விழி மொழியாள்.. பகுதி.. 2

0
847

விழி மொழியாள்…!!. பகுதி 2

என்ன பாத்தா அம்மா செத்துப்போய்டுவாங்களா….

…. இப்படி தான அண்ணா சொன்னாங்க … அம்மானு கதறி அழுதாள்… நான் எந்த தப்பும் பண்ணல மா என்ன நம்பு மா உன்ன விட்டா எனக்கு யாருமே இல்லமா….. நீயும் வெறுத்துடாத மா… அழுதுகொண்டே இருந்தால்…….

காலங்கள் யாவவையும் சொல்லிக்குடுக்கும் பாடங்கள்……

கயல் ஏய் கயல்ல்….
.
என்னடி பண்ணிட்டு இருக்க ஸ்கூலுக்கு போக நேரம்
ஆகுது பார்…..

இன்னும் என்ன தான் பண்ணிட்டு இருக்க, உன் அண்ணன்கள கூட சமாளிக்கலாம் …
உன்ன தாண்டி சமாளிக்க முடில…..
இப்படி புலம்பிக்கிட்டே அவ ரூம்ல கிடந்த துணிய எல்லாம் ஒழுங்கு செய்தாள் அம்மா பூங்கோதை…..

ஏழு கழுதை வயசு ஆச்சு இன்னும் பொறுப்பு வந்த பாடில்லை …..

ஹாஹாஹா ஐயோ flower ( அம்மாவை செல்லமாக flower என்று கூப்பிடுவாள்) கழுதைக்கு கூட வயசு இருக்கா என்று சிரித்தாள் கயல்…..

ஹ்ம்ம்ம் எவளோ கொழுப்பு இருந்தா என்ன பேர் சொல்லி கூப்பிடுவ இடுப்புல கை வைத்து செல்லமாக முறைத்தாள் பூங்கோதை…..

ஐயோ செல்லம் flower பேபி கோவம் கூடாது டா பேபி என்று அம்மாவின் தாடையை பிடித்து கொஞ்சினாள்…..

பூங்கோதை சிரித்து விட்டாள்…..
போடி அரட்டை போதும் போ நேரம் ஆகுது பார் ஸ்கூலுக்கு கிளம்பு ……‌

ஹ்ம்ம் பேபி நா கிளம்பறேன் டாடா flwr னு சொல்லிட்டே சிட்டா பறந்து போய்ட்டா…..

கயல்விழிக்கு அம்மா தான் உலகம். உலகத்துல உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்னு கேட்டாக்க அவ யோசிக்காம என் அம்மானு சொல்லுவா…..
அம்மாக்காக என்ன வேணா செய்வாள் கயல்.

வீட்டில் கயல் தான் கடைக்குட்டி.
கணேஷ மற்றும் சுரேஷ் இருவரும் மூத்தவர்கள்.

அண்ணன்கள் இருவருக்கும் தங்கை கயல்விழியிடம் ஒட்டுதல் இல்லை.

அண்ணன்களின் பாராமுகம் பற்றி அம்மாவிடம் சொல்லாம இருந்தாள் கயல், தெரிஞ்சா அம்மாவின் மனசு வருத்தப்படுமே என்று நினைத்தாள்.

அம்மா இருக்கும் போது அண்ணன்கள் இருவரும் கொஞ்சமாவது முகம் கொடுத்து பேசுவாங்க….
அதுவே அவளுக்கு ஆறுதலாக இருந்தது…

அண்ணன்கள் பண்றது எல்லாம் அம்மா கிட்ட சொல்லி அண்ணன்கள் கிட்ட இன்னும் தூரமா போக அவ விரும்ப வில்லை ….

இதனாலயே வீட்டுல நடக்கும் எதுவும் பூங்கோதைக்கு தெரியாமல் போய் விட்டது….

