குறள்:
அன்புடைமை:
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
பொருள் :
அன்பு அறத்திற்கு மட்டுமே துணை என்பர் அறியாதவர். ஆராய்ந்து பார்த்தால் அது வீரத்துக்கும் துணையாக இருக்கிறது.
ஶ்ரீ – 2
சென்னை புலனாய்வு பிரிவு பரபரப்பான காலை வேளை ASP ஸ்ரீராம், ASP அஜய் சில முடிக்கப்பட வேண்டிய வழக்குகளை பற்றியும் மற்ற விவரங்களையும் ஆலோசித்து கொண்டிருக்க ரோஸ்லின் (Jr.SI) அவர்களின் குறிப்புகளை கணினியில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தாள்.
வழக்கமாக தாமதமாகவே அலுவலகம் வரும் பிரேம் (Sr.Ins) அவசர அவசரமாக வருவதை கண்டு ஆச்சரியப்பட்டுப் போன ஸ்ரீராம் என்ன பிரேம் இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட இன்னும் SP Sir கூட வரலையே என சிரிக்க
உங்களுக்கு என்ன சார் புதுசா ACP மேடம் வரப்போறதா SP sir நேத்து inform பண்ணாங்களே என்ன இருந்தாலும் எனக்கு சீனியர் ஆபீசர் ஆச்சே அதான் சீக்கிரமா வந்துட்டேன் என கூறியபடியே பிரேம் போனேன்
அப்போது SP வரதராஜன் வந்து கொண்டிருந்தார் அனைவரின் மரியாதையும் தலையசைவில் ஏற்றபடியே இன்னும் நான்கு வருடங்களில் ஓய்வு பெறப் போகும் கண்ணியமான காவல்துறை அதிகாரி வரதராஜன் தன் அறைக்குச் சென்ற பின் மற்றவர்கள் தங்கள் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தனர்
அப்போது ஸ்ரீபிரியா உள்ளே வருகிறாள் அவளைக் கண்ட முதல் பார்வையிலேயே ஸ்ரீராம் ஒரு முன் அறிமுகத்துடன் எதிர் கொண்டு சென்றான் அவனை சற்றும் கவனிக்காமல் சென்றவள் SPயிடம் joining onderஐ தந்து தன் பணியில் சேர்ந்தாள்
இனி இவள் வாழ்வு இங்கு தென்றலும் புயலும் வீசும் பகுதியாகும் ஆனால் வாழ்வின் ஆதாரம் அவள் அருகிலேயே இருக்கிறது அதை அவள்அறிவாளா?
அஜய் நண்பண் தோளை பற்றி என்னப்பா தெரிஞ்ச அள் போல அந்த லேடி ஆபிசரை பார்த்து சிரிச்சுகிட்டே போன அவங்க கண்டுக்காம போயிட்டாங்க உண்மையை சொல்லு இந்த மாதிரி ஒரு பொண்ண பாத்து சிரிச்சுகிட்டு போறவன் நீ இல்லையே என்ன விஷயம் என்றான்
ஆமா அஜய் அந்த பொண்ண எனக்கு நல்லா தெரியும் தஞ்சாவூர் பொண்ணு நேர்மையான தைரியமான போலீஸ் ஆஃபீசர் போன வருஷ கடைசியில் நமக்கு ஒரு தொழிலதிபர் பத்து வயது மகன் கடத்தல் கேஸ் வந்துல அதுல கூட அவங்க வீட்டுக்கு கார் டிரைவரை கைது செய்தனே நினைவிருக்கா? என்றான்
ராம் ஆமாம் நீ கூட அந்த டிரைவரோட சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிராமம்னு 2 நாள் அங்கேயே தங்கியிருந்து அரெஸ்ட் பண்ணி அந்த பையனை மீட்டுக்கொண்டு வந்தியே அப்போ மீட் பண்ணியா?
மறந்துட்டாங்க போல விடு ராம் law & order ஏகப்பட்ட டென்ஷன்ல இருந்துருப்பா அதுல உன்னை மறந்து இருப்பா என்ற அஜய் ஆனா SP Sir சொன்னாங்க விருப்ப மாற்றத்தில் வந்ததா என்றான் சற்று அதிர்ந்த ராம் நிஜமாவா ? என்றான் யோசனையோடு.
அப்போது வரதராஜனுடன் வந்த ஸ்ரீபிரியாவை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் அதன் பின் ஒவ்வொருவராய் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர் ஸ்ரீராம் பிரியா புறமாக திரும்பி நின்று நான் ஸ்ரீராம் என்னை ஞாபகம் இருக்கா? விழுப்புரத்தில் நாம சேர்ந்து ஒரு கேஸ் solve செஞ்சுருக்கோம் என்றான் புன்னகையோடு
ஸ்ரீபிரியா எவ்வித உணர்ச்சியும் இல்லாத ஒரு பார்வையால் ராமை பார்த்து அப்படியா? என ஒற்றைச் சொல்லாய் கேட்டு சென்றாள் ராம் பெரிதும் குழம்பிப்போனான்.
இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஶ்ரீராம். ?