குறள்
படைமாட்சி
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை யறிந்து.
பொருள்
தன்னை எதிர்த்து வரும் பகைவரின் போரைச் சமாளித்து, அதை வெல்லும் வகையைக்
கணக்கிட்டு, அவர் படையைத் தூசியாக நினைத்து பிளந்து செல்ல வல்லதே சிறந்த
படை.
ஸ்ரீ – 8
கார் கொச்சின் துறைமுகம் விரைந்தது விடியற்காலை 4.30 மணிக்கு ஒரு கப்பல்
பாங்காக் புறப்படுகிறது அதில் அணில் அகர்வாலின் கண்டெயினர்கள் செல்லும்
என்ற தகவல் கேரள ஐ.பி முலம் தெரிந்தது அது இவர்களை சற்று துரிதபடுத்தியது.
அந்த நள்ளிரவு தாண்டிய வேளையில் துறைமுகத்தை அடைந்தனர் அந்த நேரத்திலும் மின்சார விளக்குகள் மூலம் பகல் போல இருந்தது அந்த இடம் ஸ்ரீராம் அஜய் டீம் மிகுந்த கவனத்தோடு அச்சுதன் உதவியுடன் உள்ளே நுழைந்து A&A IMPORTS & EXPORTS என்று பெயர் இருந்த கண்டெயினர்களை ஒவ்வொன்றாக சோதனை செய்தபடி இருக்க
கடைசியில் இருந்த ஒன்று மட்டும் பூட்டி இருக்க அதை உடைக்க அஜய் முயன்ற போது சில ரவுடிகள் ஆயுதங்களுடன் அஜய்யை தாக்க எதிர்பாரா தாக்குதலில் அஜய் சுதாரிக்கும் முன் அவன் காலில் வெட்டுபட்டு தடுமாற பிரியா அஜய்யை தாங்கி நிறுத்தியவள்
ரவுடிகளுடன் சண்டையிட அதற்குள் அஜய் அந்த கண்டெய்னரை திறந்தான் உள்ளே மயங்கிய நிலையில் உமையாள் இருக்க அங்கே இருந்த அணில் அகர்வால் தப்ப முயல அஜய் அவனை தடுத்து தாக்கினான்
அஜய் சண்டையின் நடுவில் டாக்டர்
ரித்திகா , ஆதிராவை அழைத்து உமையாளை பரிசோதிக்க சொன்னவன்
ஸ்ரீராம்,ராஜீவ்வுடன் இணைந்து மற்ற ரவுடிகளை தாக்க அச்சுதன்,சஞ்சீவ்வுடன்
இணைந்து ஸ்ரீபிரியா ஒரு புறம் ரவுடிகளை பந்தாட பின்னிருந்து வந்த ஒருவன்
பிரியாவின் முதுகின் விலா பகுதி, தோள்பட்டையை வாளால் வெட்ட ஸ்ரீபிரியா
நிலைகுலைந்து அரை மயக்கமாக சரிந்தாள்.
அணில் அகர்வாலை அடித்து கொண்டிருந்த ஸ்ரீராம் ஸ்ரீபிரியா நிலை கண்டு அவனை விட்டு பிரியாவை தாங்கி அருகில் ஒரிடத்தில் சாய்த்து அமர வைத்தான்.
அதற்குள் இன்னொருவன் ஸ்ரீராமை தாக்க அவனை அடித்து கொண்டிருந்த போது பிரியா “ராம் சார் டவுன்” என சப்தமிட
ஸ்ரீராம் சட்டென குனிந்த நொடியே பிரியா சுட ஸ்ரீராம் பக்கவாட்டிலிருந்து ஸ்ரீராமை சுட குறி வைத்த அணில் நடு நெற்றியில் குண்டு பாய்ந்து உயிரை விட்டிருந்தான்.
