சரவணன் ஒரு நிமிசம் என்ன பண்ணுறதுனே தெரியாமல் பைத்தியம் பிடிச்சதுபோல் நின்றிருந்தான்.
மூடியிருந்த கதவை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு விறு விறுவென வெளியே சென்று விட..
கால் போனா போக்கில் நடந்து கொண்டிருந்தவன். மனசெல்லாம் கயல் மட்டுமே நிறைந்து இருந்தாள்.
மனசை யாரோ பாரமாய் அழுத்தியது போல் உணர்ந்தான் .
கயல்… மனதுக்குள் சொல்லி பார்த்தான்.. நான் தோத்துட்டேன் கயல்விழி …..என் கூட புறந்தவளையும்… என் நம்பி வந்தவளாயும் இழந்துட்டு நிக்கிறேன்…. ஓ…னு கதறி அழுதான்….
தான்நின்றுக்கும் இடம் ரோடு னு கூட நினைக்காமல் …. கால் போனா போக்கில் நடந்துக்கொண்டே சென்றவன் .. அங்கே கோவில் கண்ணில் படவும் உள்ளே சென்றான்…
மனசில் இருக்கும் பாரம் லாம் இறங்கினது போல உணர்ந்தான்… அங்கேயே அமர்ந்து விட மனதோடு அம்மனிடம் பேசினான்.. இன்னும் எனக்கு எவ்ளோவு சோதனை தான் குடுக்க போற என்னால முடிலயே
நான் தட்டுற கதவு எல்லாமே இறுக்கமா மூடி இருக்கே நா என்ன செய்யறதுன்னுனே தெரியாமல் தவிக்கிரேனே..
நீயே எனக்கு ஒரு வழி காட்டு அது வரை இங்கேருந்து நா நகர மாட்டேன்… கோவமாய் அமர்ந்து கொண்டான்…
சுரேஷ் வீட்டுக்குள் நுழைந்ததும் வீடு அமைதியாய் இருக்க கயல்விழியை தேடிபோனான்…
வீட்டை சுத்தி தேடி பார்த்தும் கயல்லை எங்கேயும் காணாமல் போக …. மாடிக்கு வந்தான்…
கயல் மாடில இருக்கவும் …
ஹேய் நீ இங்க தான் இருக்கியா உன்ன தான் வீடுமுழுக்க தேடிட்டு இருந்தேன்…
ஆமா அண்ணா அம்மா லாம் எங்க ஆளையே காணோம்…
சுரேஷ் பாட்டுக்கு பேசிட்டு இருக்க… கயல்விழியிடம் ஒரு பதிலும் வரமபோக.. கயல்விழியை பார்த்தான்..
கண்ணீரோட எங்கோ வெறித்து பார்த்துகொண்டிருந்தாள்…
கயல்னு சத்தமாய் கூப்பிட்டதும் ….
ஆன்… அண்ணா …. ஓ னு கதறி அழுதாள்…
என்னமா .. என்ன ஆச்சு ஏன் அழுற….
அண்ணா ….அழுதுட்டே இருக்கவும்…
சொல்லுகயல் சொன்னதான தெரியும் எதுக்கு அழுற னு ….
அம்மா எதுனா திட்டுனாங்களா… சொல்லு… மா
அண்ணா அந்த… அந்த மித்ரன்ல …. அழுதுட்டே சொல்லவும்…
மித்ரன் பேர சொன்னதும் …உடனே சுரேஷ்கு கோவம் வந்தது.. . என்ன பண்ணான் அவன் சொல்லு உங்கிட்ட எதுனா தப்பா நடந்துகிட்டுன..சொல்லு… கோவத்தோட கேட்கவும்…
அழுதுட்டே….. மித்ரன் பேசியது எல்லாம் சுரேஷ்டம் சொல்லி முடித்ததும்…
சுரேஷ்முகம் பயங்கரமாகியது.. அவனை பத்தி முன்னமே தெரிஞ்சும் நா சும்மா இருந்துட்டேன்…. ஆனா இவன் இந்த நிலைமைக்கு வந்தததுக்கு அப்பறம் அவனை சும்மா விட கூடாது…..
