குறள்
அருளுடைமை
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து.
பொருள்
தன்னை விட எளியவரைத் தான் துன்புறுத்த முற்படும் போது தன்னை விட
வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ண வேண்டும்.
ஸ்ரீ – 4
ஸ்ரீபிரியா புலனாய்வு பிரிவில் இனைந்து ஒரு வாரம் கடந்தது ஸ்ரீராம் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ரீபிரியாவும் மேல்தளதில் குடியேறினாள்.
பிரியாவின் வெறுமை முகம் இயந்திரதனமான செயல்கள் ஸ்ரீராமை
பெரிதும் குழப்பின.
அன்று சனிக்கிழமை மாலை பிரியா ஹனுமன் கோவிலில் ஸ்வாமி தரிசனம் முடித்து மண்டபத்தில் எங்கோ வெறித்தபடி அமர்ந்து இருந்தாள் அவளை பார்த்தாள் ஒரு காவல் துறை அதிகாரிகான துடிப்பு மிடுக்கு ஏதும் இல்லாமல் இருந்தவளை அங்கு ஸ்வாமி தரிசனம் முடித்து வந்த ஸ்ரீராம் கவனித்தவன் இன்று இவளிடம் பேசி இவள் கஷ்டங்களை தீர்க்கவேண்டும் என முடிவு செய்து அவளை நெருங்கி பிரியா என அழைக்க
ராமை கண்டு எழுந்தவளை அமர சொல்லி தானும் அமர்ந்தான் பிரியா சற்று
இடைவெளி விட்டு அமர்ந்தவள் எதுவும் பேசமல் இருக்க
ராம் உனக்கு என்னை நினைவு இருக்கா? பிரியா போன வருடம் நாம ரெண்டு பேரும் ஒரு கடத்தல் கேஸ் சேர்ந்து சால்வ் பண்ணினதை மறந்துடியா? நீ தானே குற்றவாளியை பிடிக்க உதவி
பண்ணின என்றான்.
பிரியா ஆமாம் சார் நான் மறக்கல அந்த கேஸ் நான் விழுப்புரத்தில் ACPயா Joint செய்த நேரம் வந்தது என்றாள். ராம் பிறகு ஏன் என்னை தெரியாதது போலவும் எதையோ பறிகொடுதவ மாதிரியும் இருக்க? சொல்லும்மா உனக்கு என்ன பிரச்சனை? ஒரு நண்பனாய் நினைத்து சொல் உனக்கு உதவி செய்யதான்
கேட்குறேன் என்றான்.
பிரியா ஒன்னும் இல்லை சார் நான் நல்லா தான் இருக்கேன் என எழுந்தாள் அப்போது ஒரு முரடன் பிரியா அருகில் வந்தவன் என்ன மேடம் ஊரை விட்டு சொல்லாம மாற்றல் வாங்கிட்டு வந்துடா என்னால கண்டுபிடிக்க முடியாதா? நீ என்கிட்ட
இருந்து தப்பிக்கவே முடியாது என சிரித்தான்.
