,விழி மொழியாள்.. பகுதி 19

0
523

விழி மொழியாள்! பகுதி–19

மித்திரன் ஷாக் ஆகிட்டான் என்னடா இந்த அம்மா என்ன மகன்னு சொல்லிடுச்சு… கணேஷை முறைத்தான்…

“கணேஷ்” ஹுக்கும் ஆ வு னா என்னையே முறைக்குற .. நா என்ன சொல்லியா கொடுத்தேன் இப்படி பேசுங்கனு அவங்க பேசுனா அதுக்கு நான் என்ன பண்ணுறது, எப்புடி முறைக்குறான் பார்.
இவன் கிட்ட நான் படுற பாடு இருக்கே ஸ்ஸ்ஸ் ப்பா… முடில டா சாமி… கடவுளே என்ன காப்பாத்து…..

இவன் புலம்பி கொண்டிருந்த பொழுது
சுரேஷீம், சரவணனும் உள்ளே வந்தனர்.

வாப்பா சரவணா எப்போ வந்த பா ஊர்ல இருந்து….? என்று ஈன சுவரத்தில் கேட்டாள் கோதை.

காலையில் தான் வந்தேன் அத்தை என உரிமையோடு கூறினான்.

உங்க உடம்பு இப்ப தேவலையா மா.

இப்ப பரவாயில பா.

சுரேஷ்க்கு எதேச்சியா கால் பண்ணப்ப தான் தெரிஞ்சது உங்களுக்கு உடம்பு சரியில்லைனு உடனே நைட் பஸ்ல கிளம்பி வந்துட்டேன் உங்கள பாக்க.

அம்மா அப்பாவால வர முடில அவங்க எல்லாம் திருச்சில கல்யாணத்துக்கு போயிருக்காங்க அத்தை… தப்பா எடுத்துக்காதீங்க அவங்க வரலன்னு.

அய்யயோ அதெல்லாம் தப்பா எடுத்துக்கல பா.

உடம்பு சரியாகிடுச்சு இன்னைக்கு வீட்டுக்கு போய்டலாம்னு டாக்டர் சொல்லிட்டார் பா .

ஓ சரிங்க அத்தை உடம்பு பாத்துக்கோங்க.

“சரிப்பா”..

மித்ரனுக்கு கடுப்பா இருந்தது பாரேன் இந்த அம்மாவ நா ஒருத்தன் கல்லு கணக்கா உக்காந்து இருக்கேன்… என்ன கூட இப்படி கூப்பிடல… இவன் யாருன்னே தெரியல அவனை எவ்வளவு பாசமா கூப்பிடறா.. பேசுறா …..

மித்திரன் … ஒன்னு கவனிச்சான்.. எனக்கு தான் வந்தது யாருனு தெரில ஆனா இவங்க எல்லார்க்கும் முன்னாடியே தெரிஞ்ச மாதிரி பேசுறாங்க.

அப்படினா கயல்விழிக்கும் முன்னாடியே தெரிஞ்சி இருக்கனும்.. இல்லையா… சட்டுன்னு கயல்விழியை பார்த்தான்.. பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

கயலும் சரவணனும் காதல் பூக்கள் கண்களில் மலர இருவரும் தங்களை மறந்த நிலையில் பார்த்து கொண்டு இருந்தனர். இருவரும் விழிகளால் உறவாடினர். இந்த விழி மொழியை மொழி பெயர்க்க கவிஞர்கே கடினம்.

மித்ரனுக்கு கயல் மேல் கோவம் வந்தது நான் வந்ததுல இருந்து ஒரு முறை கூட என்ன நிமிர்ந்து கூட பாக்கல.. அவன எப்படிலாம் வச்ச கண்ணு எடுக்காம பாக்குக்றா பார்…

அந்த அளவுக்கு அவன் உன்ன மயக்கி வச்சி இருக்கான்ல பாத்துக்கிறேன் டி… அவனை … கொலை வெறியோடு பார்த்தான்…

சுரேஷ்.. மித்திரனை பார்த்தான்… பார்த்ததும் சரவணனுக்கு கண் காட்டினான்…

சரவணன் மிதுரனை.. கோவத்தோட பார்த்து கொண்டிருந்தான்.

அட இவன் எதுக்கு என்ன கோவமா பாக்கணும் இவனை இதுக்கு முன்ன பாத்ததே இல்ல.. என்கிட்ட மொறைச்சிட்டு நிக்குறான். … லூசு பையன்.. மித்திரன் நினைத்து கொண்டான் இப்படி…

ஆனால் சரவணனுக்கு மிதுரனை பத்தி எல்லாம் தெரியும் என்பது
மிதுரனுக்கு தெரியாதே … அதனால் எதுக்கு இருக்கானு யோசனையோடு பார்த்துட்டு இருந்தான்..

சுரேஷ் … அண்ணா இவர் யாருனு சொல்லலையே….?

ஓ… உனக்கு தெரியாதுல இவர் தான் சுரேஷ் என் பாஸ்… அறிமுகம் படுத்தினான்..

