ஸ்ரீ – 06

0
211

குறள்

வலியறிதல்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்

உயர்க்கிறுதி யாகி விடும்.

பொருள்

ஒரு மரத்தின் நுனிக் கிளையில் ஏறியவர் அளவு கடந்து அதற்கு மேலும் ஏற முயன்றால் அது அவரது உயிருக்கே ஆபத்தாக முடியும்.

ஸ்ரீ – 6

ஸ்ரீபிரியாவின் இயல்பானது தன் சொந்த வாழ்வின் கஷ்டங்களை தன் விருப்ப பணியான காவல்பணியில் நுழையவிட்டதில்லை சென்னையில் பணியில் சேர்ந்த இந்த இரு மாதங்களில் அவள் வேலையை யாரும் குறைகூற முடியாதபடி திறமையாகவே பணிபுரிந்து அனைவரின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றாள்.

அலுவலகத்தில் அனைவரிடமும் மிகவும் ஒற்றி பழகவில்லை என்றாலும் விலகி போகாமல் ஒரிரு வார்தைகள் பேசி,சிரித்து இயல்பாக காட்டி கொண்டாள் அது ஸ்ரீராம் தவிர மற்றவர்களுக்கு அவளின் சுபாவமாகவே தெரிந்தது.

ஸ்ரீராமிடம் மட்டும் ஸ்ரீபிரியா இயல்பாக கூட சிரிப்பது இல்லை ஆபீஸ் சம்பந்தமாக பேசினாலும் ஒரு இறுக்கத்தை வேண்டும் என்றே கடைபிடித்தாள்.

அலுவலக அறையில் ஸ்ரீபிரியா , அஜய் ,ராஜீவ் , சஞ்சீவ் (Inspectors) சேர்ந்து அந்த மாதம் பதிவான வழக்குகளின் விவரங்களை எஸ்.பி பார்வைக்காக தயாரித்து கொண்டிருந்தனர். இது ஒரு வழக்கமான மாதாந்திர நடைமுறை தான் காவல் துறையில்.

அப்போது சற்று பதற்றமாக உள்ளே வந்த வரதராஜன் அனைவரின் மரியாதையும் ஒரு தலையசைவில் எற்று அமர்ந்தவரின் பதற்றம் உணர்ந்த ஸ்ரீபிரியா சார் ஏன் இவ்வளவு டென்ஷன் இந்த தண்ணியை குடிங்க என வேகமாகவே நீரை எடுத்து தர அதை வாங்கி பருகியவர் நன்றி கூறி அனைவரையும் அமர சொல்லி பேச ஆரம்பித்தார்.

நமது தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் திருமதி.உமா நடராஜன் IAS மேடம் மகள் செல்வி.உமையாள் நடராஜனை கடத்திடாங்க 12வது படிக்கும் பெண் பள்ளிக்கு போனவள் வரவில்லை என உமா மேடம்க்கு பள்ளியில் இருந்து எஸ் எம் எஸ் வந்த பின்பு தான் ஏதோ விபரீதம் என புரிந்து எனக்கு தனிப்பட்ட முறையில் தகவல் தந்தார்.

கார் டிரைவரை விசாரித்தபோது பள்ளி வாயிலில் இறக்கிவிட்டதாக கூறுகிறான் ஏன் கடத்தினார்கள் என எந்த தகவலும் இல்லை இதுவரை எந்த மிரட்டலும் வரவும் இல்லை இதில் ஏதோ ஆபத்து இருப்பதாக உமா மேடமும், நடராஜன் சாரும் பயப்படுகிறார்கள் என்றவர் தொடர்ந்து

இது பணம் பறிக்கும் செயலாக தெரியவில்லை ஏதோ பழிவாங்கும் செயல் போல உள்ளது உமா மேடமும் சரி நடராஜன் சாரும் சரி நேர்மையான IAS அதிகாரிகள் எதிரிகளும் அதிகம் விஷயம் மீடியாவிற்க்கு தெரியகூடாது என்பது அவர்களின் வேண்டுகொள் இன்னும் 24 மணி நேரத்திற்குள் உமையாளயை ரெஸ்க்யூ செய்யறது உங்க பொறுப்பு

ஸ்ரீராமையும், ஆதிராவையும் கூப்பிட்டுகோங்க இன்னும் என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்க செய்ய நாங்க தயார் உங்களால் முடியும்னு நான் நம்புறேன் என்றார் தெளிவாக.

அஜய் & ஸ்ரீபிரியா கட்டயமா நாங்க உமையாளை நீங்க சொன்ன நேரத்துகுள்ள மீட்டு கொண்டு வரோம் சார் என்றனர் திடமாக பின் சுருசுருப்பாக செயல்பட ஆரம்பித்தனர்.

முதலில் ராம்,ஆதிராவை அழைத்து கலந்து பேசினர் உமாநடராஜன் வீட்டின் பணியாட்களை விசாரிக்க பிரேம், ரமா சென்றனர் பள்ளிக்கு ரோஸ்லின், ராகுல் சென்றனர். சஞ்சீவ் உமா , நடராஜன் & உமையாள் ஆகியோரின் mail,call,sms details என cybercrime மூலமாக ரகசியமாக சேகரித்து வந்தான்.

