு என்று கேட்டு கொண்டே அறைக்கு ஓடி வந்து பார்க்க,
கோதை தரையில் விழுந்து கிடந்தாள்.
……… வளரும்