அவ மட்டும் அண்ணன்கள் ஏன் மா என்கிட்ட எல்லாம் பேசமாட்ராங்க பாசம்மா என் பிரிஎண்ட்ஸ்சோடா அண்ணலாம் அவங்க தங்கச்சி கூடஜாலி யா பேசிட்டு வருவாங்க ஏன்
என்கிட்டயும் ஜாலியா பேசிட்டு வருவாங்க….”
ஆனால்…..
அவ கூட பிறந்தவங்க மட்டும்
அவமேல ஏன் இவ்வளவு வெறுப்பு காட்டணும்… பாவம் அந்த பிஞ்சு மனசுக்கு புரியவில்லை…

எல்லா செயலுக்கும் ஒரு அழுத்தமான
காரணம் இருக்குமில்லையா…

“அதே போல கணேஷ் சுரேஷ் கும் காரணம் இருந்துதது ..

பூங்கோதைக்கும்
மாணிக்கத்துகும்
முதலில் பிறந்தவன் தான் கணேஷ்……

மாணிக்கம் அரசாங்க உத்தியோகம் பார்ப்பவர் … பபூங்கோதை வீட்டு நிர்வாகம் பார்ப்பவள்.வீடு குழந்தைகள் தான் அவளுக்கு உலகம் எல்லாம்…. .கணேஷ்கு மட்டுமே சொந்தமா இருந்துச்சு அதுக்கு அடுத்தவன் கணேஷ்கு 7 வயசு ஆகும் போது சுரேஷ் பிறந்தான் …

அவன் பிறந்த பிறகும் கணேஷ்கு பாசம் குறையாமல் கிடைத்தது…”
அதனால் அவனுக்கு சுரேஷ் மேல வெறுப்பு வராம தப்பிவிட்டான் …. அவனும்
சகஜமாவே பேசுவும் பழகவும் செய்தான் ஆனால்.. கயல் வந்தபின்னால் ஓட்டு மொத்த பாசமும் அவகிட்ட போய்விடும்னு அவன் நினைத்து கூட பார்க்கவில்லை… “””அதுவே
கயல் கூட ஒட்டுதல் இல்லாமல் போய்விட்டது நாளாக நாளாக அவள் மேல உள்ள வெறுப்பு
அதிகம் ஆகிக் கொண்டடே போனதே தவிர குறைந்த பாடில்லை ஒரு தடவ ..

ஏன் மா அவகிட்டமட்டும் பாசமா இருக்கீங்க …. கணேஷ் இப்படி கேட்டதும் சிரிச்சிட்டே சொன்னால்..
டேய் அவ சின்னவடா அப்பா இல்லைனு ஏங்க கூடாதுல அதானால்தான் டா …. “
உனக்கும் சுரேஷ்கு லாம் கொஞ்சம் விவரம் தெரியும் ஆன அவ பிறந்த பிறகு அப்பான்னு கூப்பிட்டதே இல்லைடா.. உங்க அப்பா எப்பவும் போல வேலைக்கு போய்ட்டு வரும் போது விபத்து ஏற்பட்டு நம்ம எல்லாரையும் விட்டு போயிட்டார்….”
அவர்பாத்த ஆபீஸ் லயே எனக்கும் வேல குடுத்தாங்க அத வச்சி தான் நம்ம பொழப்பு போது இது வரைக்கும் … உன்ன எப்படியோ கஸ்டப் பட்டு படிக்கவச்சிட்டேன்..இனி
நீதான் இந்த குடும்பத்துக்கு நல்லது கெட்டது பாத்து செய்யணும்…. அவளைநல்லபடிக்கவச்சி நல்லவனா பாத்து கட்டிக் குடுக்கணும் டா இது தான் டா அம்மாவோட ஆசை உனக்கு ஒன்னு தெரியுமா டா அவ என்கிட்ட இதுவரை ஏன் மா அப்பா நம்மலலாம் விட்டுட்டு போனார் னு கேட்டது இல்லைடா….. அவ சின்ன பொண்ணு டா இன்னும் பக்குவம் வரல நீயும் உன் தம்பியும் தான் அவளை நல்லா பாத்துக்கணும் சரியா…. “
…ஹுக்கும் இப்ப இருக்குற பசங்களுக்கு எல்லா விவரமும் தெரியுது. நீ தான் அவளுக்கு ஒன்னுமே தெரியாதுனு சொல்லி செல்லம் கொடுக்குற….நீ வேணா பாரு நம்மலாம் விட்டுட்டு ஒரு நாள் போகப்போற அப்ப தான் உனக்கு புரியும்……..

