விழி மொழியாள்! பகுதி-17

0
387

அம்மா…அம்மா ….அம்மாக்கு என்ன ஆச்சு நா போகும் போது நல்லா தானே இருந்தாங்க…

அம்மா.. அம்மா ….. கன்னத்தை தட்டி எழுப்பி கொண்டிருந்தான் சுரேஷ்…

கணேஷ்கும் பயம் வந்துவிட்டது. லேசா நெஞ்சு வலிக்கும்னு தானே சொன்னாரு .. இப்படி பேச்சு மூச்சு.. இல்லாம இருக்காங்களே… ரொம்ப பயந்து போய் விட்டான்.

சுரேஷ் இருடா ஆம்புலன்ஸ்க்கு கால் பண்றேன் அம்மாவ ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போய்டலாம் ..

கணேஷின் பதட்டம் கண்டதும்
சுரேஷ்க்கு அவன் மேல் சந்தேகம் வராமல் போய் விட்டது.

கயல் அம்மாவை அணைத்து கொண்டு அழுது கொண்டிருந்தாள்… அம்மா
எழுந்திரு மா… அம்மா அம்மா னு அழுது கொண்டிருந்தாள்.

சத்தம் கேட்கவும் அலமு மாமி என்ன என்னாச்சு கோதைக்கு என்றபடி வந்தாள்.

ஆம்புலன்ஸ் வரவும் அதில் கோதையை கொண்டு சென்றனர்.

கயல் அழுது கொண்டே இருந்தாள்.

மாமி அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடி குழந்தை சேமமா திருப்பி வருவா… அழ ப்படாது .. ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஹாஸ்பிடல் வந்ததும் கோதையை (ICU) தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றார்கள்.

அங்கே டாக்டர் கோதைக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.

எல்லாம் முன்னமே மித்திரன் செய்த ஏற்பாடு என்பதை அறியாமல், சுரேஷீம் கயலும் கவலையோடு ICU பிரிவையே பார்த்து கொண்டிருந்தார்கள்…

கணேஷ் யாரும் பார்க்காத வண்ணம் நழுவினான்..

மித்திரன்க்கு கால் போட்டான்
ஹாலோ சார் … நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நடக்குது ஆனா பயமா இருக்கு சார், அம்மாக்கு எதுனா ஆகிடுமோனு கவலையாய் இருக்கு வேற ஐடியா பண்ணிருக்கலாம் போல அம்மாவ இப்படி கஷ்டபடறத பாக்க முடியல சார்… அழுதான்….

நான் தப்பு பண்ணிடேனோ என்ற குற்ற உணர்வா இருக்கு சார்..

ஆமாம் கணேஷ் பணத்தாசை பிடித்தவன் அதனால் புத்தி கெட்டு மித்திரன் சொன்னபடி செய்து விட்டான். மற்றபடி அம்மாவுக்கு கெடுதல் நினைப்பவன் அல்ல. அவனை பணப்பேய் ஆட்டி வைக்கிறது.

கணேஷ்…. ” காம் டவுன் ப்ளீஸ் ரிலாக்ஸ்.. ஒன்னும் ப்ராப்ளம் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாரு.

ஓ… எப்போ சொன்னாரு சார் டாக்டர்… உங்களுக்கு டாக்டர தெரியுமா.

டாக்டர எனக்கு நல்லா தெரியும் கணேஷ் அதான் அம்மாவ இங்க அட்மிட் பண்ண சொன்னேன். டாக்டர் கிட்ட பேசிட்டேன் அம்மா உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லை. டோன்ட் வொர்ரி .

இவளோ நேரம் அங்க தான இருந்தோம் …. அம்மாக்கு ஒன்னும் இல்லனா எதுக்கு icu ல வச்சிருக்காங்க சார்.. நீங்க பொய் சொல்லுறீங்க சார் அம்மாக்கு என்னவோ ஆகிடுச்சு … குழந்தை மாதிரி பிணத்தினான் ..