ஸ்ரீராம் ஸ்ரீபிரியாவிடம் வாந்தவன் பிரியா கொஞ்சம் பொருத்துகோ டாக்டர் வந்துடுவாங்க என பதற்ற குரலில் சொன்னவனின் மனமோ தான் ஏன் இவளுக்காக இப்படி பதறுகிறோம் என தன்னை தானே கேள்வியும் கேட்டு கொண்டது
ஸ்ரீபிரியா சார் உமையாள் பத்திரம், உங்களுக்கு ஒன்னும் ஆகலையே? என திக்கித்திணறி கேட்டு கொண்டே மயங்கிவிட
அதற்குள் அங்கு சண்டை முடிந்திருக்க மற்றவர்களும் வந்துவிட அஜய், ஸ்ரீபிரியா, உமையாளை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து முதல்
நிலை சிகிச்சை தந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தனர்.
அங்கு ஒரு பெரிய மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனர். அதிக அளவு போதை மருந்து ஏற்றப்பட்டதால் உமையாள் மயங்கி இருந்தாள் மற்ற எந்த பாதிப்பும் இல்லை மயக்கம் தெளிந்து எழுந்த உமையாள் வரதராஜன்,உமா,நடராஜன் ஆகியோரை கண்டு மகிழ்ந்தவள் சாரிம்மா சாரிப்பா யாரோ என்னை ஸ்கூல் கேட்கிட்ட பெயர் சொல்லி கூப்பிட்டாங்க
போனப்போ பின்பக்கமா வந்து முகத்தில் ஏதோ வச்சுடாங்க மயக்கமாகிட்டேன் ரொம்ப நன்றி அங்கிள் என்னை காப்பாத்தின எல்லாருக்கும் என் நன்றியை சொல்லுங்க அங்கிள் என வரதராஜனிடம் கூறி பெற்றோருடன் புறப்பட்டாள்.
அஜய் ,ஸ்ரீபிரியாவிற்கு சிகிச்சை முடிந்த பின் ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றினர்.
வரதராஜன் வந்தவர் அனைவரையும் பாராட்டியவர் அங்கு நடந்தது பற்றி கேட்க.
ராஜீவ் சார் உமையாளை அடைத்து வைத்திருந்த கண்டெயினரில் தான் அணில் இருந்தான் தவறானா நோக்கத்தோடு தான் உள்ளே சென்றிருந்தான் சரியான சமயத்தில் அஜய் சார் அவனை தடுத்தார் அணில் உள்ளே இருந்ததை ஸ்ரீராம் சார் தான் மறைக்க சொன்னாங்க
சின்ன பொண்ணு வீண் மனகஷ்டம் வேண்டாம்னு தான் சார் உமா மேடம்கிட்ட கூட சொல்லல,
ஸ்ரீபிரியா மேம் தான் அஜய் சாரையும்,ராம் சாரையும் காப்பாத்தினது மயக்கமாக போற லாஸ்ட் மினிட்ல் கூட அணில் அகர்வாலை சுட்டது ஸ்ரீபிரியா மேம் தான் சிங்கிள் புல்லட் ஒரே பர்ஃபெக்ட் ஷுட் என பெருமிதமாக சொன்னான்.
வரதாரஜன் வெல்டன ஸ்ரீபிரியா இப்படி தான் இருக்கனும் உன்னை பத்திதான் தெரியுமே நீ இன்வால்வு ஆகும் கேஸ் எல்லாமே வெற்றிதானே என பாராட்ட.
ஸ்ரீபிரியா நான் ஒன்னும் பெருசா செய்துடலையே சார் என் டியூட்டியை
தானே செய்தேன் என்றாள் அமைதியாக.
வரதராஜன் அது உன் பெருந்தன்மை பிரியா உமா மேடம் குடும்பமே உங்களுக்கு ரொம்ப நன்றி சொன்னாங்க சரி ரோஸ்லின், ஸ்ரீராம், சஞ்சீவ் மட்டும் இருங்க இவங்க உதவிக்கு ஸ்ரீபிரியா வீட்டுக்கு சொல்லியாச்சா? என கேட்க.
