ஸ்ரீ – 05

0
162

குறள்
தவம்

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

பொருள்

தீங்கு செய்யும் பகைவரை அடக்குவதும், நன்மை செய்யும் நல்லவரை உயர்த்துவதும் தவ வலிமை உடையவருக்கு நினைத்தவுடன் முடியும்.

ஸ்ரீ – 5

நாட்கள் வேகமாக கடந்தது பிரியாவின் மனநிலையில் மாற்றம் ஏதும் இல்லை ராம்
உள்ளுர தவித்தான் அஜய்யிடம் எதுவும் சொல்லாமல் பிரியாவை கண்காணித்தான்
எதுவும் கண்டறிய முடியவில்லை தன் மனம் ஏன் இவளுக்காக இவ்வளவு தவிகின்றது

அவள் துன்பம் போக்கவும் அவள் முகத்தில் சிரிப்பை கானவும் ஏன் நான் தவிக்கிறேன் என புரியாமல் குழம்பி போனான் இத்தனை ஆண்டு நட்பில் அஜய்யிடம்
எதையும் மறைத்து பழக்கம் இல்லை

அதுவும் ஏனோ மனதை உறுத்தியது இது ஒரு புது வித அவஸ்தையை தந்தது ஆனாலும் சுகமாகவே உணந்தான் .

அப்படியே சென்ற வாழ்வில்
திரும்பவும் அந்த முரடன் பிரியாவை மிரட்டுவதை ஒரு ஷாப்பிங்க் காம்ப்ளக்ஸ்
வாசலில் கண்ட ஸ்ரீராம் விரைந்தான்.

பிரியா எதுவும் பேசாமல் மிரண்டு நிற்க
அந்த முரடன் பெயர் பீட்டர் அல்போன்ஸ் என்ன மேடம் பழசை மறந்துடிங்களா?
என்னால உங்களுக்கு மட்டும் இல்லாம இந்த உலகத்துக்கே நினைவு படுத்த
முடியும் செய்யவா? என்றான் திமிராக

அப்போது அவர்களை நெருங்கிய ராம்
பீட்டரின் சட்டையை பிடித்து அடிக்க போக பீட்டரின் அடி ஆட்கள் துள்ளி வர
பீட்டர் அவர்களை அடக்கியவன் என்ன மேடம் இங்க தொட்டா அங்கே வலிக்குது என்ன சார் உங்க Setup? என ராமை முறைக்க.

பிரியா கண்ணிகளில் வலியோடு ராமை பார்த்தவள் ராம் சார் பிளீஸ் நீங்க போங்க என கெஞ்சும் குரலில் சொல்ல

ராம் அசையாமல் யார்டா நீ சும்மா சும்மா இவங்களை ஏன் தொல்லை செய்ற? என மறுபடியும் பீட்டரை அடிக்க கை ஓங்க

பீட்டர் பிரியாவிடம் ரொம்ப
தப்பு மேடம் உங்க ஆள்கிட்ட சொல்லி வைங்க நான் எவ்வளவு கெட்டவன்னு என கூறி ராமை முறைத்தபடி கிளம்பினான்.

பிரியா அப்படியே உறைந்து நிற்க ராம்
பிரியாவை கைபிடியாய் காரில் அமர வைத்தவன் போய் இரு காபி வாங்கி வந்தான்.

பிரியா மறுக்க அதட்டி பருக வைத்தான் பின் மௌனமாக வந்தவளை எதுவும் கேட்காத ராம் பிரியாவின் பைகளை தூக்கியவாறே அவள் வீட்டு வாசல் வரை வரவும் சுயஉணர்வு பெற்ற பிரியா ரொம்ப நன்றி சார் நான் பார்த்துகறேன்

என்றவளை முறைத்த ராம் பேசாம கதவை திற பிரியா உன்கிட்ட கொஞ்சம் பேசனும் வீனா இங்க நின்னு மத்தவங்க கவனத்தை நம்ம பக்கம் திருப்ப வேண்டாம் என்றான் சற்று கடுமையாக பிரியா கதவை திறக்க

உள்ளே வந்த ராம் சோபாவில் அமர்ந்தவன் நீயும் உட்கார் உன் வீடு தானே என்றான் ஏளனமாக பிரியா அமர்ந்த பின் ராம் நான்
என்ன கேட்க போறேன்னு உனக்கே தெரியும் என கூறி சற்று அமைதியாக இருக்க

பிரியாவும் மௌனதையே பதிலாக தர கோபமான ராம் உனக்கு என்ன தான் ஆச்சும்மா அந்த போல்டான ஸ்ரீபிரியா எங்கே? ஒரு ரௌடி உன்னை பொது இடத்துல வச்சு அவமானபடுத்துறான் அதை நான் தட்டி கேட்டா நீ என்னை அடக்குற என்னனு சொல்லு
விஷயம் வெளிய தெரியாம நான் சரி செய்றேன் ஒரு நண்பனா தான் கேட்குறேன்
என்றான் கோபம் மறைத்து தணிவாகவே.

ஸ்ரீபிரியா நீங்க கேட்டதுக்கு, உங்க காபிக்கு,
வீட்டில் டிராப் செய்ததுக்கெல்லாம் ரொம்ப நன்றி என் விஷயத்தில் நீங்க
தலையிடுவதில் எனக்கு பிரியமில்லை நீங்க புறப்படுங்க சார் என சொல்லி முகம்
திருப்பி கொள்ள

ஆத்திரமான ஸ்ரீராம் நீ விரும்பலையா? இல்லை அந்த ரௌடி விரும்பலையா? என
ஆத்திரமாக கேட்க

பிரியா கண்களில் பளபளத்த கண்ணீரை மறைக்க திரும்பி நின்றவள் சார் பிளீஸ் நீங்க என் மேலதிகாரியா இருக்கலாம் அதுக்காக என் பர்சனலில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை நாம இனிமே ஆபீஸ் விஷயம் பத்தி மட்டும் பேசிக்கலாம் என் சொந்த விஷயத்தை நான் யார்கிட்டயும் பகிர்ந்துக்க தயாராயில்லை என்றாள் உறுதியான குரலில்.

ராம் கடுப்பானாவன் உன் நன்றியை
நீயே வச்சுகோ வந்து கதவை தாழ் போட்டுகோ ஆனா ஒண்னு மட்டும் மனசுல வை எதாவது உதவி வேனும்னா எப்போனாலும் தயங்காம கேளு என விருட்டெனெ கிளம்பிவிட்டான்.

கதவடைத்த பிரியா அந்த கதவின் மேல் சாய்ந்து தரையில் அமர்ந்து மடக்கிய கால்களில் முகம் புதைந்து அழுதாள்.

ராம் மனம் முழுவதும் ஆத்திரம் நிரம்பியிருக்க கடுப்போடு படியிறங்கி தன் வீட்டிற்க்கு சென்றான்.

இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம். ?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Previous Postஸ்ரீ – 04
Next Postஸ்ரீ – 06
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here