குறள்
கொல்லாமை
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையார்
புன்மை தெரிவா ரகத்து.
பொருள்
கொலைத் தொழிலைச் செய்பவர்கள், நல்லவர்கள் கருத்தில் கேவலமானவராய்த் தோன்றுவர்.
ஸ்ரீ – 7
வரதராஜன் தன் அறையில் டென்ஷனாக இருப்பதை கண்ட ராம், அஜய் சார் உமையாள் எங்க இருக்கானு தெரிஞ்சுட்டு கேரளா , கடத்தினது அணில் அகர்வால் என கூறி முன்பகை விஷயம் சொன்ன அஜய் மேலும் நீங்க கவலைப்படாதீங்க நாங்க பார்த்துக்குறோம் என்றான்.
வரதராஜன் நிம்மதியாக உணர்ந்தவராக குட் நீங்க காப்பாத்த போறது நேர்மையான அரசு அதிகாரிகளின் மகள் உமையளை மட்டும் அல்ல நன்மை செய்தால் தீமை அண்டாது என்ற கூற்றையும் மைய்ப்பிக்க போகிறீர்கள் சரி எப்படி தெரிந்தது? என கேட்க
ஸ்ரீராம் சார் உமா மேடம் மெயிலை
கண்கானிக்க ஏற்பாடு செய்திருந்தோம் சிறிது நேரம் முன்பு ஒரு மெயில் வந்தது “உமா நீயும்,உன் புருஷனும் சேர்ந்து என் பிசினஸை அழிச்சீங்க நினைவு இருக்கா? நீங்க என்ன கவர்மெண்ட்டை தாங்கும் தூண்களா? தப்பு நடந்தா கடவுள் அவதாரமா வந்து மக்களை காப்பாத்த ,
ஆமாம் உங்களுக்கு ஒரே ஒரு செல்ல
பொண்ணுதானே எங்க தப்பு நடந்தாலும் தட்டி கேட்குற உங்களுக்கு உங்க
பொண்ணுக்கு என்ன நடக்க போகுதுனு தெரியுமா? உங்க பொண்ண கடத்திட்டேன்
அடுத்த வாரத்துல ஒரு வெளிநாட்டுகாரனுக்கு அடிமையா இருப்பா முடிஞ்சா காப்பாத்திக்க” என பகிரங்க மிரட்டல் வந்து இருந்தது
அதை வச்சு லோகேஷன்
கண்டு பிடிச்சோம் எதுவும் செய்ய முடியாதுங்குற ஆணவம் சார் அவனுக்கு அதை நாங்க உடைக்குறோம் என்றான் தீர்மானமாக. வரதராஜன் வெரிகுட் ஸ்ரீராம் ,அஜய் இதுக்கு தான் நீங்க வேணும்கறது
நானும் உமா மேடமும் கேரளா அரசு, கேரள புலணாய்வு பிரிவு (ஐ.பி) முலம் உங்களுக்கு தேவையான உதவி கிடைக்க ஏற்பாடு
செய்துடுறோம் என்றார்.
ஸ்ரீராம்,அஜய் கோரஸாக நன்றி சார் உமையாளை மீட்டு நல்லவிதமா திரும்புவோம் நாளைய சூரிய உதயத்தை உமையாள் சுதந்திரமாக பார்ப்பாள் இது உறுதி என கூறி சல்யூட் செய்து புறப்பட்டனர்.
ஏர்ப்போர்ட்டில் அனைவரும் காத்திருந்தபோது டாக்டர் ரித்திகா வந்தார்
அணைவருக்கும் ஒரு ஹாய் சொன்னவர் என்ன அஜய் சார் என்னை போய் உங்க கூட
கூட்டிகிட்டு போறீங்க? என்ன விஷயம் அதையாவது சொல்லுங்க என்றாள்.
ராம் ஒரு கடத்தல் கேஸ் சின்ன பொண்ணு டாக்டர் அங்க சூழ்நிலை எப்படினு தெரியாது நமக்கே ஏதாவது அவசர உதவினா அங்க டாக்டரை தேடி அலைய முடியாது அதோடு கேஸ் ரகசியமா இருக்கனும் விளக்கம் போதுமா மேம் என்றான் சன்ன குரலில்.
