விழி மொழியாள்… பகுதி.. 21

0
412


சுரேஷ்.. சரவணன் பற்றி கயலிடம் கேட்டு கொண்டிருந்தாலும் அவன் பார்வை முழுவதும் மித்திரன் மேலேயே இருந்தது ….

அந்நேரம் பார்த்து
மித்திரன்கு கால் வரவும் …போன் எடுத்துட்டு தள்ளி போனான் ..

சுரேஷ் தன்னையே தான் பார்த்துட்டு இருக்கிறதை மித்திரன் கவனித்து கொண்டே . .

ஹ்ம்””
சொல்லு எப்படி இருக்கான் …. சுரேஷ் மேல் ஒரு கண் வைத்துபடியே பேசினான்…

சார் அவன் மயக்கத்துல தான் இருக்கான் … இன்னும் தெளியல.. ஒகே .. இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வரேன் … அதுவரை கவனமா பாத்துகங்க. கோட்டை விட்ராதீங்க.
ஒகே சார் அதெல்லாம் கவனமா பாத்துக்குறோம்.

குட்…

திரும்பிபார்த்தான்.. இன்னும் சுரேஷ் அங்கிருந்து நகராமல் நிற்கவும்.. கயல்விழியை தேடினான்.

. அவ உள்ளே போய்விட்டாளே ச்ச்சே நல்ல சந்தர்ப்பம் மிஸ் ஆகிடுச்சே கடுப்போட சுரேஷ் அருகில் வந்தான்… முகத்தை சாதாரணமா வைத்து கொண்டு …

ஹாய் சுரேஷ் … என்ன காலேஜ் முடிஞ்சிடுச்சா… எங்கே உங்க பிரண்ட்… ஆளையே காணோம் ஊருக்கு போய்ட்டாரா…

மித்திரன் இப்படி கேட்கவும் சுரேஷ் மிதுரனையே சந்தேகத்தோடு பார்த்தான்..
என்ன சுரேஷ் நா கேட்டுட்டு இருக்கேன் ஒன்னுமே பதில் சொல்லாம என் முகத்தயே பார்த்துட்டு நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்.

மித்ரன் சார்…சரவணனை காணோம்… அவன் மொபைல்க்கு ட்ரை பண்ணேன் … நாட் ரிச்சபல்னு வருது …

ஓ. ..ஐ.. சி..

உங்களுக்கு தெரிஞ்சவங்க மூலமா கொஞ்சம் பாக்க சொல்லுறீங்களா..

ஓகே.. சுரேஷ் பாக்க சொல்லுறேன்.. இவ்ளோ அக்கறையா தேடுறீங்களே …. சரவணன் கயல் பிரண்ட்டோட அண்ணன் மட்டும் தானா இல்லை வேற எதுனா இருக்கா.. சுரேஷை உற்று பார்த்தபடி கேட்டான்…

அம்மாக்கு தெரியாத வரை சரவணன் கயல் லவ் வேறயார்க்கும் தெரிய கூடாதுனு நினைத்து கொண்டான்…., கயல்விழி பிரண்டோட அண்ணன் மட்டும் இல்ல சார் எங்க பேமிலி பிரண்ட்டும் கூட..

சரவணன் வீட்டுக்குகூட இன்னும் தெரியாது சார் …
அதுக்குள்ள கண்டுபிடிச்சு கொடுக்க முடியுமா…??

சார் ப்ளீஸ் …

திருடன் கையிலே சாவியை கொடுப்பது போல மித்திரன் கிட்ட உதவி கேட்டான் சுரேஷ்.

ஒகே.. “சுரேஷ் எனக்கு தெரிஞ்ச டிஸ்பி இருக்கார் அவர்க்கு இன்போர்ம் பண்றேன் டோன்ட் ஒர்ரி … எப்படியும் கண்டுபிடிச்சுடலாம்… மனதில் வன்மத்தை வைத்துக்கொண்டு முகம் மட்டும் கவலையாய் இருக்கிற மாதிரிகாட்டிக்கொண்டான்..

உங்கள தான் நம்பி இருக்கேன் சார்…

ஒகே..” சுரேஷ் எல்லாம் நான் பாத்துக்கறேன்..

சரி சார் … “

உங்க கிட்ட சொன்னதும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு .. சரவணன் எனக்கு திரும்ப கிடைப்பானு நம்பிக்கை வந்துச்சு சார்.

நானும் என் பிரண்ட்ஸ் கிட்டலாம் சொல்லிருக்கேன் ..சார் அதான் என்ன ஏதுனு பாத்துட்டுவரலாம்னு இருக்கேன் …வரேன் சார் …

ஹ்ம் ஒகே சுரேஷ்.. நீங்களும் ட்ரை பண்ணுங்க…

ஒகே. சார்.. கண்டிப்பா.

சுரேஷ் போனதும் மித்திரன் வாய்விட்டு சத்தமா சிரித்தான் பைத்தியக்கார கடத்துனவன் கிட்டயே தேட சொல்லி சொல்லிட்டு போற ஹாஹா…… போடா.போ நீ எங்க தேடுனாலும் அவன் உனக்கு கிடைக்க மாட்டான்.

மித்ரன் கார் எடுத்து கொண்டு வேகமா செல்வதை கயல் பார்த்து கொண்டிருந்தாள்.

