இது என் அம்மா அடிக்கடி செய்யும் ஆர்காடு ரெசிப்பி.
பிஞ்சு வெண்டைக்காய் -100கி
புளி – கொட்டைபாக்கு ஸைஸ்
எண்ணெய் – 2 குழிகரண்டி
கடுகு – கால் ஸ்பூன்
காய்ந்த குண்டு மிளகாய் -2
வெந்தயம் -கால் ஸ்பூன்
இஞ்சி 1துண்டு
ப. மிளகாய் – 3
தக்காளி – 2 (optional)
கருவேப்பிலை-ஒரு கொத்து
மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்
பெருங்காயம் – கால் ஸ்பூன்
வெண்டைக்காயை 2mm அகலத்திற்கு வெட்டி கொள்ளவும். புளியை 2 டம்ளர் தண்ணிர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.
எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, ப.மிளகாய், இஞ்சி, தக்காளி (தக்காளி option தான். சேர்த்தால் கூடுதல் சுவை) சேர்த்து வதக்கி பின் வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும். காய் 2நிமிடம் வதங்கியதும் மஞ்சள் பொடி சேர்த்து புளி கரைசலை விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். காய் வெந்து புளியின் பச்சை வாடை போனதும் 1ஸ்பூன் அரிசி மாவை கரைத்து விட்டு 2 கொதி வந்ததும் இறக்கவும்.
இது சாதத்திற்கு கலந்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள ரைத்தா நன்கு சேரும்.
மற்றபடி இட்லி தோசைக்கும் உகந்தது.