கொச்சின் ஏர்போர்ட்யில் இவர்களை அழைத்து செல்ல ஒருவன் ஸ்ரீராம் அஜய் என்ற பெயர் பலகையுடன் இருக்க அவனை நெருங்கினர் ராம் கண்ணால் ஏதோ சொல்ல அவன் புரிந்துகொண்டவனாக சார் எங்க முதலாளி உங்களை கூட்டி வர சொன்னார் என்றான் பணிவாக.
காரில் ஏறிய பின் சார் என் பெயர் அச்சுதன், ASP கேரளா ஐ.பி என ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தி கொண்டவன் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லி எங்களுக்கு உத்தரவு இப்போ எங்க போகணும் சார்? என கேட்க
அஜய் நாம இப்போ ஆழபுழா போகணும் அச்சுதன் அங்க ஒரு படகுவீட்டில் உமையாள் இருப்பதாக தகவல் என்றான்.
கார் ஆழபுழா நோக்கி சீறி பாய்ந்தது பிரியா சார் உமையாள் இங்கு இருப்பது எப்படி தெரிந்தது? என கேட்டாள்.
ஸ்ரீராம் அணில் கிட்ட இருந்து ஒரு மெயில் வந்தது இல்லையா அது ஒரு செல் மூலமா அனுப்பட்டது அதன் Mail access IP Mobile signal ஐ track செய்து spot ஐ identify பண்னினோம் Call details யும் கிடைச்சுயிருக்கு பிரியா என்றான்.
ஆழபுழா படகுவீடு பகுதியில் ஷைனிவில்சன் என்பவனுக்கு சொந்தமான படகை கண்டறிந்தனர் பின்
தங்கள் பிஸ்டல்களை தயாராக வைத்தபடி மெல்ல உள்ளே நுழைந்தனர் அங்கிருந்து
காவலாளி இவர்களை தடுக்க
அவனை சற்று கவனிக்கும் விதமாக சஞ்சீவ் கவனிக்க மற்றவர்கள் அந்த படகுவீட்டை முழுவதும் ஆராய்ந்தனர் பிரியா சார் என அழைக்க ஸ்ரீராம்,அஜய் ஒடி வந்தனர் பிரியா ஒரு மரசேரின் கைபகுதியை காட்டினாள்
அதில் “நான் உமையாள் உதவி தேவை பிளீஸ்” என சற்று தெளிவற்று கிறுக்கியிருந்தது
அஜய் குட் ஸ்ரீபிரியா அப்போ கொஞ்ச நேரம் முன்பு வரை உமையாள் இங்கு தான்
இருந்து இருக்கா அவனுங்க இடத்தை மாத்தும் பிளான் தெரிந்து நிச்சயம்
யாராவது வருவார்கள் என தெரிந்தே கிறுக்கி இருகிறாள் புத்திசாலி பெண்
சரி வாங்க அந்த் வாட்ச் மேன் கிட்ட விசாரிக்கலாம் என கூறி அவனை கேட்டனர் அவன் மலையாளத்தில் சொல்ல சொல்ல அச்சுதன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தான்
“சார் சார் எனக்கு ஒன்னும் தெரியாது எங்க முதலாளி சொன்னாங்க படகு வாடகைக்கு
விட்டுருக்கேன் பார்த்துகோனு போன் சைய்தாருங்க அவ்வளவு தான் எனக்கு
தெரியும் ஒரு பொண்ணு மயக்கத்துலயே கட்டி போட்டு வச்சு இருந்தாங்க 5 பேர்
இருந்தானுங்க
ஹிந்திலாயே பேசிகிட்டானுங்க எனக்கு புரியல சார் காலை ஒரு ஆள் வந்தார் அவனுங்க பாஸ்னு கூப்பிடானுங்க இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் எல்லாரும் கிளம்பினாங்க பிளீஸ் என்னை விட்டுங்க” என அழ
அவன் முதலாளி செல் நம்பர் வாங்கி அதன் கால் லிஸ்டை சைபர் கிரைம் மூலம் கண்டறிந்து அவனிடம் தொடர்பு கொண்ட நம்பர்களை ஆராய்ந்ததில் உமையாளின் இருப்பிடம் தெரிந்தது.
இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம். ?