விறு விறுனு வேகமாய் கீழே இறங்கி மிதுரனை தேடினான்..
..கயல் பயத்தில் … முகம் வெளிறி போனாள்..
அய்யோ …. அண்ணா எதுனா கேக்க போய் அங்கே சந்தியாக்கு ஆபத்து ஏற்படுமேனு பயந்து போனாள் …
அண்ணா. அண்ணானு கத்திகொண்டே பின்னாடியே ஓடினாள்…
சுரேஷ்
மித்ரன் அறைக்குள் நுழைய போகையில் வாசலில் கார் வந்து நிக்கும் சத்தம் கேட்டதும் …
வெளியே எட்டி பார்க்க அம்மாவும் அண்ணனும் கார் விட்டு இருக்கறதை பார்த்ததும் ….
மித்திரன் பத்தி அம்மா கிட்ட பேசிட்டுதான் இங்க இருந்து போகணும் …. அது தான் எல்லாருக்கும் நல்லது…
கணேஷ் அம்மாவை தாங்கி பிடிச்சி கூட்டிட்டு வரவும்
சுரேஷ் பயந்து போனான் என்ன ஆச்சி அம்மாக்கு ஏன் ஒரு மாதிரி இருகாங்க…
சுரேஷ் வேகமா கோதையிடமே என்ன ஆச்சு மா… ஏன் டல்லா இருக்கீங்க…. கோதையோட முகம் வாட்டத்தை பாத்து பயந்து போனான்… எதுவோ சரில்ல.. அவனுடைய உள்ளுணர்வு சொல்ல…
கோதையும் கணேஷும் வீடு வந்து சேர்ந்தது தெரிந்ததும் மித்ரன் ஆபீஸ் விட்டு அவனும் வந்துவிட…
கோதையை பார்த்து இப்போ உடம்பு பரவாயில்லயா அத்தை… கேட்டவன் கயல்விழி யை பார்வையால் வருடி கொண்டிருந்தான்…
அவன் பார்வையின் ஊடுடுறுவலை கயல்விழிக்கு மேனியெங்கும் கம்புளி பூச்சி ஊர்ற மாதிரி இருக்கவும்…..
சுரேஷ் பக்கமாய் ஒதுங்கி நின்றாள்…
சுரேஷ் மித்ரனை கோவத்தோட கவனித்துகொண்டிருந்தான்..
எனக்கு விசியம் தெரியும் னு இவன் நெனைச்சிட கூடாது … தெரிஞ்சிகிட்டா உஷார் ஆகிடுவான்….
மித்ரன் கயல் மறைஞ்சி நிற்கவும் சுரேஷ்ஷை பார்க்க ..
கன நேரத்தில் முகத்தை இயல்பாய் வைத்து கொண்டான்… சுரேஷ்..
மித்ரன் சுரேஷோட முகத்தைகூர்மையா பார்த்தான் அவன் முகம் எப்பவும் போல தான் இருக்கு..
கயல் விழி எதுவும் சொல்லலைனு நெனைக்கிறேன் ….
குட் … இப்போ தான் இவ என் கண்ட்ரோல்க்கு வரா… ஆசையோட கயல்விழியே பார்த்துகொண்டே இருந்தான்…
சுரேஷ்… மித்ரன் பார்க்கும் பார்வையில் பல்லை கடித்து கோவத்தை கட்டுப்படுத்தினான்…
இவனை…. அப்பறம் பாத்துக்கலாம்
முதல்ல அம்மாஏன் ஒரு மாதிரி இருக்கிறாங்கனு… தெரியணும்..
சுரேஷ் அம்மாவிடம் சென்றான்…. என்ன ஆச்சி மா . அண்ணா நீயாவது சொல்லு அம்மாக்கு என்ன?