நான்சொன்னது….. உனக்கு உன் பொண்ணு தான் உசத்தி இப்படி சொல்லும் போதே (ஏன்னோ தனிமை உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை கணேஷ்க்கு…

நம் மேல அம்மாவுக்கு பாசமே வராத எல்லாதுக்கும்  இவ தான்  காரணம் இவ மட்டும் இல்லனா அம்மா வுடைய பாசம்  மொத்தமும் எங்களுக்கு மட்டுமே  கிடைச்சி இருக்கும்........... 

விதியின் போக்கிலே எவரும் அறிய முடியாத
சூட்சமங்கள் அடங்கியதான் வாழ்கை………

..பூங்கோடி மாணிக்கம் தம்பதியர்க்கு கணேஷ் பிறந்தான் அவன் தான் செல்லம் குட்டி ராஜா போலவே….
வலம்வந்தவன்ஐந்து வருஷம் கழித்து பிறந்தவன் அவன் பிறந்ததும்…

அவளை மலடினு சொன்னவங்க எல்லாரும் வாய் மூடி கொண்டார்கள்….. ஒரு ராஜா போல பார்த்து கொண்டார்கள் அடுத்து சுரேஷ் பிறந்தான் அவன் வந்தபிறகும் கணேஷ்க்கு பாசம் குறையாமல் தான் இருந்தது…..

அதுக்குஅடுத்த பிறந்தவள் தான் கயல்விழி பொண்ணு இல்லையேன்னு. கவலை பட்டுகிடந்த பூங்கொடிக்கு… “கயல் பிறந்தது ஒரு வரம் போல எண்ணினால் தேவதையே நமக்கு பிறந்துவிட்டால்னு பூரித்து போனாள்,.அது மெய் என்பது போல கோவில்போகும் போதும் வரும் போதும் பாக்கிற கண்கள் எல்லாம் கயல் மேல பார்வை செலுத்தாமல் செல்லமாட்டார்கள் ….”

அவ்வளவு அழகா இருப்பாள்.. அதில் மலை அளவு பெருமை கர்வம் இருக்கும் பூங்கோதைக்கு…. இவள் என் மகள் இது வரை.. அப்பா எங்கே அம்மானு கேட்டது இல்லை கயல்விழி அதனாலயே கொஞ்சம் அதிகம் பாசம் காட்டினால் பூங்கோதை கயல்விழிக்கு அம்மா அண்ணன்கள் தான் உலகம் அண்ணன்கள் பாசமா இல்லனாலும் நாம பாசமா இருப்போம்னு நினைத்துகொண்டவள்அது போலவே இருக்க பழகிக்கொண்டாள்..ஆனால் அவள் அண்ணன்மார்களோ இவள்தான் காரணம்.. அம்மாவின் பாசம் நமக்கு கிடைக்காம போய்விட்டது…. இதுவே கயல்விழி யபிடிக்காமல் போனதற்கு காரணம்……

கயல்விழிக்கு எப்போதுதான் அண்ணன்களின் பாசம் கிடைக்கும்….பொறுத்திருந்தது பாருங்கள்…. அடுத்த பகுதியில் சந்திக்கிறேன்….. தவறுகள் இருப்பின் நீங்கள் சொல்லுங்கள் கேட்டுக்கொள்ளுகிறேன்……..FB_IMG_1549610162566|440x402

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 1 Average: 5]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here