நைஸ் மீட்டிங் யு சார் .. சுரேஷ் கை கொடுத்தான்.

மித்திரன் பதிலுக்கு கை கொடுக்காமல் சுரேஷை அலட்சியமாக பார்த்தான்… நீ எல்லாம் எனக்கு ஈடாயென.

சுரேஷ் தோளை குலுக்கி கொண்டான். போடா.. நீ கை கொடுக்கலனா… நான் ஒன்னும் குறஞ்சிட மாட்டேன்.

கணேஷ் பாடு தான் திண்டாட்டம் ஆகிடுச்சி.

ஒரு பக்கம் பாஸ், இன்னொரு பக்கம் சுரேஷ்.. என்ன பண்ணுறதுதனே தெரியாம விழி பிதுங்கி நின்னுட்டு இருந்தான்..

சரவணன்… கோதைகிட்ட போய் அத்தை எதை நினைச்சும் கவலைப்படாதீங்க, நாங்கலாம் இருக்கோம்… அன்போடு பேசவும் …

மிதுரனுக்கு பச்சை மிளகாயை கடிச்ச மாதிரி இருந்தது. அதுவும் அத்தைனு உறவு முறை வச்சு பேசுறானே என கடுப்பானான்..

அதே கடுப்போட… கணேஷ் எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்பறேன்..

ஆண்ட்டி வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட சொல்லுங்க.

திரும்பியவன்… வரேன் ஆண்ட்டி சொல்லவும்…

சரிப்பா .. பாத்து போய்ட்டு வா…. அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போப்பா .

கோதை இப்படி சொன்னதும் மித்திரன் சந்தோசம் அடைந்தான். கண்டிப்பா வரேன் ஆண்ட்டி… உடம்பு பாத்துக்கோங்க…. சொல்லிட்டு கிளம்பும் போது கயல்விழியை பார்த்தான்…

அவளோ சரவணன் தவிர வேற யாரும் பாக்க மாட்டேனு அவனையே விழிக்குள் புதைச்சிக்குற மாதிரியே பார்த்துட்டு இருந்தாள்.

அதனால் மித்திரன் இன்னும் காண்டு ஆனான்… உன்ன.. அப்பறம் பாத்துக்கிறேன்டி மனசில் சொல்லிக் கொண்டே … வேகமா வெளியே வந்து கார் எடுக்கவும்,

கணேஷ் ஓடி வந்தான்.. சார் கோவமா இருக்கீங்க போல என்னாச்சு சார்….

கணேஷ் அந்த சரவணன் யாரு ..?

அவன் கயல் தோழி சந்தியாவோட அண்ணன். நாங்க பேமிலி பிரண்ட்ஸ்.

ஏன் சார் .கேட்டிங்க..?

“நத்திங்..”

யோசனையில் ஆழ்ந்தான்…. பிறகு கணேஷ் உன் தம்பிக்கு என்ன பத்தி தெரியும் தான சொன்ன நீ…

ஆமா சார்…

அப்படினா அவனுக்கும் என்ன தெரிஞ்சு இருக்கனும்…அதான் என்ன முறைச்சிட்டு இருந்தானா என நினைத்து கொண்டு

தாடையை தடவிய படியே கேட்டான் உன் தங்கச்சிக்கு சரவணன் மேல ஈடுபாடு இருக்கிறது போல தெரிதே என கணேஷை கூர்மையாய் பார்த்துட்டே கேட்டான்..

கணேஷ்..,” அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல சார்.. கோவமா சொன்னான்.

என்ன தான் கயல்விழியை பிடிக்கலனாலும்… அவளை பத்தி மித்திரன் தப்பா சொல்லவும் கோவம் பட்டான்…

அந்த கோவத்தோடவே சொன்னான் என் தங்கச்சி அப்படி பட்ட பொண்ணு இல்ல சார்…. உங்களுக்கு என் தங்கச்சி மேல நம்பிக்கை இல்லனா விட்டருங்க இதோட கறாரா பேசினான்…

நா சொல்லுறதுக்கு எல்லாம் பூம்பூம் மாடு மாதிரி தலைய ஆட்டும் கணேஷா என் கிட்ட இவ்ளோ கோவமா பேசுறது…

மித்திரன் சுதாரித்து கொண்டான்.. இப்போ இவன் தயவு தேவை… இவன வச்சு தான் கயல என் பக்கம் இழுக்க முடியும் .. அதனால் சமாதானமாவே பேசுனான்..

ஒகே கணேஷ். கூல். எனக்கு முக்கியமான வேலை இருக்கு அப்பறம் உங்க கிட்ட பேசுறேன் பை … சொல்லி விட்டு கிளம்பினான்.

மித்திரன் எதுக்கு சம்பந்தமே இல்லாம சரவணன் கூட கயல் இணைச்சு பேசிட்டு பேசுறாரு என புரியாமல் சிந்தித்த படியே டாக்டரை பாக்க போனான்.