பிரஷர் அதிகம் ஆகி மயங்கிட்டாங்க…
ஓ?.. கயல் சுரேஷ் இருவரும் அதிர்ந்தனர்..
என்ன அம்மா மயங்கிட்டாங்களா… அம்மா ஓடிவந்து கட்டிக்கொண்டாள்..
ஏன் திடிர்னு னு இப்படி ஆச்சு… சுரேஷ் கேட்க.
கணேஷ் கோவத்தோட எல்லாம் அந்த சரவணன் குடும்பதால வந்தது.. அதான் அம்மா மயக்கம் போட்டு விழ.. காரணம்.
என்ன…? அம்மா மயக்கம் போட சரவணன் குடும்பம் தான் காரணம் மா?
சுரேஷ் கயல் இருவரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் அதிர்ச்சியோடு பார்த்து கொள்ள..
கணேஷ் அங்க நடந்தது திலகம் பேசியது எல்லாம் சொல்லிமுடித்தான்… அதனால தான் அம்மாவாளா தாங்கிக்க முடியாம மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க…
கணேஷ் சொன்னதை நம்பவும் முடியாமல் நம்பமா இருக்கவும் முடியாமல் சுரேஷ் அம்மாவையே பார்க்க
அவர் முகமே கணேஷ் சொல்லுறதுலம் உண்மை தான் னு சொல்லியது……
கயல்லை திரும்பி பார்த்தான் …
அவளின் அதிர்ந்த தோற்றமே இதை எதிர் பாக்கவில்லை னு சொல்லாம சொல்லியது….
எல்லாத்துக்கும் இவன் தான் காரணம்பேசாம இவனை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்ட போறேன் மித்ரனை மேல கட்டுக்கடுக்காத கோவம் வர..பல்லை நறநற வென கடித்தான் .
அம்மா … நீங்க ஏதும் மனச போட்டு குழப்பிக்காதீங்க மா
நான் போய் என்னென்னு கேட்டுட்டு வறேன் ..
திலகா ஆண்ட்டி இப்படி நடந்துகிறவங்க கிடையாது மா என்னமோ நடந்து இருக்கு….
அது என்னென்னு கண்டு பிடிக்கிறேன்.. நீங்க எதுவும் அவசர பட்டு முடிவு எடுத்துடாதீங்க மா …அம்மாவிடம் கெஞ்ச..
போதும் டா … இதுக்கு அப்பறம் என்ன பேசி என்ன ஆக போகுது…. வேண்டாம் யாரும் அங்க போகக்கூடாது…. என் பொண்ணுக்கு அந்த சரவணன் குடும்பம் வேண்டாம்…
கயல் க்கு வேற பையன் பார்த்துட்டேன் அவனை தான் கயல் கல்யாணம் பண்ணிக்க போறா நா முடிவு பண்ணிட்டேன்….
நீங்க முடிவு பண்ண போதுமா மா இது கயல் லைப் அவ தான் முடிவு எடுக்கணும்.. சுரேஷ் கோவத்தில் கேட்க..
ஓ … கோதை அதிர்ந்தார்… என்னையே எதிர்த்து பேசுற ல நீ… அவளோ பெரிய ஆளா ஆயிட்டா..
கயல்விழியிடம் திரும்பினாள்… அம்மா உனக்கு நான் நல்லது தான் செய்வேன் நம்பிக்கை இருக்க இல்லையா கயல் சொல்லு..
அம்மா… அதிர்ச்சியோட பார்க்க..
சொல்லு கயல் நா உனக்கு நல்லது தான பண்ணுவேன்..