ஸ்ரீராமின் அறையில் ஸ்ரீபிரியா, அஜய், சஞ்சீவ், ராஜீவ், ஆதிரா ஆகியோர் கூடி கிடைத்த தகவல்களை வைத்து கலந்தாலோசித்தனர் முதலில் சஞ்சீவ் தான் சேகரித்த தகவல்களை பற்றி கூறி சைபர் கிரைம் ரிப்போர்ட் படி இந்த நிமிடம் வரை எந்த அப்நார்மல் அக்டிவிட்டியும் இல்லை

உமா மேடம், நடராஜன் சார், உமையாள் விஷயத்தில் தொடர்ந்து கண்காணிக்க சொல்லியிருக்கேன் சார் என கூறி அமர்ந்தான். ஸ்ரீராம் எழுந்து குட் சஞ்சீவ் , பிரேம் , ரமா ரிபோர்ட் படி வேலையாட்கள் மேல் தவறில்லை , ரோஸ்லின் , ராகுல் ரிப்போர்ட் படி பள்ளியில் யாருமே உமையாளை பார்க்கவில்லை

காவலாளி உட்பட the school cctv camera is not in working conditions போன வாரம் அடிச்ச சூறாவளி , மழையில் cctv outdoor system total ஆ damage ஆகிட்டு so this is a preplan kidnapped இன்னும் ஒரே ஒரு இடத்தில் இருந்து ஒரு முக்கியமான தகவல் வரவேண்டியுள்ளது அது வரை மற்ற விவரம் பார்போம் பிரெண்ட்ஸ் என கூறி தொடர்ந்தான்.

உமா மேடம்,நடராஜன் சார் ரொம்ப நேர்மையானா அதிகாரிகள் இது வரை எந்த ஒரு தவறான புகாரிலும் சிக்காதவர்கள் தங்களுக்கு வரும் புகார்கள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் கட்டாய நடவடிக்கை எடுக்க தயங்கியதுமில்லை அதனால் பாதிக்கப்பட்ட யாரோ செய்த கடத்தல்தான் இது என்பது என் யூகம் என கூறி அமர்ந்தான்.

அஜய் ஆமாம் ராம் நீ சொன்ன மாதிரி தான் இருக்கனும் என கூறி கொண்டிருக்கும் போது அஜய்யின் செல் சினுங்க எடுத்து பேசிய பின் போன இரு மாதம் முன்பு தொடர்ந்து புகார் வந்த கலப்படம் செய்யப்பட்ட மற்றும் காலாவதியான மருந்துகளை மறு தேதியிட்டு விற்று வந்த மருந்து கம்பெனியை உமா மேடம் பெரும் எதிர்ப்புகளுக்கு இடையில் தகுந்த ஆதாரம் சேகரித்து நீதிமன்றம் மூலமாக நிரந்தரமாக மூடிவிட்டார்.

அதனால் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய மருந்துகள் விற்பது தடுக்கபட்டது அதன் உரிமையளர் அணில் அகர்வால் பல சட்டவிரோத வியாபாரத்தில் தொடர்புடையவன் என கூறி கொண்டிருக்கும் போதே இடையிட்ட ஸ்ரீபிரியா இப்போ அந்த அணில் எங்கே இருக்கிறான்? அவன் தான் உமையாளை கடத்தியவனா? நிச்சயமா தெரியுமா சார்? என வேகமாக கேட்க.

அஜய் அவன் எங்க இருக்கான்னு இன்னும் தெரியலை பிரியா ஆனா அவன் மேல தான் சந்தேகப்படுறேன் காரணம் அவன் செய்யும் தொழிலில் முக்கால்வாசி சட்டவிரோதமானது தான் ஆனால் அவன் முக்கிய தொழில் அந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் தான் அதை இழந்தது அவனுக்கு மிகபெரிய அடி அதற்கு பழிவாங்க கடத்தியிருக்கலாம் என்பது என் யூகம் என கூறினான்.

ஸ்ரீராமின் செல் போஃன் ஒலியெழுப்ப அதை எடுத்து பேசி முடித்து உற்சாகமனவன் ராஜீவ் நீ போய் நமக்கு கேரளா மாநிலம் கொச்சின்க்கு அடுத்த பிளைட்டில் ஏழு டிக்கெட் போடு ஜல்தி & சஞ்சீவ் நீ பிஸ்டல் எடுத்துட்டு போக உமா மேடம் மூலமா பர்மிஷன் வாங்கு நானும் அஜய்யும் எஸ்.பி சார் பார்த்து பேசிட்டு வரோம்.

பிரியா , ஆதிரா நீங்க கிளம்புங்க அப்படியே டாக்டர் ரித்திகாவை வர சொல்லுங்க நமக்கு டைம் இல்லை சீக்கிரம் என கூறியபடியே நண்பனை கைபிடியாய் கூட்டி போனான்.

இப்படிக்கு உங்கள் தோழி,

பிரியங்காஸ்ரீராம்.?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Previous Postஸ்ரீ – 05
Next Postஸ்ரீ – 07
Hi Readers, This is Madhumathi Bharath. I am one of the Tamil romance novel writers.This page created for my novel readers.In this blog i am going to provide you link for my tamil new novels updates.This is not a writer's website,This is for you people who would like to read Tamil new novels.keep following this page for further updates.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here