மிதுரனுக்கே சந்தேகம் வந்துடுச்சி நான் பேசிக்கிட்டு இருக்கறது கணேஷ் கிட்ட தானானு .. அப்புறம்… யோசிச்சு பார்த்தான்.

கணேஷ்க்கு அம்மானா உயிர் தான் அதான் இப்படி நடந்துக்கறானு புரிந்து கொண்டான்..

கணேஷ்… ப்ளீஸ் நீங்க தைரியமா இருந்தா தான் நாம நெனைச்சுது நடத்த முடியும்..

அம்மாக்கு ஒன்னும் ஆகலை டாக்டர் சொல்லிட்டார்.. நான் கண்பார்ம் பண்ணிட்டு தான் உங்க கிட்ட சொன்னேன்….

மித்ரன் சொன்னா சொன்னதுதான் நம்புங்க கணேஷ்.. icu ல நான் தான் கூட்டிட்டு போக சொன்னேன்.. அப்ப தான சென்னைக்கு நீங்கலாம் வர முடியும்….

ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க கணேஷ் … ஒன்னும் ஆகாது…

இப்போ நீங்க அங்கே போனதும் டாக்டர் உங்கள கூப்பிடுவார்… எல்லாம் விவரம் சொல்லிருக்கேன் சோ டோன்ட் ஒரி …

கணேஷ்க்கு மித்திரன் அம்மாக்கு ஒண்ணுமில்லனு சொன்னதும் தான் போன உசுரு திரும்பி வந்த மாதிரி இருந்தது…

அவனுக்கு தெரியும் மித்திரனே சொல்றாருனா அம்மாக்கு பெருசா ஒன்னும் இல்லை … மனசு சமாதானம் பண்ணிக் கொண்டான்..
இனிமே அடுத்த வேலை பாக்கணும் .

மித்திரன் சொன்ன மாதிரி icu கிட்ட போனதும் டாக்டர் அழைத்தார்.

கணேஷ் சுரேஷ் ரெண்டு பேரும் உள்ளே சென்றார்கள்…

அம்மா க்கு சிவியர் அட்டாக் வந்து இருக்கு அவங்க ஹார்ட்ல பிளாக் இருக்கு. பிளட் சர்குலர் பாம் ஆகல..

மேற் கொண்டு அவங்களுக்கு தேவையான மருத்துவ வசதி இந்த ஹாஸ்பிடல இல்லை …

எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்கார் சென்னைல நான் எழுதி தரேன் போய் பாருங்க …எவளோ சீக்கிரமா முடியுமோ போய் பாருங்க … உடனே போறது நல்லது என்றார்.

சுரேஷ்ம் கணேஷ்ம் டாக்டர் சொன்னதை கேட்டு என்ன பண்ணலாம் என்ற யோசனையில் இருந்தார்கள்…

முந்தி கொள்ள வேண்டாம் சந்தேகம் வரலாம் என்று யோசிப்பது போல நடித்தான் கணேஷ்.

சுரேஷ் தான் முதலில் சொன்னான்; அண்ணா அம்மாவ கூட்டிட்டு போலாம் சென்னைக்கே டாக்டர் தான் சொல்லிட்டாரே.

எவளோ சீக்கிரமா கூட்டிட்டு போக முடியமோ அவளோ சீக்கிரமா செயல்படனும் நாம தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் அம்மா உயிர்க்கு தான் ஆபத்து… வா அண்ணா அம்மாவ கூட்டிட்டு போலாம்….

சுரேஷே கூறியதால் நிம்மதியுடன் கணேஷ் தீவரமாக செயல்பட ஆரம்பித்தான்.

மித்திரன் சொன்ன ஒவ்வொன்றும் அச்சு பிசகாமல் செய்து கொண்டிருந்தான்..

