விழி மொழியாள்! பகுதி-34

0
520

ஸ்டைலாக சிகரெட் பிடித்து கொண்டே பால்கனியில் நின்று கொண்டே கயல் விழியின் அழகை மனதிற்குள் நினைத்து ரசித்து கொண்டிருந்தான் மித்ரன்.

அவன் நினைவு முழுவதும் கயல்விழியே நிறைந்து இருந்தாள்… உன்ன அடையற நாளுக்காக தான் காத்துட்டு இருக்கேன் கயல்… ஆழ்ந்த சிந்தனையில் முழுகி இருந்தான்… .

சுரேஷ் மித்திரனை கவனித்தான் அவன் முகம் எதையோ தீவிரமா யோசிச்சிட்டு இருக்குற மாதிரி தெரியுதே…. அப்படி என்னை யோசிச்சிட்டு இருக்கான் …

ஹ்ம் வேற என்ன யோசிப்பான் எல்லாம் கயல் பத்தி தான் நினைச்சிட்டு இருப்பான் எப்படி அவளை கல்யாணம் பண்ணலாம்னு ஐடியா பண்ணிட்டு இருப்பான். அயோக்கிய பயலே நீ நெனைக்குறது எதுவும் நடக்க விட மாட்டேன் டா…

மித்ரன் கண்ணில் படும் தூரத்தில் நின்றுகொண்டான்.. அங்கே இருந்தே
சரவணனுக்கு கால் போட்டான். நா பேசுவது மித்திரன் காதில் விழனும் இது தான் சுரேஷ் திட்டம்.

ஹலோ சரவணன் மச்சான் சொல்லிக் கொண்டே மித்ரனை கவனித்தான் நம்மள பாக்குரானானு… அவன் நினைத்தபடி சரவணன் பேரை கேட்டதும் மித்ரன் சுரேஷ் பேசுவதை ஓரமா ஒளிந்து ஒட்டு கேட்டு கொண்டிருந்தான்..

சுரேஷ் மனதுக்குள் சிரித்து கொண்டான் நான் பேசுறதை மடையா நீ கேக்கணும் தானே இங்க நின்னு சத்தம் மா பேசுறேன் இத கூட ஒளிஞ்சி நின்னு கேக்குறான் பாரு… பக்கா கிரிமினல் டா நீ… உன்ன உன் வழியிலேயே போய் தான் மடக்கணும்… கேளு நா என்ன பேசுறேன்னு… நினைத்துகொண்டவன்..

சரவணன் மச்சான்…

சொல்லு மச்சான் சந்தியா பத்தி எதாவது தெரிஞ்சதா.

நான் சொல்ல போறத கேட்டாக்க நீ ரொம்ப சந்தோஷபடுவ மச்சான்.

நானே தங்கைய கண்டு பிடிக்க முடியலனு சோகமா இருக்கேன் நீ வேற..

சந்தியா கிடைச்சுட்டா மச்சான்…

மித்ரன் அதிர்ந்தான்…

ஓ… என்ன சொல்ற மச்சான்..சந்தியா எங்க இருந்தா.
அவளை தான் அந்த மித்ரன் கடத்தி வச்சிருக்கானே
எப்படி கண்டுபிடிச்ச. மச்சான்..
சந்தியாக்கு ஒன்னும் ஆகலையே நல்லா இருக்காளா மச்சான் என்று கேட்டு கொண்டே போனான்…

சுரேஷ் பேசியதை கேட்டுகொண்டிருந்த மித்ரன் அதிர்ச்சியில் உறைந்து போனான் . அவன் முகம் மாறுவதை கவனித்துகொண்டே பேசினான்..

எல்லாத்தையும் நேர்ல பாக்கறப்ப சொல்றேன் மச்சான் என்று சொல்லிட்டு கால் கட் செய்தான்..

உடனே மொபைல் எடுத்து தன் அடியாளுக்கு போன் போட்டான்.மித்ரன்

சுரேஷின் நண்பன் சோமுவின் அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
அவரிடம் மித்திரன் பற்றி கூறி சந்தியாவை காப்பாற்ற உதவி கேட்க,
அவர் போட்டு கொடுத்த திட்டத்தின்படி தான் செய்தான் சுரேஷ்.

திட்டமிட்டபடி போலீஸ் மித்திரன் மொபைல் நம்பரை டிரேஸ் செய்து அவன் பேசுவதை பதிவு செய்தது.

டேய் செல்வா என்னடா ஆச்சு எப்படி சந்தியாவ கோட்ட விட்ட… நீ
இப்ப எங்க இருக்க ஒரு காரியத்தை கூட ஒழுங்கா பண்ண தெரியாதா உனக்கு என கோவமாய் பொறிஞ்சு தள்ளினான்.

என்ன சொல்றீங்க பாஸ் எனக்கு ஒன்னுமே புரியல..
இங்க தான் அந்த பொண்ணு இருக்கா. ஒரு பிரச்சனையும் இல்ல பாஸ்.

