விழி மொழியாள்….!!! பகுதி.. 8
கயல் ஏன் பேசாம இருக்க என்ன பிடிக்கலயா.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். அவளின் பார்வையில் தன் பார்வை செலுத்தி விழியோடு விழி கலந்தான்.
விழிகள் பேசின நூறு மொழிகள்.
அவனின் பார்வை வீச்சும் அருகாமையும் அவளை நிலைகொள்ள முடியாமல் திணறினாள்.
இருவர் விழிகள் பேசி கொண்டன. இருவரும் பார்வையிலும் அன்பு ஆறாக ஓடியது. நேசம் பூ பூத்தது.
அண்ணா………?
சந்தியா குரல் கேட்டு
கயல்விழியும் சரவணனும் அதிர்ச்சியில் விலகி நின்றார்கள்.
அங்கே சந்தியா அவர்களை பார்த்துக்கொண்டே உள்ளே வந்து கொண்டிருந்தாள்.
கயல் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது. எங்கே தன் தோழி தன்னை தவறாக எடுத்து கொள்ளுவாளோ என்று பயந்து போனாள்.
ஆனால் சரவணனோ இவள் தான் என் வாழ்க்கை என்று முடிவாகிவிட்டது அப்பறம் எதற்கு பயம் நிமிர்ந்து தங்கையை பார்த்தான்.
அவன் தைரியத்தை மனதிற்குள் மெச்சி கொண்டாள்.
பரவாயில்லயே நான் பார்த்துட்டேன் தெரிந்தும் அசராமல் நிமிர்ந்து நிக்குறான்.
கயல் பத்தி வீட்டில் பேசும் போதுலாம் ஏன் அங்க அண்ணா வந்து நின்றான் என்பதற்கான காரணம் இப்போது புரிந்து விட்டது.
ஒரு நாள் கிண்டலாக சொன்னாள் ஏதேது கயல்விழி பத்தி எனக்கு தெரிஞ்சதை விட உனக்கு தான் அதிகம் மா தெரிஞ்சிருக்கும் போலையே,
சந்தியா குறுகுறுனு பாத்துட்டே சொன்னாள்.
திலகம் அவனை ஒரு மாதிரி பார்க்கவும் அதெல்லாம் ஒன்னும் இல்லை மண்டு நீ அம்மாகிட்ட சொல்லும் போது காதுல விழும் அப்போ தெரிஞ்கிட்டது தான் எனக்கு எதுக்கு அவ பேச்சுனு சொல்லிவிட்டு நழுவி விடுவான்.
அப்படி சொல்லி செல்லும் அண்ணனையே சந்தேக கண்ணோடு பார்த்து கொண்டிருப்பாள். அவளுடைய பார்வை அறிந்தும் அறியாமல் கண்டும் காணாமல் சென்று விடுவான் சரவணன்.
இப்போ தான தெரிது அண்ணா ஏன் கயல் பத்தி பேசும் போதுலாம் முக்கியத்துவம் கொடுத்தானு.
சந்தியா மனதிற்குள் நினைத்து கொண்டாள்.
கயல்விழி எங்க வீட்டுக்கு வந்துட்டா என்ன விட சந்தோசம் படறவங்க யாரும் இல்ல. என் தோழியே எனக்கு அண்ணியா வரது சந்தோசம் தான்.
அதுக்கு இது சரியான நேரம் இல்லை கயல்விழி படிக்கணும் இன்னும் எவளோ இருக்கு பாக்கலாம் .
சந்தியா தொண்டையை செருமினாள். இங்க என்ன நடக்குது….
எங்கே தன் தோழி தப்பா எடுத்துக் கொண்டாளோ என்று பயந்த கயல்,
சந்தியா எனக்கு ஒன்னும் தெரியாது உங்க அண்ணா தான்னு …. இழுக்கும் போதே .. புரிந்து விட்டது சந்தியாவிற்கு. அவள் உன் அண்ணன் என்று சிவந்த முகத்தோடு பேசிய விதமே அவளை
காட்டிக் கொடுத்து விட்டது என்று அறியாமல் பேசிக் கொண்டிருந்தாள் கயல்.
.
மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் சந்தியா. பெண்ணின்
மனதை பெண்ணே அறிய முடியும்.
தன் தோழியின் மனதை நன்கு அறிந்து கொண்டாள் சந்தியா.
என் மேல கோவமா இருக்காளா சந்தியா, பேசுடி என்ன தப்பா எடுத்துக்காத டி நான் எதுவும் பண்ணல,
எல்லாம் உங்க அண்ணா தான் பேசுனாரு.. தன் மனதை வெளிபடுத்திட்டோம்.. என்பதை உணராமல் தோழியுன் முகத்தை
சங்கடமாக பார்த்து கொண்டிருந்தாள்.
ஆனால் அவளுடைய மனதை இருவரும் அறிந்து கொண்டார்கள். சந்தியாவிற்கு புரிந்ததுபோல் சரவணனும் அதை உணர்ந்து கொண்டான்.
அதை உணர்ந்தவன் முகத்தில் மந்தகாச புன்னகை மலர்ந்தது.
கயல்விழியுன் சங்கடம் புரிந்து சந்தியா நான் கடை வரை போய்ட்டு வரேன் என்று கிளம்பிய சரவணன்
போகும் போது கயல்விழியை பார்க்கும் ஆசையில் திரும்பினான்.
அவன் பார்க்கும் நேரத்தில் கயல்விழியும் அவனை விழி உயர்த்தி பார்த்தாள்.
அவள் பார்வையை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே தேங்கி நின்றான்.
சட்டென்று நாணத்தால் விழி தாழ்த்திக் கொண்டாள். கன்னங்களில் செம்மை பூசிக் கொண்டது. அதை ரசித்து பார்த்தான்.
அண்ணா கடை வரை போய்ட்டு வரேன்னு யாரோ சொன்னதா நியாபகம்….
கயல்விழிக்கு தான் ஒரு மாதிரி ஆகிவிட்டது. நெஞ்சு பட பட வென்று அடித்து கொண்டது. என்ன சத்தம் இப்படி கேக்குது நமக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கோம் என்று நினைத்தாள்.
துறு துறுன்னு பேசும் பேச்சுக்காரி கயல்விழிமௌனம்னத்தின் மறைவில் ஒளிந்துக்கொண்டாள்…
என்னமா சைட் அடிக்குறான் நம்மள. அவன் தங்கை இருக்கானு கொஞ்சமாச்சும் பயம் இருக்கா
எப்படி பார்க்கிறான். பார்… என்னமோ இவ அவன பார்க்காத மாதிரியும்… அவன்தான் இவள பாத்துட்டே இருக்குறமாதிரியே… நினைப்பு…. அவன் பார்வையில் காதல் தெரிகிறது. நீ தான் என் வாழ்க்கை என்ற அன்பை அறிய முடிகிறது.
இது வரை சரவணன் அறியபடாத பக்கங்களை அறிந்து கொள்ள ஆசை கொண்டாள்.
-மலரும்.
.