ஆமா அம்மா…
அப்போ இங்க இருக்கார் பார் இந்த தம்பியை தான் நீ கல்யாணம் பண்ணிக்கணும்…. இது தான் என்னோட ஆசை…
அம்மா…??? அதிர்ச்சியில் பேச்சே வராமல் சுரேஷும் கயலும் கோதையை பார்க்க
கணேஷ்… மித்ரனை பார்த்தான் … அவன் முகம் சந்தோஷத்தில் பூரித்து போய் நின்றுந்தான்.. எதையோ சாதிச்சிட்டா மாதிரி …. கர்வமாய் நின்றுந்தான்…
ஹ்ம்… சொல்லுடா ..அம்மா முடிவுல உனக்கு சம்மதம் தானே…
கயலோட பதில் என்னவா இருக்கும் என்ன சொல்லுவாளோ னு அவ முகத்தையே பார்த்துட்டு இருந்தார்கள் மூவரும்..
சுரேஷ்ஷை பார்க்காமல் தலையை குனிந்த படியே உங்க விருப்பம் தான் மா … என் முடிவு தலையை ஆட்டியவள் அழுகையை கட்டு படுத்தியபடி விருட்டென உள்ளே ஓடிவிட்டாள்..
சுரேஷ் அதிர்ச்சியோட பார்த்துக்கொண்டிருந்தான்… கயல்லை..
போதும்மா ..டா . அவ என் பொண்ணு என் பேச்சை மீற மாட்ட… சொல்லியவள் மித்ரனிடம் வந்தாள்… கையெடுத்து கும்பிட்டு
தம்பி அன்னைக்கு நீங்க கேக்கும் போது நா முடியாது னு சொல்லிட்டேன் … இப்போ நானே கேக்குறேன் என் பொண்ண கட்டிக்க உங்களுக்கு சம்மதமா… கோதை கேட்டதும் …
மித்ரன்… கணேஷிடம் யாருக்கு தெரியாமல் கட்டைவிரலை தூக்கி காட்டினான்…
ஐயோ அத்தை… வயசுல பெரியவங்க நீங்க போய் என்ன கும்பிட்டு … இப்பவும் நா கயல்விழியை விரும்புறேன் .. கட்டிக்க எனக்கும் சம்மதம் தான் … மித்ரன் சொல்ல..
கணேஷ் இந்த கல்யாணம் சீக்கிரமா நடக்கணும்… அதுக்குண்டான வேலைகளை பாரு…
ஹ்ம் சரிம்மா…
சுரேஷ் கோதையுடம் அம்மா னு பேச வர …
ஷ்ஷு.. நீ எதுவும் பேசாத சுரேஷ்… உன்னால முடிஞ்சா கயல் கல்யாணத்துல கூட மாட வேல செய் இல்லையா உனக்கு பிடிக்கலனா ஓரமாய் ஒதுங்கி நின்னு வேடிக்கை மட்டும்பாரு கோவத்தோட சொல்லிட்டு போய்விட…
சுரேஷ்ஷால் எதுவும் பண்ணமுடியாமல் கோவமாய் மிதரனை முறைதான்…
மித்ரன் அவன் பார்வையை கண்டும் காணாமல் … கணேஷ்ஷிடம் மச்சான் …. வாங்க நாம கல்யாணம் வேலை ஆரம்பிக்கலாம்…. தோளில் கை போட்டு சுரேஷை முறைத்துபடியே அழைத்து சென்றான்…
சுரேஷ்க்கு ஒரு நிமிடம் என்ன பன்னுறதுனே தெரியாமல்.. நின்றவன்.. ஏதோ யோசித்தவன் போல் கயல்விழியை தேடி போனான்…
அங்கே கயல் அழுதுகொண்டிருக்கவும்… கயல்னு கதவை தட்டினான்…
உள்ளே இருந்து எந்த சத்தமும் வராம இருக்க பயந்து வேகமா கதவை திறந்து உள்ளே போக கயல் கையில் கத்தியோட நின்றுந்தால்…
அதை பார்த்ததும் வேகமாய் ஓடி வந்து கத்திய தட்டிவிட்டவன் உனக்கும் பைத்தியமா பிடிச்சிருக்கு.. ஏன் இப்படி ஒரு முட்டாள் தனமான முடிவு எடுத்த… உனக்கும் இந்த அண்ணன் மேல நம்பிக்கை இல்லாம போச்சா கயல் கண்ணீரோட கேக்க ..
