விழி மொழி காவியமே

0
86

இதழியல் படித்திடவில்லையடி பெண்ணே, உன் விழியியல் படித்திட தவம் கிடக்கிறேன். கண்ணக்குழி ஆழம் தனிலே தன்னிலை மறந்திட்டு தவித்து போகிறேன். கேசம் அதன் வாசம் சுவாசம் தனை சூடேற்றி கரைத்திட்ட மாயம் அதிலே என்னை மறந்திட்டேன். பாவை உந்தன் பெயரில் ஓர் உயில் உண்டு, அதில் என் உயிர் என்ற பெயர் உண்டு. பாவம் என்று ஒரு பார்வை பாரடி, பாவை நீ நின்ற நிழலில் என் உயிர் புதைக்கவா.

தேவை நீ என்று கூறவில்லை, தேர்வு ஒன்று வைத்தாலும் தேறி விடுவேன் தேவதையே. தேன் மொழி பேசாவிட்டாலும் சுடு சொல் ஒன்றானாலும் கேட்டு மோட்சம் பெற செவி காத்து கிடக்குதடி. பறவையொன்று இங்கொன்றும் அங்கொன்றுமாய் தூவி சென்ற விதை போல நீ இருக்கும் திசைகளில் என் உயிரும் ஆனதே.

விழி சாரல் கொஞ்சம் போதும், மழை கூட வேண்டாம் நான் என்ற நான் நீ என்று மாறிட. துடிக்க கற்று கொண்ட இதயத்தை இடை மறித்து உன்னை படிக்க கற்று கொடுக்கவா? இதென்ன கேள்வி என்று இதயம் ஐயம் கொள்வது உனக்கு புரிகிறதா? உன்னை பார்த்த பரிதவிப்பால் பல ஆயிரம் கனாக்கள் கரைபுரண்டதேனோ. நின்ற நிலையில் நித்திரை கொண்ட சிலையும் உனக்கு நிகர் ஊமை போன்று காட்சி கண்டேன். கைவிரல் அதிலே நான் வசிக்கவா… கால் கொழுசு அதிலே காவல் காக்கவா உன்னை.

பாதம் தீண்டிட தரை ஆகுவேன், இடையில் உன் பாத மெத்தை அதிலே குடியேருவேன். நகம் என்ற கூர்வால் வண்ணம் பூசி வைத்தாயே, ஒரு முறை என் உதரத்தின் சுவை அது கண்ணடுவிட்டதில் பதறி போனாயே. விழிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தாயே, என்னை தின்றிடவா? அனுமதி இன்றி அரைத்து சென்றதே உன் பற்பகளின் பளீர் பார்வை.

வண்ண பூ சூடினால் வெள்ளை வண்ண பூக்கள் கோவிக்குமா? கலந்துகட்டிய பூச்சரம் கேசம் தனில் ஊஞ்சல் ஆட… என் உயிரும் சேர்ந்ததே அதோடு. சிரித்து பேசியதில் சிந்தும் முத்துக்கள் ஒவ்வென்றும் சேகரித்து வருகிறேன். இன்றேன் ஒரு முறைக்கூட சிரிக்கவில்லை நீ?

கோபம் கொள்ளும் வேலையிலும் கொள்ளை கொள்ளும் உன் சிவப்பு கண்ணம். கண்ணீர் சிந்த நேர்ந்தாலும் கண்ணம் அடைவதற்க்குள் கைளில் தாங்கிடுவேனடி. என்னை புரிகிறதா? ஓடும் ஓடை அதிலே உயிர் கரைத்தால் நீராகவாது உன்னை அடைந்திட வாய்ப்பு உண்டா? எதிர் நின்று பேசினாலும் முகம் காட்டமாட்டாயா… பாராமல் சென்றால் என் பிரவி பலன் தீராதே.

நாட்களின் எண்ணிக்கை ஆழமானது உன்னை தொடர தொடர்ந்து. ஆயினும், ஆழம் செல்ல ஆவல் உண்டு, உன்மனதின் மையம் காண. நிமிர்ந்து பேச நேரம் இல்லையா, கடந்து செல்லும் ஒரு நொடி எனக்காக ஒதுக்கடி போதும். ஏனோ தெரியவில்லை உன் மௌனம் மட்டும் என்னை கொல்லாமல் கொல்லும் மாயம் என்னவோ. இறந்தும் இறவாமல் நான் வாழ வழி செய்ததேனோ அழகே.