ஒரு நொடி அதிர்ந்த ஸ்ரீபிரியா இல்லை சார் வேண்டாம் வீட்டில் எல்லாருக்கும்
வீண் டென்ஷன் அம்மா,அப்பா வீணா வருத்தப்படுவாங்க அதான் நீங்க எல்லாரும் தான் இருகீங்களே பார்த்துக்க மாட்டீங்களா? என்றாள் இயல்பான முறுவலோடு.
வரதராஜன் சரியென புறப்பட்டார்.
ஸ்ரீபிரியாவின் அதிர்ச்சியை ஸ்ரீராம் கவனித்திருந்தான் பிரியா , ராஜீவ்விடம் அணில் அகர்வால் பிணத்தை என்ன செய்தீங்க? அது வேற மாநிலம்,துறைமுகம் கூட எப்படி கையாண்டீங்க என கேட்டாள்?
ராஜீவ் மேம் அது எல்லாம் சிம்பிள் ரௌடிடீஸ் கேங் வார்னு கேஸ்சை முடிச்சசு அச்சுதன் சார் ஐபி டீம் & கேரள கவர்மெண்ட் பார்த்துகிட்டாங்க என கூறி புறப்பட்டான்.
சஞ்சீவ்,ரோஸ்லின் கேண்டின் சென்றுவிட. ஸ்ரீராம் ஏன் பிரியா வீட்டுக்கு இன்ஃபார்ம் செய்ய வேண்டாம்னு சொன்ன? என கேட்க
ஸ்ரீபிரியா சாரி சார் அது என்
பர்சனல் என அழுத்தமாக கூற ஸ்ரீராம் கடுப்போடு என்ன எது கேட்டாளும் பர்சனல்னு சொல்லியே சும்மா கடுப்பேத்துற பிரியா உனக்கு என்ன தான் பிராப்ளம்? என கத்த
அஜய் நண்பனின் திடீர் கோபத்தில் ஒன்றும் புரியாமல் டேய் ராம் இப்போ ஏன் இதுயெல்லாம் கேட்டு அவளை டென்ஷன் செய்ற விடு என கூற
ஸ்ரீபிரியா அஜய்யிடம் சார் உங்க பிரெண்டை என பர்சனலில் தலையிட வேண்டாம்னு சொல்லுங்க என்றாள் கடுமையாக
ராம் இல்லை அஜய் காரணம் இருக்கு என பீட்டர் மிரட்டும் விஷயத்தை கூற அஜய் பிரியாவை பார்க்க ஸ்ரீபிரியா சாரி சார் என்னை எதுவும் கேட்காதீங்க என்றவள் தொடர்ந்து வீட்டுக்கு சொல்லததுக்கு காரணம் அண்ணாக்கு சின்ன குழந்தை இருக்கு லாஸ்ட் வீக் தான் ஒரே சளி,பீவர்னு அட்மிட் செய்து இப்போதான் சரி ஆச்சு
அவளையும் தூக்கிட்டு என் குடும்பமே எனக்காக கஷ்டப்படறது எனக்கு விருப்பம் இல்லை என்றவளை ராம் முறைத்தபடியே இதை அப்பவே செல்றதுக்கு என்ன? என ஆத்திர குரலில் கேட்க.
அப்போது ஸ்ரீபிரியா செல் அடித்தது அந்த
நம்பரை கண்டு ஸ்ரீபிரியா மிரள அஜய் உன் செல் தான் அடிக்குது எடு என கூற
ஸ்ரீபிரியா செல்லை ஆன் செய்தவள் முகத்தில் கோபம்,ஆத்திரம்,வெறுப்பு என மாறி மாறி வர இல்லை,முடியாது ,மாட்டேன் மாட்டவே மாட்டேன் என ஆத்திரத்தோடு
அழுகுரலில் கூறி செல்லை கட் செய்து முகம் திருப்பி கொள்ள.