ராம் வந்தவனை கவனிதான்
பார்வைக்கு பணக்காரன் என்று தெரிந்தது கழுத்தில் தங்க சிலுவை இருந்தது ராம் வந்தவனிடம் கோபமாக யார்டா நீ? அவங்க யாருன்னு தெரியுமா? என கேட்க்கும் போதே
அவன் பிரியா புறமாக திரும்பி யார் இவன் உனக்கு ஆதரவாக பேசி அடிபட போறான் சொல்லிவை என்றவன் தொடர்ந்து உன்னை நான் தப்பிக்க விடமாட்டேன் என கூறி அங்கிருந்து சென்றான் பிரியா அழாத குறையாக இருந்தது ராம்க்கு ஆச்சரியமும் ஆத்திரமுமாக இருந்தது
கல்லாய் சமைந்து போவது என்ற வாக்கியத்திற்கு பொருத்தமாக பிரியா அப்படியே நின்றிருந்தாள் ராம் அவளை இருமுறைக்கு மேல் கூப்பிட்டும் பயனற்ற பலமாக உலுக்கி சுய உணர்வுக்கு வர வழைத்தான் என்ன பிரியா யார் அவன் என்ன பிரச்சனை என்னிடம் சொல் என்றவன்
சரி வா எல்லாரும் பாக்குறாங்க வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா என்றான் பிரியா தன்னை திடப்படுத்திக்கொண்டு இது என் சொந்த பிரச்சனை நானே பாத்துக்கிறேன் கேட்டதுக்கு ரொம்ப நன்றி சார் நான் கிளம்பறேன் என்று நகர்ந்தவளை வழிமறித்த ராம்
வீட்டுக்கு தானே நானும் நம்ம அப்பார்ட்மென்ட்டுக்கு தான் போறேன் சேர்ந்தே போகலாம் என முன்னே நடந்தான் பிரியா ராமை பார்த்தபடியே நான் ஆட்டோவில் வீட்டுக்கு போயிடுறேன் உங்களுக்கு சிரமம் வேண்டாம் சார் தேங்க்யூ என்றபடி நகர்ந்தாள்
அவள் கூடவே நடந்த ராம் பைக்கில் வரல கார்ல தான் வந்தேன் என்னால உனக்கு ஒரு பிரச்சனையும் வராது நம்பி எங்கூட வா என சிரித்தபடியே சென்றான் காரில் போகும்போது இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை
பிரியா தன் கை விரல்களை பார்த்துக் கொண்டிருக்க ராம் ஒரு கண்ணை ரோட்டிலும் மறுகண்னால் பிரியாவையும் கவனித்திருந்தான் ஏதோ பெரிய விஷயம் இருக்கு கண்டு பிடிக்க வேண்டும் என்று தன் மனதிற்குள் நினைத்து கொண்டன்.
அலுவலகத்தில் ராம்,அஜய் தங்கள் அறையில் ஒரு கொலை வழக்கு file ஐ ஆராய்ந்து கொண்டிருந்தனர் அப்போது ராமின் கவனம் சிதறுவதை கண்ட அஜய் என்ன ராம் duty விட வேற என்ன பலமான யோசனை என்று கேட்டபடியே fileஐ மூடி வைத்தான்.
ராம் நேற்று கோவிலில் நடந்ததை விளக்கமாக அஜய்க்கு கூறியவன் அது என்னனு கேட்டதுக்கு அது என் personalனு முகத்திலடிச்ச மாதிரி சொல்லிட்டு போறா என்ன பிரச்சனையா இருக்கும்னு யோசிச்சே எனக்கு நைட் தூக்கம் போயிடுச்சுடா என்றான் குழப்பமாக.
அஜய் சற்று யோசித்துவிட்டு ஒருவேளை ஏதாவது லவ்வா இருக்கும் எனக் கூற அதிர்ந்து போன ராம் இல்லவே இல்லை அவனை அவள் பார்த்த பார்வையில் இருந்தது காதல் இல்லடா கலவரம் பாம்பை பார்த்த பயம் ஏதோ பெரிய விஷயமா இருக்கும் போல என்றான் யோசனையாகவே.
கடுப்பான அஜய் என்ன இந்த டான்சர் மர்டர் கேஸ் விட்டு பிரியா secreat ஐ investigate செய்யலாமா? என்றபோது ராம் இல்ல இல்ல இனிமேல் பிரியா பற்றி எதுவும் பேசலை கேஸ் பார்க்கலாம் என தனிந்து போனான் ஆனால் மனதினுள் பிரியா உன்னை காப்பாற்றியே தீருவேன் என்று தீர்மானித்துக் கொண்டான் ஆனால் அது ஏன் என அவனே திகைத்தும் போனான்.
இப்படிக்கு உங்கள் தோழி, பிரியங்காஸ்ரீராம். ?