ஆறென்று ஓடியவனை கட்டிப்போட்டு காத்து கிடக்க செய்தவளே, காத்திருப்பின் சுகத்தில் ஆழ்ந்து விட்டேன். இன்னும் எத்தனை ஜென்மம் காத்திருக்க வேண்டும் … காத்திருக்க காத்துக்கிடக்கிறேன். உன்னை சுற்றி வந்து மோட்சம் பெறவா?… என்னை அன்றி உன்னை யாரும் நிழல் தீண்ட விடுவேனா? காற்றில் கலந்த உன் சுவாசம் ஆதலால் என் சுவாசம் இன்னும் நீளுமடி. கட்டி அனைக்க ஏங்கவில்லை என் காலம் வரை உன் கடைக்கண் பார்வையில் வாழ்ந்து விடவே… கேட்கிறேன்… என்னை பிடித்திருக்கிறதா?

வலிகளில் உன் விழியாக இருப்பேன்…
உறவாக வாழ உதிரமாக இருப்பேன்…
சாய்ந்து அழ தோல்கள் கொடுப்பேன்…
என்னால் அழ நேர்ந்தால்? இல்லை…அப்படி ஒரு நிலை உனக்கு நேர நான் வாழ நேருமோ?
தந்தை கை பிடித்து நடந்திருப்பாய்..
இனி நீ சாய்ந்து நடக்க தோல் தருவேன்…
உடல் வலிக்க நேர்ந்தால் தாயை தேடுவாய், என் தாய் உனக்கு கால் பிடிக்க பணிவிடை செய்தல் என் கடமை தானே…
ஆசையாய் உடன் பிறப்புகளோடு விளையாடி கலித்திருந்திருப்பாய்…
உன்னோடு நான் விளையாட… இது நான் செய்த தவம் அல்லவா…
ஈன்றெடுத்த தாய் தந்தை பார்க்க என்னிடம் அனுமதி கோருவாய்… நான் யார் உன்னை தடுக்க… மஞ்சல் கயிற்றின் எல்லை நான் அறிவேன்… தொப்புல் கொடி சொந்தம்… அதன் ஆழம் அறிவேன். அனுமதி தர நான் யார்?

கோபம் கொள்ளும் வேலையில்… சற்று ஒதுங்கி நிற்பேன்… கோப வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லையே. என் மேல் கோபம் கொள்ள உனக்கு உரிமை இல்லையா? ஏற்று கொள்கிறேன்.
என் கோபம் உன்னை காயப்படுத்த நேர்ந்தாள்… கொஞ்சம் எடுத்து கூறடி… புறிந்து கொள்கிறேன். சுக துக்கங்களில் துணையாவேன், துணைவி உன்னை தனித்திருக்க விடமாட்டேன். கால மாற்றம் ஆயிரம் வலிகள் தரும்… அனுபவம் ஏராளம் தரும்… பகிர்ந்து கொள்ள நான் உண்டு உன்னோடு.

ஒரு நாளும் கைபிசைந்து தயங்கி நிற்க்காதே என்னிடம், அது எனக்கு அவமானம்… உன்னை நான் கைதியாக நடத்தியிருந்தாள். நீ என்னில் சரி பாதி தானே… அதிகாரம் கையில் கொண்டாலும் உன் அன்பினுள் நான் என்றும் அடக்கம் தானே. பெண் என்ற துணிச்சல் உன்னிடம் நான் மதிக்கிறேன்… சீறினாலும் சினம் கொண்டாலும் நான் உன்னில் சரிபாதி தானே. சேய் சுமந்திருந்தாலும் என்னையும் சேர்த்து நீ தானே சுமக்கிறாய். அமிழ்த முத்தம் கேட்கவில்லை தருவாய் என்று ஏங்கவில்லை, உயிரின் ஆழம் கரையும் வரை உன்னை தொடரவே கேட்கிறேன்… என்னை பிடித்திருக்கிறதா?

ஆருயிரே… ஆருயிரே… எனக்கு நீ, முகம் பார்த்து பேச வாய்ப்பு தரவில்லை. இந்த நாட்கறிப்பு என்னை விட அதிஷ்டம் செய்திருக்கிறது. உன்னை பார்க்க போகிறதே… உன் பார்வை அதன் மேல் விழ போகிறதே. கொஞ்சம் பொறாமையும் அதன் மேல் எனக்கு.. நாட்குறிப்பில் எனக்கு தெரிந்தவரை… உன்னை தூரத்தில் இருந்து ரசித்தவரை ஏதோ கிருக்கல்கள் நிறைத்திருக்கிறேன். புரிந்திருந்தால்…. என்னை பிடித்திருக்கிறதா சொல்? முதலிரவின் பரிசாக இதை பெற்றுக்கொள் கயல்விழி பார்வையில் விழி மொழி பேசும் காவியமே.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here