சுரேஷ் சரவணன் கிட்ட வீட்டுல எல்லாரும் போயிருகாங்களா கல்யாணதுக்கு என கேட்டு கொண்டிருந்தான்…சரவணன் கிட்ட பதிலே வராம இருக்கவும்..என்ன நம்ம மட்டும் பேசிட்டு இருக்கோம்… சுரேஷ் நிமிர்ந்து சரவணனை பார்த்ததும் சிரித்து கொண்டான்…

ஹுக்கும்… கணைக்கவும் ….
சரவணன் கயல்விழி மேல் உள்ள பார்வையை விலக்கினான்…

மச்சான் .. நான் போய் டாக்டர் ர பாத்துட்டு வரேன் …. சுரேஷ் சிரிச்சிட்டே சொல்லவும்…

ஹ்ம் சரிங்க மச்சான் ரொம்ப நன்றிடா மச்சான் மனசுக்குள்ள சொல்லிக்கிட்டான்..
போய்ட்டு வாங்க அவனும் சிரிச்சிட்டே அனுப்பினான்…

பின்ன .. அத்தைய தான் பாத்தாச்சே.. என் ஆள பாக்கலனா கோச்சிக்க மாட்டாளா அவளையும் பாக்கணுமே….

(அவன் மனசாட்சி அட பாவி இவளோ நேரம் நீ என்ன பண்ணிட்டு இருந்த…

ஹ்ம் நான் அத்தைய பாத்துட்டு இருந்தேன் …

அத்தைய மட்டுமா பாத்தா… கூடவே அத்தை பொண்ணையும் சைட் அடிச்சிட்டு இருந்தனு சொல்லு ஒத்துகிறேன்..

ஆமா இப்போ என்னஅதுக்கு போ முதல்ல.. உன்ன யாரும் இங்க கூப்பிடல..கிளம்பு கிளம்பு நா என் ஆளுகூட கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணனும் நீ டிஸ்டப் பண்ணாத கிளம்பு…

ஹாஹா என்ஜாய்….. )

கோதை மாத்திரை போடவும் தூங்கி விட்டாள்…

சரவணன் கண்ணால் கிட்ட வா என கயல்விழிய அழைத்தான்…

கயல் விழிக்கு வெக்கம் வந்தது… ஒரு பக்கம் வெளியே போன அண்ணா வந்துடுச்சுனா போச்சு .. இன்னொரு பக்கம் அம்மா முழிச்சிட்டா… ஹுக்கும்… வர மாட்டேனு தலையை ஆட்டினாள்..

சரவணன்… மனசுக்குள் நெனைச்சு கிட்டான் இவ வேளைக்கு ஆகமாட்டா… சரவணா நீதான் போனும் போல …

எழுந்தவன் நேர கயல்விழி கிட்ட மெதுவா வரவும் .. கயல்க்கு அவன் எதுக்கு கிட்ட வரான்னு யோசிச்சதும்.. உதட்டை கடித்துகொண்டே பின்னாடியே சென்றாள் .

அதற்கு மேல் போகமுடியாமல் சுவர் தடுத்தது… அப்படியே சுவத்தோடு ஒட்டிக் கொண்டாள். நாணத்தால் அவள் முகம் சிவந்தது. யாராவது பார்த்து விட்டால் என்ற பயமும் அவளிடம் தெரிந்தது.

சரவணன் அவளின் செயலில் இதழ் ஓரமா குறும்போடு சிரித்தான்… அப்பவும் அவளின் பயத்தை பார்த்து
பின்வாங்காம முன்னேறினான்….

கயல்விழிக்கு மூச்சு முட்டியது… சரவணன் பார்வையில்…இருக்கும் எதுவோ ஒன்னு கயல்விழியை கட்டிப் போட செய்தது….

அவனின் விழியோடு விழியாக கலந்து நின்றாள்…..நெருங்கி வந்தவன் கயல் மூச்சு காத்தோட தன் மூச்சும் கலக்க விட்டான்….

அவனின் அருகாமையில் கயல்விழி தன்வசம் இழந்தாள்… சரவணன் அவளின் தவிப்பு பார்த்து நிதானம் அடைந்தான்…

ச்ச்சே . இது ஆஸ்பத்திரி .. இங்க போய் … அவனையே திட்டிக் கொண்டு … சட்டுனு விலகி வெளியே போய் விட்டான்…

கயல்விழிக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது . முகம் அந்திவானமாய் சிவந்து போனாள்.

மிதுரனுக்கோ ஆபீஸ்லில் வேலையே ஓடவில்லை…அந்த அறையே …. சுத்தி வந்தான்…

அவன் நினைப்பு எல்லாம் சரவணன்-கயல் மேலேயே இருந்தது …

நான் அவங்க ரெண்டு பேரையும் விட்டு வந்து இருக்க கூடாது தப்பு பண்ணிட்டேன்….. .

நான் இருக்கும் போதே அப்படி பாத்தவன்…. நா இல்லை நா… ஓ நோ…. நெவெர் …. ஆத்திரத்தோட கத்தினான்…

ஒரு வேட்டை நாயின் ஆக்ரோசம் அவன் முகத்தில் பிரிதிபலித்தது.
கார் எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரி நோக்கி விரைந்தான்…!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here