குறள்
செங்கோன்மை ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வாஃதே முறை.
பொருள்:
எவரிடத்தும் குற்றம் இன்னதென்று ஆராய்ந்து இவர் தனக்கு வேண்டியவர் என்ற கண்ணோட்டமின்றி நடுநிலை மாறாமல் ஆராய்ந்து செல்வதே நீதிமுறை.
ஶ்ரீ – 3
Inspector ஆதிரா பழைய சில முடிவு பெறும் வழக்குகளின் தகவல்களை கணினியில் ஏற்ற விசாரணை அதிகாரி அஜய்யை அழைத்துச் சென்றாள் ஸ்ரீராம் தான் ஸ்ரீபிரியாவின் மேலதிகாரி இந்த அலுவலக நடைமுறைகளை ஸ்ரீ ராம் பிரியாவிற்கு விளக்கமாக சொல்லிக் கொண்டே போக முகத்தில் எவ்வித உணர்வும் இல்லாமல் ஏதோ இயந்திரம் போல கேட்டு கொண்டாள் .
மதிய உணவுக்கு செல்லும்போது அஜய் ஸ்ரீராம் சஞ்சீவ் ஆதிரா புறப்பட்டனர் அப்போது ஸ்ரீராம் பிரியா நீயும் எங்க கூட சாப்பிடலாம் வா என அழைத்தான் அனைவரும் கலகலப்பாக பேசியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
பிரியா மட்டும் எதுவுமே பேசாமல் உண்டு கொண்டிருந்ததைக் கவனித்த ஆதிரா ஏன் மேடம் ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க உடம்பு சரியில்லையா? என்றாள் இல்லை ஆதிரா டிராவல் tiredness தான் சரியாயிடும் என்றாள் பிரியா அது பொய்யெனத் தெரிந்தும் அதை மேற்கொண்டு தொடராமல் பேச்சை மாற்றினார் .
சஞ்சீவ் மேடம் இப்போ நீங்க எங்க தங்கி இருக்கீங்க என்றான் பிரியா இங்க பக்கத்துல ஒரு ஹோட்டலை ஸ்டே பண்ணிருக்கேன் குவாட்ரஸ்க்கு apply பண்ணிருக்கேன் சீக்கிரம் கிடைக்கும்னு நினைக்கிறேன் என்றபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
மேடம் குவாட்டர்ஸ் கிடைக்கவே லேட் ஆகும் அப்படியே கிடைத்தாலும் அது ரொம்ப distantce அது சரிப்பட்டு வராது நீங்க பேசாம அப்பார்ட்மெண்ட் try பன்னுங்க நாங்கள் அப்படித்தான் தங்கியிருக்கோம் நம்ம வேலைக்கு லேடீஸ் ஹாஸ்டல்லாம் செட்டாகாது என்றாள் ஆதிரா .
சஞ்சீவ் நாங்க எங்க அபார்ட்மெண்டில் எதாவது flat காலியா இருக்கா என பார்த்து சொல்றோம் மேடம் என்றான்.
ஸ்ரீராம் என் அபார்ட்மெண்ட்ல மேல் தளத்தில் ஒரு டபுள் பெட் ரூம் flat காலியா இருக்கு நான் ஓனர்கிட்ட பேசி பாக்கவா? என்றான்
பிரியா உங்களுக்கு ஏன் சார் வீண் சிரமம் கான்டக்ட் நம்பர் மட்டும் குடுங்க நானே பேசிக்குறேன் என்றபடியே கை கழுவ சென்றாள் அஜய் நண்பனை சற்று வித்தியாசமாக பார்த்தான்.
மாலை அஜய் ஸ்ரீ ராம் கமிஷனரை பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தனர் அப்போது ஸ்ரீராம் அஜய்யிடம் ஸ்ரீபிரியா சரியான மனநிலையில் இல்லடா அவளுக்கு எதோ பிரச்சனை
இருக்கு என நினைக்கிறேன் என்றான் .
அஜய் சிரித்தபடியே உன்கூட அவ சகஜமா பேசலை அதனால இப்படி எல்லாம் கதை விடுறியா? என்றான் விளையாடாத அஜய் முழுசா 2 நாள் அவகூட சேர்ந்து வேலை பார்த்து இருக்கேன்டா அவகிட்ட எப்பவுமே உள்ள ஒரு வேகம் கண்ணில் ஒரு துடிப்பு
நான் நேர்மையானவள்குற ஒரு நல்ல கர்வம் முகத்தில் எப்பவும் ஒரு மலர்ச்சி சிரிப்பு எதுவுமே இப்போ இல்லை எதையோ பறிகொடுத்த மாதிரி அந்த ஜட பார்வை இருக்கே அது என்னனு புரியலையே என்னமோ இருக்கு என்றான் ஸ்ரீராம் யோசனையாக.
அஜய் ஆபீஸ் வந்துட்டு வரீயா இல்லை கார்லயே உட்கார்ந்து பிரியா பத்தி யோசிக்க போறீயா? என சிடுசிடுத்தபடியே இறங்கினான்.
ராம் நண்பனை முறைத்தவன் ஒன்றும் பேசாமல் நண்பனோடு புறப்பட்டான்.
இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஶ்ரீராம்.?