இவன் நல்லவனா கெட்டவனா.. எதுவா இருந்தா எனக்கென்ன…தோளை குலுக்கிய படி போய்விட்டாள் .

எங்கே போனார் சரவணன் .. என்னிடம் சொல்லாம போகமாட்டாரே… அவரை ஹாஸ்பிடல்ல பாத்தது… சரவணை நினைத்தவள் … அநினைவு வந்ததும் அந்தி வானமாய் சிவந்து போனாள் ….அம்மா இருகாங்கனு தெரிஞ்சும் எவளோ தைரியமா என்கிட்ட வந்துட்டார்… கள்வன் தான் டா நீ …உன் பார்வையில் மயங்குறேனடா …இதழ் கடித்து… ரகசியமாய் சிரித்துக்கொண்டாள்…

அங்கே…

ஒரு ரூமில்
சரவணணை சேரில் கட்டி போட்டு வைத்து இருந்தார்கள்… தல தொங்கிய படியே அரை மயக்கத்தில் இருந்தான்…

அவன் முன்னாடி சேரில் ஸ்டைல்லாக கால்மேல் கால் போட்டு உக்காந்தவன்…

ஒரு காலால சரவணன் முகத்தை நிமிர்த்தினான்… நீயெல்லாம் எனக்கு போட்டியாடா இடியட்…. கணேஷ் தம்பி சுரேஷ் தான் எனக்கு எதிரா இருப்பானு நினச்சேன்..

பட் நீ எனக்கு போட்டியா வந்துட்ட ஆமா அந்த தகுதி உனக்கு இருக்காடா
டாமிட்…..
எவளோ தைரியம் இருந்தா மித்ரன் ஆசைப்பட்ட பொண்ணு மேல நீ ஆசைப்படுவ…

நீயெல்லாம்… என் ஸ்டேட்டஸ் ஈடாகூட வர மாட்டா.. புல்ஷிட்… திட்டிய படியே ஆத்திரத்தோட காலால் எட்டி உதைத்தான்……

அவன் உதைச்ச வேகத்தில் சரவணன் சேரோட குப்புற விழுந்தான்… தலையில் ரத்தம் சொட்டியது .. ஆ ஆ அம்மா…. ஆ.. த..ண்..ணி..த.. ண்..ணி..

மித்திரன் ஒரு பார்வை பார்த்ததும் பக்கத்தில் நின்றிருந்தவன் சரவணை நேர உக்கார வைத்தான்…

ஹேய்” தண்ணி எடுத்துட்டு வா.. மித்திரன் குரல் கொடுத்ததும் …பக்கத்தில் இருந்தவன் ஓடிப்போய் எடுத்துட்டு வந்து குடுத்தான்…

அத வாங்கியவன் சரவணன் மேல வீசினான்……

ஆஆஆஆ….. அம்மாஆஅ… சரவணன் அலறல் குரல் அந்த குடோன் முழுக்க எதிரொலித்தது….

ஹாஹாஹா….

கத்து டா கத்து இன்னும் சத்தம்மா கத்து…நீ என்ன கத்துனாலும் ஒரு ஈ எறும்பு கூட இங்க இருக்காது… உப்பு தண்ணி அடிபட்ட இடத்துல பட்டா எப்படி இருக்கும் தெரியுமா.. சும்மா…. சில்லுனு இருக்குமாம்… ..

ஹாஹாஹா …..

இந்த மித்திரன் வழில குறுக்கே வந்தாலே இல்லாம பண்ணிடுவேன்… நீ நான் ஆசை படுற பொண்ணுமேலயே ஆசை வச்சிருக்க தப்பு பண்ணிட்டா சரவணா . ஹாஹாஹா …வெறியோட சிரித்தான்.

ஆஆஆஆ… அம்மா….. அந்த எரிச்சல்யும் சரவணன் பேசினான் டேய் ….
பொம்பள மாதிரி கட்டி வச்சி வீரப்பா பேசுற நீ எல்லாம் என்ன ஆம்பள…

சரவணன் பேச பேச மித்திரன் கோவத்தின் உச்சிகே போய்விட்டான்… என்னடா சொன்ன யார பாத்து ஆம்பள யா னு கேக்குற
பளார்னு விட்டான்ஒரு அறை… வாயில் இருந்து ரத்தம் சிந்தியது…

அத கூட சட்டை பண்ணாமல்
ஹாஹாஹா ….சிரித்துக்கொண்டே
உன்ன பாத்து தான்டா கேக்குறேன்… என்ன கடத்தி வச்சி தான்டா நீ கயல்விழியை அடையமுடியும் …

நீ மட்டும் சரியான ஆம்பளையா இருந்தா என்ன வெளியே விட்டு என் கண்முன்னாடி கயல்விழிய கல்யாணம் பண்ணி காட்டுடா அப்போ ஒத்துகிறேன் டா நீ ஆம்பள னு ……..சரவணன் சூளுரைக்கவும்…

மித்திரன் …. என்ன சொல்லிருப்பான் … சும்மாவே ஆடுபவன் இப்போ சொல்லவா வேணும்….

நெக்ஸ்ட் எபி ல சொல்லறேன் ..சேலஞ்சிங்….

தொடரும் விழி பயணம்……

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here