கணேஷ் யோசிக்க மறந்தான்…

அம்மாவ நாம் இப்படி படுக்க வைச்சிட்டோம் ஏன் இதெல்லாம் பண்ணுறோம் சுய சிந்தனை இல்லாமல் முழுக்க மிதுரனையே சார்ந்து ஏன் இருக்கோம்னு …

ஒரு நிமிடம் யோசிச்சு இருக்கலாம்.. அப்படி யோசிச்சு இருந்தா வரப்போகும் ஆபத்தை தவிர்த்து இருக்கலாம்.

பணம்… பணம்… பணம் …… கணேஷை பண பேய் ஆட்டி படைக்கிறது. அவர்கள் குடும்பம் படப் போகும் இன்னல்களை அவன் அறியவில்லை.

சென்னை வந்து சேர்ந்து விட்டார்கள்…

ஹாஸ்பிடல்ல தங்கி பாத்துக்கணும் போக வர சிரம்மா இருக்கேனு … கணேஷ் முன்னமே ரெடியா பாத்து இருந்த வீட்டுக்கு கயல், சுரேஷ்ஷோட வந்து சேர்ந்தாச்சு.

அம்மாவ இன்னைக்கு தான அண்ணா டிஸ்ஜார்ஜ் பண்ணுறாங்க …. நா காலேஜ் முடிச்சிட்டு ஹாஸ்பிடல் வந்துறேன் ….

வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததும் நர்ஸ் ஏற்பாடு பண்ணிடலாம் அம்மாவ பாத்துக்க… கயல் இங்க இருந்தே ஸ்கூல் போகட்டும் சரியா அண்ணா. …… சுரேஷ் கூறி கொண்டிருந்தான்.

ஹ்ம்…சரி டா சரி தான் நீ சொல்லுறது… இப்போ நானும் கயலும் ஹாஸ்பிடல் போறோம் நீ காலேஜ் கிளம்பு…

நீயும் ஹாஸ்பிடல் போறியா அண்ணா… உங்க பாஸ் எதுனா சொல்லப் போறாரு நிறைய லீவ் எடுத்தா…

அதெல்லாம் நான் பாத்துக்குறேன் நீ காலேஜ் கிளம்பற வழிய பார் சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டான்…

சுரேஷ் நேர கயல பாக்க போனான்..கயல் ஹாஸ்பிடல் போக எல்லாம் எடுத்து வச்சுட்டு இருந்தாள்…

“கயல்னு “கூப்பிட்டான் .

“என்ன அண்ணா “வந்து நின்றாள்..

நீ ஹாஸ்பிடல்ல இருக்கும் போது யாராச்சும் புதுசா அம்மாவ வந்து
பாத்தாங்களா..

அப்படி யாரும் வந்து பாக்கல அண்ணா…. .

யோசனையில் ஆழ்ந்தான்.. ஹ்ம்.. சரி மா நீ கிளம்பு ஹாஸ்பிடல் க்கு ..

“சரினா.

நான் கிளம்பறேன் காலேஜ்க்கு …

ஏனோ சுரேஷ்க்கு மனம் பட படவென அடித்துக்கொண்டது.. எதனால் அப்படி இருக்குனு யோசனையோடவே காலேஜ் கிளம்பி போனான்..

கணேஷ் யார் கூடவோ போன் பேசிட்டு இருக்கவும் … கயல் நான் கிளம்பிட்டேன் அண்ணானு சொல்ல முடியாமல் தயங்கி நின்றாள்…. அவர் பேசி முடிக்கட்டும்னு பார்த்துட்டு இருந்தாள்.

“..ஹ்ம் ஒகே பாஸ் ” வாங்க நாங்க வெயிட் பண்ணுறோம்… சொல்லி கால் கட் பண்ணினான்…

வீட்டுக்கு யார் வராங்க….. கயல் புரியாமல் அண்ணனை பாத்தாள்….

புயல் மய்யம் கொள்ள போவதை அறியாமல் அம்மா குணமானதை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தாள் கயல்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here