அப்படியா…ஓ…? மை காட் என்ன நல்லா எமாதிட்டானே அந்த சுரேஷ். சே.‌‌..இப்படி ஏமாந்துட்டேனே மனதுள் புலம்பினான்.

பாஸ் நான் இப்ப என்ன பண்ணட்டும்.

செல்வா
நீ சந்தியாவ பத்திரமா பாத்துக்க.
நம்ம ஆளுங்க எல்லாம் உசாரா இருக்க சொல்லு புரிதா.

சரிங்க பாஸ்.

மித்திரன் குழம்பி போனான்..
சுரேஷ் ஏன் பொய் சொல்லனும் சரவணன் கிட்ட. புரியாமல் மண்டையை பிய்த்து கொண்டான்.

மித்திரன் பேசிய நம்பரை வைத்து சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடித்தது போலீஸ்.

போலீஸை பார்த்தவுடன் வீட்டின் பின் வாசல் வழியாக ஓட்டம் பிடித்தனர் செல்வாவும் கூட இருந்த அடியாட்களும்….

ஒரு அறையில் கட்டி போடப்பட்டு இருந்த சந்தியாவை மீட்டனர் போலீஸ்.

தப்பி சென்ற செல்வம் மித்திரனுக்கு போன் போட்டு நடந்தவற்றை கூற மித்திரன் கொதித்து போனான். நோ…நோ…என கோபத்தில் கத்தி கொண்டே மொபைலை தூக்கி எறிந்தான்.

சுரேஷ் நீ சந்தியாவ காபாத்தி இருக்கலாம் ஆனா உன் தங்கச்சி கயல் என்கிட்ட இருந்து உன்னால காப்பாத்தவே முடியாது டா….
கயல் எனக்கு தான் எனக்கு மட்டும் தான் வேற எவனுக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.
மித்திரனின் வெறி அவன் கண்களில் தெரிந்தது.

சுரேஷீம் சரவணனும் போலீஸ் கூடவே வந்து இருந்தனர். சரவணனை பார்த்ததும் அண்ணா என்று கட்டி பிடித்து கதறி அழுதாள் சந்தியா.
ஒன்னுமில்லடா நான் தான் வந்துட்டேன்ல அழுகாத, தேற்றினான்

தப்பி சென்ற செல்வத்தையும் போலீஸ் மடக்கி பிடித்தனர்.

இன்ஸ்பெக்டர் சார் ரொம்ப நன்றி சார் தங்கச்சிய காப்பாத்தி கொடுத்தீங்க.
நான் என்னோட கடமைய தான் செஞ்சேன் சரவணன்.
சுரேஷீம் இன்ஸ்பெக்டர்க்கு நன்றி கூறினான்.

அந்த மித்திரன் ராஸ்கல் தான்சார் சந்தியாவ கடத்தினது அவன முதல அரெஸ்ட் பண்ணுங்க.

மித்திரன் பெரிய கோடீஸ்வரன். அவன தகுந்த ஆதாரம் இல்லாம உடனே அரெஸ்ட் பண்ண முடியாது சுரேஷ்.

மித்திரன்னோட ஆள் செல்வத்தை போலீஸ் பிடிச்சுட்டாங்க.

நான் அவன் கிட்ட நடந்தது எல்லாத்தையும் வாக்குமூலம் வாங்குறேன்.
அப்புறம் மித்திரன கைது பண்ணிடலாம்.

இங்கே மித்திரன் வீட்டில் கயல்யோசித்தால் சுரேஷ் அண்ணா சொன்ன மாதிரி இவன்கிட்ட பேச்சு கொடுத்துகிட்டு இருப்போம்..
என நினைத்து கொண்டே மித்திரனன பார்க்க பால்கனிக்கு வந்தாள்.

போலீஸ் வருவதற்கு முன்னாடி தப்பித்து போக வேண்டும் என நினைத்தவன் கயல் விழி தன்னை பார்கக வருவதை பார்த்து அப்படியே நின்று விட்டான்.

கயல் விழியை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான்.உன்ன இழந்துதிடுவேனோ… ஒரு வித பயம்.. வரவும் … ச்சே தலையை குலுக்கி கொண்டான் இந்த மித்ரன் பயம் அறியாதவன்.. என்ன யாராலும் அசைக்க முடியாது..

மித்திரனிடம் அவள் பேச்சு கொடுக்க
அவள் பேசுவது எதுவும் அவன் காதில் வாங்காமல் அவளையே வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்…

வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் வந்து நிற்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சியுடன் கயல் விழி யை பார்த்தான்…

சட்டென்று கயல் விழியை தன் பக்கம் இழுத்துக் கொண்டு உள்ளே ஓடினான்.

தன் அறை டிராயரில் வைத்து இருந்த தூப்பாக்கியை எடுத்து அவள் நெற்றி பொட்டில் வைத்தான்.

………..விழியில் தெரிகிறது
வாழ்க்கை போராட்டம்!FB_IMG_1556352421421|282x500 FB_IMG_1553672080877|141x186

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here