ஸ்ரீராம் அஜய்யிடம் முதலிலேயே சைகை செய்திருந்ததால் இருவரும் பிரியாவையே கவனித்திருந்னர்.
அஜய் திரும்பு பிரியா உனக்கு என்ன ஆச்சு? சொல்லு நானும் ராமும் ஹெல்ப்
செய்றோம் யாருக்கும் தெரியாமல், எங்க உயிரை காப்பாத்தினவ நீ உனக்கு நாங்க
உதவி செய்ய மாட்டோமா? செல்லும்மா என தன்மையாகவே கேட்க
ஸ்ரீபிரியா அதற்குள் சுதாரித்தவள்
நத்திங் சார் தேங்க்ஸ் என குரலில் திடத்தோடு கூற
ஸ்ரீராம் நாங்க என்ன உன் எதிரியா? இல்லை மீடியாவா? ஊரேல்லாம் போய் உன் விஷயத்தை சொல்ல என சீற
ஸ்ரீபிரியா வெடித்தாள் அய்யோ ஏன் என்னை இப்படி வதைக்குறீங்க சார் பிளீஸ் விட்டுங்க அஜய் சார் உங்களுக்கும் தான் பிளீஸ் என இறங்கிய குரலில் கேட்க
அஜய் விடும்மா பிரியா என்னை உன் மூத்த சகோதரனா நினைச்சுகோ உனக்கா தோனும் போது சொல் நிச்சயம் நாங்க உதவி செய்வோம் என கூறி முடிக்க.
ஸ்ரீராம் என்னடா நீயும் அவ ஏதுலையோ சிக்கி தவிக்குறா குருப் 1ல் ஸ்டேட் லெவலில் இரண்டாவது ரேங்க் வாங்கினவ, டெபுடி கலெக்டர் போஸ்ட் கிடைச்சும் அதை மறுத்துட்டு ஆசைப்பட்டு இந்த போலீஸ் வேலைக்கு வந்தவ மாதிரியா இருக்கா
எப்போதும் ஏதோ வாழ்ககையே வெறுத்த மாதிரியே இருக்கா இதுல எல்லா வருஷமும் கன் ஃபையரிங்கில் கோல்டு மெடலிஸ்ட் வேற ஆனா எவனோ ஒரு பொறுக்கிக்கு பயப்படுறா
விழுப்புரத்தில் இருந்து ஏன் விருப்ப
மாற்றத்தில் ஏதோ தப்பிச்சு ஒடி வர மாதிரி வரனும் நீயே கேளு அஜய் என ஆத்திரம் தீராமல் கேட்க
ஸ்ரீபிரியாவும் கோபமாகவே அஜய் சார் நான் எதையும், யார்கிட்டயும் சொல்ல தயாரா இல்லை உங்க நண்பரை என் விஷயத்தில் தலையிட வேண்டாம்னு சொல்லிடுங்க நான் இங்க வந்தது தான் அவர்க்கு பிரச்சனைன்னா நான் இங்க இருந்தும் ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போய்டுறேன் போதுமா? என கேட்க.
ஸ்ரீராம் சாரி பிரியா இனி உன் விஷயத்துல நான் தலையிடலை உன்னை எதுவும் கேட்கலை நீ எங்கயும் போக வேண்டாம் விடு என தனிந்து போக.
அஜய் ஆமாம் பிரியா ரிலாக்ஸா
இரு என முடித்தான்.
ஸ்ரீபிரியா ரொம்ப நன்றி சார் என கூறி கண்மூடினாள்.
அஜய் ராமிடம் ஏன் இப்படி என சைகையில் கேட்க ஸ்ரீராம் அப்புறமா சொல்லுறேன்
என சைகையிலேயே பதில் கூறினான்.
இப்படிக்கு உங்கள் தோழி,
பிரியங்காஸ்ரீராம்.?