விழி மொழியாள்! பகுதி-9

0
367

விழி மொழியாள்! பகுதி-9

டேய்…. சுரேஷ் உன் அண்ணா வந்துருக்காரு டா கரஸ்பாண்டன்ட் கிட்ட பேசிட்டு இருக்காரு. அவர் வரது உனக்கு தெரியாதா..

அவன் கிட்ட அண்ணாவை விட்டு கொடுக்க இஷ்டம் இல்லை. அதனால் தெரியும் டா காலேஜ் க்கு வருவேன்னு சொன்னாரு ஆனால் என்னைக்கு வரேன்னு சொல்லல….. அதான்….

ஓஹோ… சரி டா நீ பாத்து பேசிட்டு வா நா கிளாஸ் க்கு போறேன்.
ஹ்ம் சரி டா.

சுரேஷ்கு அண்ணா வந்தது தெரியாது. என்ன விசயமா அண்ணா வந்து இருக்கும்னு யோசித்தபடி இருந்தான்.

சரி எப்படியும் போகும் போது பாத்து பேசிட்டு தான போவார் அப்ப கேட்டுகலாம் என்று காத்து கொண்டு இருந்தான்.

ஆனால் கணேஷ் அவன் வந்த வேலை முடிஞ்சதும் போன்ல பேசிட்டே கிளம்பி போய் விட்டான்.
.
சுரேஷ்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. என்கிட்ட சொல்லாம அவர் பாட்டுக்கு கரஸ்பாண்டன்ட் பாத்துட்டு போறாரு.
நா அங்க தான இருக்கேன் ஒரு வார்த்தை சொல்லிட்டு போனா என்ன நெனச்சிட்டே நின்னுட்டு இருந்தான்.

பியூன் வந்து கரன்ஸ்பாண்ட் கூப்பிடறாரு. சொல்லவும் அவன் அலுவலக அறைக்கு போனான்.

சார் உள்ள வரலாமா.
உள்ள வாங்க.
கூப்பிட்டீங்களா சார்.
ஆமா.

நீ இன்னும் ரெண்டு நாள்ல ரூம் காலி பண்ணனும். சென்னை காலேஜ் ல போய் சேர்ந்துகோ.
நா எழுதி தரேன் கொண்டு போய் கொடு ஓகே வா.

ஹ்ம் ஓகே சார்.. ஆனா எதுக்கு போகணும்னு தெரிஞ்சக்களாமா சார்.

சார் அவனை ஒரு மாதிரி பார்க்கவும், இல்லை சார் சும்மா கேட்டேன்.

எல்லாம் இந்த அண்ணாவாள வந்தது போகும் போது சொல்லிட்டு போயிருந்தா நா எதுக்கு இவர் கிட்ட கேட்டுட்டு நிக்கப் போறேன் எல்லாம் என் விதி. அவனையே நொந்து கொண்டான்.

உங்களுக்கு மித்திரன் சார் எப்படி தெரியும்?

ஹுக்கும் …. எனக்கே இவர் சொல்லி தான் தெரியும் இதுல என்கிட்டயே கேக்குறாரு சரியான மாங்கா மடையான இருப்பான் போல மனசுக்குள்ள சொல்லி கொண்டே,

தெரியாது சார்.

ஒ ஐ சி?

அவர் சென்னைல மிகப் பெரிய மனிதர். கோடிஸ்வரர்.

ஓ…?

உங்களுக்கு எப்படி தெரியும்னு தான் புரில அவர் சொன்னதுனால தான் உனக்கு சென்னைல பெரிய காலேஜ்ல சீட் கிடைச்சிருக்கு.

அப்படியா சார். அவர பத்தி எனக்கு தெரியாது அண்ணாவுக்கு தான் தெரியும் என்று கூறினான் சுரேஷ்.

ஓகே நா எழுதி தரேன். நீ உடனே கிளம்பலாம் என்றார். சரிங்க சார்.

சுரேஷ் …..

சொல்லுங்க சார்.

நா சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காத,

இல்ல சார் சொல்லுங்க..

மித்திரன் பத்தி உனக்கு எதுவும் தெரியலனாலும் உன் அண்ணாவுக்கு நல்லா தெரிஞ்சி இருக்கு,

அவர் பெரிய மனுஷன் தான் இல்லனு சொல்லல பட் எனக்கு தெரிஞ்சு அவரை பத்தி கேள்வி பட்டது எல்லாம் சரியா இல்லை . எதுக்கும் கவனமா இருங்க.

உன் அம்மாகிட்ட கலந்து பேசி முடிவு எடுங்க. இனி பேசியும் பிரயோஜனம் இல்லை.

இனிமே எல்லாம் மித்திரன் முடிவு தான். அவர் என்ன சொல்றாரோ அத தான் நீங்கல்லாம் செய்யணும்.

உங்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன். நீ நம்ம காலேஜ் டாப்பர்.
நல்ல பையன். பாத்து நடந்துக்கோ.

ஓகே நீ போகலாம் சுரேஷ். ஆல் தி பெஸ்ட். நீ எப்ப வேணா என் உதவி தேவைப்பட்டா கால் பண்ணு.

சுரேஷ்க்கு மனதில் கிலி வந்துவிட்டது. எதனால் இப்படி சொன்னாரு யோசனையாக வெளியே வந்தான்.

அங்க அவன் பிரண்ட் சோமு என்னடா அதுக்குள்ள பேசிட்டியானு கேட்டான்.

பேசிட்டேன் டா.

ஏன்டா முகம் ஒருமாதிரி யா இருக்கு என்ன விசியம் சொல்லு சோமு துருவி கேட்கவும் சார் சொன்னதை கூறினான்.

ஓஹோ அப்படியா டா….

எனக்கு என்னமோ சார் சொல்லுறது சரினு தான் படுது. எதுக்கும் விசாரிக்கலாம் சரியா …..
விசாரிச்சிட்டு அம்மா கிட்ட இத பத்தி பேசு என்ன நா சொல்லுறது….

சரி டா நாளைக்கு இதுதான் முதல் வேலை அப்பறம் தான் எல்லாம்.

சரி டா நானும் வரேன்.

சரி டா.

மறுநாள் சொன்ன மாதிரி மித்திரன் பற்றி விசாரிக்க கிளம்பி விட்டார்கள்.

அவர்கள் திரும்பி வரும் போது அவர்கள் முகம் பேய் அறைந்தது போல் இருண்டு போயிருந்தது…..மலரும் FB_IMG_1550589488395|690x297

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here