அண்ணா னு ஓடி வந்து கட்டிக்கொண்டு கதறி அழுதாள்… அழுதுகொண்டே பேசினாள்… எல்லாம் முடிஞ்சி போச்சி னா … திலகம் ஆண்ட்டி பேசினது அம்மாக்கு ஆறாத வடுவா மாறிருக்கு… அவங்க மறுபடியும் சரவணன் குடும்பத்தை ஏத்துப்பாங்க னு நம்பிக்கை இல்லை னா.. கண்ணீரோட சொல்லவும்..
கயல்… நா சொல்லுற மாதிரி நீ நடந்தா நீ ஆசை பட்ட சரவணானே கல்யாணம் பண்ணிக்கலாம்…
சுரேஷை
அதிர்ச்சியோட பார்த்தாள் … என்ன அண்ணா சொல்லுற.. முடியுமா உன்னால … அவனை எதிர்க்க..
என்னால முடியாது அவனை எதிர்க்க…
அப்புறம்.. எப்படி?
ஆனா உன்னால முடியும் உன்னால மட்டும் தான் முடியும் கயல் … ஏன்ன்னா உன்மேல மட்டும் தான் பைத்திமா இருக்கான்.. நீ சொன்னா எதுவும் செய்ய தயங்க மாட்டான் …
அண்ணா… கயல் பயப்படவும்…
பயப்படாத கயல்.. நா சொல்லுற மாதிரி செய்…
ஹ்ம் சரினா.. நீ சொன்ன மாதிரியே நடந்துக்கிறேன்…
குட்… நான் போய் மச்சானை பார்த்துட்டு வறேன்… எனக்கு தெரிஞ்சிஆண்ட்டி மச்சான் இல்லாத நேரமா பாத்து தான் இப்படிஎல்லாம் பேசி இருக்குறாங்க.. மச்சான் இருந்து இருந்தா இதெல்லாம் நடந்தே இருக்காது….
ஹ்ம் ஆண்ட்டி மேல ஒரு தப்பும் சொல்லமுடியாது அண்ணா … அவங்களுக்கு அடுத்தடுத்து பிரச்னை.. அது பத்தாதுன்னு சந்தியாவையும் கடத்தி வச்சிஇருக்கான்… இதெல்லாம் நினைத்து தான் ஆண்ட்டி அப்படி பேசிருப்பாங்க… இதுக்கெல்லாம் அந்த மித்ரன் தான் காரணம்… அவனை சும்மா விட கூடாது அண்ணா… கோவத்தோட சொல்லவும்..
ஹ்ம் கரெக்ட் கயல்.. அவன் தான் காரணம்.. நீ நான் சொன்னது மாதிரி நடந்துக்கோ… பாத்து பத்திரமா இருந்துக்கோ கயல் .. நான் மச்சானை பார்த்து பேசிட்டு வறேன்…
ஹ்ம் அண்ணா..
சுரேஷ் சோமுக்கு கால் பண்ணி விசயத்தை சொல்லவும் சோமு நானும் வறேன் டா நீ முதல்ல அங்க போ நா வந்து ஜாய்ண்ட் பண்ணிக்கிறேன்..
ஹ்ம் ஓகே டா….
மித்ரா…. இனி உன்ன விட்டு வச்சா… என் தங்கச்சி எனக்கு இல்லாம போய்டுவா…
ஆடு.. எவளோ ஆடணுமோ ஆடிக்கோ… இது தான் உன் கடைசி ஆட்டம் உனக்கு வைக்கிறேன் … செக்..
சரவணை பார்க்க கிளம்பினான்…
……. விழியில் ஆவேசம்!